12th Standard- +2Tamil - Tamil -Study Material - Monthly exam - Unit Test- Slip Test - Unit 1- June 2023- MODEL QUESTION PAPER - ANSWER KEY - 12 - தமிழ் - மாதத் தேர்வு - அலகுத் தேர்வு - 2023 -மாதிரி வினாத்தாள் - விடைக் குறிப்புடன்
தமிழ்நாடு அரசு நடத்த இருக்கின்ற பனிரெண்டாம் வகுப்பிற்கான தேர்வில் 12th standard- Public exam -March 2024 இடம்பெற இருக்கின்ற தேர்வில் அதிக மதிப்பெண் பெற இங்குத் தொகுத்து தரப்பட்டுள்ள Study Material மிகவும் பயனுள்ளதாக இருக்கும். .மாணவ, மாணவிகளே நீங்கள் இந்த ஒரு தொகுப்பினை Study Material ஐ முழுவதுமாகப் படித்து June Monthly Model Question paper 3 -2023 ஐ படித்து தமிழ்நாடு அரசு நடத்த இருக்கின்ற 12th standard- Public exam -March 2024 தேர்வில் நிச்சயமாக அதிக மதிப்பெண் பெற்றுக் கொள்ள முடியும்.
அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது June Monthly Model Question paper 3 -2023 ஐ ( Study Material ) பதிவிறக்கம் செய்து நீங்கள் முழுவதுமாக படித்துப் புரிந்து தேர்வு எழுதினால் போதுமானது. இந்தப் பகுதியை நீங்கள் படிப்பதன் மூலம் தமிழ்நாடு அரசு நடத்த இருக்கின்ற 12 ஆம் வகுப்பிற்கான 12th standard- Public exam -March 2024 நீங்கள் நிச்சயமாக அதிக மதிப்பெண் பெற்றுக் கொள்ள முடியும்.
இந்த Study Material ஐ நீங்கள் படிப்பதன் மூலம் தமிழ்த்தேர்வில் நீங்கள் அதிக மதிப்பெண்ணைப் பெற்றுக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது. எனவே, தமிழ்நாடு அரசு நடத்த இருக்கின்ற 12th standard- Public exam -March 2024 நிச்சயமாக இடம்பெற இருக்கின்ற இந்தக் கேள்விகளை நன்றாகப்ப் படித்து சிறப்பாகத் தேர்வை எழுத உங்களுக்கு இந்த Study Material உதவும். வெற்றி பெற வாழ்த்துகின்றேன். Kurusady M.A.Jelestin
மேனிலை இரண்டாமாண்டு
பொதுத்தமிழ்
மாதத் தேர்வு - ஜூன் 2023
தேர்வு - 03
நேரம் : 1. 30 மணி இயல் -1 மதிப்பெண் : 45
1.அனைத்து வினாக்களுக்கும் விடை தருக. 10 × 1 = 10
1. அருங்கானம் - இதில் பயின்றுவரும் புணர்ச்சி விதிகள்
அ) ஈறுபோதல்
ஆ) ஈறுபோதல், முன்னின்ற மெய்திரிதல்
இ) இனமிகல். ஈறுபோதல்
ஈ) ஈறுபோதல், ஆதிநீடல்
2. "மீண்டுமந்தப் பழமைநலம் புதுக்குதற்கு" கவிஞர் குறிப்பிடும் பழமை நலம்
அ) பாண்டியரின் சங்கத்தில் கொலுவிருந்தது.
ஆ) பொதிகையில் தோன்றியது
இ) வள்ளல்களைத் தந்தது
i) அ மட்டும் சரி
ii) அ, இ இரண்டும் சரி
iii) இ மட்டும் சரி
iv) அ. இ இரண்டும் சரி
3. "மின்னேர் தனியாழி வெங்கதிரொன்று ஏனையது தன்னேர் இலாத தமிழ்!"- இவ்வடிகளில் பயின்று வந்துள்ள தொடைநயம்
அ) அடிமோனை, அடிஎதுகை
ஆ) சீரமோனை, சீர்எதுகை
இ) அடிஎதுகை, சீர்மோனை
ஈ) சீர்எதுகை, அடிமோனை
4.கருத்து 1. இயல்பு வழக்கில், தொடரமைப்பு என்பது எழுவாய் பயனிலை என்று வருவதே மரபு கருத்து 2. தொடரமைப்பு. சங்கப் பாடல்கள் பலவற்றில் பிறழ்ந்து வருகிறது
அ) கருத்து 1 சரி
ஆ) கருத்து 2 சரி
இ) இரண்டு கருத்தும் சரி
ஈ) கருத்து 1 சரி, 2 தவறு
5.பிழையான தொடரைக் கண்டறிக
அ) காளைகளைப் பூட்டி வயலை உழுதனர்
ஆ) மலைமீது ஏறிக் கல்வெட்டுகளைக் கண்டறிந்தனர்
இ) காளையில் பூத்த மல்லிகை மனம் வீசியது.
ஈ) நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின.
6.பேச்சுத்தமிழில் அமைந்த தொடரைத் தேர்க
அ) அவருக்கு நல்லது கெட்டது நல்லாத் தெரியும்
ஆ) புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது.
இ) வறட்சி எல்லா இடங்களையும் பாதித்துள்ளது.
