Loading ....

12th Standard - Weekly Test (2021)| Question Paper & Answer key | Unit 4

©Tamilamuthu2020official.blogspot.com




12th Standard  - Weekly Test  (2021)| Question Paper & Answer key | Unit 4


12 ஆம் வகுப்பு உரைநடை பகுதியான நான்காவது இயலில் இருக்கின்ற பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள் என்ற பாடப் பகுதியில் இருந்து வாரத் தேர்வு கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. இந்தப் பாடம் பள்ளிக்கூடங்களின் வளர்ச்சி நிலையையும், இன்று பள்ளிக்கூடங்கள் அடைந்து இருக்கின்ற மாற்றங்களையும் எடுத்துக் கூறுகின்றது. 

               மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த உரைநடை இதுவாகும். இந்தப் பாடத்திலே வருகின்ற ‘முறை வைப்பது’ ‘சட்டாம்பிள்ளை’, ‘சுவடி செய்வது’, ‘மையாடல் விழா’, ‘எழுத்துகளின் வகைகள்’, மாணவர்கள் மனப்பாடம் செய்த பகுதிகள்; ஆசிரியர்கள் மாணவர்கள் உறவு; பண்டைய தமிழகத்தில் நிலவிய கல்விக் கூடங்களில் விவரங்கள்; திண்ணைப் பள்ளிக்கூடங்கள் ஆகிய செய்திகளை அறிந்துகொள்ள உதவுகின்றது. 

             இந்தப் பாடத்தின் இடம்பெறும் வினா விடைகளை நீங்கள் படித்துக் கொள்வதால் உங்களுக்கு அதிக மதிப்பெண் கிடைக்க வாய்ப்பு இருக்கின்றது.   எனவே, இந்தப் பாடத்தில் இருந்து வாரத் தேர்வுக்கான(Weekly Test )  கேள்விகள் தயாரிக்கப்பட்டு உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. 

             ஒரு மதிப்பெண் கேள்விகளைப் பொருத்தமட்டில்  உயர்நிலை மற்றும் சிந்தனை திறன் ( HOT QUESTION) அடிப்படையிலான கேள்விகள் இடம்பெற்றுள்ளன. தேர்வை எழுதி பழகுங்கள், அதிக மதிப்பெண் பெற வாருங்கள்.



       திருத்தியமைக்கப்பட்ட பாடத்திட்டம்  2021 - 2022

மேனிலை இரண்டாமாண்டு. 

தமிழமுது 2020 -  பயிற்சிப் பாசறை, கன்னியாகுமரி மாவட்டம்.

வாரத் தேர்வு 

பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்

வகுப்பு : 12                                   தமிழ்                                             இயல் : 4

Time  :25 minutes                                                                 Mark  : 30


I.பலவுள் தெரிக                                                                                                 15 X = 15

 

1.சுவடியோடு பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க 

அ) வசம்பு   

ஆ) மணத்தக்காளி இலைச்சாறு   

இ) கடுக்காய்                  

ஈ) மாவிலை கரி

 

2.தொல்காப்பியம் குறிப்பிடும் ஓதற்பிரிவுக்கான கால அளவு 

அ) ஏழு ஆண்டுகள்  

ஆ) ஐந்து ஆண்டுகள்       

இ) மூன்று ஆண்டுகள்   

ஈ)ஆறு ஆண்டுகள்


3.நெடுங்கணக்கு என்பது 

அ) நீண்ட கணக்கு  

ஆ) பெருக்கல் கணக்கு    

இ) அரிச்சுவடி                  

ஈ) பிரபவாதி சுவடி

 

4.குழிமாற்று எந்த துறையோடு தொடர்புடைய சொல் 

அ) இலக்கியம்        

ஆ) கணிதம்                         

இ) புவியியல்                    

ஈ) வேளாண்மை


 


5. பள்ளி என்பது  எவ்விரண்டுக்கு வழங்கப்பட்ட பொதுவான பெயர்  

அ)  மன்றம் , மாடங்கள்               

ஆ) மடங்கள் ,பாடசாலைகள்  

இ) பள்ளி,  மன்றம்                         

ஈ) மன்றம் , அம்பலம்

 

6. “ஐயாண் டெய்தி மையாடி அறிந்தார் கலைகள்” என்ற வரி இடம் பெற்ற நூல் 

அ) தமிழ்விடு தூது       

ஆ) சிந்தாமணி          

இ) வளையாபதி                

ஈ) சூளாமணி

 

7. எழுத்தாணிக்கு வழங்கும் வேறு பெயர் 

அ) எழுதுகோல்           

ஆ) ஊசி                         

இ) தூவல்                              

ஈ) பேனாகத்தி 


8. சரியானதைத் தேர்க 

அ) எழுத்துப் பயிற்சி                               -    வித்தியாரம்பம் 

ஆ) பின்ன எண்ணின் கீழ் தொகை    -    கீழ்வாயிலக்கம்

இ) கணக்காயர்                                        -    கணக்குப்பிள்ளை 

ஈ) கல்வி பயிற்சிக்கூடம்                        -    நவத்வீபம்

 

9.சரியான நிறுத்தற்குறி உடைய தொடரினைத் தேர்க 

அ) “குழிமாற்று”, எந்தத் துறையோடு தொடர்புடைய சொல். 

