12th Tamil - Public Exam (2021-2022) -REVISION TEST - December 2021- Common Model Question Paper - Key Answer -திருப்புதல் தேர்வு - டிசம்பர் 2021- பொது மாதிரி வினாத்தாள் - விடைக்குறிப்பு |
கன்னியாகுமரி மாவட்டப் பொதுத்தேர்வுகள்
பொது மாதிரி திருப்புதல் தேர்வு - நவம்பர் 2021.
திருத்தியமைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி
திருப்புதல் தேர்வு - நவம்பர் 2021
மாதிரி திருப்புதல் தேர்வு
நேரம்: 3:மணி வகுப்பு-12 மதிப்பெண்:90
பொதுத்தமிழ்
திருத்தியமைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி நடைபெற இருக்கின்ற
திருப்புதல் தேர்விற்கான பாடத்திட்டத்தின் .( நவம்பர் - டிசம்பர் 2021) படி
கன்னியாகுமரி மாவட்டப் பொதுத்தேர்வுகள்
பொது மாதிரி திருப்புதல் தேர்வு - நவம்பர் 2021.
தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை வெளியிடட்டிருக்க
கூடிய திருப்புதல் தேர்வுக்கான பாடத்திட்டத்தின் படி
REVISION TEST ,December 2021
Common Model Question Paper இணைக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் மாதம் இந்தத் திருப்புதல் தேர்வு நடைபெற இருக்கின்றது.
அதற்கு முன்னோட்டமாகக் கன்னியாகுமரி மாவட்டத்தில்
நவம்பர் 2021 இல் நடைப்பெற்ற, 12th Tamil, REVISION TEST,
Common Model Question Paper மற்றும்
Key Answer தரப்பட்டுள்ளது.
இந்த Common Model Question Paper December 2021 இல்
நடைப்பெற இருக்கின்ற December 2021, Common REVISION TEST க்கு
மிகவும் உதவும்.
இது கன்னியாகுமரி மாவட்டத்தில்
நவம்பர் 2021 இல் நடைப்பெற்ற Common Model
REVISION TEST Question Paper ஆகும் .
இந்த Common Model
REVISION TEST Question Paper க்கு உரிய Key Answer தரப்பட்டுள்ளது.
இந்தத் தேர்வுக்குரிய Question எல்லாவற்றையும் கவனமாகப் பார்த்து
முறையாகப் பயிற்சி செய்து
அதிக மதிப்பெண்ணைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
கன்னியாகுமரி மாவட்டப் பொதுத்தேர்வுகள்
பொது மாதிரி திருப்புதல் தேர்வு - நவம்பர் 2021.
வினாத்தாள்
கன்னியாகுமரி மாவட்டப் பொதுத்தேர்வுகள்
பொது மாதிரி திருப்புதல் தேர்வு - நவம்பர் 2021.
QUESTION PAPER Pdf
download button below 👇👇👇👇👇
கன்னியாகுமரி மாவட்டப் பொதுத்தேர்வுகள்
பொது மாதிரி திருப்புதல் தேர்வு - நவம்பர் 2021.
விடைகள்
பகுதி-1
அனைத்து வினாக்களுக்கும் விடை தருக 14 x 1 = 14
1.இ )இராமன் , சுக்ரீவன்
2. இ) 2 4 1 3
3. ஆ) பாதுகாப்பு
4. ஆ) கருத்து 2 சரி
5. இ) தொல்காப்பியம்
6. இ) மழைத்துளிகள்
7.இ) மணந்தகம்
8.ஆ) திருமணமும் குடும்பமும்
9.இ) ரா.அ.பத்மநாபன்
10.அ) பண்புத்தொகை
11.அ)அவருக்கு நல்லது கெட்டது நல்லா தெரியும்.
12.அ) பொருட்குறிப்பு
13.ஈ) கன்மம்
14.ஈ) சிற்றீகை
பகுதி - 2
பிரிவு – 1
இரண்டு அல்லது மூன்று வரிகளில் விடைதருக 3 x 2 = 6
எவையேனும் மூன்றனுக்கு விடைதருக
15.முயல்வாருள் எல்லாம் தலை:
அறத்தின் வழியாக இல்லறவாழ்க்கை வாழ்பவர்கள் முயற்சி செய்து புகழடைய விரும்பும் எல்லாரை விடவும் தலையானவர் என வள்ளுவர் கூறுகிறார்.
16. ஜலாலுத்தீன் ரூமி உருவகப்படுத்துபவை:
மனித வாழ்க்கையில் நடக்கின்ற எதிர்பாராத நிகழ்வுகளான,
ஓர் ஆனந்தம்
சற்று மனச்சோர்வு
சிறிது அற்பத்தனம்
நொடிப்பொழுதேயான விழிப்புணர்வு
ஆகியவற்றை எல்லாம் நமது இல்லத்திற்கு வரும் எதிர்பாராத விருந்தாளிகளாக உருவகப்படுத்தியிருக்கின்றார்.
17. நகரம் பட்டைத் தீட்டிய வெள்ளை வைரமாகிறது:
மழைக்காலப் பகற்பொழுதில் சூரியனின் வெளிச்சம் இல்லாமல் நகரமானது மழைமேகத்தால் இருள் சூழ்ந்து காணப்படும்.
மழை பெய்து ஓய்ந்த பின்பு, மழைக்கான சுவடுகள் அழிந்த பின்பு சூரியன் திடீரென தன் முகத்தைக் காட்ட மழை மேகத்தால் மறைந்திருந்த நகரம் பிரகாசமாய்க் காட்சியளிக்கின்றது.
இன்னும் உறிஞ்சப்படாமல் இருக்கும் ஒரு சில மழைத் துளிகளின் மீது விழுகின்ற சூரியக் கதிர்களின் பிரதிபலிப்பால் நகரமே வெள்ளை வைரமாகக் காட்சியளிக்கின்றது.
18. எழுவர்:
இராமன், இலக்குவன், பரதன், சத்ருக்கனன், குகன், சுக்ரீவன், வீடணன்
பிரிவு – 2
எவையேனும் இரண்டனுக்கு விடைதருக 2 x 2 = 4
19.புக்கில்:
புக்கில் என்பது தற்காலிகமாகத் தங்கும் இடத்தைக் குறிக்கும். "துகள் அறுகேள்வி உயர்ந்தோர் புக்கில்" என்ற புறநானூற்றுப் பாடலில் (222:6) வரும் 'புக்கில்' என்பது தற்காலிகமாகத் தங்கும் இடத்தைக் குறிக்கின்றது.
தன்மனை:
திருமணத்திற்குப் பின் கணவனும் மனைவியும் பெற்றோரிடமிருந்து பிரிந்து தனியாக வாழும் இடம் 'தன்மனை' என அழைக்கப்பட்டது.
