12 - காலாண்டுத் தேர்வு 12 QTY 2 / 3 - Model - 2025
மாதிரி வினாத்தாள் - 2
காலாண்டுப் பொதுத்தேர்வு - 2025
வகுப்பு - 12
பொதுத்தமிழ்
கால அளவு : 3.00 மணிநேரம் மதிப்பெண் : 90
அறிவுரைகள் : 1. அனைத்து வினாக்களும் சரியாகப் பதிவாகி உள்ளதா என்பதனைச் சரிபார்த்துக் கொள்ளவும். அச்சுப் பதிவில் குறையிருப்பின் அறைக்கண்காணிப்பாளரிடம் உடனடியாகத் தெரிவிக்கவும்
2. நீலம் அல்லது கருப்பு மையினை மட்டுமே எழுதுவதற்கும் அடிக்கோடி இடுவதற்கும் பயன்படுத்த வேண்டும்.
குறிப்பு : விடைகள் தெளிவாகவும் குறிப்பிட்ட அளவினதாகவும் சொந்த நடையிலும் அமைதல் வேண்டும்.
பகுதி - 1
அனைத்து வினாக்களுக்கும் விடை தருக 14 x 1 = 14
1. "செம்பரிதி" எனத் தொடங்கும் பாடல் இடம்பெற்றுள்ள கவிதைத் தொகுப்பு
அ) ஒளிப்பறவை
ஆ) நிலவுப்பூ
இ) சர்ப்பயாகம்
ஈ) சூரியநிழல்
2. "நரம்புகளுக்குள் வீணை மீட்டிக்கொண்டிருக்கிறது"என்று அய்யப்ப மாதவன் குறிப்பிடுவது -
அ) சூரிய ஒளிக்கதிர்
ஆ) மழை மேகங்கள்
இ) மழைத்துளிகள்
ஈ) நீர்நிலைகள்
3. ஆர்கலி - என்பதன் பொருள் தருக
அ) ஆர்வம்
ஆ) வெள்ளம்
இ) மழை
ஈ) கடல்
4. அணி இலக்கணத்தையும் கூறும் இலக்கண நூல்.
அ) தண்டியலங்காரம்
ஆ) மாறனலங்காரம்
இ) தொல்காப்பியம்
ஈ) குவலயானந்தம்
5. ச.த.சற்குணரின் உரையைக் கேட்டுத் தூண்டப் பெற்ற மயிலை சீனி.வேங்கடசாமி எழுதியநூல்.
அ) பௌத்தமும் தமிழும்
ஆ) இசுலாமும் தமிழும்
இ) சமணமும் தமிழும்
ஈ) கிறித்தவமும் தமிழும்
6. அண்ணா நூற்றாண்டு நூலகம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது
அ) 2011
ஆ) 2012
இ) 2010
ஈ) 2021
7. ‘குடும்பு’ என்னும் சொல்லின் பொருள்_____________
அ) கூடி வாழுதல்
ஆ) சுற்றம்
இ) குடும்பம்
ஈ) தன்மனை
8. ‘குடும்பம்’ என்னும் சொல் முதன்முதலில் இடம்பெற்றள்ள நூல்.
அ) தொல்காப்பியம்
ஆ) புறநானூறு
இ) திருக்குறள்
ஈ) குறுந்தொகை
9. இலாத - என்பதன் இலக்கணக்குறிப்பு தருக.
அ) பண்புத்தொகை
ஆ) இடைக்குறை
இ) வினைத்தொகை
ஈ) வினைமுற்று
10. "இவற்றை வாயிலுக்கே சென்று இன்முகத்துடன் வரவேற்பாயாக" என்று ஜலாலுத்தீன் ரூமி குறிப்பிடுவது ______________________
அ) வக்கிரம்
ஆ) அவமானம்
இ) வஞ்சனை
ஈ) இவை அனைத்தும்
11.வல்லினம் மிகும், மிகாத் தொடர்களின் பொருளறிந்து பொருத்துக
அ) பாலை பாடினான் - 1) தேரை என்னும் உயிரினத்தைப் பார்த்தான்.
