Loading ....

12th Standard- +2Tamil - Tamil -Study Material - FIRST MID TERM TEST - July 2023- MODEL QUESTION PAPER - ANSWER KEY - 12th தமிழ் - முதல் இடைத் தேர்வு - ஜூலை 2023-மாதிரி வினாத்தாள் - விடைக் குறிப்புடன்

12th Standard |+2Tamil |Tamil |Study Material |FIRST MID TERM TEST | July 2023| MODEL QUESTION PAPER |ANSWER KEY |




தமிழ்நாடு அரசு நடத்த இருக்கின்ற பனிரெண்டாம் வகுப்பிற்கான தேர்வில் 12th standard- Public exam -March 2024 இடம்பெற இருக்கின்ற தேர்வில் அதிக மதிப்பெண் பெற இங்குத்  தொகுத்து  தரப்பட்டுள்ள Study Material மிகவும் பயனுள்ளதாக இருக்கும். .மாணவ,  மாணவிகளே நீங்கள் இந்த  ஒரு தொகுப்பினை Study Material ஐ  முழுவதுமாகப்  படித்து First Mid Term Model Question paper 1 -2023 ஐ படித்து தமிழ்நாடு அரசு நடத்த இருக்கின்ற 12th standard- Public exam -March 2024 தேர்வில் நிச்சயமாக அதிக மதிப்பெண் பெற்றுக் கொள்ள முடியும்.


அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது First Mid Term Model Question paper 3 -2023 ஐ ( Study Material ) பதிவிறக்கம் செய்து நீங்கள் முழுவதுமாக படித்துப்  புரிந்து தேர்வு எழுதினால் போதுமானது.  இந்தப் பகுதியை நீங்கள் படிப்பதன் மூலம் தமிழ்நாடு அரசு நடத்த இருக்கின்ற 12 ஆம் வகுப்பிற்கான 12th standard- Public exam -March 2024 நீங்கள் நிச்சயமாக அதிக மதிப்பெண் பெற்றுக் கொள்ள முடியும்.


இந்த Study Material ஐ நீங்கள் படிப்பதன் மூலம் தமிழ்த்தேர்வில் நீங்கள் அதிக மதிப்பெண்ணைப்  பெற்றுக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது. எனவே,  தமிழ்நாடு அரசு நடத்த இருக்கின்ற 12th standard- Public exam -March 2024  நிச்சயமாக இடம்பெற இருக்கின்ற இந்தக் கேள்விகளை நன்றாகப்ப் படித்து சிறப்பாகத் தேர்வை எழுத உங்களுக்கு இந்த Study Material உதவும். வெற்றி பெற வாழ்த்துகின்றேன்.

Kurusady M.A.Jelestin 

முதல் இடைத் தேர்வு                   2023

 மாதிரி வினாத்தாள்- 0 1


நேரம்: 1 .  30 மணி   வகுப்பு-1 2                                       மதிப்பெண்:45

                                         

   பொதுத்தமிழ்



பகுதி-1

அனைத்து வினாக்களுக்கும் விடை தருக                         7  X 1 = 7

1.‘நீர்படு பசுங்கலம்’ - இதில் ‘பசுங்கலம்’ என்ற சொல்லின் இலக்கணக் குறிப்பு 

 அ) வினைத்தொகை      

ஆ) எண்ணும்மை      

இ) பண்புத்தொகை     

ஈ) உம்மைத்தொகை

2.நரம்புக்குள் வீணை மீட்டிக் கொண்டிருக்கிறது என்று அய்யப்ப மாதவன் குறிப்பிடுவது.

அ) சூரிய ஒளிக்கதிர்                           

ஆ) மழைமேகங்கள் 

இ) மழைத்துளிகள்                                

ஈ) நீர் நிலைகள்நிலைகள்

3.“உவா உற வந்து கூடும் 

    உடுபதி, இரவி ஒத்தார்” – யார் யார்?