20. மொழியின் இயல்பு வழக்குகளை கலையியல் வழக்குகளாக மாற்றுபவை:
உவமும், உருவகம், எச்சம், குறிப்பு, உள்ளுறை, இறைச்சி முதலியவை மொழியின் இயல்பு வழக்குகளைக் கலையியல் வழக்குகளாக மாற்றுபவையாகும்.
21. நடை அழகியல்:
கவிதையின் இயங்காற்றல்தான் நடை எனப்படும். தொல்காப்பியமும் இதனையே கூறுகின்றது. 'நடைபெற்றியலும்', 'நடை நவின்றொழுகும்' என்னும் சொற்றொடர்களைத் தொல்காப்பியம் கையாண்டுள்ளது.
ஒவ்வொரு பாவும் இவ்வாறே அமைய வேண்டும் என்று தொல்காப்பியம் கூறுகிறது.
22. 'திருவளர்செல்வன்' என்ற தொடரே சரியான தொடர்.
'வினைத்தொகையாக வரும் சொல்லுக்கிடையில் வல்லினம் மிகுதல் கூடாது' என்ற இலக்கண விதியின் படி 'திருவளர்செல்வன்' என்ற வினைத்தொகையில் வல்லினம் மிகாது.
பிரிவு – 3
எவையேனும் ஏழனுக்கு விடைதருக 7 x 2 = 14
23. ஏதேனும் ஒன்றனுக்குப் புணர்ச்சி விதி தருக
அ) தனியாழி - தனி + ஆழி
விதி 1) ‘இ ஈ ஐ வழி யவ்வும்’ > தனி ய் + ஆழி
விதி 2) ‘உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே’ > தனியாழி
ஆ) அருங்கானம் =அருமை+ கானம்
விதி 1) ஈறுபோதல் > அரு+ கானம்
விதி 2) இனம்மிகல் > அருங்கானம்
24. ஏதேனும் ஒன்றனுக்கு உறுப்பிலக்கணம் தருக
அ) விம்முகின்ற - விம்மு + கின்று + அ
விம்மு - பகுதி
கின்று - நிகழ்கால இடைநிலை
அ - பெயரெச்ச விகுதி
ஆ) பொலிந்தான் - பொலி + த் ( ந்) + த் + ஆன்
பொலி - பகுதி
த் - சந்தி , ‘ த்’ , ‘ந்’ ஆனது விகாரம்,
த் - இறந்தகால இடைநிலை
ஆன் - ஆண்பால் வினைமுற்று விகுதி
25. பொருத்தமான வேற்றுமை உருபுகளை சேர்த்து முறையான தொடராக்குக
காலையில் எழுந்து படித்தால் நமக்கு நன்மை ஏற்படும்.
26. ஈரொற்றாய் வரும் எழுத்துகள்:
ய , ர, ழ மெய்யெழுத்துகள் மட்டுமே ஈரெற்றாய்வரும்
சான்று: பாய்ச்சு, பார்க்கும், வாழ்க்கை.
27. மொழியின் சொற்றொடர் அமைப்பை விளங்கிக் கொள்வதற்கும் பயன்படுத்துவதற்கும் உதவுவன:
மொழியின் சொற்றொடர் அமைப்பை விளங்கிக் கொள்வதற்கும் பயன்படுத்துவதற்கும் உதவுவன, திணை,பால்,எண்,இடம்
28. தாமரை இலை நீர்போல - பட்டும் படாமலும், ஈடுபாடும் இல்லாமலும் இருத்தல்
பெற்றோருக்கு நிதிச்சுமை அழுத்துவது தெரிந்தும், சில பிள்ளைகள் தாமரை இலை நீர்போலக் கண்டுக் கொள்ளாமல் இருப்பர்.
29. தமிழ் எழுத்துக்கள் 247
அவற்றின் வகை
உயிரெழுத்துகள் -12
மெய்யெழுத்துகள் - 18
உயிர்மெய் எழுத்துக்கள் - 216
ஆய்தம் - 1
மொத்தம் : 247
30. மயங்கொலிச் சொற்களை ஒரே தொடரில் அமைத்து எழுதுக
தலை,தளை,தழை
திருட்டுத்தனமாகப் பசுவிற்குத் தழை பறிக்க போன இடத்தில் தலை தட்டி கீழே விழுந்தவனை தோட்டக்காரன் தளையிட்டு ஊர்த்தலைவரிடம் கூட்டி சென்றான்.
பகுதி – 3
பிரிவு-1
ஐந்து அல்லது ஆறு வரிகளில் விடை தருக 2 x 4 = 8
எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடைதருக
31.சினத்தால் வரும் கேடு:
ஒருவனுக்குத் தீமையான விளைவுகள் அனைத்தும் சினத்தாலேயே ஏற்படும் என்பதால், ஒருவரிடமும் சினம் கொள்ளாமல் அதனை மறந்துவிட வேண்டுமென குறள் கூறுகின்றது.
சினம் என்னும் பகை நம்மிடமிருக்கும், நம் முகத்திற்கு அழகு தருகின்ற சிரிப்பையும், உள்ளத்தின் அருளுக்கு அழகு தருகின்ற மகிழ்ச்சியையும் நம்மிடமிருந்து அழிந்துவிடும்.
ஒருவன் தன்னைக் காத்துக் கொள்ள விரும்பினால் அவன் சினத்தைக் காக்க வேண்டும். ஏனெனில், சினமானது தன்னைக் கொண்டவனையே அழித்துவிடும்.
சினமானது தன்னை மட்டுமல்ல தன்னைச் சேர்ந்தவரையும் அழிக்கும் நெருப்பாகும். அதுமட்டுமல்லாமல் தனக்குப் பாதுகாப்பாக இருக்கின்ற தெப்பமான சுற்றத்தாரையும் சுட்டழித்துவிடும். எனவே சுற்றம் பேண சினத்தை விடவேண்டும் எனக்குறள் கூறுகின்றது.
32.’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்னும் கருத்து இராமனின் பண்புகளுக்குப் பொருந்தும் :
இராமன் அனைத்து உயிர்களையும் கீழ் மேல் எனக் கருதாது சமமாக அன்பு காட்டும் பண்பின் அடையாளமாக விளங்குகின்றான். தந்தை, தாய் மீதான அன்பு, உடன்பிறப்புகள் மீது அன்பு ஆகியவற்றை எல்லைகள் அனைத்தையும் கடந்து இராமன் விரிவுபடுத்துகிறான். வேடன், பறவை, எளிய முதியவள், வானரம், எதிரியின் தம்பி என்ற வேலிகள் அவன் அன்பிற்குத் தடையாக இருக்கவில்லை.
மகன் என்ற உறவு நிலை:
சீதையை இராவணன் சிறை எடுத்துச் சென்றபொது அதனைத்தடுத்து இராவணனுடன் போரிட்டு, காயமடைந்து பின் உயிர் துறந்தான் சடாயு.
இதனைக் கேள்விப்பட்ட இராமன் மிகுந்த வருத்தமடைந்தான்.
