Loading ....

MID-12th Tamil -Study Material - FIRST MID TERM TEST - July 2025- MODEL QUESTION PAPER - 12th தமிழ் - முதல் இடைத் தேர்வு - ஜூலை 2025-மாதிரி வினாத்தாள் -

 







12T 1 MID-MQP 2-2025         முதல் இடைத் தேர்வு                 

வகுப்பு-1 2           

நேரம்: 1 .  30 மணி                             மதிப்பெண்: 50

                  பொதுத்தமிழ்


பகுதி-1

அனைத்து வினாக்களுக்கும் விடை தருக                         8  X 1 = 8

1. பிழையான தொடரைக் கண்டறிக. (பெ.ஆ.க-2.6 ,ஆகஸ்ட்20 22, மார்ச் 2024)

அ) காளைகளைப் பூட்டி வயலை உழுதனர்

ஆ) மலைமீது ஏறிக் கல்வெட்டுகளைக் கண்டறிந்தனர்.

இ) காளையில் பூத்த மல்லிகை மனம் வீசியது

ஈ) நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின.

2. 'செம்பரிதி"... எனத் தொடங்கும் பாடல் இடம்பெற்றுள்ள கவிதைத் தொகுப்பு

அ) ஒளிப்பறவை

ஆ) நிலவுப்பூ

இ) சர்ப்பயாகம்

ஈ) சூரியநிழல்

3.  மயிலை சீனி வேங்கடசாமி எழுதிய சொல்லாய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு

அ) மத்த விலாசம்

ஆ) தமிழ்நாட்டு வரலாறு

இ) அஞ்சிறைத் தும்பி

ஈ) திசை எட்டும்

4. புதுப்பெயல் பொழிந்தென அடிக்கோடிட்ட சொல்லின் இலக்கணக்குறிப்பு ( ஜூலை 2024 ) 

அ) வினைத்தொகை

ஆ) உரிச்சொல் தொடர்

இ) பண்புத் தொகை

ஈ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

5. இந்தியாவின் முதல் பொது நூலகம் (மார்ச் 2023)

அ) கீழ்த்திசை சுவடிகள் நூலகம்

ஆ) அண்ணா நூற்றாண்டு நூலகம்

இ) கன்னிமாரா நூலகம்

ஈ) சென்னை இலக்கியச் சங்கம்

6. பொருத்துக  (மார்ச் 2024 )

அ) குரங்குகள் - 1. கன்றுகளைத் தவிர்த்தன

ஆ) விலங்குகள் - 2. மரங்களிலிருந்து வீழ்ந்தன

இ) பறவைகள் - 3. குளிரால் நடுங்கின

ஈ ) பசுக்கள் - 4. மேய்ச்சலை மறந்தன

அ) 1 3  4  2

ஆ) 3 4 2 1

இ)3 2 1 4

ஈ) 2 1 3 4

7.  'முதல் கல்' சிறுகதை உணர்த்தும் கருத்து ( செப் 2020 ) 

அ) ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்

ஆ) தனி மரம் தோப்பாகாது

இ) தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்

ஈ) மாற்றம் ஒன்றே மாறாதது

8.தண்டியலங்காரம்___________  என்னும் வடமொழி இலக்கண நூலைத் தழுவி எழுதப்பட்டது.

( மார்ச் 2023 ) 

அ) சூரிய நிழல்

ஆ) வீரசோழியம்

இ) காவியதர்சம்

ஈ) முத்துவீரியம்

குருசடி எம்.ஏ.    ஜெலஸ்டின்,  முதுகலைத் தமிழாசிரியர்,     கார்மல் மேனிலைப் பள்ளி,  நாகர்கோவில்- 4,           9843448095

எவையேனும் இரண்டனுக்கு  விடை தருக                  2 x 2 = 4 

8.செல்வம் இருபதற்கான வழயாக வள்ளுவம் உரைப்பன யாவை ? ( மார்ச் 2025 )

9.  'வாகைத்திணை' என்றால் என்ன ? ( பெ.ஆ.க - 1 )

10.  நகரம் பட்டை தீட்டிய வெள்ளை வைரமாகிறது - விளக்கம் தருக.(செப்-21. ஆகஸ்ட் 22 மார்ச். 23)

எவையேனும் இரண்டனுக்கு விடை தருக                     2 × 2 = 4

11.  'விரிபெரு தமிழர் மேன்மை

      ஓங்கிடச் செய்வ தொன்றே

       உயிர்ப்பணியாகக் கொண்டோன்' யார், யாரைப் பற்றி, எதற்காகக் கூறுகிறார்?