அ) சடாயு, இராமன்              

ஆ) இராமன், குகன்            

இ) இராமன், சுக்ரிவன்            

ஈ) இராமன், சவரி

4. பூமணி எழுதிய சிறுகதை தொகுப்பு

 அ) பிறகு                

ஆ) வெக்கை             

இ) கொம்மை           

ஈ) வயிறுகள் 

5. ‘நெல்லை தென்றல்’ என்னும் நூல் 

அ) கவிதை நூல்           

ஆ) உரைநடை நூல்          

இ) கடித இலக்கிய நூல்              

ஈ) வரலாற்று நூல்

6. தவறானதைக்  கண்டுபிடி 

அ) பல் + துளி = பல்துளி                      

ஆ) சொல் + துணை = சொற்றுணை 

இ) பல்+  நூல் = பன்னூல்                      

ஈ) நாள்+ மீன்             = நாண்மீன்

7.  சங்க இலக்கியத்தில் இல்லாத சொற்கள், சங்ககாலச் சமூகத்தில் நடைமுறையில் இருந்துள்ளன அவை_______

அ) அறவோர், துறவோர்                              

ஆ)  திருமணமும், குடும்பமும்  

இ) மன்றங்களும்,  அவைகளும்             

ஈ)  நிதியமும்,  சுங்கமும்

பகுதி - 2

 பிரிவு – 1

எவையேனும் இரண்டனுக்கு  விடை தருக                  2 x 2 = 4 

8.  நகரம் பட்டை தீட்டிய வெள்ளை வைரமாகிறது - விளக்கம் தருக.

9. கவிஞர் சிற்பி எவற்றை வியந்து பாட,  தமிழின் துணை வேண்டும் என்கிறார்? 

10. மறக்கக்கூடாதது, மறக்கக்கூடியது - எவற்றை?

 பிரிவு – 2

எவையேனும் இரண்டனுக்கு விடை தருக                     2 × 2 = 4

11. நடை அழகியல் பற்றித் தொல்காப்பியம் கூறும் கருத்தைக் குறிப்பிடுக.

12. புக்கில், தன்மனை – சிறுகுறிப்பு எழுதுக.

13. ஆற்றங்கரைப் படிவால் ஏற்படும் நன்மைகள் யாவை ?

பிரிவு - 3

எவையேனும் மூன்றனுக்கு  மட்டும் விடை தருக        4  X 2 = 8

14.ஏதேனும் ஒன்றனுக்கு மட்டும் பகுபத உறுப்பிலக்கணம் தருக

      அ) விம்முகின்ற  

ஆ) தந்தனன்

15.உவமைத் தொடர்களைச் சொற்றொடரில் அமைத்து எழுதுக. 

அ) எலியும் பூனையும் போல

ஆ) அச்சாணி இல்லாத தேர்போல

16.ஏதேனும் ஒன்றனுக்குப் புணர்ச்சி விதி தருக

அ) உய்வுண்டாம்          

ஆ) தனியாழி

17. மயங்கொலிச் சொற்களை ஒரே தொடரில் அமைந்து எழுதுக.

அலை, அளை, அழை  

 18. வல்லின மெய்கள் இட்டும் நீக்கியும் எழுதுக

மாணவர்கள் பெற்றோர்களை தமது நண்பர்களாக பாவித்து நட்புக் கொள்ள  வேண்டும். தமது இன்பதுன்பங்களை பெற்றோர்களுடன் பகிர்ந்துக் கொள்ள  வேண்டும்.

19. காற்புள்ளி இடாமல் எழுதுவதனால் ஏற்படும் பொருள் மயக்கத்திற்குச் சான்று தருக.

பகுதி- 3

பிரிவு - 1

எவையேனும் இரண்டனுக்கு விடைதருக                                      2 x 4 = 8

20.  “வருபவர் எவராயினும் 

        நன்றி செலுத்து” - இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.

21. எவற்றையெல்லாம் விட நன்றி உயர்ந்தது? - குறள் வழி விளக்குக.

22.  சடாயுவைத் தந்தையாக ஏற்று, இராமன் ஆற்றிய கடமையை எழுதுக.

பிரிவு-2

எவையேனும்  ஒன்றுக்கு  மட்டும் விடைதருக                       1 x 4 = 4

23. பேரிடர் மேலாண்மை ஆணையம் - விளக்கம் தருக. 

