12th Standard- +2Tamil - Tamil -Study Material - ILLAKKANAM - MOZHI PAYIRCH-UNIT1,2,3- 2 MARKS QUESTION ANSWER - 2023
தமிழ்நாடு அரசு நடத்த இருக்கின்ற பனிரெண்டாம் வகுப்பிற்கான தேர்வில் 12th standard- Public exam -March 2024 இடம்பெற இருக்கின்ற தேர்வில் அதிக மதிப்பெண் பெற இங்குத் தொகுத்து தரப்பட்டுள்ள Study Material மிகவும் பயனுள்ளதாக இருக்கும். .மாணவ, மாணவிகளே நீங்கள் இந்த ஒரு தொகுப்பினை Study Material ஐ முழுவதுமாகப் படித்து ILLAKKANAM - MOZHI PAYIRCHI - UNIT 1,2,3- 2 MARKS QUESTION ANSWER -2023 ஐ படித்து தமிழ்நாடு அரசு நடத்த இருக்கின்ற 12th standard- Public exam -March 2024 தேர்வில் நிச்சயமாக அதிக மதிப்பெண் பெற்றுக் கொள்ள முடியும்.
அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது ILLAKKANAM - MOZHI PAYIRCHI - UNIT 1,2,3- 2 MARKS QUESTION ANSWER -2023 ஐ ( Study Material ) பதிவிறக்கம் செய்து நீங்கள் முழுவதுமாக படித்துப் புரிந்து தேர்வு எழுதினால் போதுமானது. இந்தப் பகுதியை நீங்கள் படிப்பதன் மூலம் தமிழ்நாடு அரசு நடத்த இருக்கின்ற 12 ஆம் வகுப்பிற்கான 12th standard- Public exam -March 2024 நீங்கள் நிச்சயமாக அதிக மதிப்பெண் பெற்றுக் கொள்ள முடியும்.
இந்த Study Material ஐ நீங்கள் படிப்பதன் மூலம் தமிழ்த்தேர்வில் நீங்கள் அதிக மதிப்பெண்ணைப் பெற்றுக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது. எனவே, தமிழ்நாடு அரசு நடத்த இருக்கின்ற 12th standard- Public exam -March 2024 நிச்சயமாக இடம்பெற இருக்கின்ற இந்தக் கேள்விகளை நன்றாகப்ப் படித்து சிறப்பாகத் தேர்வை எழுத உங்களுக்கு இந்த Study Material உதவும். வெற்றி பெற வாழ்த்துகின்றேன்.
Kurusady M.A.Jelestin
12 ஆம் வகுப்பு - தமிழ்
மொழிப் பயிற்சி & இலக்கணம்
2 மதிப்பெண் வினாக்கள்
இயல் : 1, 2 , 3
இயல் - 1
1 . தமிழாக்கம் தருக ( புத்தகம் பக்கம் எண் - 20 )
1. Learning is a Trissur that will follow its owner everywhere.
கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு
2. A new language is a new life.
புதிய மொழி புதிய வாழ்க்கை.
3. If you want people to understand you, speak their language.
பிறர் உன்னைப் புரிந்து கொள்ள வேண்டுமாயின் அவர் மொழியில் பேசு.
4. Knowledge of languages is the doorway to wisdom.
மொழிகளில் அறிவு ஞானத்தின் திறவுகோல்.
5. The limits of my language are the limits of my world.
என் மொழியின் எல்லை என் உலகத்தில் எல்லை.
2. உவமை தொடர்களைச் சொற்றொடரில் அமைத்து எழுதுக
( புத்தகம் பக்கம் எண் - 20 )
1. தாமரை இலை நீர் போல- பட்டும்படாமலும் ஈடுபாடு இல்லாமல் இருத்தல்,
பெற்றோர்களுக்கு நிதிச்சுமை அழுத்துவது தெரிந்தும் சில பிள்ளைகள் தாமரை இலை நீர்போல கண்டுகொள்ளாமல் இருப்பர்.
