திருத்தியமைக்கப்பட்ட பாடத்திட்டம் 2021 - 2022
மேனிலை இரண்டாமாண்டு.
தமிழமுது 2020 - பயிற்சிப் பாசறை, கன்னியாகுமரி மாவட்டம்.
SLIP TEST -2
வகுப்பு : 12 தமிழ் இயல் : 1
நேரம் : 40 நிமிடங்கள் மதிப்பெண் : 30
I.பலவுள் தெரிக 6 x 1 = 6
1.பொருத்துக
அ)தமிழ் அழகியல் - 1. பரலி சு நெல்லையப்பர்
ஆ)நிலவுப்பூ - 2. தி சு நடராசன்
இ)கிடை - 3. சிற்பி பாலசுப்பிரமணியம்
ஈ) உய்யும் வழி - 4. கி ராஜநாராயணன்
அ) 4 3 2 1 ஆ) 1 4 2 3
இ) 2 4 1 3 ஈ) 2 3 4 1
2.”மின்னேர் தனியாழி வெங்கதிரொன்று ஏனையது
தன்னேர் இலாத தமிழ்”! - இவ்வடிகளில் பயின்று வந்துள்ள தொடைநயம்
அ) அடி மோனை, அடி எதுகை ஆ) சீர் மோனை, சீர் எதுகை
இ) அடி எதுகை, சீர் மோனை ஈ) சீர் எதுகை, அடிமோனை
3. இலக்கியத்தையும் மொழியையும் ஒருசேர பேசுகின்ற இலக்கண நூல்
அ)யாப்பருங்கலக்காரிகை ஆ) தண்டியலங்காரம்
இ) தொல்காப்பியம் ஈ) நன்னூல்
4. தொடியுடைய தோள் மணந்தன்’ - யார்?
அ)பேரெயின் முறுவலார் ஆ) கி. ராஜநாராயணன்
இ) நம்பி நெடுஞ்செழியன் ஈ) பாரி
5. தொல்காப்பியம் பா வகைகளோடு இணைந்து சொல்லும் கருத்து
அ) அறவியல் ஆ) அறிவியல்
இ)களவியல் ஈ) கற்பியல்
6. இவற்றுள் பெயரெச்ச விகுதி கொண்ட சொல்
அ) விளங்கி ஆ) வியந்து
இ) ஈன்று ஈ) எழுந்த
II.குறுவினா 3 x 2 = 6
7.”படாஅம் ஈத்த கெடாஅ நல்லிசைக்
கடாஅ யானைக் கலிமான் பேக” இச்சங்கக் கவிதையின் அடிகளில் ஓசை நயம் மிக்க சொற்களையும் அவற்றிற்கான இலக்கணக் குறிப்புகளையும் எடுத்து எழுதுக?
8. விடியல், வனப்பு - இரு சொற்களையும் ஒருங்கிணைத்து தொடர் அமைக்க.
9. கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் எழுதிய கவிதை நூல்களில் சிலவற்றை எழுதுக
III. சிறுவினா 2 x 4 = 8
10.’செம்பரிதி மலைமேட்டில் தலையைச் சாய்ப்பான் செந்நிறத்துப் பூக்காடாம் வானம் எல்லாம்’ - தொடர் வெளிப்படுத்தும் காட்சி நயத்தை விளக்குக
11. ‘கலை முழுமை’ - விளக்குக
IV.நெடுவினா 1 x 6 = 6
12. கவிதையின் நடையைக் கட்டமைக்கும் அழகியல் கூறுகளை எடுத்துக் காட்டி விளக்குக.
V. அடிமாறாமல் எழுதுக. 1 x 4 = 4
13. “ஓங்கலிடை வந்து” - எனத் தொடங்கும் தண்டியலங்கார உரை மேற்கோள் பாடலை அடி மாறாமல் எழுதுக.
இயல் -1 ,SLIP TEST -2 ற்கான ANSWER KEY ,பார்க்க, படிக்க,Pdf வடிவில் FREE YA DOWNLOAD செய்ய CLICK THE BUTTON BELLOW👇👇👇👇👇