Loading ....

QTY-11 Tamil-Quarterly Exam-September 2025-2025-Model Question Paper 03-Study Material-11 தமிழ்- காலாண்டுத் தேர்வு-செப்டம்பர் 2025-மாதிரி வினாத் தாள்-

 


11 - காலாண்டுத் தேர்வு              11 T QTY  3 / 3  Model - 2025

மாதிரி வினாத்தாள் - 3               எம்.ஏ. ஜெலஸ்டின் , 9843448095


காலாண்டுப் பொதுத்தேர்வு - 2025          







வகுப்பு  -   11

           பொதுத்தமிழ்

கால அளவு : 3.00 மணிநேரம்           மதிப்பெண் : 90

அறிவுரைகள் : 1. அனைத்து வினாக்களும் சரியாகப் பதிவாகி உள்ளதா                                                    என்பதனைச் சரிபார்த்துக் கொள்ளவும். அச்சுப் பதிவில்

                                    குறையிருப்பின் அறைக்கண்காணிப்பாளரிடம்

                                    உடனடியாகத் தெரிவிக்கவும்

    2. நீலம் அல்லது கருப்பு மையினை மட்டுமே எழுதுவதற்கும்                 அடிக்கோடி இடுவதற்கும் பயன்படுத்த வேண்டும்.

குறிப்பு           : விடைகள் தெளிவாகவும் குறிப்பிட்ட அளவினதாகவும்

                                சொந்த நடையிலும் அமைதல் வேண்டும்.

பகுதி - 1

அனைத்து வினாக்களுக்கும் விடை தருக           14 x 1 = 14

1. ஒப்புரவு என்பதன் பொருள்

அ) அடக்கமுடையது

ஆ) பண்புடையது

இ) ஊருக்கு உதவுவது        

ஈ) செல்வமுடைது

2. துன்பப்படுவர்

அ) தீக்காயம் பட்டவர்

ஆ) தீயினால் சுட்டவர்

இ) பொருளைக் காக்காதவர்

ஈ) நாவைக் காக்காதவர்

3."யாரே உனைப்போல் அனுதினம் உழைப்போர்" - இது எவர் மொழி?  

அ) வாய்க்கால்

ஆ) நாங்கூழ்

இ) நடராசன்

ஈ) புல்

4. மண்ணுக்கு வளம் சேர்ப்பன

அ) மண்புழு

ஆ) ஊடுபயிர்

இ) இயற்கை உரங்கள்

ஈ) இவை மூன்றும்

5. பொருத்தமான இலக்கிய வடிவத்தை தேர்க.

அ) ஒற்றை வைக்கோல் புரட்சி - மரபுக் கவிதை

ஆ) மனோன்மணீயம் - சிறுகதை

இ) யானை டாக்டர் - குறும் புதினம்

ஈ) ஐங்குறுநூறு                 - புதுக்கவிதை

6.'கருப்பட்டி' என்பது ________________

அ) கரும்புச்சாறில் தயாரிப்பது

ஆ) தென்னை சாறில் தயாரிப்பது

இ) பதநீரில் தயாரிப்பது

ஈ) நுங்கில் தயாரிப்பது

7.திராவிடர்களை மலை நில மனிதர்கள் என்று அழைத்தவர்

அ) கமில் சுவலபில்

ஆ) கால்டுவெல்

இ) சீகன் பால்க்

ஈ) மாக்ஸ்மமுல்லர்

8. பிழையான தொடரைக் கண்டறிக.

அ) பதநீரிலிருந்து பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்றவற்றைத் தயாரிக்கின்றனர்.

ஆ) காயா, கொன்றை, பிடவம் ஆகிய மலர்கள் முல்லை நிலத்தில் பூக்கக்கூடியன.

இ) குறைந்த எட்டுத்தொகை அடிகளை ஐங்குறுநூறு நூல்களுள் உடையது.

ஈ) யானைகளால் வெகு தொலைவில் உள்ள நீரினை வாசனை மூலம் அறிய முடியும்.

9. 1971 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற இலத்தீன் அமெரிக்காவின் மிகச் சிறந்த கவிஞர்

அ) வால்ட் விட்மன்  

ஆ) ஆற்றூர் ரவிவர்மா      

இ) ஸ்டெஃபான் மல்லார்மே   

ஈ) பாப்லோ நெரூடா

10. ‘மொழிதான் ஒரு விஞரை நிகழ்காலத்தவரா அல்லது இறந்த காலத்தவரா என்பதை நிர்ணயிக்கிறது" எனக் கூறியவர்

அ) வால்ட் விட்மன்

ஆ) எர்னஸ்ட் காசிரா

இ) ஆற்றூர் ரவிவர்மா      

ஈ) பாப்லோ நெருடா

11. மொழி முதல் எழுத்துக்களின் அடிப்படையில் முறையானதைக்  கண்டுபிடிக்க.

அ) அன்னம் -கிண்ணம்

ஆ) டமாரம் -இங்ஙனம்

இ) ரூபாய் - லட்சாதிபதி

ஈ) றெக்கை -அங்ஙனம்

12.   நன்மண் - இலக்கணக்குறிப்பு தருக

அ) பண்புத்தொகை

ஆ) வினைத்தொகை

இ) உரிச்சொற்றொடர்

ஈ) எண்ணும்மை

13. கயம் - பொருள் தருக.

