11 - காலாண்டுத் தேர்வு 11 T QTY 2 / 3 - Model - 2025
மாதிரி வினாத்தாள் - 2 எம்.ஏ. ஜெலஸ்டின் , 9843448095
காலாண்டுப் பொதுத்தேர்வு - 2025
வகுப்பு - 11
பொதுத்தமிழ்
கால அளவு : 3.00 மணிநேரம் மதிப்பெண் : 90
அறிவுரைகள் : 1. அனைத்து வினாக்களும் சரியாகப் பதிவாகி உள்ளதா என்பதனைச் சரிபார்த்துக் கொள்ளவும். அச்சுப் பதிவில் குறையிருப்பின் அறைக்கண்காணிப்பாளரிடம் உடனடியாகத் தெரிவிக்கவும்
2. நீலம் அல்லது கருப்பு மையினை மட்டுமே எழுதுவதற்கும் அடிக்கோடி இடுவதற்கும் பயன்படுத்த வேண்டும்.
குறிப்பு : விடைகள் தெளிவாகவும் குறிப்பிட்ட அளவினதாகவும் சொந்த நடையிலும் அமைதல் வேண்டும்.
பகுதி - 1
அனைத்து வினாக்களுக்கும் விடை தருக 14 x 1 = 14
1.பொருத்தமானதைத் தேர்ந்தெடுக்க
அ) மல்லார்மே - யுகத்தின் பாடல்
ஆ) இன்குலாப் - ஒவ்வொரு புல்லையும்
இ) ஸ்டெஃபான் மல்லார்மே - புல்லின் இதழ்கள்
ஈ) இந்திரன் - பேச்சுமொழியும் கவிதை மொழியும்
i) அ , ஆ
ii) அ , ஈ
iii)ஆ , ஈ
iv ) அ , இ
2.பொருந்தாததைத் தேர்க்க
அ) காயா
ஆ) செம்முல்லை
இ) மல்லிகை
ஈ) முல்லை
3. மனோன்மணீயத்திற்கு மூல நூலாக அமைந்தது
அ) இரகசியவழி
ஆ) செல்லும்வழி
இ) பெரியவழி
ஈ) மூடியவழி
4. துன்பப்படுபவர் _____________
அ) தீக்காயம்பட்டவர்
ஆ) தீயினால் சுட்டவர்
இ) பொருளைக் காக்காதவர்
ஈ) நாவைக் காவாதவர்
5.’ஆடுகம்’ என்பதன் இலக்கணக்குறிப்பு
அ) முன்னிலை பன்மை வினைமுற்று
ஆ)முன்னிலை ஒருமை வினைமுற்று
இ) வினைமுற்று
ஈ) தன்மை பன்மை வினைமுற்ற
6.கவிதையினை இயன்றவரைப் பேசுவதுபோல் எழுதுவதுதான் உத்தமம் என்றும் அதுவே மானுடத்துக்கு எழுத்தாளர்கள் செய்யும் கடமை என்றும் கூறியவர்
அ) மகாகவி பாரதியார்
ஆ) இராசேந்திரன்
இ) எர்னஸ்ட் காசிரர்
ஈ) வால்ட் விட்மன்
7. 1971 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற இலத்தீன் அமெரிக்காவின் மிகச் சிறந்த கவிஞர்
அ) வால்ட் விட்மன்
ஆ) ஆற்றூர் ரவிவர்மா
இ) ஸ்டெஃபான் மல்லார்மே
ஈ) பாப்லோ நெரூடா
8. குறும்பர் மொழியில் தாழ்வாரத்தைக் குறிக்கும் சொல்
அ) உச்சி
ஆ) மேடு
இ) மெட்டு
ஈ) பள்ளம்
9.மண்ணுக்கு வளம் சேர்ப்பன
அ) மண்புழு
ஆ) ஊடுபயிர்
இ) இயற்கை உரங்கள்
ஈ) இவை மூன்றும்
10. ஒற்றை வைக்கோல் புரட்சி என்னும் நூலை எழுதியவர் யார்?
அ) நம்மாழ்வார்
ஆ) சொக்கலிங்கம்
இ) கம்பர்
ஈ) மாசானபு ஃபுகோகா
11.பால் நிலாப்பாதை' என்ற நூலை எழுதியவர்
அ) ஏ.ஆர் ரகுமான்
ஆ) இளையராஜா
இ) கங்கை அமரன்
ஈ) பாரதிராஜா
12.'யானை டாக்டர்' என்னும் குறும்புதினம் _________________ என்னும் சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.