2. கிணற்று தவளை போல - வெளி உலகம் தெரியாத நிலை
இன்னும் சில கிராமங்களில் மக்கள் கிணற்றுத்தவளைப் போல வாழ்கின்றனர்.
3. எலியும் பூனையும் போல _ எதிரியாக
ரகுவும், ரவியும் எலியும் பூனையும் போலச் சண்டையிட்டுக் கொண்டனர்.
4. அச்சாணி இல்லாத தேர் போல - சரியான வழிகாட்டி இல்லாத
நாட்டை வழிநடத்தும் சரியான தலைவன் இல்லாததால்அச்சாணி இல்லாத தேர் போல நாட்டு மக்கள் சரிவர இயங்க முடியாமல் தவிக்கின்றனர்.
5. உள்ளங்கை நெல்லிக்கனி போல - வெளிப்படையாக, தெளிவாக தமிழ் ஆசிரியர் கற்பித்த புணர்ச்சி இலக்கணம் எங்களுக்கு உள்ளங்கை நெல்லிக்கனி போல தெளிவாக விளங்கியது.
6.நகமும் சதையும் போல - இணை பிரியாமை
நானும் என் நண்பனும் நகமும் சதையும் போல இருந்தோம்.
3. குறிப்புகளில் மறைந்திருக்கும் தமிழறிஞர்களைக் கண்டுபிடிப்போம்.
( புத்தகம் பக்கம் எண் - 21 )
எ.கா : கவிஞர்; ஈற்றிரு சொல்லால் அணிகலன் செய்யலாம்
விடை : கவிமணி
1.தமிழறிஞர்; முதல் இரு எழுத்துகளால் மறைக்கலாம்.
விடை : மறைமலைஅடிகள்
2. தாய் மொழி ; ஈற்றிரு எழுத்துக்கள் வெளிச்சம் தரும்.
விடை : தமிழ் ஒளி
3. சிறுகதை ஆசிரியர்; முதல் பாதி நவீனம்.
விடை : புதுமைப்பித்தன்
4. முன்னெழுத்து அரசன்; பின்னெழுத்து தமிழ்மாதம்.
விடை : கோதை
(தமிழ் ஒளி, அம்பை, கோதை, அசோகமித்திரன், புதுமைப்பித்தன், சூடாமணி, ஜெயகாந்தன், மறைமலைஅடிகள்)
4. படிப்போம் பயன்படுத்துவோம் ( நூலகம் )
( புத்தகம் பக்கம் எண் - 22 )
Subscription - உறுப்பினர் கட்டணம்
Fiction - புனைவு
Biography - வாழ்க்கை வரலாறு
Archive - காப்பகம்
Manuscript - கையெழுத்துப் பிரதி
Bibliography - நூல் நிரல்
குருசடி எம்.ஏ.ஜெலஸ்டின்
முதுகலைத் தமிழாசிரியர்,கார்மல் மேனிலைப் பள்ளி ,நாகர்கோவில்-4,9843448095
இயல் - 2
மயங்கொலி சொற்களை ஒரே தொடரில் அமைத்து எழுதுக
( புத்தகம் பக்கம் எண் - 44 )
1.தலை, தளை, தழை,
2. கலை, களை, கழை
3. அலை, அளை, அழை
எ.கா :விலை, விளை, விழை
கார் பருவத்தில் நன்றாக விளைந்ததால் தானியங்களின் விலை குறையாமல் இருக்க ஏற்றுமதி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்ள விழைவதாக அரசு அறிவித்தது.
1.தலை, தளை, தழை
தலை - முதன்மை ,சிரசு
தளை - விலங்கு, கட்டுதல்
தழை – புல், இலை
தளை இடப்பட்டிருந்த ஆடு தழையைக் கண்டதும் தன் தலையை ஆட்டியது.
