Loading ....

11th Standard- +1Tamil - Tamil -Study Material - Monthly exam - Unit Test- Slip Test - Unit 1- June 2023- MODEL QUESTION PAPER - ANSWER KEY - 12 - தமிழ் - மாதத் தேர்வு - அலகுத் தேர்வு - 2023 -மாதிரி வினாத்தாள் - விடைக் குறிப்புடன்

                                          

11th Standard- +1Tamil - Tamil -Study Material - Monthly exam - Unit Test- Slip Test - Unit 1- June 2023- MODEL QUESTION PAPER - ANSWER KEY - 12 - தமிழ் - மாதத் தேர்வு - அலகுத் தேர்வு - 2023 -மாதிரி வினாத்தாள் - விடைக் குறிப்புடன்




மேனிலை முதலாமாண்டு                       2023-20024

அலகுத் தேர்வு 

வகுப்பு : 11                                   தமிழ்                                             இயல் : 1


நேரம் : 40 நிமிடங்கள்                                                                  மதிப்பெண் : 30


I . பலவுள் தெரிக.                                                                                                       6 x 1 = 6

1.ஓர் இனத்தின் மையப்புள்ளி எது? 

அ) மொழி                 ஆ) இனம்                      இ) ஜாதி                        ஈ)இருப்பிடம் 

2. ‘ஏடு தொடக்கி வைத்து என்னம்மை 

    மண்ணிலே திட்டி திட்டி எழுதுவித்த’ -  இத்தொடரில் இடம்பெற்றுள்ள  வினையெச்ச சொல் எது? 

அ) தொடக்கி           ஆ) வைத்த                    இ) தீட்டித்தீட்டி           ஈ)எழுதுவித்த

3. எவ்வகை மொழி தனக்குத் தானே பேசிக் கொள்கிற பேச்சு ஆகும். 

அ)நேரடி மொழி     ஆ) எழுத்து மொழி      இ) உடல் மொழி          ஈ) சைகை மொழி 

4. பொருத்தி தேர்க

அ) வால்ட் விட்மன்                       - 1. நோபல் பரிசு

ஆ) கா.சிவத்தம்பி                        - 2. புல்லின் இதழ்கள்

இ) ஸ்டெஃபான் மல்லார்மே      - 3. தமிழின் கவிதையியல் 

ஈ) பாப்லோ நெரூடா                   - 4. குறியீட்டியம்

அ) 2 1 4 3                  ஆ) 2 4 3 1                        இ) 2 3 1 4                       ஈ) 2 3 4 1 

5.பொருந்தாத இணையைத் தேர்க 

அ) இனிமையும் நீர்மையும்                                  - பிங்கல நிகண்டு

ஆ) அதூஉம் சாலும் நற்றமிழ் முழுதறிதல்     - புறநானூறு

இ) தமிழ் தழீஇய சாயலவர்                                  - தமிழ்மாலை  

 ஈ) திருப்பாவை                                                        - ஆண்டாள்                                                                                

6. ‘ஙனம்’ - என்னும் சொல் எவ்வெழுத்துடன் சேர்ந்து வரும் 

அ) சுட்டெழுத்து, ஆய்த எழுத்து              ஆ) வினா எழுத்து, குற்றெழுத்து

இ) சுட்டெழுத்து, வல்லெழுத்து                 ஈ)  சுட்டெழுத்து, வினா எழுத்து 

II.குறுவினா                                                                                                                   3 x 2 = 6  

7. இனம் மொழி குறித்த ரசூல் கம்சதேவ் பார்வையை குறிப்பிடுக. 

8. பேச்சு மொழி எழுத்து மொழியைக் காட்டிலும் உணர்ச்சி வெளிப்பாடு சக்திமிக்கது ஏன்? 

9.உயிரீறு, மெய்யீறு விளக்குக.

III.சிறுவினா                                                                                                                  2 x 4 = 8

10. சு. வில்வரத்தினம் பாடத்தான் வேண்டும் என எவற்றைக் குறிப்பிடுகிறார்?

11. மொழி முதல் இறுதி எழுத்துக்கள் யாவை? அவை ஒவ்வொன்றிற்கும் எடுத்துக்காட்டு தருக.


IV. நெடுவினா                                                                                                              1 x 6  = 6

12. நீங்கள் மொழியை வெளிப்படுத்தும் நிலையில் பேச்சு மொழியும் எழுத்து மொழியும் எவ்வாறு உணர்கிறீர்கள் என்பதை விவரிக்க.


