Loading ....

QTY-12 Tamil-Quarterly Exam-September 2025-2025-Model Question Paper 01-Study Material-12 தமிழ்- காலாண்டுத் தேர்வு-செப்டம்பர் 2025-மாதிரி வினாத் தாள்-

 12 - காலாண்டுத் தேர்வு 12 QTY 1 /3 - Model - 2025

மாதிரி வினாத்தாள் - 1


காலாண்டுப் பொதுத்தேர்வு - 2025

வகுப்பு  -   12

           பொதுத்தமிழ்

கால அளவு : 3.00 மணிநேரம்           மதிப்பெண் : 90

அறிவுரைகள் : 1. அனைத்து வினாக்களும் சரியாகப் பதிவாகி உள்ளதா என்பதனைச் சரிபார்த்துக் 

கொள்ளவும். அச்சுப் பதிவில் குறையிருப்பின் அறைக்கண்காணிப்பாளரிடம் உடனடியாகத் தெரிவிக்கவும்

2. நீலம் அல்லது கருப்பு மையினை மட்டுமே எழுதுவதற்கும் அடிக்கோடி இடுவதற்கும் பயன்படுத்த வேண்டும்.

குறிப்பு           : விடைகள் தெளிவாகவும் குறிப்பிட்ட அளவினதாகவும் சொந்த நடையிலும் 

அமைதல் வேண்டும்.


பகுதி - 1

அனைத்து வினாக்களுக்கும் விடை தருக           14 x 1 = 14

1. "மீண்டுமந்தப் பழமைநலம் புதுக்குதற்கு" கவிஞர் குறிப்பிடும் பழமைநலம் என்பது 

1) பாண்டியரின் சங்கத்தில் கொலுவிருந்தது

2) பொதிகையில் தோன்றியது

3) வள்ளல்களைத் தந்தது.

அ) 1 மட்டும் சரி

ஆ) 1,2 இரண்டும் சரி     

இ) 3 மட்டும் சரி

ஈ) 1, 3 இரண்டும் சரி

2. ‘பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென’ - அடிக்கோடிட்ட சொல்லின்

இலக்கணக் குறிப்பைத் தேர்க. 

அ) வினைத்தொகை

ஆ) உரிச்சொல் தொடர்

இ) இடைச்சொல் தொடர்

ஈ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரைச்சம்

3."செம்பரிதி "எனத் தொடங்கும் பாடல் இடம் பெற்றுள்ள கவிதைத் தொகுப்பு

அ) ஒளிப்பறவை

ஆ) நிலவுப்பூ

இ) சர்ப்பயாகம்

ஈ) சூரியநிழல்

4. பொருத்துக.

அ) குரங்குகள் - 1) கன்றுகளைத் தவிர்த்தன

ஆ) விலங்குகள் - 2) மரங்களிலிருந்து வீழ்ந்தன

இ) பறவைகள் - 3) குளிரால் நடுங்கின

ஈ) பசுக்கள் - 4) மேய்ச்சலை மறந்தன

அ)  1  3  4  2

ஆ)  3  2  1  4

இ) 3  4  2  1

ஈ ) 2  1  3  4

5. வையகமும் வானகமும் ஆற்றவரிது - எதற்கு?

அ) செய்யாமல் செய்த உதவி

ஆ) பயன்துக்கார் செய்த உதவி

இ) தினைத்துணை நன்றி

ஈ) காலத்தினால் செய்த உதவி

6. ‘குடும்பம்’ என்னும் சொல் முதன்முதலில் இடம்பெற்றள்ள நூல்.

அ) தொல்காப்பியம்

ஆ) புறநானூறு

இ) திருக்குறள்

ஈ) குறுந்தொகை

7. கூற்று : இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் நெசவாளர்கள் சென்னை நோக்கி வந்தனர்.

காரணம்: கிழக்கிந்திய நிறுவனத்தின் வணிகம், துணி சார்ந்ததாக்வே இருந்தது.

அ) கூற்று சரி, காரணம் தவறு

ஆ) கூற்று தவறு, காரணம் சரி

இ) கூற்று தவறு, காரணம் தவறு

ஈ) கூற்று சரி, காரணம் சரி

8. வடசென்னையில் ஓடும் ஆறு

அ) பாலாறு  

ஆ) திருவல்லிக்கேணி ஆறு    

இ) கொற்றலையாறு

ஈ) அடையாறு

9. தமிழில் திணைப்பாகுபாடு  ____________________  அடிப்படையில் பகுக்கப்பட்டுள்ளது .

