12 /இயல் 4 -அலகுத் தேர்வு 12- 4 /4 UT/25
அக்டோபர் மாதத் தேர்வு
பாடம் : தமிழ் வகுப்பு : 12
நேரம் : 1.30 மணி மதிப்பெண் : 45
I . பலவுள் தெரிக 3 X 1 = 3
1.'கண்ணாடியாகும் கண்கள்' என்னும் கவிதை தொகுப்பின் ஆசிரியர்
அ) நகுலன் ஆ) பிரமிள் இ) அய்யப்ப மாதவன் ஈ) சிற்பி
2. சுவடியோடு பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க.
அ) வசம்பு ஆ) மணத்தக்காளியிலைச் சாறு இ) கடுக்காய் ஈ) மாவிலைக்கரி
3.’ குழிமாற்று’ என்னும் சொல்லோடு தொடர்புடைய துறை ______________
அ) இலக்கியம் ஆ) கணிதம் இ) புவியியல் ஈ) வேளாண்மை
II. குறுவினா 4 X 2 = 8
4. மாதவியின் நாட்டிய நகழ்வல் ஒலித்த இசைக்கருவிகளைப் பட்டயலிடுக.
5. சிலப்பதிகாரத்திற்கு வழங்கும் வேறு பெயர்கள் யாவை?
6. காற்றின் தீராத பக்கங்களில் எதனை, எது எழுதிச் சென்றது?
7. அக்காலத்துக் கல்விமுறையில் மனனப் பயிற்சிக்கு உதவிய நூல்கள் எவை?
III. சிறுவினா 4 X 4 = 16
8. ஒருமுக எழினி,பொருமுக எழினி , கரந்துவரல் எழினி - விளக்குக.
9. நீங்கள் ஆசிரியரானால் மாணாக்கரை அன்பினால் எவ்வகையில் நெறிப்படுத்துவீர்கள்?
10. மணலில் எழுதியதுமுதல் தற்காலம்வரை எழுதும் முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைத் தொகுத்துரைக்க.
11. ‘ஊழிபெயரினும் தாம் பெயரார் ’- பழமொழியை வாழ்வியல் நிகழ்வில் அமைத்து எழுதுக.
IV. அனைத்திற்கும் விடை தருக. 4 X 2 = 8
12. தொடரில் இடம்பெற்றுள்ள மரபுப் பிழைகளை நீக்கி எழுதுக.
வனவிலங்குக் காப்பகத்தில் சிங்கக் குட்டியும் யானைக்குட்டியும் கண்டேன்.
13. தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக.
எங்கள் ஊரில் நூலகக் கட்டிடம் கட்ட அறச நிதி ஒதுக்கியது.
14. சொல்லைப் பிரித்தும் சேர்த்தும் தொடரமைக்க
தலைமை
15.கலைச்சொல் தருக.
அ) Higher Education ஆ ) Road Safety
V. ஏதேனும் ஒன்றனுக்கு விடை தருக. 1 X 6 = 6
16. அரங்கின் அமைப்பை சிலப்பதிகாரத்தின்வழி விளக்கி எழுதுக.
17. பண்டைக்காலக் கல்வி முறையில் ஆசிரியர் மாணவர்களுக்கிடையே நிகழ்ந்த கற்றல், கற்பித்தல் முறைகளைத் தொகுத்தெழுதுக.
VI. அடிபிறழாமல் எழுதுக. 1 X 4 = 4
18. 'குழல்வழி …… ' எனத் தொடங்கும் 'சிலப்பதிகாரம் பாடலை அடிமாறாமல் செய்யுள் வடிவில் எழுதுக.
குருசடி எம்.ஏ.ஜெலஸ்டின் , முதுகலைத் தமிழாசிரியர், கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில் - 9843448095