V. அடி மாறாமல் செய்யுள் வடிவில் எழுதுக.                                                      1 x 4  = 4           

13. “ஏடு தொடக்கி வைத்து” - எனத் தொடங்கும்  யுகத்தின்பாடலை எழுதுக






எம்.ஏ.ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர்

கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில்- 49843448095



                                    மேனிலை முதலாமாண்டு            2023 - 2024


அலகுத் தேர்வு

வகுப்பு : 11                                   தமிழ்                                             இயல் : 1


நேரம் : 40 நிமிடங்கள்                                                                  மதிப்பெண் : 30


விடைகள்

I . பலவுள் தெரிக.                                                                                                                                     1 x 5 = 5


1. அ) மொழி

2. அ) தொடக்கி  

3. ஆ) எழுத்து மொழி

4.  ஈ) 2 3 4 1

5. இ) தமிழ் தழீஇய சாயலவர்  - தமிழ்மாலை

6.  ஈ)  சுட்டெழுத்து, வினா எழுத்து 


II.குறுவினா                                                                                                                                             3 x 2 = 6 


7. “தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை வேரில்லாத மரம்; கூடு இல்லாத பறவை” என்கிறார், ரசூல் கம்சதேவ்.


8. எழுத்து மொழி பேச்சு மொழிக்கு திரும்பும்போது வெளிப்பாட்டு சக்தி  அதிகம் கொண்டதாக மாறிவிடுகிறது. 

எழுத்து மொழி உணர்ச்சி வெளிப்பாட்டை தெரிவிப்பது இல்லை.  எனவே எழுத்து மொழியைக் காட்டிலும் பேச்சு மொழி உணர்ச்சி வெளிப்பாட்டு சக்தி மிக்கதாக உள்ளது.


9.  உயிரீறு:

          மணி(ண் + இ) + மாலை =  மணிமாலை ( ண் + இ )

நிலைமொழியின் இறுதி எழுத்து உயிர் மெய்யாக இருந்தாலும்(ணி) அதன் இறுதியில் நிற்கும் வடிவம் (இ) உயிர் என்பதால் அஃது ‘உயிரீறு’ எனப்படும்.

மெய்யீறு:  

         பொன் + வண்டு =  பொன்வண்டு( பொன் > ‘ன்’ - மெய் )

நிலைமொழியின் இறுதி எழுத்து  மெய்யாக இருந்தால் அது மெய்யீறு  எனப்படும்..


III.சிறுவினா

                                                                                                                                       2 x 4 = 8

10.   பல தலைமுறை கடந்தும் தனது திருவடிகளைத்  தொழ செய்தவள்

தமிழ் பயிர் தழைத்தோங்க காலம்தோறும் வியர்வை சிந்தி, உழைத்து, கலைச் செல்வங்களைப் படைக்க செய்து, நிறைமணி தந்தவள். 

      தமிழ் மொழி ஆகிய வயலினை அறிவு கொண்டு உழுது, நற்கருத்துக்களை விளைவித்து தமிழ் நிலத்தில் ஊன்ற உதவியவள்.ஒலிக்கும் கடலையும் நெருப்பையும் மலை உச்சிகளையும் காற்றில் ஏறி கடந்து செல் என்னும் பாடலைத் தொன்மையான கபாடபுரங்களைப் பலி கொண்ட பிறகும் காலத்தால் அழியாத செல்வங்களில் வலிமை சேரச் செய்தவள். 

       ஏடு தொடக்கி வைத்து விரலால் மண்ணில் தீட்டித் தீட்டி எழுத கற்பித்தவள். ஆதலால், தமிழன்னை பல்லாயிரம் ஆண்டுகள் வாழ வேண்டும் என பாடத்தான் வேண்டும் என்கிறார் வில்வரத்தினம்.



11. மொழி முதல் எழுத்துக்கள் -  22.

அவை,

                 1.உயிரெழுத்துக்கள் பன்னிரண்டும் சொல்லின் முதலில் வரும். எ.கா:  - ம்மா 

                 2. மெய்யெழுத்துக்கள் தனிமெய்  வடிவில் சொல்லுக்கு முதலில் வருவதில்லை. 

                    அவை உயிரெழுத்துகளோடு  சேர்ந்து உயிர்மெய்  வடிவிலேயே மொழிக்கு 

                   முதலில் வருகின்றன. எ.கா:குறள் 

                3. மெய்களில்  10  - க் ங் ச் ஞ் த் ந் ப் ம் ய் வ்  என்னும் 10 மெய்களின் வரிசைகள் 

                   உயிர்மெய்  வடிவங்களாகச்  சொல்லின் முதலில் வரும். 