2. கலை, களை, கழை
கலை - நுட்பம், ஆடை, கல்வி, கலைமான்
களை - நீக்கு, அழகு
கழை - மூங்கில்
களை காட்டில் தீ பிடித்ததால் களைச்செடிகளுடன் சேர்ந்து கலைமான்களும் தீக்கிரையாகின.
3. அலை, அளை, அழை
அலை - அலைதல்; கடலில், நீர் நிலைகளில் உண்டாகுதல்
அளை - புற்று, தயிர், பிசை
அழை - கூப்பிடு
பலமான இடிமழையால் அளை சிதைவுற்று உள்ளிருந்த பாம்புகள் செல்லுமிடம் அறியாது அலைந்து திரிவதைப் பார்த்துக் கொண்டிருந்த குழந்தையைத் தாய் பதற்றத்துடன் அழைத்தாள்.
2. புதிர்க்கேற்ற விடையை அறிக. ( புத்தகம் பக்கம் எண் - 45 )
அ) அடைமழை பெய்த அடுத்த நாள்
படைபடையாய் வந்ததாம்
பரங்கி நாட்டு விமானம்
எதிரி சுடாமலேயே
இறகொடிந்து இறந்ததாம் - என்ன ?
விடை : ஈசல்
ஆ) தண்ணீரும் மழையும் இல்லாமல்
பயிர் பச்சையாய் இருக்கிறது
பாக்கு வெற்றிலை போடாமல்
வாய் சிவப்பாய் இருக்கிறது? - என்ன ?
விடை : பச்சைக் கிளி
4. படிப்போம் பயன்படுத்துவோம் (தொடர்வண்டி நிலையம்)
( புத்தகம் பக்கம் எண் - 46 )
1. Platform - நடைமேடை
2.Train Track - இருப்புப் பாதை
3.Railway signal - தொடர்வண்டி வழிக்குறி
4.Ticket Inspector - பயணச்சீட்டு ஆய்வர்
5. Level crossing - இருப்புப்பாதையைக் கடக்குமிடம்
6. Metro train - மாநகரத் தொடர்வண்டி
குருசடி எம்.ஏ.ஜெலஸ்டின்
முதுகலைத் தமிழாசிரியர்,கார்மல் மேனிலைப் பள்ளி ,நாகர்கோவில்-4,9843448095
இயல் - 3
1. வல்லின மெய்களை இட்டும் நீக்கியும் எழுதுக. ( புத்தகம் பக்கம் எண் - 70 )
1.என்னுடைய நம்பிக்கை முழுவதுமே புதியத் தலைமுறை மீதுதான்; அவர்கள் எல்லா பிரச்சினைகளையும் ஒரு சிங்கத்தை போல எதிர்கொண்டுத் தீர்ப்பார்கள்.
விடை : என்னுடைய நம்பிக்கை முழுவதுமே புதிய_ தலைமுறை மீதுதான்; அவர்கள் எல்லாப் பிரச்சினைகளையும் ஒரு சிங்கத்தைப் போல எதிர்கொண்டு_ தீர்ப்பார்கள்
2.எத்தனை முறை நீ மற்றவர்கள் முன்னேறி செல்வதனை கண்டு ஒன்றும் செய்வதறியாது நம்பிக்கையின்றி துன்புறுவாய். நிறைய தன்னம்பிக்கை கொள்.
விடை : எத்தனை முறை நீ மற்றவர்கள் முன்னேறிச் செல்வதனைக் கண்டு ஒன்றும் செய்வதறியாது நம்பிக்கையின்றித் துன்புறுவாய். நிறைய தன்னம்பிக்கைக் கொள்.
3.நம் வாழ்க்கையின் தரம் நமது கவனத்தின் தரத்தை பொறுத்திருக்கிறது. புத்தகம் படிக்கும் பொழுது கூர்ந்தக் கவனம் அறிவை பெறுவதற்கும் வளர்ப்பதற்கான அடிப்படை தேவையாகும்.
