Loading ....

UT-12th Tamil-Unit Test-December 2025-Unit 6-Monthly Test-Question paper-12ஆம் வகுப்பு-தமிழ்-அலகுத் தேர்வு-இயல் 6-டிசம்பர் 2025-மாதத் தேர்வு- வினாத்தாள்-

 12 /இயல் 6  -அலகுத் தேர்வு                                                                 12- 1  /6  UT/25

டிசம்பர்    மாதத் தேர்வு

பாடம் : தமிழ்                                                               வகுப்பு : 12

நேரம் : 1.30 மணி                                                                      மதிப்பெண் : 50


I . பலவுள் தெரிக                                                                       10  X 1 = 10

1. சோழநாட்டில் இறக்குமதிப் பொருள்களுக்குச் சுங்கம் வசூலித்த செய்தியைக் கூறும் நூல் எது?

அ) பதிற்றுப்பத்து ஆ) பட்டினப்பாலை   இ) மலைபடுகடாம் ஈ) நெடுநல்வாடை

2. ‘இலக்கியத்தில் மேலாண்மை' என்ற நூலை எழுதியவர்

 அ) வெ. இறையன்பு ஆ) வா.மு.சேதுராமன் இ) வெ.சாமிநாத சர்மா ஈ) விந்தன்

3. 'நல்வழி' என்ற நூலை எழுதியவர்

அ) ஒளவையார் ஆ) கபிலர் இ) பொய்கையார் ஈ) கூடலூர்கிழார்

4. 'கிறித்துவக் கம்பர்'என்று அழைக்கப்படுபவர் யார்?

அ) கால்டுவெல் ஆ) ஜி.யு.போப் இ) வேதநாயகர் ஈ) எச்.ஏ.கிருட்டினனார்

5. ‘ஆக்கினை' என்ற சொல்லிற்கு ஏற்ற பொருளைக் கண்டறி.

அ) உறுதி ஆ) வலிமை இ) தண்டனை ஈ) சொல்

6. புறநானூற்றை முதன்முதலாக அச்சில் பதிப்பித்தவர் ....

அ) உ.வே.சாமிநாதர் ஆ) மாயூரம் வேதநாயகர்

இ) மா.இராசமாணிக்கனார் ஈ) சி.வை.தாமோதரனார்

7. 'திசை எட்டும்' என்ற மொழிபெயர்ப்பு இதழின் ஆசிரியர்

அ) தமிழ்நதி ஆ) சாந்தா தத் இ) நகுலன் ஈ) உத்தமசோழன்

8. பண்புக்குறியீடுகளைக் கதைமாந்தர்களோடு பொருத்துக.

அ) அறம் - 1) கர்ணன் 

ஆ) வலிமை - 2) மனுநீதிச்சோழன்

இ) நீதி - 3) பீமன்

ஈ) வள்ளல் - 4) தருமன்

அ) 3   2   1   4 ஆ) 4   3   2   1 இ) 2   4   3   1 ஈ) 4   3   1   2

9. 'சீயஸ்பிடர்' என்ற தொன்மத்திற்கு ஒப்புமையாகக் கூறப்பட்ட இந்தியத் தொன்மம்_______________

அ) ருத்ரன் ஆ) இந்திரன் இ) வருணன் ஈ) மாயன்

10. 'கிழித்த கோட்டைத் தாண்ட மாட்டான்' இத்தொன்மக் குறிப்பு இடம் பெற்ற நூல் ________________

அ) சிலப்பதிகாரம் ஆ) பாரதம் இ) இராமாயணம் ஈ) கந்தபுராணம்

II.எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க.                                       2  X 2 = 4

11. இறைமகனாரின் இன்னலைக் கண்டு மக்கள் எவ்விதம் புலம்பினர்?

12. இறைமகளின் எளிய நிலையை விளக்குக.

13. தமிழர்கள் புகழ், பழி ஆகியவற்றை எவ்வாறு ஏற்றதாகப் புறநானூறு கூறுகிறது?

III. எவையேனும் இரண்டு விளாக்களுக்கு மட்டும் விடையளிக்க.                             2 X  2 =  4

14. பருவத்தே பயிர் செய் - நேர மேலாண்மையோடு பொருத்தி எழுதுக.

15. தசரதன் தன்னுடைய நாட்டை எவ்வாறு ஆட்சி செய்ததாகக் கம்பர் குறிப்பிடுகிறார்?

16. காவிரிப்பூம்பட்டின பண்டகசாலை பற்றி பட்டினப்பாலை குறிப்பிடும் செய்திகளைக் கூறுக.

IV. எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க.                               2 X 2 =  4

17. புணர்ச்சி விதி தருக 

ஏழையென

18. பகுபத உறுப்பிலக்கணம் தருக 

களைந்து

19. கலைச்சொல் தருக 

அ) Emotion ஆ) Customs officer

V. எவையேனும் மூன்று வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க.                                         3 X  4 = 12

20. சங்க இலக்கியங்களில் தொன்மம் கையாளப்பட்டுள்ளன. சான்றுடன் விளக்குக.

21. பொதுச்சொத்துகளைப் பாதுகாக்கவும் பராமரிக்கவும் நீவிர் செய்ய வேண்டிய பணிகளைப் பட்டியலிடுக.

22. தொன்மங்கள் பயன்படுத்தப்படும் களங்களைச் சான்றுகளுடன் விளக்குக.

23. ‘ஒண்ணுமோ வறுங் கூவலுக்கு உததியை ஒடுக்க'- இடஞ்சுட்டிப் பொருள் விளக்கம் தருக.

VI. எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க.                                 2 X  6 = 12 

24. நிருவாக மேலாண்மை குறித்து வெ.இறையன்பு கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.

25. எச்.ஏ.கிருட்டினனார் 'கிறித்தவக் கம்பரே' என்பதை நும் பாடப்பகுதி வழி நிறுவுக.

26. ‘கோடை மழை' கதை வாயிலாக விளக்கப்படும் மனிதநேயப் பண்புகளை விளக்குக.

IV. அடிபிறழாமல் எழுதுக.                                                             1 X  4 =  4

27. ‘ஒருமையுடன் .........' எனத் தொடங்கும் 'தெய்வமணிமாலை' பாடலை அடிமாறாமல் செய்யுள் வடிவில் எழுதுக.


 எம்.ஏ.ஜெலஸ்டின் , முதுகலைத் தமிழாசிரியர், கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில் - 9843448095


Click Here to download the document.


Post a Comment

Previous Post Next Post