Loading ....

12th Tamil - Study Material - paa nayam paarattal - illakkiya nayam paarattal - பாநயம் பாராட்டல் - +2 Tamil -

12th Tamil - Study Material - paa nayam paarattal - illakkiya nayam paarattal - பாநயம் பாராட்டல் - +2 Tamil -



     


12 ஆம் வகுப்பு                                                                 


பாநயம் பாராட்டுக

இயல் - 5

 


                           பிறப்பினால் எவர்க்கும் -உலகில்                                                                              .                                       பெருமை  வாராதப்பா!

                          சிறப்பு வேண்டுமெனில் - நல்ல 

                                        செய்கை வேண்டுமப்பா! 

                          நன்மை செய்பவரே - உலகம் 

                                        நாடும் மேற்குலத்தார்! 

                         தின்மை செய்பவரே - அண்டித் 

                                       தீண்ட ஒண்ணாதார்!

                                                      -கவிமணி தேசிக விநாயகம் 

                              

                                                                                                       

'நல்லதைச் செய்வோம்

முன்னுரை:

            தமிழின் மீது அளவற்ற அன்பு கொண்ட கவிமணி, 'குழத்தைகள் கவிஞர்' என்று அழைக்கப்படுகின்றார்."தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு' என்ற பாடல் மூலம் குழத்தைகளால் மிகவும் நேசிக்கப்படுபவர் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்கள் எழுதியுள்ள இப்பாடலின் நயங்களைக் காண்போம்.

திரண்ட கருத்து:

            பிறப்பை வைத்து யாருக்கும் இந்த உலகில் பெருமை வருவதில்லை; உலகில் சிறந்தவர்களாக இருக்க வேண்டும் என்றால்  நல்ல செயல்களைச் செய்ய வேண்டும். உலகில் மேல்குலத்தோர் என்போர் தன் வாழ்வில் நன்மை செய்பவர்களே! தீமை செய்பவர்களே இந்த உலகில் தீண்டத்தகாதவர்கள்,

மையக்கருத்து:

         நன்மை செய்தால் அவன் மேன்மையடைவான் ; தீமை செய்தால் ஒதுக்கப்படுவான். 

 சொல் நயம்;

         சிறந்த சொற்களைக் கொண்டு கவிதையை நயம்பட பாடியுள்ளார் கவிஞர். இப்பாடலில் அடைச்சொல்லையும்

அகராதிச் சொல்லையும் கவிஞர் பயன்படுத்தியுள்ளார்.

சான்றாக,

அடைச்சொல் - அண்டித்தீண்ட       

அகராதிச் சொல் - ஒண்ணாதார் =  ஒவ்வாதார்

பொருள் நயம்

        இவ்வுலகில் மேற்குலத்தோர், தீண்டதகாதவர் என்பது பிறப்பினால் வருவதல்ல அவரவர்களின் செய்கையால் வருகின்றது என்ற பொருளை வலியுறுத்த சிறந்த சொற்களைக் கொண்டு கவிஞர் இக்கவிதையை இயற்றியுள்ளார்.

தொடை நயம்;

      பாடலில் மோனை, எதுகை, இயைபு, முரண், அளபெடை ஆகியவற்றைக் கொண்டு தொடுப்பது தொடையாகும். மோனை நயம்:

      சீர்களிலோ, அடிகளிலோ முதலெழுத்து ஒன்றிவரத் தொடுப்பது மோனையாகும்.

சான்று :

 பிறப்பினால்     -  பெருமை ;   சிறப்பு   -செய்கை;   ன்மை -நாடும் ;  தீண்ட  -தின்மை

எதுகை நயம்:

       பாடலின் அடிதோறும் அல்லது சீர்தோறும் முதலெழுத்து அளவொத்து நிற்க இரண்டாவது எழுத்து ஒன்றி வருவது எதுகை எனப்படும். இப்பாடலில் அடி எதுகை பயின்று வந்துள்ளது.

