Loading ....

UT-12th Tamil-Unit Test-OCTOBER 2025-Unit 4-Monthly Test-Question paper-12ஆம் வகுப்பு-தமிழ்-அலகுத் தேர்வு-இயல் 4-அக்டோபர் 2025-மாதத் தேர்வு- வினாத்தாள்-

12 /இயல் 4 -அலகுத் தேர்வு     12- 3 /4 UT/25

அக்டோபர்  மாதத் தேர்வு

பாடம் : தமிழ்                                                                     வகுப்பு : 12

நேரம் : 1.30 மணி                                                             மதிப்பெண் : 50


I . பலவுள் தெரிக 10  X 1 = 10

1. சுவடியோடு பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க.

அ) வசம்பு ஆ) மணத்தக்காளியிலைச் சாறு இ) கடுக்காய் ஈ) மாவிலைக்கரி

2. உபாத்தியாயர் என்ற சொல் யாரைக் குறிக்கும்?

அ) நடிகர் ஆ) கணக்கர் இ) ஆசிரியர் ஈ) மருத்துவர்

3. மௌனகுருவிடம் படித்தவர்

அ) டாக்டர் மா. இராசமாணிக்கனார் ஆ) ப.சுப்பிரமணியனார்

இ) பின்னத்தூர் நாராயணசாமி ஈ) நாவலர் சோமசுந்தர பாரதியார்

4.'கண்ணாடியாகும் கண்கள்' என்னும் கவிதை தொகுப்பின் ஆசிரியர்

அ) நகுலன் ஆ) பிரமிள் இ) அய்யப்ப மாதவன் ஈ) சிற்பி

5. பாரதியின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்

அ) வைரமுத்து ஆ) மு. சுதந்திரமுத்து இ) புலமைப்பித்தன் ஈ)  நகுலன்

6. இறகுகளின் தொகுதி _________________  எனப்படும்.

அ) பறவை ஆ) தோகை இ) சிறகு ஈ) நிலம்

7. பொருத்தி விடை தேர்க.

அ) ஆமந்திரிகை - 1) முத்து

ஆ) நித்திலம் - 2) மூங்கில்

இ) கழஞ்சு - 3) இடக்கை வாத்தியம்

ஈ) கழை - 4) எடை அளவு

அ) 2   1   3   4 ஆ) 3   4   2   1 இ) 3   1   4   2 ஈ) 1   3   4   2

8. 'குடிமக்கள் காப்பியம்' என்று அழைக்கப்படும் நூல்

அ) சிலப்பதிகாரம் ஆ) கம்பராமாயணம் இ) வளையாபதி ஈ) இரட்சணிய யாத்திரிகம்

9. 'நகை' என்னும் மெய்ப்பாடு தோன்றும் நிலைக்களன்களுள் ஒன்று

அ) கொடை ஆ) பிணி இ) பேதைமை ஈ) செல்வம்

10. உவகை என்னும் மெய்ப்பாடு தோன்றும் நிலைக்களன்களுள் ஒன்று

அ) செல்வம் ஆ) பிணி இ) பேதைமை ஈ சினம்

II . எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க.         2  X 2 = 4

11. மனத்தை அதன்போக்கில் செல்லவிடக் கூடாது என்று வள்ளுவம் கூறுவது ஏன்?

12. காற்றின் தீராத பக்கங்களில் எதனை, எது எழுதிச் சென்றது?

13. சிலப்பதிகாரத்திற்கு வழங்கும் வேறு பெயர்கள் யாவை?

III. எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க.           2  X 2 = 8

14. அக்காலத்துக் கல்விமுறையில் மனனப் பயிற்சிக்கு உதவிய நூல்கள் எவை?

15. மையாடல் விழா என்றால் என்ன?

16. எழுத்தாணியின் வகைகள் யாவை?

IV. எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க.           2  X 2 = 4

17. புணர்ச்சி விதி தருக 

தலைக்கோல்

18. தொடரில் இடம்பெற்றுள்ள மரபுப் பிழைகளை நீக்கி எழுதுக

முருகன் சோறு சாப்பிட்டுப் பால் குடித்தான்.

19. கலைச்சொல் தருக 

அ) Road safety ஆ) Vice Chancellor

V எவையேனும் மூன்று வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க             3  X 4 = 12

20. 'மெய்ப்பாடு' என்னும் உத்தி கையாளப்பட்டிருக்கும் இலக்கியங்கள் ஐந்தினைப் பற்றி எழுதுக.

21. சொற்பொருள் பின்வரும் நிலையணியைச் சான்றுடன் விளக்குக.

22. பின்வரும் பழமொழியை வாழ்க்கை நிகழ்வோடு பொருத்தி எழுதுக.

தினை விதைத்தவன் தினை அறுப்பான். வினை விதைத்தவன் வினை அறுப்பான்.

23. தமிழாக்கம் தருக.

The serious dearth of library facilities in this country is scarcely keeping with India's status in the international community of nations or with her educational and social needs. In this matter. India compares unfavourably not only with other independent Dominions of the commonwealth but even with certain British colonies. She possesses only one public library of any considerable size, and even this institution is inadequate to serve the needs of the capital city. Only a few towns can boast of possessing any library at all. The rural population is completely neglected: There are no travelling libraries to reach them of the kind that are to be found even in some backward countries.

VI. எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க.           2  X 6 = 12

24.  பண்டைக்காலக் கல்வி முறையில் ஆசிரியர் மாணவர்களுக்கிடையே நிகழ்ந்த கற்றல், கற்பித்தல் முறைகளைத் தொகுத்தெழுதுக.

25. அரங்கின் அமைப்பை சிலப்பதிகாரத்தின்வழி விளக்கி எழுதுக.

26. “சூரியனைப் பிரசவிக்கும் பாறை" எனும் சிறுகதை உணர்த்தும் கருத்துகளைச் சுவை குன்றாமல் சுருக்கி வரைக.

IV. அடிபிறழாமல் எழுதுக.              1  X 4 = 4

27. 'குழல்வழி …… ' எனத் தொடங்கும் 'சிலப்பதிகாரம் பாடலை அடிமாறாமல் செய்யுள் வடிவில் எழுதுக.


 எம்.ஏ.ஜெலஸ்டின் , முதுகலைத் தமிழாசிரியர், கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில் - 9843448095

Click Here to download the document.

Post a Comment

Previous Post Next Post