12T 1 MID-MQP 3 - 2025 முதல் இடைத் தேர்வு
மாதிரி வினாத் தாள் - 3 வகுப்பு-1 2
நேரம்: 1 . 30 மணி பொதுத்தமிழ் மதிப்பெண் : 50
I. அனைத்து வினாக்களுக்கும் விடை தருக 8 x 1 = 8
1. பொருத்துக
அ) அன்பும் அறனும் - 1. பண்புத்தொகை
ஆ) நன்கலம் - 2. ஆகுபெயர்
இ) மறத்தல் - 3.எண்ணும்மை
ஈ) உலகு - 4. தொழிற்பெயர்
அ ) 2 1 4 3
ஆ) 3 1 4 2
இ) 1 2 3 4
ஈ) 2 3 4 1
2. சிற்பி பாலசுப்பிரமணியத்தின் 'இளந்தமிழே' பாடல் இடம் பெற்ற நூல் ( மார்ச் 2020)
அ) மஸ்னவி
ஆ) நிலவுப் பூ
இ) காவ்யதர்சம்
ஈ) துறைமுகம்
3. பொருத்துக (மார்ச் 2024 )
அ) குரங்குகள் - 1. கன்றுகளைத் தவிர்த்தன
ஆ) விலங்குகள் - 2. மரங்களிலிருந்து வீழ்ந்தன
இ) பறவைகள் - 3. குளிரால் நடுங்கின
ஈ ) பசுக்கள் - 4. மேய்ச்சலை மறந்தன
அ) 1 3 4 2
ஆ) 3 4 2 1
இ)3 2 1 4
ஈ) 2 1 3 4
4. மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய சொல்லாய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு
அ) மத்த விலாசம்
ஆ) தமிழ்நாட்டு வரலாறு
இ) அஞ்சிறைத்தும்பி
ஈ) திசை எட்டும்
5. கூற்று : இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் நெசவாளர்கள் சென்னை நோக்கி வந்தனர்.
காரணம் : கிழக்கிந்திய நிறுவனத்தின் வணிகம், துணி சார்ந்ததாகவே இருந்தது.(செப் 2020)
அ) கூற்று சரி, காரணம் தவறு
ஆ) கூற்று தவறு, காரணம் சரி
இ) கூற்று தவறு, காரணம் தவறு
ஈ) கூற்று சரி, காரணம் சரி
6.மயிலை சீனியார் அவர்களின் அரிய ஆவணப் பணிகளில் ஒன்று இந்நூல்
( செப் 2020 )
அ) தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்
ஆ) மறைந்து போன தமிழ் நூல்கள்
இ) களப்பிரர் ஆட்சியில் தமிழகம்
ஈ) அஞ்சிறைத் தும்பி
7. யார்? எது? ஆகிய வினாச்சொற்கள் பயனிலையாய் அமைந்து, உணர்த்தும் திணைகள் முறையே
( ஆகஸ்ட் 2022 , ஜூலை 2024 )
அ) அஃறிணை, உயர்திணை
ஆ) உயர்திணை, அஃறிணை
இ) விரவுத்திணை, அஃறிணை
ஈ) விரவுத்திணை, உயர்திணை
8.பாரதியார் நெல்லையப்பருக்கு, நம் பாடப்பகுதியில் உள்ள கடிதத்தை எங்கிருந்து எழுதினார். (பெ.ஆ.க.-3)
அ) எட்டயபுரம்
ஆ) திருநெல்வேலி
இ) புதுச்சேரி
ஈ)சென்னை
குருசடி எம்.ஏ. ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர்,
கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில்- 4, 9843448095
II. எவையேனும் நான்கு வினாக்களுக்கு விடை தருக 4 x 2 = 8
9. ஞாலத்தின் பெரியது எது ? ( மார்ச் 2023 )
10. வாகைத் திணை என்றால் என்ன ? ( பெ.ஆ.க. 1 )
11. கவிஞர் சிற்பி எவற்றை வியந்து பாட, தமிழின் துணை வேண்டும் என்கிறார்?
