11 T/ OW- இயல் 1 BB & G/ QP -25
இயல் - 1
புத்தக வினாக்கள்
இலக்கணத் தேர்ச்சி கொள் (பக்கம் 15)
1. தவறான இணையைத் தேர்வு செய்க (மார்ச் 2020, ஜூன் 2019, மே 2022)
அ) மொழி + ஆளுமை - உயிர் உயிர்
ஆ) தமிழ் உணர்வு - மெய் உயிர்
இ) கடல் + அலை - உயிர் + மெய்
ஈ) மண் + வளம் - மெய் + மெய்
விடை : இ) கடல் + அலை - உயிர் + மெய்
அரசுப் பொதுத் தேர்வு மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம் கூடுதல் வினா - விடைகள்
1. மொழிக்கு முதலில் வரும் எழுத்துகள் ( மார்ச் 2024 )
அ ) 22
ஆ) 48
இ) 18
ஈ) 24
விடை : அ ) 22
2. தவறான இணையைத் தேர்வு செய்க ( மார்ச் 2025 )
அ) மல்லி + இலை - உயிர் + மெய்
ஆ)கலை + அழகு - உயிர் + உயிர்
இ) பல் + பொடி - மெய் + மெய்
ஈ) மெய் + அறிவு - மெய் உயிர்
விடை : அ) மல்லி + இலை
நம்மை அளப்போம் (புத்தகம் பக்கம்.16)
பலவுள் தெரிக
1. பொருத்தமானதைத் தேர்ந்தெடுக்க
அ) மல்லாரமே - யுகத்தின் பாடல்
ஆ) இன்குலாப் - ஒவ்வொரு புல்லையும்
இ) ஸ்டெஃபான் மல்லார்மே - புல்லின் இதழ்கள்
ஈ) இந்திரன் - பேச்சுமொழியும் கவிதை மொழியும்
i) அ , ஆ
ii) அ, இ
iii) ஆ , ஈ
iv) அ, இ
விடை : iii) ஆ , ஈ
எம்.ஏ.ஜெலஸ்டின் , முதுகலைத் தமிழாசிரியர், கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில் - 9843448095
2. "கபாடபுரங்களைக் காவுகொண்டபின்னும்
காலத்தால் சாகாததொல் கனிமங்கள்" அடி மோனையைத் தெரிவு செய்க.
அ) கபாடபுரங்களை - காவு கொண்ட
ஆ) காலத்தால் - கனிமங்கள்
இ) கபாடபுரங்களை - காலத்தால்
ஈ) காலத்தால் - சாகாத
விடை : இ) கபாடபுரங்களை - காலத்தால்
3. ‘மொழிதான் ஒரு சுவிஞரை நிகழ்காலத்தவரா அல்லது இறந்த காலத்தவரா என்பதை நிர்ணயிக்கிறது" எனக் கூறியவர்
அ) வால்ட் விட்மன்
ஆ) எர்னஸ்ட் காசிரா
இ) ஆற்றூர் ரவிவர்மா
ஈ) பாப்லோ நெருடா
விடை : இ) ஆற்றூர் ரவிவர்மா
4. 'திரவ நிலையில், நான் விரும்பும் வகையில் என்னிடம் கீழ்ப்படிந்து நடந்து கொள்ளும் எனது மொழி, எழுத்து மொழியாகப் பதிவு செய்யப்படுகிறபோது உறைந்து போன பனிக்கட்டியைப் போன்ற திட நிலையை அடைந்து விடுகிறது". இவ்வரிகள் உணர்த்தும் கருத்து,
அ) மொழி என்பது திட திரவ நிலையில் இருக்கும்
ஆ) பேச்சுமொழி, எழுத்துமொழியை திட திரவப் பொருளாக உருவகப்படுத்தவில்லை.
இ) எழுத்து மொழியைவிட பேச்சுமொழி எளிமையானது.
ஈ) பேச்சுமொழியைக் காட்டிலும் எழுத்து மொழி எளிமையானது.
