tamilamuthu2020official.blogspot.com
ஜூலை 2025, 3 ஆவது வாரம் - பாடக்குறிப்பு
வகுப்பு : 12
பாடம் : தமிழ்
நாள் : ஜூலை 3 ஆவது வாரம்
பருவம் : முதல்பருவம்
இயல் : 2 ( பெய்யென பெய்யும் மழை )
அலகு : i) விரிவானம்
ii) இனிக்கும் இலக்கணம்
பாடத்தலைப்பு : i) விரிவானம்
முதல் கல் -உத்தம சோழன்
ii) இனிக்கும் இலக்கணம்
நால்வகைப் பொருத்தங்கள்
பாடவேளை : 4
பக்க எண் : 29 முதல் 37 வரை
கற்பித்தல் நோக்கங்கள்
1.கதையின் வாயிலாக வாழ்வியல் நெறிகளைப் பின்பற்றும் திறன் பெறுதல்.
2. ஊரைக் காப்பாற்றும் நோக்கும் அனைவருக்கும் வரவேண்டும் என்ற அறிவைப் பெறுதல்.
3. பமிர்களைக் காப்பாற்றும் மருதனின் பண்பு நலன்களைஅறிதல்.
4. இலக்கணக் கூறுகளை அறிந்து மொழியைப் பயன்படுத்துதல்.
சிறப்பு நோக்கங்கள்
1.’முதல்கல்' சிறுகதையின் கதை மாந்தரான மருதனின் பண்பினை அறிய வைத்தல்.
2. எந்த ஒரு செயலையும் சொல்லிக் கொண்டே இருக்காமல் செயலில் இறங்கிய மருதனின் முயற்சியை அறிய வைத்தல்.
3. பயிர்களின் மீது மருதன் கொண்டிருந்த பற்றினை அறிய வைத்தல்.
4. திணை, பால், எண், இடம் என்னும் இலக்கணத்தின் முக்கிய கூறுகளை அறிய வைத்தல்.
5. இன்றைய சூழலில் திணை, பால்,எண், இடம் எவ்வாறெல்லாம் பயன்படுத்தப்படுகிறது என்பதை அறிய வைத்தல்.
6. திணை, பால், எண், இட வேறுபாடுகளை அறிந்து மொழியைப் பயன்படுத்தும் அறிவைப் பெறவைத்தல்.
கற்பித்தல் திறன்கள்
1. பாடப்பகுதியை அறிமுகப்படுத்துதல்
2. விரிவுரை
3. எடுத்துக்காட்டுமூலம் விளக்குதல்
4. கேள்விகள் கேட்டல்
5.அறிக்கைகள் மூலம் விளக்குதல்
6. காட்சிப்படுத்துதல்
7. வலுவூட்டும் செயல்படுகள் மூலம் விளக்குதல்
8. சிக்கலற்ற மற்றும் சுருக்கமான பாட இலக்கை அடைதல்
ஆகிய கற்பித்தல் திறன்கள் மூலம் பாடப்பகுதியா ‘முதல்கல்’, ‘நால்வகைப் பொருத்தங்கள்’ ஆகியவற்றில் எந்தெந்தப் பாடப்பகுதியின் கருத்துருக்கு எந்தெந்தத் திறன்கள் பொருந்துகிறதோ அந்தந்தத் திறன்களைப் பயன்படுத்தி மாணவர்களுக்குக் கற்பித்தல் வேண்டும்
கற்பித்தல் நுண்திறன்கள்
1.பல்வகை தூண்டும் வினாக்களைக் கேட்டல்
2. சரளமாக வினாக்களைக் கேட்டல்
3. விரிசிந்தணையைத் தூண்டும் வினாக்களைக் கேட்டல்
4. தகவல் பரிமாற்றத்தை நிறைவு செய்தல்
5. பாடம் முடித்தல்
ஆகிய நுண்திறன்கள் மூலம் பாடப்பகுதியின் நுட்பமான பொருள்களை மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டும்.