அ) ஆடு

ஆ) மாடு

இ) குதிரை

ஈ) யானை

10. உடம்படு மெய்

அ) ப் ம்

ஆ) ய் வ்

இ) த் ப்

ஈ) க் ங்

14. ஏறு தழுவுதல் பற்றி குறிப்பிடும் எட்டுத்தொகை நூல் 

அ) அகநானூறு

ஆ) புறநானூறு

இ) கலித்தொகை

ஈ) பதித்து பத்து

பகுதி  2

பிரிவு -1

எவையேனும் மூன்றனுக்கு விடை எழுதுக. 3 x 2 = 6

15. என் அம்மை  ஒற்றியெடுத்த

நெற்றிமண் அழகே!

வழிவழி நினதடி தொழுதவர், 

உழுதவர், விதைத்தவர், 

வியத்தவர்க்கெல்லாம் 

நிறைமணி தந்தவளே!

இக்கவிதை அடிகளில் உள்ள வினையாலணையும் பெயர்களை எடுத்து எழுதுக.

16. நீளும் கைகளில் தோழமை தொடரும் நீளும் கைகளில் நெஞ்சம் படரும் -தொடை நயங்களை எடுத்து எழுதுக.

17. ஐங்குறுநூறு -குறிப்பு வரைக.

18. உழுவோர்க் கெல்லாம் விழுமிய வேந்து நீ- தொடரின் பொருள் யாது?

பிரிவு -2

எவையேனும் இரண்டனுக்கு விடை தருக. 2 x 2 = 4

19. தமிழ்நாட்டின் மாநிலமரம் - சிறு குறிப்பு வரைக.

20. ஐந்து வேளாண்மை மந்திரங்கள் யாவை?

21. பேச்சுமொழி எழுத்துமொழியைக் காட்டிலும் உணர்ச்சி வெளிப்பாட்டுச் சக்தி மிக்கது ஏன்?

பிரிவு-3

எவையேனும் ஏழனுக்கு விடை தருக 7 x 2 = 14

எவையேனும் ஏழனுக்கு விடை தருக 7 x 2 = 14

22. மயங்கொலிச் சொற்களை ஒரே தொடரில் அமைத்து எழுதுக. 

உலை, உளை, உழை 

23. பேச்சு வழக்கை எழுத்து வழக்காக மாற்றுக,

அ) ஒவ்வொருத்தரும்  பேசிக்கிட்டுருக்கும்போது எல்லாத்தையும்  கவனமாப் பதிய வைக்கனும்.

ஆ)  காலத்துக்கேத்த மாரிப் புதுசு புதுசா மொழி  வடிவத்தை மாத்தனும்.

24. ஏதேனும் ஒன்றனுக்குப் புணர்ச்சி விதி தருக.

அ) பேரழகு     ( அல்லது )

ஆ) வில்லொடித்து 

25. ஏதேனும் ஒன்றனுக்குப் பகுபத உறுப்பிலக்கணம் தருக.

அ) முளைத்த ( அல்லது )

ஆ) காண்பிப்பார்

26. கலைச்சொல் தருக.

அ) Philosopher

ஆ ) Suffix

செவிமாற்றுத்திறனாளர்களுக்கான மாற்று வினா

தொடரில் உள்ள சொற்களை ஒழுங்குபடுத்தி இரண்டு சொற்றொடர்களாக்குக 

நிலவு வீசுவதால் தெற்கிலிருந்து  மாலை தென்றல் மகிழ்விக்கும் எனப்படுகிறது மனதை

27. பிறமொழிச் சொற்களுக்குத்  தமிழாக்கம் தருக.

அ) தேசம்

ஆ) பத்திரிகை 

28.வல்லின மெய்களை   இட்டும் நீக்கியும் எழுதுக

  குமரனை பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டுமா? என் வீட்டிற்கு வருகைத் தாருங்கள். என் வீட்டிற்கு பக்கத்து  வீடுதான் குமரனது வீடு.

29. சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ,  இயற்கை பாதுகாப்பு குறித்து த் தனித்தனி   முழக்கத் தொடர்கள் இரண்டினை எழுதுக.

30. ‘உயிர்முதல்’ சான்றுடன் விளக்குக.

பகுதி 3

பிரிவு - 1

எவையேனும் இரண்டனுக்கு விடை தருக 2 x 4 = 8

31.  பாடத்தான் வேண்டும் என சு. வில்வரத்தினம் எவற்றைக் குறிப்பிடுகிறார்?

32. குறித்த காலத்தில் முன்பாக ஊர் திரும்பிய தலைவன் கூறுவனற்றை ஐங்குறுநூறு கொண்டு விளக்குக.

33. ஐங்குறுநூறுப் பாடல் சுட்டும் திணை ,முதற்பொருள் , கருப்பொருள்களை அட்டவணைப்படுத்துக.

34. காலமறிதல் குறித்து வள்ளுவர் கூறும் செய்திகளை எழுதுக.