24. தாய்வழிக் குடும்பம் குறித்துச் சங்க இலக்கியத்தில் குறிப்பிடும் செய்திகள் யாவை ?

பகுதி- 3

ஏதேனும் ஒரு வினாவிற்கு விடை தருக.                                                1 X 6 = 6

25. பாரதியின் கடிதம் வாயிலாக நீங்கள் அறிந்து கொண்ட மொழிப்பற்று, சமூகப்பற்று ஆகியவற்றை விவரிக்க.

26. செய்ந்நன்றியறிதலே அறம் என்பதை வாயுறை வாழ்த்தின் துணை கொண்டு நிறுவுக.

 பகுதி- 4

27. அடிபிறழாமல் செய்யுள் வடிவில் விடை தருக                           1 X 4 = 4

அ) "குகனோடும்" - எனத் தொடங்கும் கம்பராமாயண மனப்பாடப் பாடலை அடிபிறழாமல் எழுதுக.



                                                         முதல் இடைத் தேர்வு                                            2023

 மாதிரி வினாத்தாள்- 1


நேரம்: 1 .  30 மணி   வகுப்பு-1 2                                       மதிப்பெண்:45

                                         

   பொதுத்தமிழ்


விடைகள் 

பகுதி-1

அனைத்து வினாக்களுக்கும் விடை தருக                                                                                  7  X 1 = 7

 1.  இ) பண்புத்தொகை

2. இ) மழைத்துளிகள்                  

3.  இ) இராமன், சுக்ரிவன்

4.  ஈ) வயிறுகள் 

5 .அ) கவிதை நூல்  

6. அ) பல் + துளி = பல்துளி          

7.  ஆ)  திருமணமும், குடும்பமும்  

பகுதி - 2

 பிரிவு – 1

எவையேனும் இரண்டனுக்கு  விடை தருக                                                                                          2 x 2 = 4 

8.  நகரம் பட்டை தீட்டிய வெள்ளை வைரமாகிறது 

             மழைக்காலப் பகற்பொழுதில் சூரியன் திடீரென தன் முகத்தைக் காட்ட மழை மேகத்தால் மறைந்திருந்த நகரம் பிரகாசமாய்க் காட்சியளிக்கின்றது. இன்னும் உறிஞ்சப்படாமல் இருக்கும் ஒரு சில மழைத் துளிகளின் மீது விழுகின்ற சூரியக் கதிர்களின் பிரதிபலிப்பால் நகரமே பட்டை தீட்டிய வெள்ளை வைரமாகக் காட்சியளிக்கின்றது.


9. தமிழின் துணை வேண்டும்:

               செந்நிறத்து வானம்போலத் தங்கள் கைகள் சிவந்திட உழைக்கும் தொழிலாளர்களின் வியர்வை வெள்ளம் அவர்களின் திரண்ட தோள்மீது முத்துமுத்தாய் வீற்றிருக்கும். இந்த அழகினை வியந்து பாடச் செந்தமிழின் துணை வேண்டுமெனக் கவிஞர் சிற்பி கூறுகின்றார்.


10.மறக்கக் கூடாதது

                 ஒருவர் நமக்குச் செய்த நன்மையை ஒருநாளும் மறக்கக்கூடாது.

  மறக்கக் கூடியது

                 ஒருவர் நமக்குச் செய்த தீமையை அப்பொழுதே மறந்துவிட வேண்டும்


.  பிரிவு – 2

எவையேனும் இரண்டனுக்கு விடை தருக                                                                                  2 × 2 = 4

11. நடை அழகியல் 

        கவிதையின் இயங்காற்றல்தான் நடை எனப்படும். தொல்காப்பியமும் இதனையே கூறுகின்றது. 'நடைபெற்றியலும்', 'நடை நவின்றொழுகும்' என்னும் சொற்றொடர்களைத் தொல்காப்பியம் கையாண்டுள்ளது. ஒவ்வொரு பாவும் இவ்வாறே அமைய வேண்டும் என்று தொல்காப்பியம் கூறுகிறது.