பயிர்களை ஏன் பாதுகாக்க வேண்டும்? மழை பெய்வதால் என்ன என்ன பாதிப்புகள் ஏற்படும்? மழைக் காலத்தில் பயிர்களின் நிலை என்ன? திணை மாற்றி எழுதுவதால் ஏற்படும் பொருள் குழப்பம் என்ன? உயர்திணை, அஃறிணை வேறுபாட்டை அறிந்து ஏன் எழுத வேண்டும்? என்பன போன்ற பல்வகை தூண்டும் வினாக்களைக் கேட்டுப் பாடப்பகுதின் பொருண்மையை விளங்க வைத்தல்
மழையால் பயிர்கள் பாதிப்படையும் போது நீ என்ன செய்வாய்? மழைக்காலத்தில் உன் செயல்பாடு என்ன? மழைத் தண்ணீர் உன் வீட்டைச் சுற்றி நின்றால் நீ செய்யும் செயல் என்ன? உயர்திணையில் எழுவாயை அமைத்து பயனிலையை அஃறிணையில் எழுதுவது சரியா? என்பன போன்ற சரளமாக வினாக்களைக் கேட்டுப் பாடப்பகுதியின் கருத்துகளை அறிய வைத்தல்
மழைப்பாதிப்பில் இருந்து நமது சுற்றுப்புறத்தை எவ்வாறு பாதுகாக்கலாம்? தன்னலமற்ற தொண்டு செய்வதன் நோக்கம் என்ன? பால் வேறுபாடுகளை உணர்த்தும் பயனிலைகளை உன்னால் இனம் காண முடியுமா? என்பன போன்ற விரிசிந்தனையைத் தூண்டும் வினாக்களைக் கேட்டுப் பாடப் பகுதியின் உட்பொருளைப் புரியவைத்தல்.
மேலும் எந்தெந்த நுண்திறன்கள் எந்தெந்தப் பாடப் பகுதிக்குப் பொருந்துமோ அந்தந்த நுண்திறன்களைப் பயன்படுத்தியும், திரும்ப கூற வேண்டியவைகளைத் திட்டமிட்டும், தகவல் பரிமாற்றத்தை நிறைவு செய்து பாடத்தை முடித்தல் வேண்டும்.
ஆயத்தப்படுத்தல்
1.மழை பெய்வதால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும், மழை தொடர்ந்து பெய்வதால் பயிர்கள் அடையும் பாதிப்புகள், ஆண்டு தோறும் பருவமழையால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி பல நிகழ்வுகள் மூலம் விளக்குதல்.
2. மழை பாதிப்புகளைக் குறித்த நிகழ்வுகளைக் காட்சிப்படுத்தல், புகைப்படங்களாகவும், காணொலியாவும் மாணவர்களுக்குக் காட்சிப்படுத்தல்.
3.தமிழ் மொழியில் சொற்றொடரை எழுதும் போது ஏற்படும் மயக்கங்களையும் அதனை நீக்குவதற்குத் திணை, பால், எண், இடம் ஆகியவற்றை அறிந்த பயன்படுத்த வேண்டிய தகவல்களை எடுத்துக் கூறுதல்.
அறிமுகம்
பாடப்பகுதியின் அனைத்துக் கருத்துகளையும் மாணவர்கள் புரிந்து கொள்ள எந்தெந்தக் கற்பித்தல் திறன்கள் மற்றும் கற்பித்தல் நுண்திறன்கள் எந்தெந்தப் பாடப்பகுதிக்குப் பொருந்துகிறதோ அந்தந்தத் திறன்களின் அடிப்படையில் பாடத்தின்கருத்துருக்களை அறிமுகம் செய்து வைத்தல் வேண்டும். இதன் மூலம் மாணவர்களிடம் கற்கும் ஆர்வம் அதிகமாகும்.
ஆர்வமூட்டல்
1. மழை பெய்யும் போது விவசாயத்தில் ஏற்படும் இழுப்புகளைப் பற்றி கேட்டல்.
2. பருவ மழையை விரும்பும் விவசாயிகள் மழை அதிகமானால் பயிர் அடையும் பாதிப்பைப் பார்த்து விவசாயி கூறுவதைப் பற்றி கேட்டல்.
3. தன்னலமற்ற பணிகளைச் செய்துள்ள நமக்குத் தெரிந்த பெரியவர்கள் பற்றிக் கலந்துரையாடல் நடத்துதல்.
4. நால்வகைப் பொருத்தங்களில் உள்ள திணை, பால், எண், இடம் இவற்றால் சொற்றொடர் அடையும் மாற்றங்களை மாணவர்களிடம் கேட்டல்.