                  ( ஙனம் எனும் சொல்லில் மட்டுமே ங வரும் )  

               4. ட் ண் ர் ல் ழ் ள் ற் ன் என்னும் எட்டு மெய் வரிசைகள் சொல்லின் முதலில் வருவது இல்லை. 

               5. ஆயுத எழுத்து சொல்லின் முதலில் வராது.

 மொழிக்கு இறுதியில் வரும் எழுத்துக்கள் 24. 

 அவை, 

                  i)  உயிர் 12 -அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ  மொழிக்கு இறுதியில் வரும். 

                      எ.கா:  வரவு ( வு =வ் + உ ) ‘உ’ உயிர் 

                  ii) மெய்களில் ஞ் ண் ந் ம் ன் ய் ர் ல் வ் ழ் ள்  என்னும் 11 எழுத்துக்களும் சொல்லின் 

                      இறுதியில் வரும்.

                      எ.கா: மண் (ண் > மெய் )

                  iii) குற்றியலுகரம் ஒன்று ஆக 24 ஆகும்.

                     எ.கா : ஆறு (‘று’ > குற்றியலுகரம்)  

                  iv) க் ச் ட் த் ப் ற்  என்ற  வல்லின மெய் ஆறும் ,ங் எனும் மெல்லின மெய் ஒன்றும் 

                     சொல்லின் இறுதியில் வருவது இல்லை

                 v) பழைய இலக்கண நூலார் மொழி இறுதிக் குற்றியலுகர எழுத்தையும் சேர்த்துக் 

                     கொள்வர்.ஞ் ந் வ்  மூன்றும் பழைய இலக்கிய வழக்கில் சொல்லின் இறுதி 

                     எழுத்தாக வந்துள்ளன, ஆயினும், இன்றைய வழக்கில் இவை சொல்லுக்கு இறுதி 

                     எழுத்தாக வருவதில்லை.


IV. நெடுவினா                                                                                                                                      1 x 6  = 6



12.        மொழிதான் ஒருவருடைய உலகத்தை, ஒவ்வொரு பொருளுக்கும் பெயர்களுடன் கட்டி எழுப்புகிறது. மொழி ஒருவருக்கு அறிமுகம் ஆவதற்கு முன்னால், பொருள்களும், விலங்குகளும், பறவைகளும், வானும், நிலவும், சூரியனும், மரங்களும், செடிகளும் அவர்களுக்கு அறிமுகம் ஆனதாக இருந்திருக்க இயலாது. எனவே, அத்தகைய மொழியைப் பேச்சுமொழி, எழுத்துமொழி என இரண்டு வகையில் வெளிப்படுத்தலாம். அப்படி வெளிப்படுத்தும்போது மொழியை நான் எவ்வாறு உணர்கிறேன் என்பதை இகக்கட்டுரையில் காண்போம். 

வாளினும் வலிமை: 

            மொழிவழியாக  ஒன்றைப் பெயரிட்டு அழைக்க தொடங்கியவுடன், அந்தப் பொருளின்மீது எனக்கு ஒரு அதிகாரம் வந்து விடுவதை நான் உணர்கிறேன். எனவே, மொழி நான் பெயரிட்டு அழைக்கும் பொருள்களின் மீது எனக்கு அதிகாரத்தை உருவாக்கிக் கொடுப்பதாக நான் உணர்கிறேன். 

மொழி வெளிப்பாடு: 

           உடம்பின் ஒருபகுதியாக இருக்கிற தொண்டையிலிருந்து சொற்கள் எழுகின்றன. அவற்றை ஏற்றம், இறக்கம், உச்சரிப்பு, வேகம், நிதானம், திருப்பித் திருப்பிச் சொல்லுதல், இடையில் கொடுக்கும் மௌனம் ஆகியவற்றுக்கு ஏற்றவாறு பயன்படுத்திப் பொருள் வேறுபாடுகளை என்னால் ஏற்படுத்த முடியும் என உணர்கின்றேன். இதுமட்டுமன்றி, 

கைகால் அசைவுகள், முகத்தின் தசைநார்ச்  சுருக்கங்களின் அபிநயங்கள் ஆகிய உடம்பின் செயல்பாடுகள் என்னுடைய மொழி வழிபாட்டின் பகுதியாக உள்ளன. 