தன் தந்தை தசரதனின் நண்பனான சடாயுவைத் தன் தந்தையாகக் கருதி, தந்தைக்கு மகன் செய்யும் இறுதிச் சடங்குகளை முறையாகச் செய்தான்.
தன்னையே நினைத்துத் தவம் செய்து கொண்டிருந்த எளிய முதியவளான சவரியிடம் தாயிடம் காட்டும் அன்பைக் காட்டினான்.
உடன்பிறப்பு என்ற உறவுநிலை:
தன்மீது அளவற்ற அன்பைக் கொண்டிருந்த குகன். தன்னைப் பிரிய மனமில்லாமல் வருந்துவதை இராமன் அறிகின்றான்.
இராமன் குகனிடம் "முன்பு உடன் பிறந்தவர்கள் நான்குபேராக இருந்தோம். இப்போது உன்னையும் சேர்த்து ஐந்து பேராக உள்ளோம்" என்றான்..
சீதையைக் கவர்ந்து வந்த இராவணனின் செயலைக் கண்டித்தான் வீடணன். இராவணன் அவனைக் கடிந்து கொண்டதால் இலங்கையை விட்டு வெளியேறிய வீடணன் இராமனிடம் அடைக்கலமானான்.
வீடணனுக்கு இலங்கையை ஆளும் உரிமையைக் கொடுத்ததுடன் அவனையும் தன் உடன்பிறப்பாக இராமன் ஏற்றுக் கொள்கின்றான்.
இவ்வாறாக இராமன் பணியாளனாய், சகோதரனாய், தந்தைக்கு உற்ற மகனாய், தாய் மீது அன்பு கொண்ட சேயாய், உயிர்தரும் நண்பனாய், உரிமையை வழங்கும் உடன்பிறப்பாய் பிற உயிர்களுடன் உறவு கொண்டிருந்தான்.
33.”வருபவர் எவராயினும் நன்றி செலுத்து”
இடம்:
இப்பாடல் வரிகள் ஜலாலுத்தீன் ரூமி அவர்கள் எழுதிய கவிதையின் ஆங்கில மொழிப்பெயர்ப்பில் இருந்து சில பாடல்களை என்.சத்தியமூர்த்தி என்பவர். 'தாகங்கொண்டமீனொன்று' என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள கவிதைத்தொகுப்பில் உள்ளது. அத்தொகுப்பில் உள்ள 'விருந்தினர் இல்லம்' என்னும் பகுதியில் இவ்வரி இடம் பெற்றுள்ளது.
பொருள்:
இவ்வுலகில் வாழ்கின்ற நாம், தினமும் சந்திக்கின்ற எதிர்பாராத இன்பம், துன்பம், அவமானம். வக்கிரம், வஞ்சனை எதுவானாலும் அதற்காக நன்றி செலுத்த வேண்டும்.
விளக்கம்:
மனித வாழ்க்கை விருந்தினர் இல்லம் போன்றது. நம் வீட்டிற்கு வரும் விருந்தினர்கள் எல்லோரும் ஒரே மனநிலையில் வருவதில்லை. ஒரே மாதிரியான செய்திகளையும் கொண்டு வருவதில்லை. அதுபோன்றே நம் வாழ்க்கையில் சந்திக்கும் அனுபவங்களான ஆனந்தம், மனச்சோர்வு, அற்பத்தனம், விழிப்புணர்வு, வக்கிரம், அவமானம், வஞ்சனை, துக்கம் என்பவை பல வாழ்வியல் வடிவங்களில் வரும். அவை நமக்குப் புதிய உவகையையும், புதிய வழிகாட்டுதல்களையும் தருவதால் 'வருபவர் எவராயினும் நன்றி செலுத்த வேண்டும்' என்று கவிஞர் கூறுகிறார்.
34. சாடயுவைத் தந்தையாக ஏற்று, இராமன் ஆற்றிய கடமைகள்:
இராவணன் சீதையைச் சிறையெடுத்துச் சென்ற போது அதனைத் தடுத்து சண்டையிட்டுக் காயம்பட்டுத் தன் உயிரை இழந்தான் சடாயு.
தனக்காகச் சடாயு தன்னுடைய உயிரை இழந்ததை அறிந்து இராமன் தன் தந்தை தசரதனின் நண்பனான சடாயுவைத் தன் தந்தையாக எண்ணினான்.
தந்தைக்கு மகன் எவ்வாறெல்லாம் இறுதிச் சடங்கு மேற்கொள்வானோ அவ்வாறே, பார்ப்பவர்கள் வியக்கும்படியாகக் கரிய அகில் கட்டைகளையும் சந்தனக்கட்டைகளையும் கொண்டு வந்து ஒழுங்காகப் பரப்பினான்.
அதன்மேல் தேவையான தருப்பைப் புற்களை அடுக்கி, பூக்களைத் தூவி, மணலினால் மேடையைத் திருத்தமாக அமைத்தான்.
நன்னீரையும் எடுத்து வந்தான்.
இறுதிச் சடங்கு செய்யக்கூடிய மேடைக்குத் தன் தந்தையாகக் கருதிய சடாயுவைத் தன் பெரிய கைகளில் தூக்கி வந்து இறுதிச் சடங்குகளை மேற்கொண்டான்.
பிரிவு-2
எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடைதருக 2 x 4 = 8
35. தமிழ் அழகியலின் நெடும் பரப்பு:
இலக்கியத்தின் பயன் பற்றி தமிழ் இலக்கிய மரபில் அழுத்தமான கருத்து உண்டு.
அறம், பொருள், இன்பம் ஆகவோ அல்லது வேறு ஏதோ ஓர் உயர்ந்த குறிக்கோளாகவும் இந்த பயன் இலக்கிய உருவாக்கத்தில் இடம்பெறவேண்டும்.
இலக்கியத்தின் நோக்கம் அல்லது அறவியல் சார்ந்த கருத்து நிலைகளை உருவாக்கத்தின் போதே சரிவர இணைந்திருக்க வேண்டும்.
இத்தகைய ஒரு முழுமை தான் கலை முழுமை எனப்படுகிறது.
சங்கஇலக்கியம் அகத்திணை சார்ந்த செய்திகளையும் புறத்திணை சார்ந்த செய்திகளையும் பாடல் பொருளாக வடிவமைத்துள்ளது.
ஐந்திணைகளை இன்பம், பொருள், அறம் ஆகிய அறவியல் லட்சிய பொருள்களோடு இரண்டற இணைத்து விடுகின்றது.
செவ்வியல் இலக்கியம் கட்டமைக்க விரும்பிய அறம் இது.
சமூக பண்பாட்டு மரபிற்கேற்பவே, கலைப்படைப்பை, அழகியல் நெறியை, பண்பாட்டின் இலச்சினையாகச் சித்தரிப்பதற்குத் தமிழ் மரபு முன்வந்திருக்கிறது. முன் மொழிந்திருக்கிறது.