ஈ) மயில்கள் விறலியரைப் போல் ஆடுகின்றன
7. இலக்கியத்தையும் மொழியையும் ஒருசேரப் பேசுகின்ற இலக்கண நூல்
அ) யாப்பருங்கலக்காரிகை
ஆ) தண்டியலங்காரம்
இ) தொல்காப்பியம்
ஈ) நன்னூல்
8.பொருத்தித் தேர்க
1. தமிழ் அழகியல -- i) பரலி சு.நெல்லையப்பர்
2.நிலவுப்பூ -- ii) தி.சு. நடராசன்
3.கிடை -- iii) சிற்பி பாலசுப்பிரமணியம்
4.உய்யும் வழி –iv) கி. ராஜநாராயணன்
அ) 4, 3 ,2 ,1
ஆ) 1 ,4 ,2 ,3
இ) 2, 4. 1, 3
ஈ) 2, 3, 4, .1
9. சிற்பி பாலசுப்பிரமணியத்தின் இளந்தமிழே பாடல் இடம்பெற்ற நூல்
அ) மஸ்னவி
ஆ) நிலவுப்பூ
இ) காவியதர்சம்
ஈ) துறைமுகம்
10. அணியிலக்கணத்தை மட்டும் கூறும் இலக்கண நூல்
அ) தொல்காப்பியம்
ஆ) மாறனலங்காரம்
இ) வீரசோழியம்
ஈ) முத்து வீரியம்
II. அனைத்து வினாக்களுக்கும் விடையளி 3 × 2 = 6
11. இலக்கணக் குறிப்புத் தருக.
அ) முத்துமுத்தாய்
ஆ) வியர்வையெல்லாம்
12. பிரித்துப் புணர்ச்சிவிதி தருக.
அ) செம்பரிதி
ஆ) உன்னையல்லால்
13. பகுபத உறுப்பிலக்கணம் தருக.
அ) சாய்ப்பான்
ஆ) வியந்து
III. அனைத்து வினாக்களுக்கும் விடையளி 4 x 2 = 8
14. கவிஞர் சிற்பி எவற்றை வியந்து பாட, தமிழின் துணை வேண்டும் என்கிறார்?
15."முன்னம் ஓர் நாள் பாண்டியரின் சங்கத்தில் கொலுவிருந்தாய்" யார் யாரைப் பற்றிக் கூறியது?
16. தமிழ் எத்தகைய வலிமை வாய்ந்தது?
17. நடை அழகியல் பற்றித் தொல்காப்பியம் கூறும் கருத்தைக் கூறுக.
IV. அனைத்து வினாக்களுக்கும் விடையளி 3 × 4 = 12
18. சங்கப்பாடல்களில் ஒலிக்கோலம் ஒரு குறிப்பிடத்தக்க ஒரு பண்பாகும், -- விளக்குக. (அல்லது)
'படாஅம் ஈத்த கெடாஅ நல்லிசை" இப்பாடலின் ஒலிக்கோலங்களின் பண்பை விளக்குக?
19."செம்பரிதி மலைமேட்டில் தலையைச் சாய்ப்பான்
செந்நிறத்துப் பூக்காடாம் வான மெல்லாம்" - தொடர் வெளிப்படுத்தும் காட்சி நயத்தை விளக்குக.
20."ஏங்கொலிநீர் ஞாலத்து இருளகற்றும்" - இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக. (அல்லது)
"தன்னேர் இலாத தமிழ்" - இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.
V.அனைத்து வினாக்களுக்கும் விடையளி 1 x 6 = 6
21. கவிதையின் நடையைக் கட்டமைக்கும் அழகியல் கூறுகளை எடுத்துக்காட்டி விளக்குக.
V. குறிப்புகளில் மறைந்திருக்கும் தமிழறிஞர்களின்
பெயர்களைக் கண்டறி 5 × 1 = 5
22. தமிழறிஞர் : முதலிரு எழுத்துகளால் மறைக்கலாம்
23. தாய்மொழி : ஈற்றிரு எழுத்துகள் வெளிச்சம் தரும்.
24. சிறுகதை ஆசிரியர் : முதல் பாதி நவீனம்
25. முன்னெழுத்து அரசன் : பின்னெழுத்து தமிழ் மாதம்
26.ஈற்றிரு சொல்லால் அணிகலன் செய்யலாம்
(தமிழ்ஒளி, அம்பை, கோதை, அசோகமித்திரன், புதுமைப்பித்தன், சூடாமணி, ஜெயகாந்தன் , கவிமணி, மறைமலை அடிகள்)
V. உவமைத் தொடர்களைச் சொற்றொடர்களில்
அமைத்து எழுதுக . 1 X 3 = 3
27. தாமரை இலை நீர்போல
28. அச்சாணி இல்லாத தேர் போல
29.எலியும் பூனையும்போல
எம் . எம் ஏ. ஜெலஸ்டின்,
முது முதுலைத் தமிழாசிரியர்,
கார்மல் மேனிலைப் பள்ளி,
நாகர்கோவில்- 4, 9843448095
MO MONTHLY TEST - JUNE 2023- UNIT 1- TEST 3QUESTION
P PAPER DOWNLOAD 👇👇👇👇👇👇👇
அலகுத் தேர்வு - 2023 இயல் 1 - தேர்வு 3 -மாதிரி வினாத்தாள் - download here
12th Standard TAMIL QUESTION 2023 |12TH TAMIL PUBLIC STUDY MATERIAL (2023) |TWO MARK STUDY MATERIAL