12 T/ OW- இயல் 2 BB & G/ QP -25
இயல் - 2
புத்தக வினாக்கள்
இலக்கணத் தேர்ச்சி கொள் (பக்கம்.37
1. தமிழில் திணைப்பாகுபாடு _______________ அடிப்படையில் பகுக்கப்பட்டுள்ளது.
(பெ.ஆ.க 4, செப் 2021 , மே 2022)
அ) பொருட்குறிப்பு
ஆ) சொற்குறிப்பு
இ) தொடர்க்குறிப்பு`
ஈ) எழுத்துக்குறிப்பு
விடை : அ) பொருட்குறிப்பு|
2. "உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே
அஃறிணை என்மனார் அவரல பிறவே" -இந்நூற்பா இடம்பெற்ற இலக்கண நூல் (மார்ச்-2025)
அ) நன்னூல்
ஆ )அகத்தியம்
இ) தொல்காப்பியம்
ஈ) இலக்கண விளக்கம்
விடை : இ) தொல்காப்பியம்
3. யார்? எது? ஆகிய வினாச்சொற்கள் பயனிலையாய் அமைந்து, உணர்த்தும் திணைகள் முறையே
( ஆகஸ்ட் 2022 , ஜூலை 2024 )
அ) அஃறிணை, உயர்திணை
ஆ) உயர்திணை, அஃறிணை
இ) விரவுத்திணை, அஃறிணை
ஈ) விரவுத்திணை, உயர்திணை
விடை : ஆ) உயர்திணை, அஃறிணை
4. பொருத்தி விடை தேர்க
அ) அவன், அவள், அவர் - 1. உளப்படுத்தாத் தன்மைப் பன்மை
ஆ) நாங்கள் முயற்சி செய்வோம் -2. உளப்பாட்டுத் தன்மைப் பன்மை
இ) நாம் முயற்சி செய்வோம் - 3. தன்மைப் பன்மைப் பெயர்கள்
ஈ) நாங்கள். நாம் - 4. பதிலிப் பெயர்கள்
அ) 4 1 2 3
ஆ) 2 3 4 1
இ) 3 4 1 2
ஈ ) 4 3 1 2
விடை : அ) 4 1 2 3
நம்மை அளப்போம் ( பக்கம் : 38 )
பலவுள் தெரிக
1. பொருத்துக (மார்ச் 2024 )
அ) குரங்குகள் - 1. கன்றுகளைத் தவிர்த்தன
ஆ) விலங்குகள் - 2. மரங்களிலிருந்து வீழ்ந்தன
இ) பறவைகள் - 3. குளிரால் நடுங்கின
ஈ ) பசுக்கள் - 4. மேய்ச்சலை மறந்தன
அ) 1 3 4 2
ஆ) 3 4 2 1
இ)3 2 1 4
ஈ) 2 1 3 4
விடை : ஆ) 3 4 2 1
எம்.ஏ.ஜெலஸ்டின் , முதுகலைத் தமிழாசிரியர், கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில் - 9843448095
2. நரம்புகளுக்குள் வீணை மீட்டிக் கொண்டிருக்கிறது என்று அய்யப்ப மாதவன் குறிப்பிடுவது.
(செப்2020 , செப்-2021, ஆகஸ்ட் 2022)
அ ) சூரிய ஒளிக்கதிர்
ஆ) மழைமேகங்கள்
இ) மழைத்துளிகள்
ஈ)நீர் நிலைகள்
விடை : ஆ) மழைமேகங்கள்
3. சென்னை வெறும் நகரம் மட்டுமன்று, அது நம்பிக்கை மையம் காரணம் (மார்ச் 2024)
அ) நேரடி, மறைமுக வேலைவாய்ப்புகளின் களம்
ஆ) மென்பொருள், வன்பொருள், வாகன உற்பத்தியில் பங்கு
இ) மென்பொருள் ஏற்றுமதியில் முன்னிலை
ஈ) அ,ஆ , இ அனைத்தும்
விடை : ஈ) அ,ஆ, இ அனைத்தும்
4. 'பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென' தடித்த சொல்லின் இலக்கணக்குறிப்பைத் தேர்க. (மார்ச் 2020, ஜூன் 2023)
அ) வினைத் தொகை
ஆ) உரிச்சொல்தொடர்
இ)இடைச்சொல்தொடர்
ஈ) ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சம்
விடை : ஈ) ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சம்
5. கூற்று : இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் நெசவாளர்கள் சென்னை நோக்கி வந்தனர்.