( மார்ச் 2020, ஆகஸ்ட்2022 , ஜூன் 2023 )
12. கீழ்த்திசை சுவடிகள் நூலகம் குறித்து எழுதுக. ( பெ.ஆ.க. 6 , மாரச் 2024 )
13. தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்' நூல் பற்றிக் குறிப்பு வரைக. ( ஜூலை 2024 )
III. எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடை தருக 3 x 4 = 12
14. எவற்றையெல்லாம் விட நன்றி உயர்ந்தது ? - குறள் வழி விளக்குக. ( பெ.ஆ.க. 5, ஆகஸ்ட் 2022)
15. வாடைக்காலத்தில் கோவலர்கள் எவ்வாறு பாதுகாப்பைத் தேடினர்
( செப் 22020,மார்ச் 2023,ஜூன் 2023, ஜூலை 2024 )
16.சென்னையின் பண்பாட்டு அடையாளங்களில் இன்றும் நிலைத்து இருப்பனவற்றைக் குறிப்பிடுக. ( செப் 2020, ஜூன் 2023, மார்ச் 2024 )
17.மயிலை சீனி. வெங்கடசாமியின் வரலாற்று ஆய்வுகள் பற்றி விளக்குக. ( பெ.ஆ.க 5 )
IV. எவையேனும் ஐந்து வினாக்களுக்கு விடை தருக 5 x 2 = 10
18. உவமைத்தொடர்களைச் சொற்றொடரில் அமைத்து எழுதுக.
அ) அச்சாணி இல்லாத தேர்போல ( மார்ச் 2020 )
(அல்லது)
ஆ) உள்ளங்கை நெல்லிக்கனி போல ( செப் 2020,ஜூன் 2023 )
19.மயங்கொலிச் சொற்களை ஒரே தொடரில் அமைத்து எழுதுக.
விலை , விளை , விழை ( பெ.ஆ.க. 3 , செப் 2021,. ஜூன் 2023 )
20.தமிழாக்கம் தருக
அ ) If you want people to understand you, speak their language
( பெ.ஆ.க. 2 ஜூன் 2023, மார்ச் 2024 )
ஆ) A new language is new life .
(பெ.ஆ.க.2,3,மே 2022, ஜூன் 2023 மார்ச் 2024 )
21.ஏதேனும் ஒன்றனுக்குப் பகுபத உறுப்பிலக்கணம் தருக
அ) இருந்தாய் ( அல்லது ) ஆ) சாய்ப்பான் ( ஆகஸ்ட் 2022 )
22. ஏதேனும் ஒன்றனுக்குப் புணர்ச்சி விதி தருக.
அ) இனநிரை ( பெ.ஆ.க. 6 ) ( அல்லது ) ஆ) வானமெல்லாம்
( ஆகஸ்ட் 2022 , ஜூன் 2023 )
23. கலைச்சொல் தருக.
அ ) Museum ஆ) Anthropology
24. முடிந்தால் தரலாம், முடித்தால் தரலாம் - இவ்விரு சொற்றொடர்கள் உணர்த்தும் பொருளை அறிந்து தொடர் அமைக்க (ஆகஸ்ட்2022 ,ஜீன் 20 23 மார்ச் 2025)
V. ஏதேனும் ஒரு வினாவிற்கு மட்டும் விடை தருக. 1 x 6 = 6
25. நெடுநல்வாடையில் நக்கீரர் காட்டும் மழைக்கால வருணனையைத் தொகுத்து எழுதுக.
( பெ.ஆ.க. 2 , 5 )
26. மயிலை சீனி. வேங்கடசாமி ஓர் “ ஆராய்ச்சிப் பேரறிஞர்” என்பதைச் சான்றுடன் நிறுவுக.
( மார்ச் 2023 )
VI. அடிபிறழாமல் எழுதுக. 4 + 2 = 6
27.. "ஓங்கலிடை வந்த...எனத் தொடங்கும் தண்டியலங்காரம் பாடல்
28. "நன்று" என முடியும் திருக்குறள் பாடல்.
குருசடி எம்.ஏ. ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர், கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில்- 4, 9843448095
Click Here to download the document.