இதுவே தமிழ் அழகியலின் நெடும்பரம்பு ஆகும்.
36. விரிந்த குடும்பம்:
தனிக்குடும்ப அமைப்பில் பெற்றோர் ஒருவரின் தந்தையும் உடன் வாழ்வது விரிந்த குடும்ப அமைப்பு முறையாகும்.
கூட்டுக்குடும்பம்:
இந்த விரிந்த குடும்பத்தின் தொடர்ச்சியே கூட்டுக் குடும்பமாக இன்றைய சமூகத்தில் மாற்றம் பெற்றுள்ளது.
கூட்டுக் குடும்பம் என்பது பெற்றோர், அவர்களது மணமாகாத பிள்ளைகள், மணம் முடித்த பிள்ளைகள் அவர்களது துணைவர், அவர்களது பிள்ளைகள் இணைந்து வாழ்வதாகும்.
சில நேரங்களில் கூட்டுக்குடும்பங்களில் பெற்றோரின் உடன்பிறந்தவர்கள், பெற்றோர்களின் தாய், தந்தை, இரத்த உறவால் பிணைக்கப்பட்ட நேர்வழி, கிளைவழி உறவினர்கள் என அனைவரும் ஒரே வீட்டில் ஒரே குடும்பமாக வாழ்வது கூட்டுக் குடும்பமாகும்.
37.ஒலிக்கோலம்:
இசையோடும் இசைக்கருவியோடும் தான் மொழி சார்ந்த கவிதை பிறக்கும்
ஓசையும் பொருளும் இணைந்து கலைவடிவம் கொள்வதை ஒலிக்கோலம் (ஒலிப்பின்னல்) என்பர்
வண்மை உணர்ச்சியை வெளிப்படுத்த சங்கப்பாடலில் வல்லின மெய்யொலிகள் மிகுதியாக இடம் பெற்றுள்ளன.
சான்று: கடந்தடு தானை…… (புறம்:110)
இனிய இசைக்காக நெடில் ஒலிகள் அதிகமாக இடம்பெறும்
சான்று: படாஅம் ஈத்த…. (புறம்:145)
சில ஒலிகளும் சில சொற்களும் திரும்ப திரும்பவரும் தன்மையும் உண்டு.
சான்று: புணரின் புணராது…..(நற்:16)
சொல்விளையாட்டுகளும் சங்கப்பாடல்களில் இடம்பெறுவது உண்டு.
சான்று: நுந்தை தந்தைக்கு இவன் தந்தை தந்தை….(புறம்:290)
இவையே சங்கப்பாடல்களில் ஒலிக்கோலம் கொண்டிருந்த குறிப்பிடத்தக்க பண்புகளாகும்.
38. நான் செய்யும் உதவிகள்:
நான் சாப்பிடும் தட்டுகளையும், நான் நீர் அருந்தும் குவளைகளையும் சுகாதாரமான முறையில் நானே தூய்மை செய்வேன்.
எனது படுக்கை விரிப்புகளையும் போர்த்திக் கொள்ளும் போர்வையையும் நானே தினமும் பராமரிப்பேன்.
என்னுடைய ஆடைகள் அனைத்தையும் நானே சலவை செய்து தூய்மையாக உடுத்துவேன்.
என் வீட்டுத் தோட்டத்தில் உள்ள செடிகளுக்குக் காலை, மாலை என இருவேளைகளிலும் தண்ணீர் ஊற்றுவேன்.
வீட்டைத் தூய்மைப்படுத்தும் பணியை மேற்கொள்ளும் என் பெற்றோருடன் இணைந்து கொள்வேன்.
வீட்டைத் தூய்மையாக வைத்திருப்பதில் எப்போதும் என் பெற்றோருக்குத் துணையாக இருப்பேன்.
வீட்டிற்குத் தேவைப்படும் பொருட்களைக் கடைக்குச் சென்று வாங்கி வருவதில் முனைப்புடன் செயல்படுவேன்.
தெருக்குழாய்க்குச் சென்று வீட்டிற்குத் தேவையான குடிநீரைக் கொண்டு வருவேன்.
வீட்டின் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருக்க பெற்றோருக்கு உதவியாக இருப்பேன்.
இவ்வாறு நான் வீட்டிற்குத் தேவையான உதவிகளைச் செய்வதால் என் பெற்றோரின் குடும்பப் பணிச்சுமை குறையும் என்பதால் எப்போதும் என் குடும்பத்திற்கு உதவிகள் செய்வேன்.
பிரிவு-3
எவையேனும் மூன்றனுக்கு மட்டும் விடைதருக 3 x 4 = 12
39. பொருள் வேற்றுமை அணி
அணி இலக்கணம்: இது வேற்றுமை அணியின் ஒரு பிரிவாகும். செய்யுளில் கவிஞர் இருவேறு பொருள்களுக்கான ஒற்றுமையை முதலில் கூறி பின் ஒன்றிலிருந்து ஒன்றை வேறுபடுத்தி காட்டுவது பொருள் வேற்றுமை அணி எனப்படும்.
ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத்(த்) இருளகற்றும் - ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரொன்( று) ஏனையது
தன்னேர் இலாத தமிழ்!
விளக்கம்:
எப்போதும் ஒலித்துக்கொண்டிருக்கும் கடலால் சூழப்பட்ட உலகத்தின் புற இருளை அகற்றும் கதிரவன் உயர்ந்த மலைகளுக்கு இடையே தோன்றும்.
குளிர்ச்சி பொருந்திய பொதிய மலையில் தோன்றிய தமிழ் மொழி மக்களின் அறியாமை என்னும் அக இருளை அகற்றும்.
தமிழ் மொழிக்கு நிகராக வேறு எந்த மொழியும் இல்லை.
அணிப் பொருத்தம்:
கதிரவனும் தமிழ் மொழியும் மலையில் தோன்றுகின்றன என ஒப்புமையைக் கூறி, கதிரவன் புற இருளை அகற்றும். தமிழ்மொழி அக இருளை அகற்றும். அதே நேரத்தில் அதற்கு நிகராக வேறு எந்த மொழியும் இவ்வுலகில் இல்லை என்று வேறுபடுத்தி காட்டியதால் இப்பாடல் பொருள் வேற்றுமை அணி ஆகும்.
(அல்லது)
ஏகதேச உருவக அணி
அணி இலக்கணம்:
கவிஞர் செய்யுளில் இரு பொருள்களைக் கூறி அதில் ஒன்றை மட்டும் உருவகப்படுத்தி, அதற்கேற்ப இணையானதொரு பொருளை உருவகம் செய்யாது விட்டுவிடுவது ஏகதேச உருவக அணியாகும்.
சான்று:
சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும்
ஏமப் புணையைச் சுடும்.
குறள்பாவின் விளக்கம்.