உறை பனிக்கட்டி: 

         ஒரு திரவ நிலையில், நான் விரும்பும் வகையில் என்னிடம் கீழ்ப்படிந்து நடந்து கொள்ளும் எனது மொழி, எழுத்து மொழியாகப் பதிவு செய்யப்படுகின்ற பொழுது உறைந்து போன பனிக்கட்டியைப் போன்ற இந்த நிலையை அடைந்துவிடுகிறது. 

உணர்ச்சிக்கு அருகாமை : 

             எழுத்து மொழியைக் காட்டிலும் பேச்சுமொழி உணர்ச்சிக்கு மிக அருகில் இருக்கிறது. எழுதுவதை மட்டும் தான் நம் கை செய்கிறது. ஆனால், முகத்தில் இருக்கும் வாய், உடம்பில் இருக்கும் கையைக் காட்டிலும் உணர்ச்சி வெளிப்பாட்டைத் தெரிவிப்பதாக அமைந்துள்ளது. அதனால் பேச்சு மொழி எழுத்து மொழியைக் காட்டிலும் அதிக உணர்ச்சி வெளிப்பாட்டுச் சக்தி மிக்கதாக உள்ளதை நான் உணர்கிறேன்.

நேரடி மொழி: 

            எழுத்து மொழியில் பேச்சை கேட்க எதிராளி என்கின்ற ஒருவன் கிடையாது.எழுத்து என்பது ஒருவகையில் தனக்குத்தானே பேசிக் கொள்கிற பேச்சு. ஆனால் பேச்சு என்பது தன்னைத் திறந்து கொள்கிற ஒரு செயல்பாடு; பேச்சு என்பது மொழியில் நீந்துவது. பேசும் போது நமது உடம்பின் வெளிப்பாடுகள் நம்மை மொழி என்னும் நீரில் முன்னோக்கி நகரச் செய்கின்றன. எனவே, பேச்சுமொழியே நேரடி மொழி என நான் உணர்கிறேன். 

             பேச்சு மொழிக்கு ஒருபோதும் பழமை தட்டுவதில்லை; அது வேற்றுமொழி ஆவதில்லை. அது எப்போதும் உயிர்ப்புடன், மாறிக் கொண்டும் இருக்கிறது. பேச்சு மொழியில் ஒரு கவிதை எழுதும் போது அது உடம்பில் மேல்தோல் போல இயங்குகிறது. அதுவே எழுத்து மொழியாக இருக்குமானால்  அது கவிதையின் உணர்வை உணர்ச்சியற்ற ஆடை போல போர்த்தி மூடிவிடுவதை நான் உணர்கின்றேன்.


V. அடி மாறாமல் செய்யுள் வடிவில் எழுதுக.                                                                          1 x 4  = 4           


13.                   ஏடு தொடக்கி வைத்து என்னம்மை 

                        மண்ணிலே தீட்டித்தீட்டி எழுதுவித்த 

                        விரல் முனையைத் தீயிலே தோய்த்து 

                        திசைகளின் சுவரெல்லாம் 

                        எழுதத்தான் வேண்டும் 

                        எழுகின்ற யுகத்தினோர்  பாடலை.


எம்.ஏ.ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர்

கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில்- 49843448095


 MONTHLY TEST - JUNE 2023- UNIT 1- QUESTION & KEY ANSWER  
DOWNLOAD 👇👇👇👇👇👇👇

11th Standard | +1Tamil |Tamil |Study Material |Monthly exam |Unit Test| Slip Test |Unit 1|June 2023| MODEL QUESTION PAPER | ANSWER KEY |12 | தமிழ்| மாதத் தேர்வு | அலகுத் தேர்வு 2023| மாதிரி வினாத்தாள் | விடைக் குறிப்புடன்| DOWNLOAD HERE |







 12th Standard TAMIL QUESTION 2023 |12TH TAMIL  PUBLIC STUDY MATERIAL (2023) |TWO MARK STUDY MATERIAL



12th Standard TAMIL QUESTION PAPER 2023 |12TH TAMIL PUBLIC EXAM STUDY MATERIAL 2023 |MODEL QUESTION PAPER -1(2023)

12th Standard TAMIL QUESTION PAPER 2023 |12TH TAMIL PUBLIC EXAM STUDY MATERIAL 2023 |MODEL QUESTION PAPER - 5 (2023)|WITH ANSWER KEY



Post a Comment

Previous Post Next Post