12. புக்கில்:

             புக்கில் என்பது தற்காலிகமாகத் தங்கும் இடத்தைக் குறிக்கும்

தன்மனை:

          திருமணத்திற்குப் பின் கணவனும் மனைவியும் பெற்றோரிடமிருந்து பிரிந்து தனியாக வாழும் இடம் 'தன்மனை' என அழைக்கப்பட்டது.


13.ஆற்றங்கரைப் படிவால் ஏற்படும் நன்மைகள்

          வெள்ளப் பெருக்குக்  காலங்களில் ஆற்றங்கரைப் படிவு  நீரை  உறிஞ்சுவதால்  வெள்ளப் பெருக்கு ஏற்படுவது குறையும்;  நீர்  மாசடைவதைத் தடுக்கும்;  மண் அரிப்பை தடுக்கும்;  வறட்சிக்  காலங்களில் நீர்மட்டும்  குறைந்து  விடாமல் பாதுகாக்கும்..


பிரிவு - 3

எவையேனும் மூன்றனுக்கு  மட்டும் விடை தருக                                                                    4  X 2 = 8

14.ஏதேனும் ஒன்றனுக்கு மட்டும் பகுபத உறுப்பிலக்கணம் தருக

அ) விம்முகின்ற

  விம்முகின்ற  - விம்மு + கின்று + அ

                    விம்மு  - பகுதி 

                     கின்று - நிகழ்கால இடைநிலை

                             அ - பெயரெச்ச விகுதி


   ஆ) தந்தனன்

தந்தனன்     - தா ( த) + த் ( ந் ) + த் + அன் + அன்     ( பக் : 9 

தா    -   பகுதி 

த்   -    ச ந்தி , ‘ த்’ , ‘ந்’ ஆனது விகாரம்,

 த்  -   இறந்தகால இடைநிலை

அன்    -  சாரியை

அன்    -  ஆண்பால் வினைமுற்று விகுதி



15.உவமைத் தொடர்களைச் சொற்றொடரில் அமைத்து எழுதுக. 

அ) எலியும் பூனையும் போல  - எதிரியாக 

ரகுவும், ரவியும் எலியும் பூனையும் போலச் சண்டையிட்டுக் கொண்டனர். 


ஆ)அச்சாணி இல்லாத தேர் போல - சரியான வழிகாட்டி இல்லாத  

நாட்டை வழிநடத்தும் சரியான  தலைவன் இல்லாததால் அச்சாணி இல்லாத தேர் போல நாட்டு மக்கள் சரிவர இயங்க முடியாமல் தவிக்கின்றனர்.


16.ஏதேனும் ஒன்றனுக்குப் புணர்ச்சி விதி தருக

அ ) உய்வுண்டாம்    -   உய்வு + உண்டாம்  

விதி  1 : ‘ முற்றும் அற்று ஓரோ வழி ‘     < உய்வ் + உண்டாம் 

விதி 2 :  உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே ‘  <   உய்வுண்டாம்


ஆ) தனியாழி   -    தனி + ஆழி   

விதி  1 :  ‘ இ ஈ ஐ வழி யவ்வும்’     < தனி + ய் + ஆழி

விதி 2 :   ‘ உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே’  < தனியாழி


17. மயங்கொலிச் சொற்களை ஒரே தொடரில் அமைந்து எழுதுக.

அலை, அளை, அழை  

அலை  -  அலைதல்; கடலில், நீர் நிலைகளில் உண்டாகுதல் 

அளை  -  புற்று, தயிர், பிசை  

அழை  -   கூப்பிடு

        பலமான இடிமழையால் அளை  சிதைவுற்று உள்ளிருந்த பாம்புகள் செல்லுமிடம் அறியாது அலைந்து திரிவதைப் பார்த்துக் கொண்டிருந்த குழந்தையைத் தாய் பதற்றத்துடன் அழைத்தாள்.


 18. வல்லின மெய்கள் இட்டும் நீக்கியும் எழுதுக

           மாணவர்கள் பெற்றோர்களைத்  தமது நண்பர்களாகப் பாவித்து நட்புக் கொள்ள வேண்டும். தமது இன்ப துன்பங்களைப் பெற்றோர்களுடன் பகிர்ந்து_  கொள்ள வேண்டும்.


