12T 1 MID-MQP 1-2025 முதல் இடைத் தேர்வு
மாதரி வினாத்தாள் -1
வகுப்பு-1 2
நேரம்: 1 . 30 மணி மதிப்பெண்:45
பொதுத்தமிழ்
பகுதி-1
அனைத்து வினாக்களுக்கும் விடை தருக 7 X 1 = 7
1.அணிஇலக்கணத்தை மட்டும்மே கூறும் இலக்கண நூல் ( மே 2022 )
அ) தொல்காப்பியம்
ஆ) வீரசோழியம்
இ) தண்டியலங்காரம்
ஈ)முத்துவீரியம்
2.நரம்புக்குள் வீணை மீட்டிக் கொண்டிருக்கிறது என்று அய்யப்ப மாதவன் குறிப்பிடுவது.
( செப் 2020, செப் 2021, ஆகஸ்ட் 2022 )
அ) சூரிய ஒளிக்கதிர்
ஆ) மழைமேகங்கள்
இ) மழைத்துளிகள்
ஈ) நீர் நிலைகள்நிலைகள்
3.ச.த.சற்குணரின் உரை ஏற்படுத்திய ஆர்வத்தினால் மயிலை சீனி வேங்கடசாமி எழுதிய நூல் (பெ.ஆ.க-1 , 3. மார்ச் 24)
அ) பௌத்தமும் தமிழும்
ஆ) இசுலாமும் தமிழும்
இ) சமணமும் தமிழும்
ஈ) கிறித்தவமும் தமிழும்
4. உரிமைத்தாகம் என்னும் கதையை எழுதியவர்
( செப் 2021, மே 2022 )
அ) உத்தம சோழன்
ஆ) பூமணி
இ) ஐராவதம் மகாதேவன்
ஈ) முத்துமீரான்
5. ‘நெல்லை தென்றல்’ என்னும் நூல்
அ) கவிதை நூல்
ஆ) உரைநடை நூல்
இ) கடித இலக்கிய நூல்
ஈ) வரலாற்று நூல்
6. தமிழில் உயிர்மெய் எழுத்துக்கள் 216 ,அவ்வாறெனில் உயிர்மெய்க் குறில் எழுத்துக்கள் எத்தனை
அ) 90
ஆ) 136
இ) 126
ஈ) 96
7. சென்னை வெறும் நகரம் மட்டுமன்று, அது நம்பிக்கை மையம் காரணம் (மார்ச் 2024)
அ) நேரடி, மறைமுக வேலைவாய்ப்புகளின் களம்
ஆ) மென்பொருள், வன்பொருள், வாகன உற்பத்தியில் பங்கு
இ) மென்பொருள் ஏற்றுமதியில் முன்னிலை
ஈ) அ,ஆ , இ அனைத்தும்
குருசடி எம்.ஏ. ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர், கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில்- 4, 9843448095
எவையேனும் இரண்டனுக்கு விடை தருக 2 x 2 = 4
8. நகரம் பட்டை தீட்டிய வெள்ளை வைரமாகிறது - விளக்கம் தருக. (செப்-21. ஆகஸ்ட் 22 மார்ச். 23)
9. கவிஞர் சிற்பி எவற்றை வியந்து பாட, தமிழின் துணை வேண்டும் என்கிறார்?
( மார்ச் 2020, ஆகஸ்ட்2022 , ஜூன் 2023 )
10.’நெடுநல்வாடை’ - பொருள் விளக்கம் தருக. ( மார்ச் 2024 )
எவையேனும் இரண்டனுக்கு விடை தருக 2 × 2 = 4
11. ‘தமிழர் வளர்த்த அழகு கலைகள்’ நூல் பற்றிக் குறிப்பு வரைக.