விடை : நம் வாழ்க்கையின் தரம் நமது கவனத்தின் தரத்தைப் பொறுத்திருக்கிறது. புத்தகம் படிக்கும் பொழுது கூர்ந்த_ கவனம் அறிவைப் பெறுவதற்கும் வளர்ப்பதற்கான அடிப்படைத் தேவையாகும்.
4.மாணவர்கள் பெற்றோர்களை தமது நண்பர்களாக பாவித்து நட்புக் கொள்ள வேண்டும். தமது இன்ப துன்பங்களை பெற்றோர்களுடன் பகிர்ந்துக் கொள்ள வேண்டும்.
விடை : மாணவர்கள் பெற்றோர்களைத் தமது நண்பர்களாகப் பாவித்து நட்புக் கொள்ள வேண்டும். தமது இன்ப துன்பங்களைப் பெற்றோர்களுடன் பகிர்ந்து_ கொள்ள வேண்டும்.
5. ஆசிரியருக்கு கீழ்படிதல் என்னும் குணம், உண்மையானவற்றை தெரிந்துக் கொண்டு, அறியாமையினை அகற்றி பல நல்லவற்றை கற்று கொடுக்கும்.
விடை : ஆசிரியருக்குக் கீழ்ப்படிதல் என்னும் குணம், உண்மையானவற்றைத் தெரிந்துகொண்டு, அறியாமையினை அகற்றி பல நல்லவற்றைக் கற்றுக் கொடுக்கும்.
2. பொருத்தமான வேற்றுமை உருபுகளைச் சேர்த்து முறையான தொடர்களாக ஆக்குக.
( புத்தகம் பக்கம் எண் - 72 )
எ.கா : குமரன் வீடு பார்த்தேன்
விடை : குமரனை வீட்டில் பார்த்தேன்.
1. மாறன் பேச்சுத்திறன் யார் வெல்ல முடியும்.
விடை : மாறனை பேச்சுத் திறனில் யார் வெல்ல முடியும்.
2. போட்டி வெற்றி பெற்றது கலைச்செல்வி பாராட்டுகள் குவிந்தன
விடை : போட்டியில் வெற்றி பெற்றதால் கலைச்செல்விக்குப் பாராட்டுகள் குவிந்தன.
3. காலை எழுந்து படித்து நமக்கு நன்மை ஏற்படும்.
விடை : காலையில் எழுந்து படித்தால் நமக்கு நன்மை ஏற்படும்.
4.அனைவர் அன்பு அழைத்தவன் துன்பம் தர யார் மனம் வரும்
விடை : அனைவரையும் அன்புடன் அழைத்தவனுக்குத் துன்பம் தர யாருக்கு மனம் வரும்.
5.சான்றோர் மதிப்பு கொடுத்து வாழ்வு உயரலாம்.
விடை : சான்றோருக்கு மதிப்புக் கொடுத்தால் வாழ்வில் உயரலாம்.
6.முருகன் வேகம் சென்றும் பேருந்தைப் பிடிக்க இயலவில்லை.
விடை : முருகன் வேகமாகச் சென்றும் பேருந்தைப் பிடிக்க இயலவில்லை.
4. படிப்போம் பயன்படுத்துவோம் ( உணவகம் )
( புத்தகம் பக்கம் எண் - 72 )
1. Lobby - ஓய்வறை
2. Checkout - வெளியேறுதல்
3. Tips - சிற்றீகை
4. Mini meals - சிற்றுணவு
குருசடி எம்.ஏ.ஜெலஸ்டின்
முதுகலைத் தமிழாசிரியர்,கார்மல் மேனிலைப் பள்ளி ,நாகர்கோவில்-4,9843448095
இலக்கணம்
இயல் - 1
1.முடிந்தால் தரலாம், முடித்தால் தரலாம் - இவ்விரு சொற்றொடர்கள் உணர்த்தும் பொருளை அறிந்து தொடர் அமைக்கவும்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவைப்படும் பொருட்களை முடிந்தால் தரலாம்.