பிரிவு - 2

எவையேனும் இரண்டனுக்கு விடை தருக 2 x 4 = 8

35.மலைக்குடியிருப்புகள் குறித்து நீவிர் அறிவன யாவை ? 

36. “நேரடி மொழி” என்பதை நும்பாட வழி நின்று எழுதுக. 

37. வேதிக்கலப்பில்லாத பூச்சிக்கொல்லி நடைமுறைக்குச் சாத்தியமா? நும் கருத்தை எழுதுக.

38. “என்னுயிர் தமிழ்மொழி என்பேன்” என்னும் தலைப்பில் நீவிர் கொண்டுள்ள மொழிப் பற்றினை எழுதுக.

பிரிவு-3

எவையேனும் மூன்றனுக்கு விடை தருக 3 x 4 = 12

39. “வினைவலியும் தன்வலியும் மாற்றான்  வலியும் 

       துணைவலியும் தூக்கிச்  செயல்” - இக்குறட்பாவில் பயின்று வரும் அணியை விளக்குக.

அல்லது 

உவமை அணியைச் சான்றுடன் விளக்குக.

40. இலக்கிய நயம் பாராட்டுக.

பாடலின் மையக் கருத்தோடு எவையேனும் மூன்று நயங்களையும் எழுதுக.

“தண்டலை மயில்கள் ஆட, தாமரை விளக்கம் தாங்க, 

கொண்டல்கள் முழவின்  ஏங்க, குவளைகண்விழித்து நோக்க, 

தெண்திரை எழுனி காட்ட ,தேம்பிழி  மகர  யாழின் 

வண்டுகள் இனிது பாட, மருதம் வீற்றிருக்கும் மாதோ”

41. தமிழாக்கம் தருக.

அ) Looking at  beauty in the world is the first step of purifying the mind.

  ஆ) Education is the most powerful weapon which you can use to change the world.

  இ) People without the knowledge of their past history and culture  are like trees without roots.

  ஈ) Culture does not make people. People make culture.

செவி மாற்றுத்திறனாளர்களுக்கான மாற்று வினா

கீழ்காணும்  வடமொழிச் சொற்களைத்  தமிழாக்குக

 அ) சங்கீதம்

ஆ) வித்தியா

இ)   மகாஜனம்

ஈ) சாகரம்

42. அ) முல்லைத்  திணையைச் சான்று தந்து விளக்குக.

அல்லது

ஆ) தலைமகன் தமர் வரைவொடு வந்து சொல்லாடுகின்றுழி ‘வரைவு மறுப்பவோ’ எனக் கவலைகொண்ட தலைமகளுக்குத் தோழி சொல்லிய துறையை விளக்குக.

43. எண்ணங்களை எழுத்தாக்கு.



பகுதி  4


அனைத்து வினாக்களுக்கும் விடை தருக. 3 x 6 = 18 

44. அ) நீங்கள் மொழியை வெளிப்படுத்தும் நிலையில் பேச்சுமொழியும் எழுத்து மொழியையும் எவ்வாறு உணர்கிறீர்கள் என்பதை விவரிக்க.

(அல்லது)

ஆ) இயற்கையோடு இயைந்து வாழ்ந்த தமிழர்களின் இருப்பிடப் பெயர்களும் இயற்கையோடு இயைந்தே இருந்தன - கூற்றினை மெய்ப்பிக்க.

45. அ) ஒவ்வொரு புல்லையும் கவிதையில் வெளிப்படும் சமத்துவச் சிந்தனைகளைப் புலப்படுத்துக.

(அல்லது)

ஆ) அடக்கமுடைமை ஒருவரை வாழ்வினில் உயர்த்தும் - இக்கூற்றை முப்பால்வழி விளக்குக.

4. அ) யானை டாக்டர் கதை வாயிலாக இயற்கை உயிரினப் பாதுகாப்பு ஆகியவை குறித்து நீவிர் அறிந்தவற்றைத் தொகுத்து எழுதுக.

(அல்லது)

ஆ) சிம்பொனித் தமிழரும் ஆஸ்கர் தமிழரும் இசைத்தமிழுக்கு ஆற்றிய பணியை நும் பாடப்பகுதி கொண்டு தொகுத்தெழுதுக.

பகுதி - 5

47. அடிபிறழாமல் செய்யுள் வடிவில் விடைதருக 4 + 2 =  6

அ)."ஏடு .......” எனத் தொடங்கும் யுகத்தின் பாடல்

ஆ)  ‘பொருட்டு ’ - என முடியும் திருக்குறளை அடிமாறாமல் எழுதுக


 எம்.ஏ.ஜெலஸ்டின் , முதுகலைத் தமிழாசிரியர், கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில் - 9843448095


Click Here to download the document.

வகுப்பு - 11 தமிழ் 
2025 - காலாண்டுத் தேர்வு
மாதிரி வினாத்தாள் - 1    -    Click Here 
மாதிரி வினாத்தாள் - 2    -    Click Here    
மாதிரி வினாத்தாள் - 3    -    Click Here


Post a Comment

Previous Post Next Post