விடை : இ) எழுத்து மொழியைவிட பேச்சுமொழி எளிமையானது
5. மொழி முதல் எழுத்துகளின் அடிப்படையில் முறையானதைக் கண்டுபிடிக்க
அ) அன்னம், கிண்ணம்
ஆ) டமாரம், இங்ங்ணம்
இ) ரூபாய், லட்சாதிபதி
ஈ) றெக்கை, அங்கனம்
விடை : அ) அன்னம், கிண்ணம்
எம்.ஏ.ஜெலஸ்டின் , முதுகலைத் தமிழாசிரியர், கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில் - 9843448095
அரசுப் பொதுத் தேர்வு மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம் கூடுதல் வினா - விடைகள்
1. தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை வேரில்லாத மரம் கூடில்லாத பறவை' என்று பாடியவர் ( செப் 2021 )
அ) பாரதிதாசன்
ஆ) பாரதியார்
இ) இரசூல் கம்சதோவ்
ஈ) சு. வில்வரத்தினம்
விடை : இ) இரசூல் கம்சதோவ்
2. மனித இனத்தின் ஆதி அடையாளம் ( ஜூன் 2023 )
அ) எழுத்து
ஆ) பேச்சு
இ)மொழி
ஈ) பாட்டு
விடை : இ)மொழி
3. கவிதையினை இயன்றவரை பேசுவதுபோல் எழுதுவதுதான் உத்தமம் என்றும் அதுவே மானுடத்துக்கு எழுத்தாளர்கள் செய்யும் கடமை என்றும் கூறியவர் (மார்ச் 2020 )
அ) மகாகவி பாரதியார்
ஆ) இராசேந்திரன்
இ) எர்னஸ்ட் காசிரர்
ஈ) வால்ட் விட்மன்
விடை : அ) மகாகவி பாரதியார்
4. “புல்லின் இதழ்கள்” என்ற உலகப்புகழ் பெற்ற நூல் யாருடைய படைப்பாகும்? ( ஜூன் 2019 )
அ) பாப்லோ நெரூடா
ஆ) மல்லார்மே
இ) வால்ட்விட்மன்
ஈ) எர்னஸ்ட் காசிரர்
விடை : இ) வால்ட் விட்மன்
5. பேச்சு என்பது மொழியில் ________________ ( செப் 2021,மே 2022 )
அ) பறப்பது
ஆ) நீந்துவது
இ)ஓடுவது
ஈ) மூழ்குவது
விடை : ஆ) நீந்துவது
6. 1971 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற இலத்தீன் அமெரிக்காவின் மிகச் சிறந்த கவிஞர் ( ஆகஸ்ட் 2022)
அ) வால்ட் விட்மன்
ஆ) ஆற்றூர் ரவிவர்மா
இ) ஸ்டெஃபான் மல்லார்மே
ஈ) பாப்லோ நெரூடா
விடை : ஈ) பாப்லோ நெரூடா
7. வெண்சுவை - இலக்கணக்குறிப்புத் தருக. ( மார்ச் 2025 )
அ) உவமைத்தொகை
ஆ) வினைத்தொகை
இ) உம்மைத்தொகை
ஈ) பண்புத்தொகை
விடை : ஈ) பண்புத்தொகை)
8. இன்குலாபின் கவிதைகள் ___________________ என்னும் பெயரில் முழுமையாகத் தொகுக்கப்பட்டுள்ளன. ( செப் 2020 )
அ) உயிர்த்தெழும் காலத்துக்காக
ஆ) கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்
இ) ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்
ஈ) கூவும் குயிலும் கரையும் காகமும்
இ) ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்
எம்.ஏ.ஜெலஸ்டின் , முதுகலைத் தமிழாசிரியர், கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில் - 9843448095
9. ஆஸ்கர் விருது யாருக்கு வழங்கப்பட்டது? ( மே 2022 )
அ)ஏ. ஆர். இரகுமான்
ஆ) பாரதிராஜா
இ) சித்ரா
ஈ) இளையராஜா
விடை : அ) ஏ.ஆர். இரகுமான்
10. ஆசியாவிலேயே முதன்முதலில் 'சிம்பொனி' என்னும் மேற்கத்திய செவ்வியல் வடிவ இசைக் கோவையை உருவாக்கியவர் ( ஆகஸ்ட் 2022 )
அ) எம்.எஸ்.விஸ்வநாதன்
ஆ) சங்கர் கணேஷ்
இ) ஏ.ஆர். இரகுமான்
ஈ) இளையராஜா
விடை : ஈ) இளையராஜா
11. பால் நிலாப்பாதை' என்ற நூலை எழுதியவர் ( மார்ச் 2023 )
அ) ஏ.ஆர் ரகுமான்
ஆ) இளையராஜா
இ) கங்கை அமரன்
ஈ) பாரதிராஜா
விடை : ஆ) இளையராஜா
எம்.ஏ.ஜெலஸ்டின் , முதுகலைத் தமிழாசிரியர், கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில் - 9843448095