துணைக் கருவிகள்
1.பாடம் தொடர்பான காணொலிகள்
2. விரிவானம் கதையான 'முதல்கல்' காணொலி
3. நால்வகைப் பொருத்தங்கள் பாடம் PPT
பாடப்பொருள்
முதல் கல்
உத்தம சோழன்
*உத்தம சோழன் (செல்வராஜ்)-முதல்கல் - தஞ்சைச் சிறுகதைகள் தொகுப்பு - தீவாம்மாள் புரம் மனிதத்தீவுகள், குருவி மறந்த வீடு - தொலைதூர வெளிச்சம், கசக்கும் இனிமை, கனல் பூக்கள் புதினம் - கிழக்கு வாசல், உதயம் திங்களிதழ்
*வளவனாறு வடக்கே, பச்சை பசேல்- நடவு முடிந்து ஒருவாரம் பத்து நாளான இளம் பயிர் வாய்க்கால் பொங்கி எழுந்தது- வானொலியில் அறிவிப்பு - குறுவை மறந்து சம்மா விவசாயம்
*மேட்டூர் நிலவரம் - எந்த மழைக்காக வேண்டினார்களோ மழையின் அபரித அன்பால் பயிர்கள் நீரில் மூழ்கின.
* மூன்றுமைல் நீள வடிவாய்க்கால் -நெய்வேலி காட்டாமணக்குச் செடிநீக்க - வழி கண்டுபிடித்தல் ஒரு நிமிட யோசனை
* மாரிமுத்துவிடம் பேசுதல்- அவன் மீன்பிடிக்கும் அவனது வேலையில் கவனம்
* முல்லையம்மா கிழவி -புல்லறுத்தல்- கிழவன் காளியப்பன் - பெரிய மிராசு,கோவணக்கட்டு தலை முண்டாசு-பூவரசு கிளை ஒடித்தல் - மருதனின் கவலை - காளியப்பன் - மகள் வீட்டுக் செல்வதாகக் கூறுதல்
* மருதனின் அக்கறை வேறு யாருக்கும் இல்லை-பிரேம் குமார் தலைவர்- ரத்ததானம் -அவன் வேறுவிதமான பதில் கூறுதல்
*யாரும் உதவாததால் இரவு வருத்தத்துடன் படுத்தான் மருதன் - ஒரு சக்கரைக்குழி நிலம் கூட இல்லாத மருதனின் வேதனை அல்லியை யோசிக்க வைத்தது.
*விடியற்காலை வாய்க்காலில் இறங்கித் தனியாகக் காட்டாமணக்குச் செடியை வெட்டி வீழ்த்த அல்லி முதற்கொண்டு அனைவரும் வந்து காட்டாமணடக்குச் செடியை அகற்றினர்.
நால்வகைப் பொருத்தங்கள்
திணை,பால்,எண்,இடம்
‘முருகன் நூலகம் சென்றான்’ - முருகன் என்னும் எழுவாய் திணை, பால், எண் உணர்த்தல் திணைப்பாகுபாடு
* உலக மொழியில் பெயர்ச்சொற்களே மிகுதி-தமிழில் பொருட்குறிப்பை அடிப்படையாகக் கொண்டு இருதிணைப் பாகுபாடு
அங்கே நடப்பது யார்? அங்கே நடப்பது யாது?