ஆ) பாலைப் பாடினான் - 2) தேரினைப் பார்த்தான்
இ) தேரை பார்த்தான் - 3) பாலினைப் பாடினான்
ஈ) தேரைப் பார்த்தான் - 4) பாலைத் திணை பாடினான்
அ) 4 1 3 2
ஆ) 2 3 1 4
இ) 4 3 1 2
ஈ) 2 4 1 3
12.பிழையற்ற தொடரைக் கண்டறிக
அ) சென்னையிலிருந்து நேற்று வந்தான்
ஆ) கோவலன் மதுரைக்குச் சென்றது.
இ) பறவைகள் நெல்மணிகளை வேகமாகக் கொத்தித் தின்றது.
ஈ) குதிரையும் யானையும் வேகமாக ஓடியது.
13. வம்சமணி தீபிகை மறுபதிப்பாக வெளியிடப்பட்ட ஆண்டு
அ) 2005
ஆ) 2006
இ ) 2007
ஈ ) 2008
14. ‘உரிமைத்தாகம்' என்ற சிறுகதையை எழுதியவர்
அ) சுஜாதா
ஆ) வல்லிக்கண்ணன்
இ) உத்தமசோழன்
ஈ) பூமணி
பகுதி 2
பிரிவு -1
எவையேனும் மூன்றனுக்கு விடை எழுதுக. 3 x 2 = 6
15. கவிஞர் சிற்பி எவற்றை வியந்து பாட, தமிழின் துணை வேண்டும் என்கிறார்?
16. விடியல்- வனப்பு - இரு சொற்களையும் ஒருங்கிணைத்துத் தொடர் அமைக்க?
17. "நகரம் பட்டை தீட்டிய வெள்ளை வைரமாகிறது - விளக்கம் தருக.
18. ஞாலத்தின் பெரியது எது?
பிரிவு -2
எவையேனும் இரண்டனுக்கு விடை தருக. 2 x 2 = 4
19.தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் நூல் பற்றிக் குறிப்பு வரைக.
20.விரிபெரு தமிழர் மேன்மை
ஓங்கிடச் செய்வ தொன்றே
உயிர்ப்பணியாக் கொண்டோன் யார்-யாரைப் பற்றிக் எதற்காகக் கூறுகிறார்?
21. இந்தோ -சாரசனிக் கட்டடக்கலை - குறிப்பு வரைக
பிரிவு-3
எவையேனும் ஏழனுக்கு விடை தருக 7 x 2 = 14
22. மயங்கொலிச் சொற்களை ஒரே தொடரில் அமைத்து எழுதுக.
அலை , அளை , அழை
23. உவமைத் தொடரைச் சொற்றொடரில் அமைத்த எழுதுக.
அ) எலியும் புனையும் போல ஆ) தாமரை இலை நீர் போல
24. ஏதேனும் ஒன்றனுக்குப் புணர்ச்சி விதி தருக.
அ) தந்தனன் ஆ) வானமெல்லாம்
25. ஏதேனும் ஒன்றனுக்குப் பகுபத உறுப்பிலக்கணம் தருக.
அ) சாய்ப்பான் ஆ) வியந்து
26. கலைச்சொல் தருக.
அ) Culture ஆ ) Matriarchy
செவிமாற்றுத்திறனாளர்களுக்கான மாற்று வினா
கீழ்க்காணும் நான்கு சொற்களைக் கொண்டு தொடர் எழுதுக.
வானம், பற, நிலவு, தொடு
27. கீழ்க்காணும் சொல்லுருபுகளைப் பிரித்தும் சேர்த்தும் இரு வேறு தொடர்களை அமைக்க.
