11T 1 MID-MQP 2 -2025
மாதிரி வினாத்தாள் - 2 11 ஆம் வகுப்பு
முதல் இடைப் பருவத்தேர்வு - 2025
பொதுத்தமிழ்
காலம்: 1.30 மணி மதிப்பெண்கள்: 50
பலவுள் தெரிக. 8 X 1 = 8
1 . ‘மொழிதான் ஒரு கவிஞரை நிகழ்காலத்தவரா அல்லது இறந்த காலத்தவரா என்பதை நிர்ணயிக்கிறது" எனக் கூறியவர்
அ) வால்ட் விட்மன்
ஆ) எர்னஸ்ட் காசிரா
இ) ஆற்றூர் ரவிவர்மா
ஈ) பாப்லோ நெருடா
2.ஒப்புரவு என்பதன் பொருள் _________
( செப் 2021,மே 2022, ஜூன் 2023,ஜூலை 2024,மார்ச் 2025 )
அ) அடக்கமுடையது
ஆ) பண்புடையது
இ) ஊருக்கு உதவுவது
ஈ) செல்வமுடையது
3. 'போது' என்ற சொல் உணர்த்தும் பொருள்
அ) போதும்
ஆ) காடு
இ) மொட்டு
ஈ) மேகம்
4. தமிழின் முதல் பாவடிவ நாடகநூல் (ஆகஸ்ட் 2022, மார்ச் 2023)
அ) இரக்சிய வழி
ஆ) மனோன்மணீயம்
இ) நூல்தொகை விளக்கம்
ஈ) திருவிதாங்கூர் அரசர் வரலாறு
5.பொருத்தமான இலக்கிய வடிவத்தைத் தேர்க
அ) ஒற்றை வைக்கோல் புரட்சி - மரபுக் கவிதை
ஆ) மனோன்மணீயம் - சிறுகதை
இ) யானை டாக்டர் - குறும் புதினம்
ஈ) ஐங்குறுநூறு - புதுக்கவிதை
6. ஈரொற்று மெய்ம்மயக்கம் இடம் பெற்றுள்ள சொல் ( மார்ச் 2019 )
அ) கப்பல்
ஆ) மகிழ்ச்சி
இ)பட்டம்
ஈ) மார்கழி
7. மொழக்கு முதலில் வரும் எழுத்துகள் ( மார்ச் 2019 )
அ) 22
ஆ) 48
இ) 18
ஈ) 24
8. யானைகளை எவ்வாறு அழைப்பர் ? ( செப் 2021 )
அ) காட்டின் மூலவர்
ஆ) காட்டின் அரசன்
இ) காட்டின் காவலர்
ஈ) காட்டின் பெரியவர்
எவைனும் இரண்டனுக்கு விடையளி. 2 X 2 = 4
9.மருந்து எது ? மருந்து மரமாக இருப்பவர் யார் ? ( மே 2022 , மார்ச் 2025 )
10. சு.வில்வரத்தினம் பாடத்தான் வேண்டும் என எவற்றைக் குறிப்பிடுகிறார்?
(மார்ச் 2023,மார்ச் 2025)
11.ஒழுக்கமும் பொறையும் உனைப்போல் யார்க்குள?"- இவ்வடி எதனைக் குறிப்பிடுகிறது?
(மார்ச் 2020, 2024, மே 2022)
எவைனும் இரண்டனுக்கு விடையளி. 2 X 2 =4
12. தமிழ்நாட்டின் மாநில மரம் - சிறுகுறிப்பு வரைக. (மார்ச் 2023,2025,ஜூலை 2024 )
13. கவிதை என்பது யாது ? என்ற வினாவிற்கு இந்திரன் அளிக்கும் விடை யாது ?(செப் 2021)
14.ஐந்து வேளாண்மை மந்திரங்கள் யாவை ?