அ) தொடர்க் குறிப்பு  

ஆ) எழுத்துக்குறிப்பு  

இ) சொற்குறிப்பு  

ஈ) பொருட்குறிப்பு

10. “ நரம்புகளுக்குள் வீணை மீட்டிக்கொண்டிருக்கிறது” என்று அய்யப்ப மாதவன் குறிப்பிடுவது 

அ) சூரிய ஒளிக்கதிர்

ஆ) மழை மேகங்கள்

இ) மழைத்துளிகள்

ஈ) நீர்நிலைகள் 

11. ச.த. சற்குணரின் உரை ஏற்படுத்திய ஆர்வத்தினால் மயிலை. சீனி. வேங்கடசாமி எழுதிய நூல்

அ) பௌத்தமும் தமிழும்

ஆ) கிறித்தவமும் தமிழும்

இ) இசுலாமும் தமிழும்

ஈ) சமணமும் தமிழும்

12. யார்? எது?  ஆகிய வினாச் சொற்கள் பயனிலையாய் அமைந்து, உணர்த்தும் திணைகள் முறையே______________

அ)  அஃறிணை ,  உயர்தினை

ஆ)உயர்திணை ,அஃறிணை

இ) விரவுத்திணை,  அஃறிணை

இ)  விரவுத்திணை,  உயர்திணை

13.பூமணி எழுதிய சிறுகதை தொகுப்பு 

அ) பிறகு

ஆ) வெக்கை

இ) பொம்மை

ஈ) வயிறுகள்

14. ‘தேசபக்தன்’ இதழின் துணையாசிரியர்

அ) பாரதியார்

ஆ) இளசை மணி

இ) பரலி சு. நெல்லையப்பர்

ஈ)  சுப்பிரமணிய சிவா

பகுதி  2

பிரிவு -1

எவையேனும் மூன்றனுக்கு விடை தருக 3 x 2= 6

15  நகரம் பட்டை தீட்டிய வெள்ளை வைரமாகிறது'-விளக்கம் தருக.

16. இராமன் சுக்ரீவனிடம் கூறிய செய்திகளை எழுதுக.

17.கவிஞர் சிற்பி எவற்றை வியந்து பாட, தமிழின் துணை வேண்டும் என்கிறார்?

18. சினத்தை ஏன் காக்க வேண்டும்?

பிரிவு -2

எவையேனும் இரண்டனுக்கு விடை தருக. 2 x 2 = 4

19. புக்கில், தன்மனை சிறுகுறிப்பு எழுதுக.

20.இந்தோ-சாரசனிக் கட்டடக்கலை - குறிப்பு வரைக.

21. ‘விரிந்த குடும்ப முறை’ என்றால் என்ன ? 

பிரிவு-3

எவையேனும் ஏழனுக்கு விடை தருக 7 x 2 = 14

22. உவமைத் தொடரைச் சொற்றொடரில் அமைத்த எழுதுக.

அ)அச்சாணி இல்லாத தேர் போல 

ஆ) உள்ளங்கை நெல்லிக்கனிபோல

23. மயங்கொலிச் சொற்களை ஒரே தொடரில் அமைத்து எழுதுக.

தலை, தளை, தழை

24. கீழ்க்காணும் சொல்லுருபுகளைப் பிரித்தும் சேர்த்தும் இரு வேறு தொடர்களை அமைக்க.

அ) கொண்டு ஆ) தானே

25. ஏதேனும் ஒன்றனுக்குப் பகுபத உறுப்பிலக்கணம் தருக.

அ)வியந்து ஆ ) பொலிந்தான்

26. ஏதேனும் ஒன்றனுக்குப் புணர்ச்சி விதி தருக.

அ) அருங்கானம் ஆ) இனநிரை

27. கலைச்சொல் தருக.

அ) Hardware ஆ ) Museum

செவிமாற்றுத்திறனாளர்களுக்கான மாற்று வினா

கீழ்க்காணும் நான்கு சொற்களைக் கொண்டு தொடர் எழுதுக .

திரை, காண், கைத்தட்டல்,மக்கள்

28. வல்லின மெய்களை இட்டும் நீக்கியும் எழுதுக.

ஆசிரியருக்கு கீழ்படிதல் எனும் குணம், உண்மையானவற்றை தெரிந்து கொண்டு, அறியாமையினை அகற்றி பல  நல்லவனாவற்றை  கற்று கொடுக்கும்.

29. பொருத்தமான வேற்றுமை உருபுகளைச் சேர்த்து முறையான தொடர்களாக ஆக்குக.

அ) போட்டி வெற்றி பெற்றது கலைச்செல்வி பாராட்டுக்கள் குவிந்தன.

ஆ) குமரன் வீடு பார்த்தான்.

30. பொருள்கோள் எத்தனை வகைப்படும் ? அவை யாவை?

பகுதி 3

பிரிவு - 1

எவையேனும் இரண்டனுக்கு விடை தருக 2 x 4 = 8

31. வாடைக் காலத்தில் கோவலர்கள் எவ்வாறு பாதுகாப்பைத் தேடினர்?

32. எவற்றையெல்லாம் விட நன்றி உயர்ந்தது? குறள் வழி விளக்குக

33. ‘ஏங்கொலி நீர் ஞாலத்து இருளகற்றும்’  இடம் சுட்டிப்  பொருள் விளக்குக..

34. குகனோடு ஐவராகி, வீடணனோடு எழுவரான நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டுக.

பிரிவு - 2

எவையேனும் இரண்டனுக்கு விடை தருக 2 x 4 = 8

35. மயிலை. சீனி. வேங்கடசாமியின் வரலாற்று ஆய்வுகள் பற்றி விளக்குக.