அ) முன் ஆ) விட்டான்
28.பொருத்தமான வேற்றுமை உருபுகளைச் சேர்த்து முறையான தொடர்களாக ஆக்குக
அ) சான்றோர் மதிப்புக் கொடுத்து வாழ்வு உயரலாம்
ஆ) மாறன் பேச்சுத்திறன் யார் வெல்ல முடியும்
29.வல்லின மெய்களை இட்டும் நீக்கியும் எழுதுக.
அ) என்னுடைய நம்பிக்கை முழுவதுமே புதியத் தலைமுறை மீதுதான் அவர்கள் எல்லா பிரச்சனைகளையும் ஒரு சிங்கத்தை போல எதிர்கொண்டுத் தீர்ப்பார்கள்.
30. திருவளர்ச்செல்வன்,திருவளர்செல்வன் - இவற்றில் சரியான தொடர் எது? அதற்கான இலக்கண விதி யாது ?
பகுதி 3
பிரிவு - 1
எவையேனும் இரண்டனுக்கு விடை தருக 2 x 4 = 8
31. செம்பரிதி மலைமேட்டில் தலையைச் சாய்ப்பான் செந்நிறத்துப் பூக்காடாம் வானமெல்லாம் தொடர் வெளிப்படுத்தும் காட்சி நயத்தை விளக்குக.
32. "நீர்நிலைகளிலிருந்து உதடுகள் குவித்து உறிஞ்சுகின்றன ஒளிக்கதிர்கள்" - இக்கவிதையின் அடி "தூங்கும் பனிநீரை வாங்கும் கதிரோனே" - என்னும் நாட்டுப்புறப் பாடலின் தொடர்ச்சியாய் அமைவதைப் பற்றி எழுதுக.
33. வாடைக்காலத்தில் கோவலர்கள் எவ்வாறு பாதுகாப்பைத் தேடினர்?
34. சினத்தால் வரும் கேட்டினைக் கூறுக
பிரிவு - 2
எவையேனும் இரண்டனுக்கு விடை தருக 2 x 4 = 8
35. மயிலை சீனி.வேங்கடசாமியின் வரலாற்று ஆய்வுகள் பற்றி விளக்குக. மயிலை சீனி.வேங்கடசாமியின் வரலாற்று ஆய்வுகள்
36. சென்னையின் பண்பாட்டு அடையாளங்களில் இன்றும் நிலைத்து இருப்பனவற்றைக் குறிப்பிடுக.
37. மணந்தகம் -விளக்குக
38. தாயும் தந்தையும் பணிக்குச் செல்லும் இன்றைய சூழலில் குடும்ப உறுப்பினர் என்ற முறையில் நீங்கள் குடும்பத்துக்குச் செய்யும் உதவிகள் யாவை?
பிரிவு-3
எவையேனும் மூன்றனுக்கு விடை தருக 3 x 4 = 12
39.அ) “சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும்
ஏமப் புணையைச் சுடும்” - இக்குறட்பாவில் பயின்று வரும் அணியை விளக்குக.
அல்லது
ஆ ) நிரல்நிறை அணியைச் சான்றுடன் விளக்குக.
40. தமிழாக்கம் தருக.
In 1977, shocked at the environmental devastation caused by deforestation in her beloved Kenya, Wangari Mathai founded the Green Belt Movement. For thirty years, the movement has enabled many women to plant trees in their regions providing them with food, fuel and halting soil erosion and desertification. She used the movement to enlighten the people on the fruits of representative democracy. This led Kenya to Kenya's first fully democratic elections in a generation. In the election, Mathai was elected to the Parliament and made a Minister of environment. She was conferred a Nobel Prize in 2004 because of her outstanding success in guiding Kenyan women to plant more than thirty million trees. She has transformed the lives of tens of thousands of women through sustainable social forestry schemes.
செவி மாற்றுத்திறனாளர்களுக்கான மாற்று வினா
கீழ்க்காணும் பகுதியைப் படித்து அறிவிப்புப் பலகைக்கான செய்தியை உருவாக்குக
வேர்களை விருதுகள் சந்திக்கும் விழா, 2024 மே 5 , திருச்சிராப்பள்ளி
வேலை காரணமாக வெளிநாடுகளைப் பிரிந்து வாழும் உறவினர்கள் 25 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கும் நிகழ்வு நடைபெற உள்ளது.