( ஜூலை 2024 )
12. ‘கீழ்த்திசை சுவடிகள் நூலகம்’ குறித்து எழுதுக ( பெ.ஆ.க. 6 , மாரச் 2024 )
13. சென்னையில் ஓடிய ஆறுகளைக் கூறுக. ( மார்ச் 2020 )
எவையேனும் நான்குக்கு மட்டும் விடை தருக 4 X 2 = 8
14.ஏதேனும் ஒன்றனுக்கு மட்டும் பகுபத உறுப்பிலக்கணம் தருக
அ) சாய்ப்பான் ( ஆகஸ்ட் 2022 )
ஆ) கலங்கி ( ஜூன் 2023 , மார்ச் 2024 )
15.உவமைத் தொடர்களைச் சொற்றொடரில் அமைத்து எழுதுக.
அ) எலியும் பூனையும் போல ( செப் 2020 )
ஆ) அச்சாணி இல்லாத தேர்போல ( மார்ச் 2020 )
16.ஏதேனும் ஒன்றனுக்குப் புணர்ச்சி விதி தருக
அ) இனநிரை ( பெ.ஆ.க.6 )
ஆ) தனியாழி ( செப் 2020 ,மார்ச் 2023 )
17. மயங்கொலிச் சொற்களை ஒரே தொடரில் அமைந்து எழுதுக.
விலை , விளை , விழை ( பெ.ஆ.க. 3 , செப் 2021,. ஜூன் 2023 )
18.கலைச் சொல் தருக.
அ) Hardware
ஆ ) Fine Arts
19. மொழியின் சொற்றொடர் அமைப்பை வளங்கிக் கொள்வதற்கும் பயன்படுத்துவதற்கும் உதவுவன எவை?
குருசடி எம்.ஏ. ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர், கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில்- 4, 9843448095
எவையேனும் இரண்டனுக்கு விடைதருக 2 x 4 = 8
20. ‘ஏங்கொலிநீர் ஞாலத்து இருளகற்றும்’ இடஞ் சுட்டிப் பொருள் விளக்குக.
(மார்ச் - 2020 , 2024, செப் - 2021 , பெ.ஆ.க. 1.3 )
21. வாடைக்காலத்தில் கோவலர்கள் எவ்வாறு பாதுகாப்பைத் தேடினர்
( செப் 22020,மார்ச் 2023,ஜூன் 2023, ஜூலை 2024 )
22.வாகைத் திணையைச் சான்றுடன் விளக்குக. ( பெ.ஆ.க 3, மார்ச் 2024 )
எவையேனும் ஒன்றுக்கு மட்டும் விடைதருக 1 x 4 = 4
23. மயிலை சீனி. வெங்கடசாமியின் வரலாற்று ஆய்வுகள் பற்றி விளக்குக. ( பெ.ஆ.க 5 )
24.சென்னையின் பண்பாட்டு அடையாளங்களில் இன்றும் நிலைத்து இருப்பனவற்றைக் குறிப்பிடுக. ( செப் 2020, ஜூன் 2023, மார்ச் 2024 )
ஏதேனும் ஒரு வினாவிற்கு விடை தருக. 1 X 6 = 6
25. பாரதியின் கடிதம் வாயிலாக நீங்கள் அறிந்து கொண்ட மொழிப்பற்று, சமூகப்பற்று ஆகியவற்றை விவரிக்க.( செப் 2021 , மே 2022, மார்ச் 2023 )
26. நீங்கள் வியந்து பார்த்த ஒரு நகரம் குறித்து இரு பக்க அளவில் கட்டுரை எழுதுக.
( செப் 2020 , ஜூன் 2023 , மார்ச் 2024 )
27. அடிபிறழாமல் செய்யுள் வடிவில் விடை தருக 1 X 4 = 4
அ) "ஓங்கலிடை" - எனத் தொடங்கும் தண்டியலங்கார மனப்பாடப் பாடலை அடிபிறழாமல் எழுதுக.
குருசடி எம்.ஏ. ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர், கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில்- 4, 9843448095
Click Here to download the document.