சினம் தன்னைக் கொண்டவனை மட்டுமல்லாமல் அவனைச் சேர்ந்த சுற்றத்தாரையும் சேர்த்து அழித்துவிடும். தன்னைச் சேர்ந்தவரையும் அழித்துவிடும் கொல்லியாகிய சினம், நம்மை மட்டுமல்லாமல் நமக்குப் பாதுகாப்பாக இருக்கக்கூடிய இனமென்னும் தெப்பத்தை அழித்து விடும்.
அணிப்பொருத்தம்:
இக்குறட்பாவில் இனம் என்பதைக் தெப்பமாக உருவகப்படுத்தியுள்ள வள்ளுவர் சினத்தை உருகப்படுத்தாமல் விட்டுள்ளார். எனவே இக்குறட்பாவில் ஏகதேச உருவக அணி பயின்று வந்துள்ளது.
40. பாநயம் பாரட்டல் :
முன்னுரை:
இப்பாடலைப் பாடியவர் கவியரசு கண்ணதாசன் ஆவார். இவர் புகழ்பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராகப் பதவி வகித்தவர். சாகித்திய அகாதமி விருது பெற்ற கவிஞர் கண்ணதாசன் அவர்கள் எழுதிய இப்பாடலில் காணப்படும் நயங்களை. காண்போம்.
மையக்கருத்து:
சங்கமாக அமைந்து படைப்பாளர்களையும், படைப்புகளையும் பெருமைப்படுத்தியது தமிழன்னை, என்பதே இப்பாடலின் மையக் கருத்தாகும்.
சொல் நயம்:
இப்பாடலில் முச்சங்கம், சொற்சங்கம் , முதுபுலவர்,பெருமாட்டி போன்ற சொற்கள் நயமுடன் அமைக்கப்பட்டு இப்பாடல் சொல்நயம் உடையதாக விளங்குகின்றது.
பொருள் நயம்:
இப்பாடலில், ‘முச்சங்கங் கூட்டி’ ‘முதுபுலவர் தமைக் கூட்டி’ ‘அளப்பரிய பொருள் கூட்டி’ ‘அற்புதங்கள் எல்லாம் அமைந்த பெருமாட்டி’ என்று தமிழின் பெருமையை, அம்மொழி பெற்றிருந்த சிறப்புகளை உணர்த்த சிறப்பான சொற்களைப் பயன்படுத்தி, தான் கூறவந்த பொருளைச் சிறப்புடன் கூறுவதால் சிறந்த பொருள் நயம் உடையதாக இப்பாடல் அமைந்துள்ளது.
தொடை நயம் :
பாடலில் மோனை எதுகை இயைபு முரண் அளபெடை ஆகியவற்றைக் கொண்டு கொடுப்பதாகும்
மோனை நயம்:
சீர்களிலோ, அடிகளிலோ முதலெழுத்து ஒன்றி வரத் தொடுப்பது மோனையாகும்.
இப்பாடலில் சீர்மோனை பயின்று வந்துள்ளது.
முச்சங்கம் - முதுப்புலவர்
அச்சங்கம் - அளப்பரிய
சொற்சங்கம் - சுவை மிகுந்த
அற்புதங்கள் - அமைத்த
எதுகை நயம்:
பாடலின் அடிதோறும் அல்லது சீர்தோறும் முதலெழுத்து அளவொத்து நிற்க இரண்டாவது எழுத்து ஒன்றி வருவது எதுகை எனப்படும்.
இப்பாடலில் அடி எதுகை பயின்று வந்துள்ளது.
முச்சங்கம்
அச்சங்கம்
சொற்சங்கம்
அற்புதம்
இயைபு நயம்:
பாடலின் சீர்களிலோ அடிகளிலோ இறுதி எழுத்தோ, அசையோ சொற்களோ ஒன்று போல வருவது இயைபு ஆகும்.
இப்பாடலின் அடிகளின் இறுதியில் ‘கூட்டி’ என்ற சொல்லும் இறுதி அடியில் ‘பெருமாட்டி’ என்ற சொல்லும் வந்து ஒரே ஓசையுடன் முடிவதால் இப்பாடலில் இயைபுநயம் பயின்று வந்துள்ளது
சந்த நயம்:
இப்பாடலை ஏற்ற இசைக்கருவிகளுடன் இசைத்து பாடினால், பாடுவோர்க்கும் கேட்பவர்களுக்கும் மிகுந்த கவி இன்பத்தைத் தரும் விதத்தில் எதுகை, மோனை, இயைபு சொற்களை அமைத்து அளவடி சீர்கள் அமைத்து சுவைபடப் பாட தகுந்த முறையில் கவிஞர் இப்பாடலை இயற்றியுள்ளார்.
சுவை நயம்:
தமிழ் மொழியின் சிறப்பைப் இப்பாடல் கூறுவதுடன் அது வளர்ந்த பெருமையையும் இப்பாடல் சுட்டுவதால் இப்பாடலில் பெருமித சுவை அமைந்துள்ளது.
முடிவுரை:
காலம் கவிஞனைக் கொன்றது; ஆனால், அவன் கவிதை காலத்தை வென்றது என்ற கூற்றிற்கு ஏற்ப கவிஞர் கண்ணதாசன் இக்கவிதையில் கவிதைக்குரிய நயங்களை எல்லாம் அமைத்து கவி நயங்களால் தமிழன்னைக்குப் பெருமை சேர்த்துள்ளார்.
மாணாக்கரே!
கேள்வியைக் கவனித்து எத்தனை நயங்கள் கேட்கப்பட்டு இருக்கின்றதோ அத்தனை நயங்கள் மட்டும் எழுதினால் போதும்.
41. அழைப்பிதழைப் பத்தியாக மாற்றுக :
அக்டோபர் மாதம் 2 ஆம் நாள் காலை 10 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் பேரிடர் மேலாண்மை கருத்தரங்கம் நடைபெற உள்ளது இதற்கு இயற்கை வேளாண் உழவர் திரு. அமுதன் அவர்கள் முன்னிலை வகிக்கிறார். இக்கருத்தரங்கில் முனைவர் செங்குட்டுவன் அவர்கள் ‘இயற்கை சீற்றங்களும் பருவகால மாற்றங்களும்’ என்ற தலைப்பிலும்,திரு. முகிலன் அவர்கள் ‘பேரிடர்களை எதிர்கொள்ளும் தீர்வுகளும்’ என்ற தலைப்பில் திருமதி பாத்திமா அவர்கள் ‘நீர்வழிப் பாதைகளைப் பாதுகாத்தல்’ என்ற தலைப்பிலும் திரு. வின்சென்ட் அவர்கள் ‘பேரிடர்க் காலங்களில் செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்’ என்ற தலைப்பிலும் கருத்துக்களை தர உள்ளனர்.