36 சென்னையின் பண்பாட்டு அடையாளங்களில் இன்றும் நிலைத்து இருப்பனவற்றைக் குறிப்பிடுக.

37. மணந்தகம் விளக்குக.

38.சென்னையின் தொன்மையைக் குறித்து விளக்குக.


பிரிவு-3

எவையேனும் மூன்றனுக்கு விடை தருக 3 x 4 = 12

39. அ) பொருள் வேற்றுமை அணியைச் சான்றுடன் விளக்குக

அல்லது

ஆ) 'அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை 

          பண்பும் பயனும் அது"

  • இக்குறட்பாவில் பயின்று வரும் அணியை விளக்குக.

40. அ) வாகைத் திணையைச் சான்று தந்து விளக்குக.

அல்லது

ஆ) கூதிர்ப்பாசறைத் துறையைச் சான்றுடன் விளக்குக.

41 . இலக்கிய நயம் பாராட்டுக

பாடலின் மையக் கருத்தோடு எவையேனும் மூன்று நயங்களையும் எழுதுக.

பெற்றெடுத்த தமிழ்த்தாயைப் பின்னால் தள்ளி 

பிறமொழிக்குச் சிறப்பளித்த பிழையை நீக்க 

ஊற்றெடுத்த அன்புரையால் உலுங்க வைத்திவ் 

உலகத்தில் தமிழ்மொழிக்கு நிகரும் உண்டோ? 

கற்றுணர்ந்தே அதன்இனிமை காண்பாய் என்று 

கம்பனொடு வள்ளுவனைச் சுட்டிக் காட்டித் 

தெற்றெனநம் அகக்கண்ணைத் திறந்து விட்ட 

தெய்வக்கவி பாரதிஓர் ஆசான் திண்ணம்

  •  நாமக்கல் கவிஞர்


42. தன் விவரத் தகவல் பட்டியலை உருவாக்குக.

43.தமிழாக்கம் தருக.

அ) A new language is a new life.

ஆ) Knowledge of languages is the doorway to wisdom.

இ) If you want people to understand you, speak  their language 

ஈ) The limits of my language are the limits of my world.

செவி மாற்றுத்திறனாளர்களுக்கான மாற்று வினா

குறிப்புகளில் மறைந்திருக்கும் தமிழறிஞர்களைக் கண்டுபிடிப்போம்.

அ) தமிழறிஞர் முதலிரு எழுத்துகளால் மறைக்கலாம்.

ஆ) தாய் மொழி ஈற்றிரு எழுத்துகள் வெளிச்சம் தரும்.

இ) சிறுகதை ஆசிரியர்; முதல் பாதி நவீனம்.

ஈ) முன்னெழுத்த அரசன்; பின்னெழுத்து தமிழ் மாதம்

(தமிழ் ஒளி, அம்பை, கோதை, அசோகமித்திரன், புதுமைப்பித்தன், சூடாமணி, ஜெயகாந்தன், மறைமலை அடிகள்)

பகுதி  4

அனைத்து வினாக்களுக்கும் விடை தருக. 3 x 6 = 18

44.அ)பண்பின் படிமமாகப் படைக்கப்பட்ட இராமன், பிற உயிர்களுடன் கொண்டிருந்த உறவுநிலையைப் பாடப்பகுதிவழி நிறுவுக.

அல்லது

ஆ) தமிழின் சீரிளமைத் திறம் வியந்து கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் கூறுவனவற்றைத் தொகுத்து எழுதுக.

 45 . அ ) மயிலை  சீனி.  வேங்கடசாமி ஓர் ஆராய்ச்சிப் பேரறிஞர் என்பதனைச்  சான்றுகளுடன் நிறுவுக.

அல்லது

ஆ) குடும்பம் என்னும் சிறிய அமைப்பிலிருந்தே மனித சமூகம் என்னும் பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறது - எவ்வாறு? விளக்குக.

46. அ) பொறுப்புணர்ச்சியின்றி இருந்த ஊரைத் தன் பொறுப்புணர்வால் மாற்றிய  மருதனின் பண்பு நலத்தை விவரிக்க.

அல்லது

ஆ) பாரதியின் கடிதம் வாயிலாக நீங்கள் அறிந்து கொண்ட மொழிப்பற்று சமூகப்பற்று ஆகியவற்றை விவரிக்க.

பகுதி - 5

47. அடிபிறழாமல் செய்யுள் வடிவில் விடைதருக 4 + 2 =  6

அ) ‘துன்பு உளது .....’  எனத் தொடங்கும் கம்பராமாயணப் பாடலை எழுதுக.

ஆ) ‘சினம் 'என முடியும் திருக்குறள் பாடலை எழுதுக.


 எம்.ஏ.ஜெலஸ்டின் , முதுகலைத் தமிழாசிரியர், கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில் - 9843448095


Click Here to download the document.

வகுப்பு - 12 தமிழ் 
2025 - காலாண்டுத் தேர்வு
மாதிரி வினாத்தாள் - 1      -     Click Here    
மாதிரி வினாத்தாள் -  2    -    Click Here

Post a Comment

Previous Post Next Post