காரணம் : கிழக்கிந்திய நிறுவனத்தின் வணிகம், துணி சார்ந்ததாகவே இருந்தது.(செப் 2020)
அ) கூற்று சரி, காரணம் தவறு
ஆ) கூற்று தவறு, காரணம் சரி
இ) கூற்று தவறு, காரணம் தவறு
ஈ) கூற்று சரி, காரணம் சரி
விடை : ஈ) கூற்று சரி, காரணம் சரி
அரசுப் பொதுத் தேர்வு மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம் கூடுதல் வினா - விடைகள்
1. இந்தோ-சாரசனிக் கட்டடக்கலை என்பது (பெ.ஆ.க.4)
அ) முகலாயக் கட்டடக்கலை
ஆ) பிரித்தானியக் கட்டடக் கலை
இ) இந்தியப் பாரம்பரியக் கட்டடக் கலை
ஈ) இவை மூன்றும் கலந்தது
விடை : ஈ) இவை மூன்றும் கலந்தது
2. மதராசப்பட்டினம் என்று அழைக்கப்பட்ட பகுதிகள் (பெ.ஆ.க.2)
அ) வடசென்னைப் பகுதிகள்
ஆ) தென்சென்னைப் பகுதிகள்
இ) மத்திய சென்னைப் பகுதிகள்
ஈ) இவை மூன்றும்
விடை : அ) வடசென்னைப் பகுதிகள்
3. இந்தியாவின் முதல் பொது நூலகம் (மார்ச் 2023)
அ) கீழ்த்திசை சுவடிகள் நூலகம்
ஆ) அண்ணா நூற்றாண்டு நூலகம்
இ) கன்னிமாரா நூலகம்
ஈ) சென்னை இலக்கியச் சங்கம்
விடை : இ) கன்னிமாரா நூலகம்
எம்.ஏ.ஜெலஸ்டின் , முதுகலைத் தமிழாசிரியர், கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில் - 9843448095
4. நெடுநல்வாடை __________________ அடிகளைக் கொண்டது. (பெ.ஆ.க.2)
அ) 150
ஆ)188
இ ) 186
ஈ )144
விடை : ஆ)188
5. பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று (பெ.ஆ.க.2)
அ) புறநானூறு
ஆ) அகநானூறு
இ) நெடுநல்வாடை
ஈ) நற்றிணை
விடை : இ) நெடுநல்வாடை
6. புதுப்பெயல் பொழிந்தென அடிக்கோடிட்ட சொல்லின் இலக்கணக்குறிப்பு ( ஜூலை 2024 )
அ) வினைத்தொகை
ஆ) உரிச்சொல் தொடர்
இ) பண்புத் தொகை
ஈ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
விடை : இ) பண்புத் தொகை
7. 'வெள்ளம்' என்று பொருள் தரும் சொல் (பெ.ஆ.க. 1, பெ.ஆ.க 2 )
அ) பனிப்ப
ஆ) ஏறுடை
இ) நீடுஇதழ்
ஈ) ஆர்கலி
விடை : ஈ) ஆர்கலி
8. 'முதல்கல்' என்னும் சிறுகதையின் ஆசிரியர்
(பெ.ஆ.க. 1, மார்ச் 2020 )
அ) பூமணி
ஆ) உத்தமசோழன்
இ) பிரபஞ்சன்
ஈ) நா.காமராசன்
விடை : ஆ) உத்தமசோழன்
9. 'முதல் கல்' சிறுகதை உணர்த்தும் கருத்து ( செப் 2020 )
அ) ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்
ஆ) தனி மரம் தோப்பாகாது
இ) தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்
ஈ) மாற்றம் ஒன்றே மாறாதது
விடை : ஆ) தனி மரம் தோப்பாகாது
எம்.ஏ.ஜெலஸ்டின் , முதுகலைத் தமிழாசிரியர், கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில் - 9843448095
இயல் 1