Loading ....

UT-12th Tamil-Unit Test-November 2025-Unit 5-Monthly Test-Question paper-12ஆம் வகுப்பு-தமிழ்-அலகுத் தேர்வு-இயல் 5-நவம்பர் 2025-மாதத் தேர்வு- வினாத்தாள்-

 12 /இயல் 5  -அலகுத் தேர்வு                                                                     12- 1  /5 UT/25

நவம்பர்   மாதத் தேர்வு

பாடம் : தமிழ்                                                                             வகுப்பு : 12

நேரம் : 1.30 மணி                                                                     மதிப்பெண் : 50


I . பலவுள் தெரிக                                                                       10  X 1 = 10

1. திரைப்படத்தில் கதையும் சொல்லலாம் என்பதை முதன்முதலில் நிகழ்த்திக் காட்டியவர்

அ) லூமியர் சகோதரர்கள் ஆ) ஜார்ஜ் மிலி

இ) தாமஸ் ஆல்வா எடிசன் ஈ) சாமிக்கண்ணு வின்சென்ட்

2. இராமலிங்க அடிகள் இயற்றிய நூல் 

அ) திருவருட்பா ஆ) திருவாசகம் இ) திருக்குறள் ஈ) திருமந்திரம் 

3. சார்லி சாப்ளின் பிறந்த இடம்

அ) அமெரிக்கா ஆ) பிரான்ஸ் இ) சீனா ஈ) இலண்டன்

4. "உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்" இத்தொடர் உணர்த்தும் பண்பு.

அ) நேர்மறைப் பண்பு ஆ) தயக்கப் பண்பு இ) முரண் பண்பு ஈ) இவை அனைத்தும்

5. வினைத்தொகைக்கு உதாரணம்

அ) மறவா ஆ) வளர்தலம் இ) தினம்தினம் ஈ) சலசல

6. வள்ளலாரின் சிந்தனைகளின் ஊற்றுக்களமாக இருந்த இடம்

அ) சென்னை ஆ) வடலூர் இ) கந்தகோட்டம் ஈ) திருவான்மியூர்

7. ''வாளால் அறுத்துச் சுடினும் ..'' இவ்வடியின் மூலம் குலசேகராழ்வார் வெளிப்படுத்துவது

அ) போர் ஆ) மருத்துவம் இ) விளையாட்டு ஈ) வேளாண்மை

8. 'வித்துவக்கோடு' என்னும் ஊர் அமைந்துள்ள மாநிலம்

அ) ஆந்திரா ஆ) கேரளா இ) தமிழ்நாடு ஈ) கர்நாடகா

9. சரியானவற்றைப் பொருத்தித் தேர்க.

அ) காதை - 1) கந்தபுராணம்

ஆ) சருக்கம் - 2) சீவகசிந்தாமணி

இ) இலம்பகம் - 3) சூளாமணி

ஈ) படலம் - 4) சிலப்பதிகாரம்

அ) 4   3   2   1 ஆ) 3   4   1   2 இ) 3   4   2   1 ஈ) 4   3   1   2

10. 'ஐம்பெருங்காப்பியம் - என்னும் சொற்றொடரை நூல் உரையில் குறிப்பிட்டவர்

அ) சிவஞான முனிவர்         ஆ) மயிலைநாதர் இ) ஆறுமுகநாவலர் ஈ) இளம்பூரணர்

II. எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க.                                         2  X 2 =  4

11. 'தருமமிகு சென்னையில் கந்த கோட்டத்துள்வளர் தலமோங்கு கந்தவேளே!-தொடருக்குப் பதவுரை  எழுதுக.

12. மருத்துவத்தில் மருந்துடன் அன்பும் நம்பிக்கையும் ஆற்றும் பாங்கினை எழுதுக.

13. கலிவிழா, ஒலிவிழா விளக்கம் தருக.

111. எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க.                                    2  X 2 =  4

14. பின்னணி இசை, படத்தின் காட்சியமைப்புக்கு எவ்வாறு உயிரூட்டும்? சான்று தருக.

15. குலஷோவ் விளைவு குறிப்பு வரைக.

16. நல்ல திரைப்படத்தின் இலக்கணம் யாது?

IV. எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க.                                    2  X 2 =  4

17. புணர்ச்சி விதி தருக 

ஒருமையுடன்

18. பேச்சு வழக்கை எழுத்து வழக்காக மாற்றுக

ரவைக்கு சித்தப்பன காவலுக்குப் போவ சொல்.

19. கலைச்சொல் தருக 

அ) Cinematography ஆ) Multiplex Complex

V. எனையேனும் மூன்று வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க.                                   3  X 4 =  12

20. சிலப்பதிகாரப் பாடப்பகுதியில் அமைந்துள்ள காப்பிய இலக்கணக் கூறுகளை எழுதுக.

21. காப்பியம் எத்தனை வகைப்படும்? அவை யாவை?

22. தமிழாக்கம் தருக.

Periyar was not only a great social revolutionary, he was something more than that. He is known as a great champion of the underprivileged; even in this sphere he was much more than that. His sphere of activity was very wide and when he took up any issue he went deep into it, understood all the aspects of it and did not rest until he had found a permanent solution to it. Communal differences in our society were deep-rooted and appeared to be permanent features of our society until Periyar came on the scene.

23. இலக்கிய நயம் பாராட்டுக.

( மையக் கருத்தை எழுதி எவையேனும் மூன்று நயங்களை எழுதுக. ) 

பிறப்பினால் எவர்க்கும்  -     உலகில் 

பெருமை வாராதப்பா! 

சிறப்பு வேண்டுமெனில் -   நல்ல 

செய்கை வேண்டுமப்பா! 

நன்மை செய்பவரே    -  உலகம் 

நாடும் மேற்குலத்தார்! 

தின்மை செய்பவரே -அண்டித் 

தீண்ட ஒண்ணாதார்!

-கவிமணி தேசிக விநாயகம்

VI. எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க.                            2  X 6  =  12

24. திரைப்படத்துறை என்பது ஆயிரம் பேரைக் காப்பாற்றும் தொழிலா? அல்லது கலைகளின் சங்கமமா? உங்கள் பார்வையைக் கட்டுரையாக்குக.

25. சென்னையில் உள்ள மயிலாப்பூர், கந்தகோட்டப் பகுதிகள் செய்யுளில் எவ்விதம் காட்சிப் படுத்தப்படுகின்றன?

26. 'நடிகர் திலகம்' என்ற பட்டம் சிவாஜிக்குப் பொருத்தமானதே என்பதை நிறுவுக.

IV. அடிபிறழாமல் எழுதுக.                                                    1  X  1  =  4

27. “ஒருமையுடன்....... ” எனத் தொடங்கும் 'தெய்வமணிமாலை' பாடலை அடிமாறாமல் செய்யுள் வடிவில் எழுதுக.


 எம்.ஏ.ஜெலஸ்டின் , முதுகலைத் தமிழாசிரியர், கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில் - 9843448095


Click Here to download the document.



Post a Comment

Previous Post Next Post