19. சான்று

   1. அவள், அக்கா வீட்டிற்குச் சென்றாள்

   2. அவள் அக்கா வீட்டிற்குச் சென்றாள்

              முதல் தொடரில்  உள்ள காற்புள்ளி  அந்தப்பெண் தன் அக்காள் வீட்டிற்குச் சென்றாள் என்ற பொருளை உணர்த்துகிறது,    

             இரண்டாவது தொடரில் உள்ள காற்புள்ளி  அந்தப் பெண்ணின் அக்காள் அவளது (தனது) வீட்டிற்குச் சென்றாள் என்ற பொருள் வேறுபாட்டைத் தருகிறது.


பகுதி- 3

பிரிவு - 1

எவையேனும் இரண்டனுக்கு விடைதருக                                                                                        2 x 4 = 8

20.  “வருபவர் எவராயினும் 

        நன்றி செலுத்து” - இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.

இடம்:

  இப்பாடல் வரிகள் ஜலாலுத்தீன் ரூமி அவர்கள் எழுதிய கவிதையின் ஆங்கில மொழிப்பெயர்ப்பில் இருந்து சில பாடல்களை என்.சத்தியமூர்த்தி என்பவர். ‘தாகங்கொண்டமீனொன்று’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள கவிதைத்தொகுப்பில் உள்ளது. அத்தொகுப்பில் உள்ள ‘விருந்தினர் இல்லம்’ என்னும் பகுதியில் இவ்வரி இடம் பெற்றுள்ளது. 

பொருள்: 

  இவ்வுலகில் வாழ்கின்ற நாம், தினமும் சந்திக்கின்ற எதிர்பாராத இன்பம், துன்பம், அவமானம். வக்கிரம், வஞ்சனை எதுவானாலும் அதற்காக நன்றி செலுத்த வேண்டும். 

விளக்கம்:

  மனித வாழ்க்கை விருந்தினர் இல்லம் போன்றது. நம் வீட்டிற்கு வரும் விருந்தினர்கள் எல்லோரும் ஒரே மனநிலையில் வருவதில்லை. ஒரே மாதிரியான செய்திகளையும் கொண்டு வருவதில்லை. அதுபோன்றே நம் வாழ்க்கையில் சந்திக்கும் அனுபவங்களான ஆனந்தம், மனச்சோர்வு, அற்பத்தனம், விழிப்புணர்வு, வக்கிரம், அவமானம், வஞ்சனை, துக்கம் என்பவை பல வாழ்வியல் வடிவங்களில் வரும். அவை நமக்குப் புதிய உவகையையும், புதிய வழிகாட்டுதல்களையும் தருவதால் ‘வருபவர் எவராயினும் நன்றி செலுத்த வேண்டும்’ என்று கவிஞர் கூறுகிறார். 


21. நன்றியின் உயர்வு : 

நன்றியானது, இந்நில உலகம், வானம், கடல், பனை இவற்றை விட உயர்ந்தது. 

         ஒருவன் பிறருக்கு எந்த ஒரு உதவியும் செய்யாமலிருக்கும் நிலையிலும் அவர் நமக்குச் சரியான நேரத்தில் ஏதேனும் உதவி செய்தால், அந்த உதவிக்குக் கைம்மாறாக இந்த நிலவுலகத்தையும் வானுலகத்தையும் சேர்த்துக் கொடுத்தாலும் ஈடாகாது. 

        ஒருவர் நமக்கு உரிய காலத்தில் செய்த உதவியானது அளவில் சிறியதாக இருந்தாலும், அவ்வுதவி இந்த உலகைவிடப் பெரியதாகும்.

          ஒருவர் எந்தப் பயனையும் நம்மிடம் இருந்து எதிர்பார்க்காமல் நமக்குச் செய்த உதவியின் அளவை ஆராய்ந்து பார்த்தால், அதன் நன்மை கடலைவிடப் பெரியதாகும். 