அ) அரம்
ஆ) மறம்
இ) வீரம்
ஈ) அறம்
13. மொழிக்கு முதலில் வரும் எழுத்துகள்
அ) 22
ஆ) 48
இ) 18
ஈ) 24
14.பகுபத உறுப்புகளுள் இடம்பெறும் அடிப்படை உறுப்புகள்
அ) பகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகுதி, விகாரம்
ஆ)பகுதி, இடைநிலை, சாரியை
இ) பகுதி,சந்தி,விகாரம்
ஈ) பகுதி, விதி
பகுதி 2
பிரிவு -1
எவையேனும் மூன்றனுக்கு விடை எழுதுக. 3 x 2 = 6
15. இனம், மொழி குறித்த இரசூல் கம்சதோவ் பார்வையைக் குறிப்பிடுக.
16. சீர்தூக்கி ஆராயவேண்டிய ஆற்றல்கள் யாவை ?
17. மனோன்மணீயம் - குறிப்பு வரைக.
18. காவடிச்சிந்து என்பது யாது ?
பிரிவு -2
எவையேனும் இரண்டனுக்கு விடை தருக. 2 x 2 = 4
19.தமிழ்நாட்டின் மாநிலமரம் - சிறுகுறிப்பு
20. ‘கோட்டை’ என்னும் சொல் திராவட மொழிகளில் எவ்வாறு எடுத்தாளப்பட்டுள்ளது.
21. பேச்சு மொழி எழுத்து மொழியைக்காட்டினும் அதிக உணர்ச்சி வெளிப்பாட்டுச் சக்தி மிக்கது ஏன்?
பிரிவு-3
எவையேனும் ஏழனுக்கு விடை தருக 7 x 2 = 14
22. மயங்கொலிச் சொற்களை ஒரே தொடரில் அமைத்து எழுதுக.
பொரி,பொறபொறி
23. பேச்சு வழக்கை எழுத்து வழக்காக மாற்றுக,
அ) காலங்காத்தால எத்திரிச்சிப் படிச்சா ஒரு தெளிவு கெடைக்கும்.
ஆ) காலத்துக்கேத்த மாரிப் புதுசுபுதுசா மொழி வடிவத்தை மாத்தனும்.
24. ஏதேனும் ஒன்றனுக்குப் புணர்ச்சி விதி தருக.
அ) உழுதுழுது
( அல்லது )
ஆ) திருப்புகழ்
25. ஏதேனும் ஒன்றனுக்குப் பகுபத உறுப்பிலக்கணம் தருக.
அ) பிரிந்தோர்
( அல்லது )
ஆ) வாழ்வான்
26. கலைச்சொல் தருக.
அ) Earth Environment
ஆ ) Migration
செவிமாற்றுத்திறனாளர்களுக்கான மாற்று வினா
பிறமொழிச் சொற்களுக்குத் தமிழாக்கம் தருக.
அ) வாடகை
ஆ) பாஸ்போர்ட்
27.தொடரில் உள்ள சொற்களை ஒழுங்குபடுத்தி இரண்டு சொற்றொடர்களாக்குக
நேற்று ஏன் வந்த பையன் பக்கத்தில் யார் இருக்கவில்லை தெரியுமா ?
28.வல்லின மெய்களை இட்டும் நீக்கியும் எழுதுக
தமிழர் ஆற்று தண்ணீரை தேக்கி சேமித்து கால்வாய் வெட்டிப் பாசனம் செய்தனர்.
29. ஈரொற்று மெய்ம்மயக்கம் என்றால் என்ன ?
30. காலம் காட்டும் இடைநிலைகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
பகுதி 3
பிரிவு - 1
எவையேனும் இரண்டனுக்கு விடை தருக 2 x 4 = 8
31. இன்குலாப் “உலகுக்கு வேண்டும் நானும் ஓர் துளியாய்” எனக் கூறுவதன் நயத்தை விளக்குக.
32. “இவ்வயின் யாமெலாம் செவ்விதில் துன்னில் தழைப்பதற்கு இடமில்லை” - இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.
33.விரும்பியதை அடைவது எப்படி ?
34. சங்ககாலத்தில் நடைபெற்ற சமூக நிகழ்வு வெள்ளிவீதியார் பாடலில் காட்சிப்படுத்தப் பட்டுள்ளது; அதுபோல இக்காலச் சமூக நிகழ்வுகள் எழுத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள தன்மையை ஒப்பிட்டு விளக்குக.