சான்று:

பிப்பினால்

சிப்பு

ன்மை 

தின்மை

இயைபு நயம் : 

          ஒருசெய்யுளில் ஒன்றுக்கு மேற்பட்ட அடிகளின் இறுதி எழுத்து அல்லது இறுதிச் சொல் அல்லது ஒரே அடியில் உள்ள சீர்களின் இறுதி எழுத்துகள் ஒன்றி வந்தாலும் அஃது இயைபு எனப்படும். இப்பாடலில் அடி இயைபு பயின்று வந்துள்ளது.

சான்று:

வாராதப்பா                                                 மேற்குலத்தார்

வேண்டுமப்பா                                         ஒண்ணாதார்

முரண் நயம்:

        செய்யுளில், சொல் அல்லது பொருள் முரண்பட்டு நயம் பயக்கும் வகையில் அமைவது முரன் தொடையாகும். இப்பாடலில் இடம் பெற்றுள்ள முரண் தொடை

நன்மை x தின்மை

சந்த நயம்:

"சந்தம் தமிழுக்குச் சொந்தம்’"

         இப்பாடலை ஏற்ற இசைக் கருவிகளுடன் இசைத்துப் பாடினால், பாடுவோர்க்கும் கேட்போருக்கும் மிகுந்த இன்பத்தைத் தரும் சந்த நயங்களுடன் கவிஞர் இப்பாடலை இயற்றியுள்ளார். இப்பாடல் சிந்துப்பா வகையைச் சார்ந்தது.

அணி நயம்:

       உள்ளதை உள்ளபடியே கவிஞர் கூறுவதால் இப்பாடலில் இயல்பு நவிற்சி அணி பயின்று இப்பாடலில் வந்துள்ளது.

முடிவுரை:

      கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை இப்பாடலில் கவிதைக்குரிய நயங்களை எல்லாம் அமைத்து, கவி நநயங்களால் தமிழன்னைக்குப் பெருமை சேர்த்துள்ளார்.


மாணாக்கரோ

கேட்கப்பட்டிருக்கும் கேள்வியில் எத்தனை அத்தனை  நயங்கள் கேட்கப்பட்டிருக்கின்றதோஅத்தனை  நயங்களை மட்டும் எழுதினால் போதும்.




குருசடி எம்.ஏ.ஜெலஸ்டின்

முதுகலைத் தமிழாசிரியர்,கார்மல் மேனிலைப் பள்ளி நாகர்கோவில்-4, 9843448095




12th Tamil - Study Material   -  இயல் 5 - 
பா நயம்பாராட்டல் விடைக்குறிப்பு
Pdf DOWNLOAD செய்ய 👇👇👇


12th standard - Tamil

Slow learner Minimum  Study Material

pdf download : Click here


12th Standard - TAMIL -

Public Examination Tamil Model Question paper 1 - may 2022

pdf download : click here


12th Standard - TAMIL -

Public Examination Tamil Model Question paper 2 - may 2022

pdf download : click here


12th Standard - TAMIL -

Public Examination Tamil Model Question paper 3 - may 2022

pdf download : click here


12 ஆம் வகுப்பு

ஜனவரி 2022 ( REDUCED SYLLABUS)

முதல் திருப்புதல் தேர்வு - JANUARY 2022

மாதிரி வினாத்தாள்-1 : click here


மாதிரி வினாத்தாள்-2 : Click here


மாதிரி வினாத்தாள்-3 : Click Here


மாதிரி வினாத்தாள்-4 : Click Here


மாதிரி வினாத்தாள்-5 : Click Here



12 ஆம் வகுப்பு

SECOND REVISION EXAM - MARCH  2022
MODEL QUESTION PAPER 1 - ANSWER KEY 
PDF DOWNLODE                                            : CLICK HERE
SECOND REVISION EXAM - MARCH  2022
MODEL QUESTION PAPER 2 - ANSWER KEY 
PDF DOWNLODE   : 
click here        

Image by Erik Lyngsøe from Pixabay                                            




Post a Comment

Previous Post Next Post