இருதிணை பொது பெயர்
குழந்தை சிரித்தான் - குழந்தை சிரித்தது
பால் பாகுபாடு
* பயனிலை விகுதிகள் ஆன்,ஆள்,ஆர்,அது,அன்
*பலர்பால் சொல் பன்மையில் உயர்வு கருதி-மாணவர் வந்தனர் (பன்மை) - ஆசிரியர் வந்தார் (ஒருமை) அவர் வந்தார் (ஒருமை) அவர்கள் வந்தார்கள் (பன்மை)
* காளை உழுத்து - பசுபால் தந்தது
எண் பாகுபாடு
* இரண்டு மனிதர்கள் - அஃறிணையில் வராது- பத்துத் தேங்காய் - ஒருமரம் விழ்ந்தது பத்து மரம் வீழ்ந்தது - ஒவ்வொரு வீட்டிலும் நூலகம் உள்ளது. (ஒவ்வொரு - ஒருமை)
இடப்பாகுபாடு
* தன்மை, முன்னிலை, படர்க்கை - அவன், அவள்,
அவர், அது, அவை பதிலிப் பெயர்கள் வினைமுற்றுகளிலுமே வெளிப்படும் தன்மையிலோ, முன்னிலையிலோ ஒருமை, பன்மை பாகுபாடு உண்டே தவிர ஆண்பால், பெண்பால் பாகுபாடு இல்லை
* உளபாட்டுத் தன்மைப் பன்மை, உளப்படுத்தாதத் தன்மைப் பன்மை - நாம் முயற்சி செய்வோம், நாங்கள் முயற்சி செய்வோம்
கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்
ஆசிரியர் செயல்பாடுகள்
பாடப்பகுதியின் அனைத்து உட்பொருளையும் ஆசிரியர் புரிந்து கொண்டு, மாணவர்களுக்குப் புரியும் விதத்தில் கற்பித்தல் திறன்கள், கற்பித்தல் நுண்திறன்கள் ஆகியவற்றைப் பயன்படுத்திப் பாடப்பகுதியின் அனைத்துக் கடுத்துருக்களையும் மாணவர்கள் புரியும் விதத்தில் விளக்கிக் கற்பித்தல் வேண்டும்.
கற்பிக்க இருக்கும் பாடப்பகுதியின் துணைத் தலைப்புகளில் இருக்கும் பத்திகளை மாணவர்கள் வாசிக்க கூறுதல் வேண்டும்.
மாணவர்களுக்குப் பாடப்பகுதியில் ஏதேனும் ஐயங்கள் ஏற்பட்டால் அவர்களது ஐயங்கள் முழுமையாகத் தீரும் அளவிற்குக் கற்பித்தல் வேண்டும்.
பாடப்பகுதியில் இருந்து சிறுசிறு கேள்விகள் கேட்டல் வேண்டும். பாடம் நிறைவுற்றதும் வகுப்புத் தேர்வு நடத்துதல் வேண்டும்.
வலுவூட்டும் செயல்பாடுகள்
1.’முதல்கல்' சிறுகதையில் கூறப்பட்டுள்ள பயிர்களின் அழிவு, வாய்க்கால் முழுவதும் பரவிக் கிடந்த காட்டாமணக்குச் செடியின் தன்மையால் நீர் வடியாமல் இருந்த நிகழ்வு பற்றிய கருத்துகளைக் கற்பித்தல் வேண்டும்.
2. பயிர்களைப் பாதுகாக்க மருதன் எடுத்த அத்தனை முயற்சிகளைப் பற்றியும் மருதன் எடுத்த நடவடிக்கைகள் பற்றியும் பல்வேறு நிகழ்வுகள் மற்றும் சான்றிகள் மூலம் கூறுதல்.
3. மருதன் முதல் நபராகக் காட்டாமணக்குச் செடியை நீக்க எடுத்த முயற்சியையும், ஊரார் கூடி வந்து காட்டாமணக்குச் செடியை நீக்கிய செயலையும் விளக்கமாகக் கூறுதல்.
4. நால்வகைப் பொருத்தம் -இலக்கணம் பகுதியில் உள்ள திணை, பால், எண், இடம் ஆகியவை சொற்றொடரில் பொருத்தம் இல்லாமல் இருந்தால் பொருள் மாறுபடும்என்பதையும் சொற்றொடரில் ஏற்படுகின்ற பொருத்தமின்மையையும் பல்வோறு எடுத்துக்காட்டுகள் மூலம் கற்பித்தல்
குறைத்தீர் கற்பித்தல்
பாடப்பகுதியின் உட்பொருளைப் புரிந்து கொள்ளும் திறன் குறைந்த மெல்ல கற்கும் மாணவர்களுக்குப் பாடப்பகுதியின் நோக்கம் புரியும் விதத்தில் ‘முதல்கல்’ கதை உணர்த்தும் மருதனின் தன்னலம் இல்லாத சமுகப்பற்று, பயிர்களைப் பாதுகாக்க மருதன் எடுத்த முயற்சி, வாய்க்காலைச் சரி செய்தது மற்றும் சொற்றொடர் அமைக்கும் முறைகளை அறிதல் ஆகிய பாடக்கருத்துருக்களை மீண்டும் மீண்டும் துணைக்கருவிகள் மற்றும் மீள்பார்வை மூலம் புரிய வைத்தல் வேண்டும்.