(மார்ச் 2019 மார்ச் 2024 , செப் 2020 )
எவையேனும் ஐந்தனுக்கு விடை தருக. 5 X 2 = 10
15. மயங்கொலிச் சொற்களை ஒரே தொடரில் அமைத்து எழுதுக.
கனை, கணை ( மார்ச் 2019 , மே 2022 )
16. பேச்சு வழக்கை எழுத்து வழக்காக மாற்றுக,
அ) தேர்வெழுத வேகமாப் போங்க நேரங்கழிச்சி போனாப் பதட்டமாயிரும்.
( ஜூன் 2019, மே 2022, ஆகஸ்ட் 2022 )
ஆ) முயற்சி செஞ்சா அதுக்கேத்த பலன் வராமப் போவாது,
( ஜூன் 2019, செப் 2021, மே 2022, ஆகஸ்ட் 2022
17. தொடரில் உள்ள சொற்களை ஒழுங்குபடுத்தி இரண்டு சொற்றொடர்களாக்குக
நேற்று ஏன் வந்த பையன் பக்கத்தில் யார் இருக்கவில்லை தெரியுமா ?
( ஜூன் 2019 )
18. ஏதேனும் ஒன்றனுக்கு மட்டும் உறுப்பிலக்கணம் தருக
அ) ஏகுமின் ஆ) அலர்ந்து
19.ஏதேனும் ஒன்றனுக்கு மட்டும் புணர்ச்சி விதி தருக
அ) பேரழகு ஆ) உழுதுழுது
20. உயிரீறு ,மெய்யீறு பற்றி எடுத்துக்காட்டுடன் எழுதுக. ( மார்ச் 2020,2023)
ஏதேனும் இரண்டனுக்கு விடையளி 2 X 4 = 8
21. குறித்த காலத்திற்கு முன்பாக ஊர் திரும்பிய தலைவன் கூறுவனவற்றை ஐங்குறுநூறு கொண்டு விளக்குக.
22.புகழுக்குரிய பண்புகளாக நீவிர் கருதுவன யாவை ? புகழின் பெருமையைப் பொதுமறை வழி நின்று கூறுக. ( செப் 2021 , மே 2022 )
23.’தீயனால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு’ - இக்குறட்பாவில் வரும் அணியை விளக்குக.
( மார்ச் 2020 2023, ஜூலை 2024 )
ஏதேனும் ஒன்றனுக்கு விடையளி 1 X 4 = 4
24 . ‘என்னுயிர் தமிழ்மொழி என்பேன்’ என்னும் தலைப்பில் நீவிர் கொண்டுள்ள மொழிப் பற்றினை எழுதுக. ( ஜுலை 2024 )
25. தொழு உரம் என்றால் என்ன ? புன்செய் நிலத்திற்கு உரிய இயற்கை உரம் எவ்வாறு தயாரிக்க வேண்டும் ?
ஏதேனும் ஒன்றனுக்கு விரிவான விடை எழுதவும். 1 x 6 = 6
26.சிம்புலி தமிழரும் ஆஸ்கர் தமிழரும் இசை தமிழுக்கு ஆற்றிய பணிகளை நம் பாடப்பகுதி கொண்டு தொகுத்து எழுதுக.
( மார்ச் 2019,2020, 2024, ஆகஸ்ட் 2022 )
27. புல், நாங்கூழ்ப்புழுவை நோக்கி நடராசன் உரைப்பனவற்றைத் தொகுத்து எழுதுக.
28. அடிபிறழாமல் செய்யுள் வடிவில் விடை தருக 4 + 2 = 6
அ) "ஏடு தொடக்கி " - எனத் தொடங்கும் ‘யுகத்தன் பாடலை எழுதுக.
( ஜூன் 2023 )
ஆ) ‘செயல் ’ என முடியும் திருக்குறளை எழுதுக.( மார்ச் 2020,2023,2025 )
குருசடி எம்.ஏ. ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர், கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில்- 4, 9843448095
Click Here to download the document.