11T - திணை /முல்லை
முல்லை திணையைச் சான்றுடன் விளக்குக.
முதற்பொருள்
நிலம் - காடும் காடு சார்ந்த இடமும்
பொழுது
சிறுபொழுது - மாலை
பெரும் பொழுது - கார்காலம்
கருப்பொருள்
தெய்வம் - திருமால்
மக்கள் - ஆயர், ஆய்ச்சியர்
பறவை - காட்டுக் கோழி
பூ - முல்லை. தோன்றி
மரம் - கொன்றை, காயா,குருந்தம்
உணவு - வரகு , சாமை
யாழ் - முல்லையாழ்
தொழில் - ஏறுதழுவுதல் ,சாமை, வரகு விதைத்தல்,
ஆநிரை மேய்த்தல் ,பால் கடைதல்
உரிப்பொருள்
இருத்தலும் இருத்தல் நிமித்தமும்
சான்று :
“காயா கொன்றை …. "எனத் தொடங்கும் பேயனார் பாடிய ஐங்குறுநூறு பாடல்
திணை பொருத்தம் :
இப்பாடலில் தலைவன் முல்லை நிலத்திற்குரிய பூக்களான காயா, கொன்றை ,முல்லை, பிடவும், ஆகிய மலர்கள் பூத்திருப்பதைத் தலைவியிடம் சுட்டிக் காட்டுகின்றான். முல்லை நிலப் பூக்களை இப்பாடல் உணர்த்துவதால் இப்பாடல் முல்லை திணைக்கு உரிய பாடலாகும்.
எம்.ஏ.ஜெலஸ்டின் , முதுகலைத் தமிழாசிரியர், கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில் - 9843448095
Click Here to download the document.