ஆசிரியர் கூறியபடிச் செயல்திட்டப் பதிவேடுகளை முடித்தால் தரலாம்.
2. தமிழில் பிழையின்றி எழுதுவதற்கு மேற்கொள்ள வேண்டிய முயற்சிகள் யாவை?
எழுத்தினைத் தெளிவாக உச்சரிக்கப் பழகவேண்டும். ந, ண, ன/ ல, ள, ழ / ற , ர / ஒலி வேறுபாடு தெரிந்து ஒலிலிக்க வேண்டும்
தமிழில் எழுத்துகள் வரும் முறையையும் அவை ஏற்படுத்தும் பொருள் மாற்றத்தையும் அறிந்து கொள்வது இன்றியமையாத ஒன்றாகும்.
தொடக்கத்தில் சில காலம் வாய் விட்டோ அல்லது மனதுக்குள் உச்சரித்தபடியோ எழுதப் பழகுவது நல்லது.
வேகமாக எழுத முயல்வது பிழைக்கு வழிகோலும்..
கெ, கே, கொ ,கோ போன்ற கொம்புடைய குறில் நெடில் வேறுபாட்டினை புரிந்து எழுத வேண்டும்.
இயல் - 2
1. மொழியின் சொற்றொடர் அமைப்பை விளக்கிக் கொள்வதற்கும் பயன்படுத்துவதற்கும் உதவுவன எவை?
திணை, பால், எண், இடம் ஆகியனவாகும்.
2. உயர்திணைப் பன்மைப் பெயர்கள், பன்மை விகுதி பெற்று வருமாறு இரண்டு தொடர்களை எழுதுக.
நீங்கள் வீட்டிற்கு வாருங்கள்.
அவர்கள் ஆலயம் வந்தார்கள்.
இயல் - 3
1.வேறொரு பொருள் அமையுமாறு சொற்களைச் சேர்த்துத் தொடரமைக்க.
மாணவர்கள் வரிசையில் நின்று அறிவியல் கண்காட்சியைக் கண்டனர்.
விடை: மாணவர்கள்வரிசையில் நின்று அறிவியல் கண்காட்சியைக் கண்டனர்.
2.கீழ்க்காணும் சொல்லுருபுகளைப் பிரித்தும் சேர்த்தும் இருவேறு தொடரமைக்க.
எ.கா
முன்
1. அவன் முன்வந்து கூறினான்.
2. அவன்முன் வந்து கூறினான்.
தானே
1. கண்ணன்தானே படித்தான்.
2. கண்ணன் தானே படித்தான்.
கொண்டு
1. சோமு கையில் கத்தி கொண்டு ஓடினான்.
2. சோமு கத்திக்கொண்டு ஓடினான்.
விட்டான்
1. அண்ணன் பாம்பைப் பிடித்து விட்டான்ன்
2. அண்ணன் பாம்பைப் பிடித்து விட்டான்.
3. காற்புள்ளி இடாமல் எழுதுவதனால் ஏற்படும் பொருள் மயக்கத்திற்குச் சான்று தருக.
சான்று
1. அவள், அக்கா வீட்டிற்குச் சென்றாள்
2. அவள் அக்கா வீட்டிற்குச் சென்றாள்
இச்சான்றின் முதல் தொடரில் அந்தப்பெண் தன் அக்காள் வீட்டிற்குச் சென்றாள் என்ற பொருளை உணர்த்துகிறது அத்தொடரில் உள்ள காற்புள்ளி.
இச்சான்றின் இரண்டாவது தொடரில் உள்ள காற்புள்ளியால் அந்தப் பெண்ணின் அக்காள் அவளது (தனது) வீட்டிற்குச் சென்றாள் என்ற பொருள் வேறுபாட்டைத் தருவதை அறியலாம்.
