11T - துறை/இ-2
இயல் - 2
பருவங் ( கார்காலம் ) குறித்துப் பிரிந்த தலைமகன், அப்பருவத்திற்கு முன்னே வந்தமை தோன்ற தலைவிக்கு உரைத்த துறையை விளக்குக.
துறை விளக்கம்
பொருள் ஈட்டுவதற்காக வெளியூர் சென்ற தலைவன் தான் வருவதாக கூறிச் சென்ற கார்காலம் முடியும் முன்பே வந்துவிட்டதைத் தலைவிக்கு உணர்த்த நினைத்து தலைவிடம் உரைத்தது.
சான்று
‘காயா கொன்றை….’ எனத் தொடங்கும் பேயனார் பாடிய ஐங்குறுநூறு பாடல்.
துறை பொருத்தம்
பொருள் ஈட்டுவதற்காகப் பிரிந்து சென்ற தலைவன் தான் மாலை காலம் வருவதற்கு முன் வருவதாகக் கூறிச் சென்றான். மாழைக் காலம் தொடங்குவதற்கு முன்பே தலைவன் வந்துவிட்டான். மழைக்காலங்களில் முல்லை நிலத்தில் மலர்கின்ற பூக்கள் மலர்ந்திருப்பதைத் தலைவிக்குத் தலைவன் உணர்த்துவதால் இப்பாடல் இத்துறைக்குப் பொருத்தமாக அமைந்துள்ளது
எம்.ஏ.ஜெலஸ்டின் , முதுகலைத் தமிழாசிரியர், கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில் - 9843448095
Click Here to download the document.