         ஒருவர் தினையளவு உதவியைச் செய்தாலும், அந்த உதவியின் பயனைத் தெரிந்தவர்கள், தினையளவு உதவியையும் பனையளவாகக் கொண்டு போற்றுவர் எனறு பொய்யாமொழி கூறுகின்றது. 


22. சாடயுவைத் தந்தையாக ஏற்று, இராமன் ஆற்றிய கடமைகள்:

                    இராவணன் சீதையைச் சிறையெடுத்துச் சென்ற போது அதனைத் தடுத்து சண்டையிட்டுக் காயம்பட்டுத் தன் உயிரை இழந்தான் சடாயு. தனக்காகச் சடாயு தன்னுடைய உயிரை இழந்ததை அறிந்து இராமன் தன் தந்தை தசரதனின் நண்பனான சடாயுவைத் தன் தந்தையாக எண்ணினான்.

                 தந்தைக்கு மகன் எவ்வாறெல்லாம் இறுதிச் சடங்கு மேற்கொள்வானோ அவ்வாறே, பார்ப்பவர்கள் வியக்கும்படியாகக் கரிய அகில் கட்டைகளையும் சந்தனக்கட்டைகளையும் கொண்டு வந்து ஒழுங்காகப் பரப்பி, அதன்மேல் தேவையான தருப்பைப் புற்களை அடுக்கி, பூபூக்களைத் தூவி, மணலினால் மேடையைத் திருத்தமாக அமைத்தான். நன்னீரையும் எடுத்து வந்தான். 

               இறுதிச் சடங்கு செய்யக்கூடிய மேடைக்குத் தன் தந்தையாகக் கருதிய சடாயுவைத் தன் பெரிய கைகளில் தூக்கி வந்து இறுதிச் சடங்குகளை மேற்கொண்டான். 


பிரிவு-2

எவையேனும்  ஒன்றுக்கு  மட்டும் விடைதருக                                                                                 1 x 4 = 4

23. பேரிடர் மேலாண்மை ஆணையம்

          பேரிடர் மேலாண்மை ஆணையத்தை நடுவன் அரசு 2005 ஆம் ஆண்டு அமைத்தது. 

புயல், வெள்ளம், நிலநடுக்கம், வறட்சி, சுனாமி, ஆழிப்பேரலை, நிலச்சரிவு, தீ விபத்து, சூறாவளி, பனிப்புயல், வேதி விபத்துகள் முதலான இயற்கைப் பேரிடர்கள் நிகழும் போது பல்வேறு அமைப்புகளை ஒருங்கிணைத்துச்  செயலாற்ற  இந்த ஆணையம் உதவுகிறது. மாநிலம், மாவட்டம், ஊராட்சி, சிற்றூராட்சி என அனைத்து நிலைகளிலும் குழுக்கள் அமைத்துச்  செயலாற்ற   இவ்வாணையம்  வழிவகை செய்துள்ளது. 


24. தாய்வழிக் குடும்பம் குறித்துச் சங்க இலக்கியத்தில் குறிப்பிடும் செய்திகள்

               சங்ககாலத்தில் சமுகத்துக்குத்  தாயே தலைமை ஏற்றிருந்தாள்.  எனவே, பெண் திருமணம் செய்த பின்னரும் தன் இல்லத்திலேயே தொடர்ந்து வாழ்ந்தாள் .  குடும்பங்களில் பெண்களே குலத்தொடர்ச்சிக்கு உரியவர்களாக இருந்தனர். பெண் குழந்தைகளின் பேறு பெரிதும் விரும்பப்பட்டது. அதனால், குடும்பத்தின் சொத்தும் வளங்களும், செல்வங்களும், பெண்களுக்குச்  சென்று சேர்ந்தன. தாய்வழியாகவே குலத் தொடர்ச்சி வளர்ந்து வந்தது.  “சேரநாட்டு மருமக்கள் தாய முறை” இதற்குச்  சிறந்த சான்றாகும்.  ‘சிறுவர் தாயே’, ‘முதியோள்  சிறுவன்’ , ‘இவளது மகன்’ முதலான தொடர்கள் தாய்வழிச்சமுக நிலையை எடுத்துக்காட்டுகின்றன. 