கருத்தரங்கின் நிறைவாகப் பேரிடர் மேலாண்மை இயக்குநர், திரு. இமயவரம்பன் அவர்கள் தலைமையுரை ஆற்றுவார்கள். நிகழ்ச்சிக்கு வருகின்றவர்களைச் செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளர் திருமதி. அரசு அவர்கள் வரவேற்க உள்ளார். பசுமைப்படை மாணவர் தலைவர் பர்வீன் அவர்கள் நன்றியுரை ஆற்றிட உள்ளார். தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துடனும், கருத்தரங்க நிறைவில் நாட்டுப்பண்ணுடனும் நிகழ்ச்சி நிறைவடையும். அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
42. தலைமையாசிரியருக்குக் கடிதம்
அனுப்புநர்
xxxxxxxxxxx
வகுப்பு 12 , பிரிவு : இ,
கார்மல் மேல்நிலைப் பள்ளி,
நாகர்கோவில்.
பெறுநர்
தலைமை ஆசிரியர் அவர்கள்
கார்மல் மேல்நிலைப் பள்ளி,
நாகர்கோவில்
பொருள்: நோய்த்தொற்று கால பாதுகாப்பு நடவடிக்கைகள்
குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாக
மதிப்புக்குரிய ஐயா!
உலகில் பரவி வருகின்ற பெரும் தொற்றுநோயான கொரானா நோய் பரவுகின்ற விதங்களையும், அந்த நோய்தொற்றிலிருந்து பாதுகாப்பான முறையில் மாணவர் சமூகத்தைக் காத்துக் கொள்வது குறித்தும், நோய்த்தொற்றை எவ்வாறு தவிர்க்கலாம் என்பது குறித்தும் நோய்த்தொற்று காலங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஒன்றைப் பள்ளிப் பேரவையில் ஏற்படுத்தித் தருமாறு உங்களைத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு,
தங்கள் உண்மையுள்ள மாணவன்
கார்மல் நகர், xxxxxxxxxxxxx
30 / 11 / 2021 வகுப்பு 12 , பிரிவு : இ
43.தமிழாக்கம் தருக :
அ) புதிய மொழி புதிய வாழ்க்கை
ஆ) மதுரை கோயில்களின் நகரம் என்று அறியப்படுகிறது.
இ) இந்திய மக்கள் பெரும்பாலும் வன்முறையை வருகின்றார்கள் விரும்புவதில்லை
ஈ) இரக்க குணத்தை விலை கொடுத்து வாங்க முடியாது.
பகுதி – 4
பின்வரும் வினாக்களுக்கு இரு பக்கங்களுக்கு மிகாமல்
விடை தருக 3 x 6 = 18
44)
அ) செய்ந்நன்றியறிதலே அறம் :
ஈடில்லா உதவி:
ஒருவன் பிறருக்கு எந்த ஒரு உதவியும் செய்யாமலிருக்கும் நிலையிலும் அவர் நமக்குச் சரியான நேரத்தில் ஏதேனும் உதவி செய்தால், அந்த உதவிக்குக் கைம்மாறாக இந்த நிலவுலகத்தையும், வானுலகத்தையும் சேர்த்துக் கொடுத்தாலும் ஈடாகாது.
உலகினும் பெரிய உதவி:
ஒருவர் நமக்கு உரிய காலத்தில் செய்த உதவியானது அளவில் சிறியதாக இருந்தாலும் அவ்வுதவி இந்த உலகைவிடப் பெரியதாகும்.
பயன் எதிர்பாராத உதவி:
ஒருவர் எந்தப் பயனையும் நம்மிடம் இருந்து எதிர்பார்க்காமல் நமக்குச் செய்த உதவியின் அளவை ஆராய்ந்து பார்த்தால், அதன் நன்மை கடலைவிடப் பெரியதாகும்.
உதவியின் பயன் பனையளவு:
ஒருவர் தினையளவு உதவியைச் செய்தாலும் அந்த உதவியின் பயனைத் தெரிந்தவர்கள், தினையளவு உதவியையும் பனையளவாகக் கொண்டு போற்றுவர்.
அறத்தை அறிக:
ஒருவர் நமக்குச் செய்த நன்மையை ஒருநாளும் மறக்கக்கூடாது. ஆனால் ஒருவர் நமக்குச் செய்த தீமையை அப்போழுதே மறந்துவிட வேண்டும்.
தப்பிக்க கூடுதல் வழி:
ஒருவர் எந்த அறத்தை அழித்தாலும் அதிலிருந்து தப்பிப் பிழைக்க வாய்ப்பு உண்டு. ஆனால் ஒருவர் செய்த உதவியை மறந்தவர்க்கு அதிலிருந்து தப்பிப்பிழைக்கும் வழியே கிடையாது
ஆ) தமிழின் சீரிளமைத் திறம் வியந்து கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் கூறுபவை :
எனது அருமைச் செந்தமிழே!
மாலை நேரத்துச் சிவந்த நிறமுள்ள சூரியன், மலை முகட்டில் தனது தலையைச் சாய்க்கின்றான். அப்போது அவனுடைய செம்மஞ்சள் நிற ஒளிபட்டு வானம் பூக்காடு போலக் காட்சியளிக்கிறது. அதுபோல அன்றாடம் அயராது உழைக்கும் உழைப்பாளர்களின் கரங்கள் சிவந்துள்ளன.
அத்தகைய தொழிலாளர்களின் பருத்த தோள்கள் மீது வியர்வைத் துளிகள் முத்துமுத்தாய் அரும்பியுள்ளன. இவற்றையெல்லாம் வியந்து பாடுவதற்கு, உன்னைவிடப் பொருத்தமான துணை வேறில்லை.
முத்தமிழே!
எமது உள்ளத்தில் மூண்டு எழும் கவிதை வெறிக்கு நீயே உணவாக இருக்கிறாய்! முன்னொரு காலத்தில் பாண்டிய மன்னர்கள் அமைத்த தமிழ்ச்சங்கத்தில் நீயே அரசாட்சி புரிந்தாய்.
பாரி முதலான கடையெழு வள்ளல்களை எமக்குத் தந்தாய். எமது உடல் சிலிர்ப்படையுமாறு மீண்டும் அத்தகைய பழமைச் சிறப்பைப் புதுப்பிப்பதற்காகத் தமிழ்க் குயிலாக நீ கூவ வேண்டும்.
தென்றல் தவழும் பொதிகை மலையில் தோன்றி வளர்ந்த தமிழே! தடைகள் இருந்தால் தாண்டி, கூண்டை உடைத்து வெளிப்படும் சிங்கம்போல நீ சீறிவர வேண்டும்.
இவ்வாறாகத் தமிழின் சீரிளமைத்திறத்தினை வியந்து கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் கூறுகிறார்.
45.
அ) 'குடும்பம் என்னும் சிறிய அமைப்பிலிருந்தே மனித சமூகம் என்னும் பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறது' :
குடும்பம்:
தலைவன் தலைவி இணைந்து குழந்தைகளுடனோ, குழந்தைகள் இல்லாமலோ இணைந்து வாழ்ந்து வரும் அமைப்பே குடும்பமாகும்.