12. இந்தோ-சாரசனிக் கட்டடக்கலை குறிப்பு வரைக. ( பெ.ஆ.க. 2, 5 )

13. ஒரு நகரம் உலகப் புகழ்பெற எவையெல்லாம் இருக்க வேண்டும் ?

எவையேனும் ஐந்தனுக்கு   மட்டும் விடை தருக                 5  X 2 = 10

14. மயங்கொலிச் சொற்களை ஒரே தொடரில் அமைந்து எழுதுக.

கலை,களை,கழை 

15.உவமைத் தொடர்களைச் சொற்றொடரில் அமைத்து எழுதுக. 

அ) கிணற்றுத் தவளை போல ( பெ.ஆ.க 4 .மார்ச்  2025 )        

ஆ) உள்ளங்கை நெல்லிக்கனி போல   (  செப் 2020,ஜூன் 2023 ) 

16.ஏதேனும் ஒன்றனுக்கு மட்டும் பகுபத உறுப்பிலக்கணம் தருக

அ) சாய்ப்பான்   ( ஆகஸ்ட் 2022 ) ஆ) செய்த  ( மார்ச் 2024 )

17.ஏதேனும் ஒன்றனுக்குப் புணர்ச்சி விதி தருக

அ) ஆங்கவற்றுள்   ( அ.ம.வி - 2019 )            ஆ) செந்தமிழே ( மார்ச் 2020 , ஜூலை  2024 )

18.தமிழாக்கம் தருக.

 அ) Knowledge of languages is the doorway to wisdom.(பெ.ஆ.க. 2 , 3 , மே 2022,ஜூன் 2023,மார்ச் 2024)

ஆ) The limits of my language are the limits of my world.(பெ.ஆ.க. 3,மே 2022,ஜூன் 2023, மார்ச் 2024 )

19.முடிந்தால் தரலாம், முடித்தால் தரலாம் - இவ்விரு சொற்றொடர்கள் உணர்த்தும் பொருளை அறிந்து தொடர் அமைக்க (ஆகஸ்ட்2022 ,ஜீன் 20 23  மார்ச் 2025)

குருசடி எம்.ஏ.    ஜெலஸ்டின்,  முதுகலைத் தமிழாசிரியர்,     கார்மல் மேனிலைப் பள்ளி,  நாகர்கோவில்- 4,           9843448095

எவையேனும் இரண்டனுக்கு விடைதருக                                      2 x 4 = 8

20. “செம்பரிதி  மலைமேட்டில் தலையைச் சாய்ப்பான் செந்நிறத்து பூக்காடாம் வான  மெல்லாம்” தொடர் வெளிப்படுத்தும்  காட்சி நயத்தை விளக்குக

21. நெடுநல்வாடை பற்றி குறிப்பு வரைக ( அ.மா.வி - 2019, மாரச் 2025 )

22.சினத்தால் வரும் கேட்டினைக் கூறுக. ( பெ.ஆ.க. 1,4,செப் 2020 )

எவையேனும்  ஒன்றுக்கு  மட்டும் விடைதருக                                 1 x 4 = 4

23.  மயிலை சீனி. வெங்கடசாமியின் வரலாற்று ஆய்வுகள் பற்றி விளக்குக. ( பெ.ஆ.க 5 )

24.சென்னை ‘அறிவின் நகரம்’ என்பதைச் சான்றுகளுடன் விளக்குக. ( பெ.ஆ.க.1,2)

ஏதேனும் ஒரு வினாவிற்கு விடை தருக.                                                  1 X 6 = 6

25. பொறுப்புணர்ச்சி  இருந்த ஊரைத் தன் பொறுப்புணர்வால் மாற்றிய மனிதனின் பண்பு முகத்தை விவரிக்க.

26. செய்ந்நன்றியறிதலே அறம் என்பதை வாயுறை  வாழ்த்தின் துணைகொண்டு நிறுவுக 

( பெ.ஆ.க. 2 , 5 , மார்ச் 2020 , மார்ச் 2025 )

27. அடிபிறழாமல் செய்யுள் வடிவில் விடை தருக                           4  + 2 =  6

அ) "மாமேயல் மறப்ப " - எனத் தொடங்கும் நெடுநல்வாடை  பாடலை அடிபிறழாமல் எழுதுக.

ஆ) ‘சினம்’  என முடியும் திருக்குறளை எழுதுக.

குருசடி எம்.ஏ.    ஜெலஸ்டின்,  முதுகலைத் தமிழாசிரியர்,     கார்மல் மேனிலைப் பள்ளி,  நாகர்கோவில்- 4,           9843448095


Click Here  to download the document.

Post a Comment

Previous Post Next Post