பிரிவு - 2
எவையேனும் இரண்டனுக்கு விடை தருக 2 x 4 = 8
35.மொழிமுதல் , இறுதி எழுத்துகள் யாவை ? ஒவ்வொன்றிற்கும் எடுத்துக்காட்டுத் தருக.
36. மாடித்தோட்டம் நடைமுறைக்குச் சாத்தியமா ? நும் கருத்தை எழுதுக.
37.திராவிடப் பழங்குடிகளின் இனக்குழுப் பெயர்களுக்கும் மலைக்கும் உள்ள தொடர்பிற்கு எடுத்துக்காட்டுத் தருக.
38. 'கோடு', 'வரை' என்ற சொற்களுக்கு உரிய பொருளாக நும் பாடப்பகுதியில் குறிப்பிடபட்டுள்ள சொற்களை எழுதுக.
பிரிவு-3
எவையேனும் மூன்றனுக்கு விடை தருக 3 x 4 = 12
39.அ) ‘பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு ’ - இக்குறட்பாவில் வரும் அணியை விளக்குக.
அல்லது
ஆ ) பிரிது மொழிதல் அணியைச் சான்றுடன் விளக்குக.
40. கீழ்க்காணும் செய்தியைப் படித்து அறிவிப்புப் பதாகை ஒன்றை உருவாக்குக.
41. அ) முல்லைத் திணையைச் சான்று தந்து விளக்குக.
அல்லது
ஆ) தலைமகன் தமர் வரைவொடு வந்து சொல்லாடுகின்றுழி ‘வரைவு மறுப்பவோ’ எனக் கவலைகொண்ட தலைமகளுக்குத் தோழி சொல்லிய துறையை விளக்குக.
42. தமிழாக்கம் தருக.
1.Knowledge rules the world.
2. The pen is mightier than the Sword.
3. Work while you work and play while you play.
4. A picture is worth a thousand words.
செவி மாற்றுத்திறனாளர்களுக்கான மாற்று வினா
கீழ்க்காணும் வேர்ச்சொல்லை வினைமுற்று, பெயரெச்சம், வினையெச்சம், வினையாலணையும் பெயர் தொடர்களாக மாற்றுக.
அ) தா ( அல்லது ) ஆ) பாடு
43. எண்ணங்களை எழுத்தாக்குக.
பகுதி 4
அனைத்து வினாக்களுக்கும் விடை தருக. 3 x 6 = 18
44. அ) காவடிச்சிந்து ஒரு வழிநடைப்பாடல் - இக்கூற்றை அண்ணாமலையாரின் பாடல் வழி மதிப்பீடு.
அல்லது
ஆ) ‘அடக்கமுடைமை ஒருவரை வாழ்வினில் உயர்த்தும்’ இக்கூற்றை முப்பால்வழி விளக்குக.
45.அ) ‘சுற்றுச்சூழலை வளப்படுத்துவது இயற்கை வேளாண்மையே’ என்னும் தலைப்பில் மேடைப் பேச்சுக்கான உரையை உருவாக்குக..
அல்லது
ஆ) இயற்கையோடு இயைந்து வாழ்ந்த தமிழர்களின் இருப்பிடப் பெயர்களும் இயற்கையோடு இயைந்தே இருந்தன - கூற்றினை மெய்ப்பிக்க
46. அ) ‘யானை டாக்டர்’ கதை வாயிலாக இயற்கை, உயிரினப் பாதுகாப்பு ஆகியவை குறித்து நீவர் அறிந்தவற்றைத் தொகுத்து எழுதுக.
அல்லது
ஆ) சிம்பொனி தமிழரும் ஆஸ்கர் தமிழரும் இசைத் தமிழுக்கு ஆற்றிய பணிகளை நம் பாடப்பகுதி கொண்டு தொகுத்து எழுதுக.
பகுதி - 5
47. அடிபிறழாமல் செய்யுள் வடிவில் விடைதருக 4 + 2 = 6
அ)."அம்ம வாழி.......” எனத் தொடங்கும் யுகத்தின் பாடல்
ஆ) ‘நன்று ’ - என முடியும் திருக்குறளை அடிமாறாமல் எழுதுக
எம்.ஏ.ஜெலஸ்டின் , முதுகலைத் தமிழாசிரியர், கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில் - 9843448095
Click Here to download the document.