பகுதி- 3

ஏதேனும் ஒரு வினாவிற்கு விடை தருக.                                                                                            1 X 6 = 6

25. பாரதியின் கடிதம் வாயிலாக நீங்கள் அறிந்து கொண்ட மொழிப்பற்று, சமூகப்பற்று 

மொழிப்பற்று:

      யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல இனிதான மொழி எதுவுமில்லை என்று கூறிய பாரதி, சு.நெல்லையப்பருக்கு எழுதிய கடிதத்திலும் அதனை உறுதிப்படுத்துகின்றார். 

           நெல்லையப்பரிடம் அவர் கூறும்போது, 'நீ பிறமொழிகளை அறிந்திருந்தாலும் தமிழை வளர்ப்பதைக் கடமையாகக் கொள்ளவேண்டும்' என்று கூறுகின்றார். 

             புதிய புதிய செய்திகளும் புதிய புதிய உண்மைகளும், புதிய புதிய இன்பமும் தமிழ்மொழியில் ஏற்றம் பெற வேண்டும். 

            தமிழ்நாட்டில் வீதிகள் தோறும் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் பெருக வேண்டும். அந்தப் பள்ளிகளில் எல்லாம் புதிய புதிய கலைகள் பயிற்சி அளிக்கப் பெற்று வளர வேண்டும். 

          தாய் மொழியிலே கற்பதால் தமிழ் உணர்வு அதிகமாகும், தாய்நாட்டின் மீது பற்று ஏற்படும். 

          பிறநாட்டு மொழிகள் எல்லாம் அடைந்துள்ள வளர்ச்சியைப் பார்த்த பின்பாவது நாம் நம் தாய்மொழியாம் தமிழ்மொழியின் மீது பற்றுக் கொள்ள முயலவேண்டும். 

           புதிய புதிய சிந்தனைகள் தமிழ்மொழியில் தோன்றல் வேண்டும் என்கிறார்.

சமூகப்பற்று

        சமூகத்தின் அவலமாக இருக்கின்ற ஆண் பெண் வேறுபாடு முற்றிலுமாக அழிய வேண்டும். 

          ஆண் உயர்ந்தவன் பெண் அடிமை என்ற நிலை சமூக அவலமாகும். "ஆணும் பெண்ணும் ஒருயிரின் இரண்டு தலைகள், அவற்றில் ஒன்றிலொன்று தாழ்வில்லை", என்கிறார். 

           பெண்ணைத் தாழ்த்தினால் சமூகமே சாபக்கேட்டிற்குள்ளாகும் என்பதை உணர்த்த பெண்ணைத் தாழ்த்தினவன், தன் கண்ணைக் குத்தியவனுக்குச் சமம் என்று ஆவேசத்துடன் கூறுகின்றார். பெண்ணை வீட்டுக்குள்ளே அடைத்தவன் தன் கண்ணை இழந்த குருடன் போலப் பரிதவிப்பான் என்றும் கூறி ஆணும் பெண்ணும் சமம் என்ற சமூக நீதியை வலியுறுத்துகின்றார். 

            சமூகம் வளர்ச்சி அடையத் தொழில் பெருக வேண்டும், வியாபாரம் சிறக்க வேண்டும் தொழிற்சாலைகள் வளர வேண்டும் என்கிறார்.     சமூக மாற்றம் காண சங்கீதம், சிற்பம், இயந்திரம், பூமி, , வானம், இயற்கை சார்ந்த நூல்கள் ஆயிரம் ஆயிரமாகத் தாய்மொழியில் உருவாகிட வேண்டும்.    நம் தமிழ்ச்சமூகம் மாற்றம் பெற அனைவரும் எண்ணிட வேண்டும்.  அதற்குரிய சக்தியை அனைவரும் பெற்றிடவும் வேண்டுமென்று பாரதியார் சு.நெல்லையப்பருக்கு எழுதிய கடிதம் மூலம் தன் உள்ளக் கருத்தை வெளிப்படுத்துகின்றார்.



