12 T/ 2 MRK- இயல் 1 BB & G/ QP -25
இயல் - 1
2 மதிப்பெண் வினாக்கள்
புத்தக வினாக்கள்
1. முடிந்தால் தரலாம், முடித்தால் தரலாம் - இவ்விரு சொற்றொடர்கள் உணர்த்தும் பொருளை அறிந்து தொடர் அமைக்க (ஆகஸ்ட்22. ஜீன். 23. மார்ச் 25)
முடிந்தால் தரலாம்:
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவைப்படும் பொருட்களை முடிந்தால் தரலாம்.
முடித்தால் தரலாம்:
ஆசிரியர் கூறியபடி செயல்திட்டப் பதிவேடுகளை முடித்தால் தரலாம்.
2. தமிழில் பிழையின்றி எழுதுவதற்கு மேற்கொள்ள வேண்டிய முயற்சிகள் யாவை? (மார்ச்.24)
* எழுத்தினைத் தெளிவாக உச்சரிக்கப் பழக வேண்டும்.
ன / ல. எ / ழ,ற, ர ஒலிப்பு வேறுபாடு தெரிந்து ஒலிக்க வேண்டும்.
* தமிழில் இவ்வெழுத்துகள் வரும் முறையையும் அவை ஏற்படுத்தும் பொருள் மாற்றத்தையும் அறிந்து கொள்வது இன்றியமையாத ஒன்றாகும்.
* எழுதும்போது தொடக்கத்தில் சிலகாலம் வாய்விட்டோ அல்லது மனத்துக்குள் உச்சரித்தபடியோ எழுதப்பழகுவது நல்லது
* வேகமாக எழுத முயல்வது பிழைக்கு வழிகோலும், எனவே நிதானமாக எழுதுவது நல்லது.
* கெ.கே.கொ.கோ போன்ற கொம்புடைய குறில் நெடில் வேறுபாட்டினைப் புரிந்து எழுத வேண்டும்.
அரசுப் பொதுத் தேர்வு மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம் கூடுதல் வினா - விடைகள்
1. எழுதும்போது ஏற்படும் பிழைகளை எவ்வாறு வகைப்படுத்தலாம்? (பெ.ஆ.க-1)
எழுத்துப்பிழை ,சொற்பொருட்பிழை,சொற்றொடர்ப்பிழை,
பொதுவான பிழைகள் சில என வகைப்படுத்தலாம்.
புத்தக வினாக்கள்
1. 'தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்' நூல் பற்றிக் குறிப்பு வரைக (ஜூலை 2024)
*கவின்கலைகள் குறித்துத் தமிழில் வெளிவந்த முழுமையான முதல்நூல்.
*தமிழரது கலைத்திறனைக் கூறும் நூல்.
*தமிழக அரசின் முதற்பரிசினைப் பெற்ற நூல்
2. 'விரிபெரு தமிழர் மேன்மை
ஓங்கிடச் செய்வ தொன்றே
உயிர்ப்பணியாகக் கொண்டோன்' யார், யாரைப் பற்றி, எதற்காகக் கூறுகிறார்?
பாரதிதாசன், மயிலை சீனி. வேங்கடசாமியைப் பற்றி கூறியதாகும்.
தமிழரின் மேன்மையை ஓங்கிடச் செய்வதொன்றை மட்டுமே தனது உயிர்ப்பணியாக மயிலை சீனி. வேங்கடசாமி கொண்டதால் இவ்வாறு கூறுகிறார்.
. கவிஞர் சிற்பி எவற்றை வியந்து பாட, தமிழின் துணை வேண்டும் என்கிறார்?
(மார்ச்-2020,ஆகஸ்ட் 2022 ,ஜூன் 2023 , ஜூலை 2024)
* செந்நிறத்து வானம் போலத் கைகள் சிவந்திட உழைக்கும் தொழிலாளர்களின் வியர்வை வெள்ளம்.
* தொழிலாளர்களின் தோள்மீது முத்துமுத்தாய் வீற்றிருக்கும் வியர்வை வெள்ளம்.
4. விடியல், வனப்பு -இரு சொற்களையும் ஒருங்கிணைத்துத் தொடர் அமைக்க
விடியலில் உதிக்கும் கதிரவனின் தோற்றம் இயற்கையின் வனப்பை எடுத்துரைக்கும்.
அரசுப் பொதுத் தேர்வு மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம் கூடுதல் வினா - விடைகள்
1.தமிழ் எத்தகைய வலிமை வாய்ந்தது? ( பெ.ஆ.க - 3)
தமிழர்களைச் சூழ்த்திருக்கும் அடிமைத்தனமும், அறியாமையும் முழுவதுமாக அவர்களை விட்டு அகன்றிட அவர்கள் சிறைப்பட்டிருக்கும் அடிமைத்தன கூண்டினை உடைத்திட சிங்கம் போ சீறிப்பாயும் வலிமை வாய்ந்தது .
2.தமிழ் மொழியின் சிறப்புகளாக நீவிர் அறிவன யாவை? (பெ.ஆ.க. -6)
* உழைப்பாளர்களின் உழைப்பைப் பாட தமிழே வேண்டும்.
* சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பாண்டியரின் சங்கத்தில் இருந்து செம்மொழியாக ஆட்சி செய்த மொழி
* பாரி போன்ற வள்ளல்கள் பலரை இத்தமிழ் மண்ணிற்குத் தந்த சிறப்புடையவள்.
3. மயிலைநாதரின் ஆய்வுக் கட்டுரைகள் வெளியிடப்பட்ட இதழ்கள் யாவை?
(பெ.ஆ.க.-4)
குடியரசு, ஊழியன் செந்தமிழ்ச் செல்வி, ஆரம்பாசிரியன், லஷ்மி முதலான இதழ்களில் மயிலைநாதரின் ஆய்வுக் கட்டுரைகள் வெளியிடப்பட்டன.
4. "முன்னம் ஓர்நாள் பாண்டியரின் சங்கத்தில் கொலுவிருந்தாய்" யார், யாரைப்பற்றிக் கூறியது? (பெ.ஆ.க-5 , மார்ச் 23)
தமிழன்னையைப் பற்றி சிற்பி பாலசுப்பிரமணியன் கூறியது.
Click Here to download the document.