மாணவர் செயல்பாடுகள்
1.பாடப்பகுதியை வாய்விட்டு வாசித்துப் பழகுதல்
2. வகுப்பறையில் ஆசிரியர் குறிப்பிடும் பாடப் பகுதியை வாய்விட்டு வாசித்தல்
3. பாடம் தொடர்பான செய்திகளைச் சேகரித்துப் பாடத்தின் கருந்துகளைப் புரிந்து கொள்ளுதல்
4. ‘வயல்’ மழையால் அடையும் பாதிப்பைச் சரிபடுத்த என்ன செய்யவேண்டும் என்பதை பெரியோர்களிடம் கேட்டுத்தெரிந்து கொள்ளுதல்.
5.வடிநீர் வடிகின்ற வாய்க்கங்கள் எவ்மைளவு முக்கிய மானது என்று அறிந்து கொண்டு
நீர்வழிப்பாதைகள் தொடர்பான செய்திகளைத் தெரிந்து கொள்ளுதல்.
6. பாடப்பகுதியில் ஐயம் இருந்தால் கேட்டுத் தெளிவடைதல்
7. பாடம் தொடர்பான கலந்துரையாடல் மற்றும் குழுச் செயல்பாட்டில் முழுமையாகப் பங்கேற்றல்
8. பாடம் தொடர்பான காணொலிகளைக் கவனம் சிதறாமல் பார்த்துப் பாடப்பகுதியைப் புரிந்து கொள்ளுதல்
கற்றல் விளைவுகள்
1. மழைநீர் அதிகமானால் பயிர் பாதிப்பு அடையும் என்பதை அறிவதன் மூலம் மழைநீர் வழிந்தோடும் பகுதிகளைச் சீராகப் பராமரிக்கும் திறனைப் பெறுதல்.
2. வடிவாய்க்காலில் புதர்கள் மண்டிக்கிடப்பதால் பாதிப்பு ஏற்படும் என்பதை அறிந்ததன் மூலம் தான் வாழும் பகுதியில் உள்ள நீர்நிலைகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற அறிவினைப் பெறுதல்.
3. பயிர்கள் மீது பாசம் கொண்டு தனியாளாய் மருதன் செயல்பட்டதை அறிந்ததன் மூலம் சுயநலம் தவிர்த்துப் பொதுநலனுக்காக உழைக்க வேண்டும் என்ற எண்ணத்தைப் பெறுதல்.
4.திணை, பால், எண், இடம் பொருத்தம் அறிந்து மொழியைக் கையாளும் திறன் பெறுதல்.
மதிப்பீடு
எளிய சிந்தனை வினாக்கள் LOT QUESTIONS
1.’முதல் கல்' சிறுகதையின் ஆசிரியர் யார்?
2 இடம் 'எத்தனை வகைப்படும்? அவையாவை ?
நடுத்தரச் சிந்தனை வினாக்கள் MOT QUESTIONS
1. உத்தம சோழனின் படைப்புகள் பற்றி எழுதுக.
2. ஒவ்வொரு என்பது ஒருமை பொருளை உணர்த்துமா? பன்மை பொருளை உணர்த்துமா? எடுத்துக்காட்டுடன் விளக்குக.
உயர்தரச் சிந்தனை வினாக்கள் HOT QUESTIONS
1. மருதனின் பண்பு நலனை சிறுகதை வழி விவரி.
2. உளபாட்டுத் தன்மைப் பன்மை விளக்கம் தருக.
தொடர்பணி
1. உங்கள் ஊரில் மழைநீர் வழிந்தோடும் பாதைகளை அடையாளம் கண்டு மழைநீர் தேங்காமல் தடுக்க என்ன செய்யலாம் என்பது குறித்த செய்திகளை எழுதுக.
எம்.ஏ.ஜெலஸ்டின் , முதுகலைத் தமிழாசிரியர், கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில் - 9843448095
Click Here to download the document.
ஜூலை 1 ஆவது வாரம் - பாடக்குறிப்பு Click Here