ஆ) ‘குழிமாற்று’, எந்தத் துறையோடு தொடர்புடைய சொல்! 

இ)’ குழிமாற்று’ எந்தத் துறையோடு தொடர்புடைய சொல். 

ஈ) குழிமாற்று எந்த துறையோடு தொடர்புடைய சொல்? 




10. மாணவர்களுக்குக் கற்பித்த நூல்களைப் பட்டியலிலும் நூலின் பெயர் 

அ) நீதி நூல்கள்    

ஆ) நெடுங்கணக்கு    

இ) கதைப்பாடல்கள்        

ஈ) அறநூல்கள் 


11. கீழ்க்காணும் நபர்களில் வழக்குரைஞரும் தமிழ் அறிஞருமானவர் யார்?    

அ) பின்னத்தூர் நாராயணசாமி                                  

ஆ) உரையாசிரியர் வேங்கடசாமி 

இ) தமிழறிஞர் நாவலர் சோமசுந்தர பாரதியார்     

ஈ) வெள்ளக்கால் ப. சுப்பிரமணியனார்


12.”இரட்டை அர்த்தங்கள் மாண்டு போகவில்லை” என்ற நூலின் ஆசிரியர் யார்? 

அ) டாக்டர் வ. சுப. மாணிக்கம்         

ஆ) நாவலர் சோமசுந்தர பாரதியார் 

இ) பேராசிரியர் அ. கா. பெருமாள்           

ஈ) டாக்டர் இராசமாணிக்கனார்

 

13. பொருந்தாததைத் தேர்க  

அ)எட்டயபுரம் திண்ணைப்பள்ளி          - சோமசுந்தர பாரதியார் 

ஆ)கணபதியார்  திண்ணைப்பள்ளி     -  சுப்ரமணியன் 

இ)முத்துராமபாரதி திண்ணைப்பள்ளி - பின்னத்தூர்நாராயணசாமி 

ஈ) பட்டி நடேசனார் திண்ணைப்பள்ளி      -   மா. இராசமாணிக்கனார்


14. பொருத்தித் தேர்க  

அ) ஓலைச்சுவடி                  -   1. ஆசிரியர் 

ஆ) கணக்காயர்                  -    2. சாசனம் 

இ) வகுப்புத் தலைவன்      -    3. தூக்கு 

ஈ)  அரசாணை                     -    4. சட்டாம்பிள்ளை

அ) 3 1 4 2                    ஆ) 3 1 2 4                 இ) 3 4 1 2                               ஈ) 3 2 1 4 


15. தஞ்சாவூரில் இருந்த ஆகம சாஸ்திர பண்டிதர் 

அ) சதாசிவ பண்டாரத்தார்                 

ஆ) சர்வசிவ பண்டிதர் 

இ) குமாரசாமி வாத்தியார்                   

ஈ) நடேசனார்



II. குறுவினா                                                           3 x 2 = 6

16. ‘முறை வைப்பது’ என்றால் என்ன? 

17. அக்காலத்து கல்வி முறையில் மனப்பயிற்சி உதவிய நூல்கள் எவை?  

18. ‘மையாடல் விழா’ என்றால் என்ன?

III. சிறுவினா                                 1 x 4 = 4 

19. மணலில் எழுதியது முதல் தற்காலம் வரை எழுதும் முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைத் தொகுத்துரைக்க.


எம்.ஏ.ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர்

கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில்- 49843448095



இயல் - 1

Slip Test 1 : click here


Slip Test 2 : click here


Slip Test 3 : click here


Slip Test 4 : click here


மொழிப்பயிற்சி


தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக Part-1 : Click here


தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக Part-2 : click here


உவமைத் தொடர்களைச் சொற்றொடர்களில் அமைத்து எழுதுக : Click here



12 ஆம் வகுப்பு தமிழ்ப்பாடம் சார்ந்த Study materials தேவைப்பட்டால் எது தொடர்பான Study materials வேண்டும் என்பதை Comment Box இல் பதிவிடுங்கள்.

இந்தப் பகுதியில் மேலும் ஏதேனும் விளக்கங்களும் தெளிவுகள் வேண்டுமென்றாலும், மொழிப்பயிற்சி சார்ந்த ஏதேனும் சந்தேகங்களுக்கு விளக்கங்கள் வேண்டுமென்றாலும், வேறு மொழிப்பயிற்சி கேள்விகள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றாலும், நீங்கள் மறக்காமல்   Comment Box இல் பதிவிடுங்கள்.



 Follow us on (click the below icons to follow)


Want our Latest Posts?

View Our Blogger(Click The Icon Below)

Tamilamuthu 2020 Official

Icons from Flaticon      Contact No : 9843448095  ©Tamilamuthu2020official.blogspot.com


 


இயல் -4

பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்

WEEKLY TEST -  ற்கான QUESTION &  ANSWER KEY ,Pdf  வடிவில் 

FREE  DOWNLOAD செய்ய CLICK THE BUTTON BELLOW👇👇👇👇👇




 

Image by Comfreak from Pixabay
Icons made by Stickers from www.flaticon.com
Icons made by Stickers from www.flaticon.com
Icons made by Stickers from www.flaticon.com
Image by Michal Jarmoluk from Pixabay

Post a Comment

Previous Post Next Post