மனித சமூக அமைப்பை ஒப்பிடும்போது குடும்பம் என்பது மிகவும் சிறிய அமைப்பாகும்.
இந்தச் சிறிய அமைப்பில் இருந்துதான் மனித சமூகம் என்ற பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறது.
இவ்வமைப்பிற்கு அதன் இயங்குநிலைக் கருத்தாக்கத்தின் மூலமே 'குடும்பம்' என்ற பெயர் வந்தது.
மனிதன் ஒரு சமூக உயிரி:
மனிதன் ஓர் உயிரியல் விலங்கு மட்டுமல்ல அவன் ஒரு சமுதாய விலங்காவான்.
மனிதர்கள் தங்கள் வாழ்வில் பெரும்பகுதியைக் குடும்பத்தில்தான் செலவிடுகின்றனர்.
குடும்பமே மக்களின் உயிரியல், உளவியல், வாழ்வியல் சார்ந்த அனைத்துத் தேவைகளையும் நிறைவு செய்கிறது.
குடும்பத்தில் வாழ்வோர் உயிரியல் பிணைப்புகளை மட்டும் கொண்டவர்களாக இல்லாமல் சமுதாயப் பிணைப்புகளையும் கொண்டவர்களாக இருப்பதே மனித சமூகக் கட்டமைப்பிற்கான அடித்தளமாக இருக்கிறது.
குடும்பம் சமூகத்திற்கான களம்:
குடும்பம் தனிமனிதருக்காகவும் சமுதாயத்திற்காகவும் பெரும் பங்காற்றுகிறது.
மனித சமூகத்தின் அடிப்படைகளான அன்பு செலுத்துதல், பொருளாதாரப் பகிர்வு, பொழுதுபோக்கு, பாதுகாப்பு, சமயச் செயல்கள், கல்வி பெறுதல் ஆகியவை குடும்பத்திலே கற்பிக்கப்படுகின்றன.
சமூகத்தின் பண்பாட்டைக் குழந்தைப்பருவத்திலே குடும்பம் கற்றுக் கொடுக்கின்றது.
சமுதாயத்தின் நெறிமுறைகள் அன்றாட வாழ்வில் பின்பற்றபட வேண்டியப பழக்கவழகங்கள் பொருளாதாரச் செயல்களாகச் செய்யும் முறைகள் சமுதாய சமய வாழ்வில் ஆற்றவேண்டிய கடமைகள் போன்ற எண்ணற்ற வகைகளில் குடும்பம் குழந்தைகளுக்குப் பயிற்சியளிப்பதால் மனித சமூகம் சிறப்பாகக் கட்டமைக்கப்படுகின்றது.
பண்பாட்டு மயமாக்கல் நிகழ்ச்சியில் குடும்ப உறுப்பினர்கள் ஒரு மாதிரிக் குழுவாகக் செயல்படுகின்றனர்.
குடும்பம் என்பது தனது உறுப்பினர்கள் அனைவருக்கும் பயிற்சிகளை வழங்கி அமைதியும் ஒழுங்கும கொண்ட ஒரு சிறந்த சமூதாயம் அமைய அடிப்படையாக விளங்குகின்றது.
குடும்பம் என்னும் சிறிய அமைப்பில் இருந்துதான் 'மனித சமூகம்' என்னும் பரந்த அமைப்பு உருவாக்கப்படுகிறது.
குடும்பம் என்னும் சிறிய அமைப்பு ஒழுங்காகக் கட்டமைக்கப்பட்டாமல் 'மனித சமூகம்' என்ற பரந்த அமைப்பு சிறப்பாகக் கட்டமைக்கப்படும்.
ஆ) கவிதையின் நடையைக் கட்டமைக்கும் அழகியல் கூறுகள் :
கவிதையின் நடையைக் கட்டமைக்கும் அழகியல் கூறுகளில்
ஒலிக்கோலங்கள்
சொற்புலம்
தொடரியல் போக்குகள்
ஆகியவை மிக முக்கியமானவையாகும்.
ஓலிக்கோலங்கள்:
இசையோடும் இசைக்கருவியோடும்தான் மொழி சார்ந்த கவிதை பிறக்கும்.
ஓசையும் பொருளும் இணைந்து கலை வடிவம் கொள்வதை ஒலிக்கோலம் (ஒலிப் பின்னல்) என்பர்.
வன்மை உணர்ச்சியை வெளிப்படுத்த பாடல்களில் வல்லின மெய்யொலிகள் மிகுதியாக இடம்பெறும்.
இனிய இசைக்காக நெடில் ஒலிகள் அதிகமாக இடம்பெறும்.
சில ஒலிகளும் சில சொற்களும் திரும்ப திரும்ப வரும்
தன்மையும் பாடல்களில் இடம்பெறும்.
சொற்புலம்:
உணர்வும், பொருளும், கலையும், பண்பாடும், வரலாறும், அரசியலும் சொற்களில் பொதிந்து கிடக்கின்றன.
ஒரு பொருள் குறித்து வரும் பல சொற்களும், பல பொருள் குறித்து வரும் ஒரு சொல்லும் சொல் வளத்திற்குச் சான்று.
பல்வேறு துறைகள், சூழல்கள், புனைவுகளுக்கும் உரிய வகையில் உணர்வும் தெளிவும் கொண்டதாகச் செழிப்பானதொரு தளத்தைச் சொல் கொண்டிருக்கிறது.
தனிச்சொல்லாகவும், தொகை மொழியாகவும் சொற்கள் இயங்குகின்றன.
தொடரியல் போக்குகள்:
பாடலின் தளத்தை முழுமையடைய செய்வது தொடரியல் போக்காகும்.
சொல்பவனுடைய மொழித்திறனை, கேட்பவன் அல்லது வாசிப்பவன் முழுமையாகப் பெற வேண்டும்.
சொல்லப்படும் உணர்வுகளுக்கும் செய்திகளுக்கும் ஏற்பத் தொடர்கள்
i) நேர் நடந்தும்
ii) ஏறியிறங்கியும்
III) திரும்பியும் சுழன்றும் - இயங்கும்
இவையே கவிதையின் நடையைக் கட்டமைக்கும் அழகியல் கூறுகள் ஆகும்
46.
அ) பாரதியின் கடிதம் வாயிலாக நாங்கள் அறிந்து கொண்ட மொழிப்பற்று, சமூகப்பற்று :
மொழிப்பற்று:
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல இனிதான மொழி எதுவுமில்லை என்று கூறிய பாரதி, சு.நெல்லையப்பருக்கு எழுதிய கடிதத்திலும் அதனை உறுதிப்படுத்துகின்றார்.