திருச்சி உறையூர் அன்பு நகரில் வசிக்கும் தங்கவேல் - பொன்னம்மாள் இணையரின் மூன்று தலைமுறை வழித்தோன்றல்கள் சந்திக்கும் நிகழ்வு 2024 மே 5 தேதி இனிதே நடைபெற உள்ளது.
உறவினர் கூட்டத்தில் தங்கவேல் - பொன்னம்மாள் அவர்களின் மகன்கள், மகள்கள், பேரன்கள், பேத்திகள், கொள்ளுப் பேரன்கள்,கொள்ளுப் பேத்திகள் சந்தித்துப் பெரியோர்களிடம் வாழ்த்துப் பெறுகிறார்கள். இந்நிகழ்ச்சியைத் தங்கவேல் அவர்களின் கொள்ளுப்பேத்தி செல்வி கண்மணி அவர்கள் ஒருங்கிணைக்கிறார்.
41. இலக்கிய நயம் பாராட்டுக.
பாடலின் மையக் கருத்தோடு எவையேனும் மூன்று நயங்களையும் எழுதுக.
முச்சங்கங் கூட்டி
முதுபுலவர் தமைக் கூட்டி
அச்சங்கத் துள்ளே
அளப்பரிய பொருள்கூட்டி
சொற்சங்க மாகச்
சுவைமிகுந்த கவி கூட்டி
அற்புதங்க ளெல்லாம்
அமைத்த பெருமாட்டி!
42. அ) வாகைத் திணையைச் சான்று தந்து விளக்குக.
அல்லது
ஆ) கூதிர்ப்பாசறைத் துறையைச் சான்றுடன் விளக்குக.
43.உங்கள் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர் தற்பொழுது மாவட்ட ஆட்சியராக பணியாற்றுகிறார். நடை பெற இருக்கும் பள்ளி ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக வர இருக்கும் அவரைப் பள்ளியின் சார்பாக வரவேற்கும் விதமாக ஒரு பக்க அளவில் வரவேற்புரை எழுதுக.
பகுதி 4
அனைத்து வினாக்களுக்கும் விடை தருக. 3 x 6 = 18
44. அ) மயிலை சீனி வேங்கடசாமி ஓர் ஆராய்ச்சிப் பேரறிஞர் என்பதைச் சான்றுகளுடன் நிறுவுக.
அல்லது
ஆ) குடும்பம் என்னும் சிறிய அமைப்பிலிருந்தே மனித சமூகம் என்னும் பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறது - எவ்வாறு ? விளக்குக.
45.அ) தமிழின் சீரிளமைத் திறம் வியந்து கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் கூறுவனவற்றைத் தொகுத்து எழுதுக.
அல்லது
ஆ) நெடுநல்வாடையில் நக்கீரர் காட்டும் மழைக்கால வருணனையைத் தொகுத்து எடுதுக.
46. அ) பாரதியின் கடிதம் வாயிலாக நீங்கள் அறிந்துகொண்ட மொழிபற்று சமூகப்பற்று ஆகியவற்றை விவரிக்க
அல்லது
ஆ) ‘உரிமை தாகம்' கதையில் வெளிப்படும் உறவின் மேன்மையைப் புலப்படுத்துக.
பகுதி - 5
47. அடிபிறழாமல் செய்யுள் வடிவில் விடைதருக 4 + 2 = 6
அ) ‘ஓங்கலிடை ......’ எனத் தொடங்கும் தன்னேர் இலாத தமிழ் பாடலை எழுதுக.
ஆ) ‘படும்’ - என முடியும் திருக்குறளை அடிமாறாமல் எழுதுக.
எம்.ஏ.ஜெலஸ்டின் , முதுகலைத் தமிழாசிரியர், கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில் - 9843448095
Click Here to download the document.