26. செய்ந்நன்றியறிதலே அறம்

ஈடில்லா உதவி:

       ஒருவன் பிறருக்கு எந்த ஒரு உதவியும் செய்யாமலிருக்கும் நிலையிலும் அவர் நமக்குச் சரியான நேரத்தில் ஏதேனும் உதவி செய்தால், அந்த உதவிக்குக் கைம்மாறாக இந்த நிலவுலகத்தையும், வானுலகத்தையும் சேர்த்துக் கொடுத்தாலும் ஈடாகாது. 

உலகினும் பெரிய உதவி:

         ஒருவர் நமக்கு உரிய காலத்தில் செய்த உதவியானது அளவில் சிறியதாக இருந்தாலும் அவ்வுதவி இந்த உலகைவிடப் பெரியதாகும். 

பயன் எதிர்பாராத உதவி:

           ஒருவர் எந்தப் பயனையும் நம்மிடம் இருந்து எதிர்பார்க்காமல் நமக்குச் செய்த உதவியின் அளவை ஆராய்ந்து பார்த்தால், அதன் நன்மை கடலைவிடப் பெரியதாகும். 

உதவியின் பயன் பனையளவு:

            ஒருவர் தினையளவு உதவியைச் செய்தாலும் அந்த உதவியின் பயனைத் தெரிந்தவர்கள், தினையளவு உதவியையும் பனையளவாகக் கொண்டு போற்றுவர். 

அறத்தை அறிக:

           ஒருவர் நமக்குச் செய்த நன்மையை ஒருநாளும் மறக்கக்கூடாது. ஆனால் ஒருவர் நமக்குச் செய்த தீமையை அப்போழுதே மறந்துவிட வேண்டும்.

தப்பிக்க கூடுதல் வழி:

          ஒருவர் எந்த அறத்தை அழித்தாலும் அதிலிருந்து தப்பிப் பிழைக்க வாய்ப்பு உண்டு. ஆனால் ஒருவர் செய்த உதவியை மறந்தவர்க்கு அதிலிருந்து தப்பிப்பிழைக்கும் வழியே கிடையாது. 


 பகுதி- 4

27. அடிபிறழாமல் செய்யுள் வடிவில் விடை தருக                                                                       1 X 4 = 4

அ) குகனோடும் ஐவர் ஆனேம்  

முன்பு; பின் குன்று சூழ்வான்  

மக   னொடும் அறுவர் ஆனேம்; 

 எம்முழை   அன்பின் வந்த 

அகன்   அமர்   காதல்  ஐய! 

நின்னொடும்  எழுவர்  ஆனேம்   

புகழ்   அருங்  கானம் தந்து, 

புதல்வரால் பொழிந்தான் நுந்தை


எம் . ஏ.  ஜெலஸ்டின்,  முதுகலைத் தமிழாசிரியர்,     கார்மல் மேனிலைப் பள்ளி,  நாகர்கோவில்- 4,           9843448095


முதல் இடைத்தேர்வு 2023 - மாதிரி வினாத்தாள் 1 -👇👇👇👇👇DOWNLOAD HERE

12th தமிழ் | மாதத் தேர்வு  | இயல் 1 | அலகுத் தேர்வு - 2023| மாதிரி வினாத்தாள் - 1 | DOWNLOAD HERE

12th தமிழ் | மாதத் தேர்வு  | இயல் 1 | அலகுத் தேர்வு - 2023| மாதிரி வினாத்தாள் - 2 | DOWNLOAD HERE

12th தமிழ் | மாதத் தேர்வு  | இயல் 1 | அலகுத் தேர்வு - 2023| மாதிரி வினாத்தாள் - 3 | DOWNLOAD HERE









 12th Standard TAMIL QUESTION 2023 |12TH TAMIL  PUBLIC STUDY MATERIAL (2023) |TWO MARK STUDY MATERIAL



12th Standard TAMIL QUESTION PAPER 2023 |12TH TAMIL PUBLIC EXAM STUDY MATERIAL 2023 |MODEL QUESTION PAPER -1(2023)

12th Standard TAMIL QUESTION PAPER 2023 |12TH TAMIL PUBLIC EXAM STUDY MATERIAL 2023 |MODEL QUESTION PAPER - 5 (2023)|WITH ANSWER KEY



Post a Comment

Previous Post Next Post