நெல்லையப்பரிடம் அவர் கூறும்போது, 'நீ பிறமொழிகளை அறிந்திருந்தாலும் தமிழை வளர்ப்பதைக் கடமையாகக் கொள்ளவேண்டும்' என்று கூறுகின்றார்.
புதிய புதிய செய்திகளும் புதிய புதிய உண்மைகளும், புதிய புதிய இன்பமும் தமிழ்மொழியில் ஏற்றம் பெற வேண்டும்.
தமிழ்நாட்டில் வீதிகள் தோறும் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் பெருக வேண்டும். அந்தப் பள்ளிகளில் எல்லாம் புதிய புதிய கலைகள் பயிற்சி அளிக்கப் பெற்று வளர வேண்டும்.
தாய் மொழியிலே கற்பதால் தமிழ் உணர்வு அதிகமாகும், தாய்நாட்டின் மீது பற்று ஏற்படும்.
பிறநாட்டு மொழிகள் எல்லாம் அடைந்துள்ள வளர்ச்சியைப் பார்த்த பின்பாவது நாம் நம் தாய்மொழியாம் தமிழ்மொழியின் மீது பற்றுக் கொள்ள முயலவேண்டும்.
புதிய புதிய சிந்தனைகள் தமிழ்மொழியில் தோன்றல் வேண்டும் என்கிறார்.
சமூகப்பற்று
சமூகத்தின் அவலமாக இருக்கின்ற ஆண் பெண் வேறுபாடு முற்றிலுமாக அழிய வேண்டும்.
ஆண் உயர்ந்தவன் பெண் அடிமை என்ற நிலை சமூக அவலமாகும்.
"ஆணும் பெண்ணும் ஒருயிரின் இரண்டு தலைகள், அவற்றில் ஒன்றிலொன்று தாழ்வில்லை", என்கிறார்.
பெண்ணைத் தாழ்த்தினால் சமூகமே சாபக்கேட்டிற்குள்ளாகும் என்பதை உணர்த்த பெண்ணைத் தாழ்த்தினவன், தன் கண்ணைக் குத்தியவனுக்குச் சமம் என்று ஆவேசத்துடன் கூறுகின்றார்.
பெண்ணை வீட்டுக்குள்ளே அடைத்தவன் தன் கண்ணை இழந்த குருடன் போலப் பரிதவிப்பான் என்றும் கூறி ஆணும் பெண்ணும் சமம் என்ற சமூக நீதியை வலியுறுத்துகின்றார்.
சமூகம் வளர்ச்சி அடையத் தொழில் பெருக வேண்டும், வியாபாரம் சிறக்க வேண்டும் தொழிற்சாலைகள் வளர வேண்டும் என்கிறார்.
சமூக மாற்றம் காண சங்கீதம், சிற்பம், இயந்திரம், பு+மி, வானம், இயற்கை சார்ந்த நூல்கள் ஆயிரம் ஆயிரமாகத் தாய்மொழியில் உருவாகிட வேண்டும்.
நம் தமிழ்ச்சமூகம் மாற்றம் பெற அனைவரும் எண்ணிட வேண்டும்
அதற்குரிய சக்தியை அனைவரும் பெற்றிடவும் வேண்டுமென்று பாரதியார் சு.நெல்லையப்பருக்கு எழுதிய கடிதம் மூலம் தன் உள்ளக் கருத்தை வெளிப்படுத்துகின்றார்.
ஆ) உரிமைத்தாகம்
கதைக்கரு:
நிலத்தோடு உயிர்த் தொடர்பு கொண்டு இருக்கின்ற மனிதர்களுடைய வாழ்வியல் மற்றும் குடும்ப உறவுகள்
கதை மாந்தர்கள்
முத்தையன், மூக்கம்மா, வெள்ளைச்சாமி, அவரது மனைவி, மேலூர் பங்காரு சாமி
(கதையை உரிய விளக்கங்களுடன் கதை கருவோடு கதையை முழுவதுமாக சுருக்கமாக எழுதி இருந்தால் உரிய மதிப்பெண் வழங்கலாம்)
பகுதி- 5
அடிமாறாமல் செய்யுள் வடிவில் எழுதுக 4 + 2 = 6
47.
அ) துன்பு உளதுஎனின் அன்றோ
சுகம் உளது? அது அன்றிப்
பின்பு உளது; இடை மன்னும்
பிரிவு உளது என உன்னேல் ;
முன்பு உளெம் ஒருநால்வேம்
முடிவு உளது என உன்னா
அன்பு உள, இனி, நாம் ஓர்
ஐவர்கள் உளர் ஆனோம்
ஆ) நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன்
உண்மை அறிவே மிகும்.
கன்னியாகுமரி மாவட்டப் பொதுத்தேர்வுகள்
பொது மாதிரி திருப்புதல் தேர்வு - நவம்பர் 2021.
KEY ANSWER Pdf
download button below 👇👇👇👇👇
11 ஆம் வகுப்பு
Slip Test 1 : click here
Slip Test 2 : click here
Slip Test 3 : click here
11 ஆம் வகுப்பு
Unit Test - இயல் - 1 : Click Here
Unit Test - இயல் - 2 : Click Here
12 ஆம் வகுப்பு
இயல் - 1 ( REDUCED SYLLABUS)
Slip Test 1 : click here
Slip Test 2 : click here
Slip Test 3 : click here
Slip Test 4 : click here
12 ஆம் வகுப்பு
இயல் - 2 ( REDUCED SYLLABUS)
Slip Test 1 : Click here
Slip Test 2 : Click here
Slip Test 3 : Click here
Slip Test 4 : CLICK HERE
மொழிப்பயிற்சி
தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக Part-1 : Click here
தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக Part-2 : click here
உவமைத் தொடர்களைச் சொற்றொடர்களில் அமைத்து எழுதுக : Click here
12 ஆம் வகுப்பு
இயல் 1 - 8 ( REDUCED SYLLABUS)
1 மதிப்பெண் வினா விடைகள் : Click here
2 மதிப்பெண் வினா விடைகள் : click here
4 மதிப்பெண் வினா விடைகள் : Click here
6 மதிப்பெண் வினா விடைகள் : Click here
12 ஆம் வகுப்பு
டிசம்பர் 2021 ( REDUCED SYLLABUS)
திருப்புதல் தேர்வு - DECEMBER
மாதிரி வினாத்தாள்-1 : click here
மாதிரி வினாத்தாள்-2 : Click here
பாநயம் பாரட்டல்
கன்னியாகுமரி மாவட்டப் பொதுத்தேர்வுகள்
பொது மாதிரி திருப்புதல் தேர்வு - நவம்பர் 2021.
QUESTION PAPER Pdf
download 👇👇👇👇👇
கன்னியாகுமரி மாவட்டப் பொதுத்தேர்வுகள்
பொது மாதிரி திருப்புதல் தேர்வு - நவம்பர் 2021.
KEY ANSWER Pdf
download 👇👇👇👇👇