4. சலசல, வந்து வந்து, கல கல, விம்மி விம்மி, இவற்றில் இரட்டைக்கிளவித் தொடர்களை எழுதி, அவற்றை எழுதும் முறையைக் கூறுக.
இரட்டைக்கிளவித் தொடர்கள் - சல சல, கல கல
தொடரில் இரட்டைக்கிளவிச் சொற்களை எழுதும்போது சேர்த்து எழுத வேண்டும்.
சான்று
1. அருவி விழும் ஓசை சலசலவெனக் கேட்டது (சரி)
அருவி விழும் ஓசை சல சலவெனக் கேட்டது (தவறு)
2. செல்வி கலகலவெனச் சிரித்தாள் (சரி)
செல்வி கல கலவெனச் சிரித்தாள் (தவறு)
5. திருவளர்ச்செல்வன், திருவளர் செல்வன் இவற்றில் சரியான தொடர் எது? அதற்கான இலக்கண விதி யாது?
'திருவளர்செல்வன்' என்ற தொடரே சரியான தொடர்.
'வினைத்தொகையாக வரும் சொல்லுக்கிடையில் வல்லினம் மிகுதல் கூடாது' என்ற இலக்கண விதியின் படி 'திருவளர்செல்வன்' என்ற வினைத்தொகையில் வல்லினம் மிகாது.
குருசடி எம்.ஏ.ஜெலஸ்டின்
முதுகலைத் தமிழாசிரியர்,கார்மல் மேனிலைப் பள்ளி ,நாகர்கோவில்-4,9843448095
இலக்கணம்
உறுப்பிலக்கணம்
1.உயர்ந்தோர் - உயர் + த் ( ந் ) + த் + ஓர் ( பக் : 9 )
உயர் - பகுதி
த் - சந்தி, ‘த்’ , ‘ந்’ ஆனது விகாரம்
த் - இறந்தகால இடைநிலை
ஓர் - பலர்பால் வினைமுற்று விகுதி
2. இருந்தாய் - இரு + த் ( ந் ) + த் + ஆய் ( பக் : 3)
இரு - பகுதி
த் - சந்தி, ‘த்’ , ‘ந்’ ஆனது விகாரம்
த் - இறந்தகால இடைநிலை
ஆய் - முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி
3. விம்முகின்ற - விம்மு + கின்று + அ ( பக் : 3 )
விம்மு - பகுதி
கின்று - நிகழ்கால இடைநிலை
அ - பெயரெச்ச விகுதி
4. பொலிந்தான் - பொலி + த் ( ந்) + த் + ஆன் ( பக் : 56 )
பொலி - பகுதி
த் - சந்தி , ‘ த்’ , ‘ந்’ ஆனது விகாரம்,
த் - இறந்தகால இடைநிலை
ஆன் - ஆண்பால் வினைமுற்று விகுதி
5. விளங்கி - விளங்கு + இ ( பக் : 9 )
விளங்கு - பகுதி
இ - வினையெச்ச விகுதி
6. வந்து - வா ( வ ) + த் ( ந் ) + த் + உ ( பக் : 9 )
வா - பகுதி ; வ எனக் குறுகியது விகாரம்
த் - ச ந்தி , ‘ த்’ , ‘ந்’ ஆனது விகாரம்,
த் - இறந்தகால இடைநிலை
உ - வினையெச்ச விகுதி
7. சாய்ப்பான் - சாய் + ப் + ப் + ஆன் ( பக் : 33 )
சாய் - பகுதி
ப் - சந்தி
ப் - எதிர்கால இடைநிலை
ஆன் - ஆண்பால் வினைமுற்று விகுதி
8. வியந்து - விய + த் ( ந் ) + த் + உ ( பக் : 33 )
விய - பகுதிபகுதி
த் - ச ந்தி , ‘ த்’ , ‘ந்’ ஆனது விகாரம்,
த் - இறந்தகால இடைநிலை
உ - வினையெச்ச விகுதி
9. தந்தனன் - தா ( த) + த் ( ந் ) + த் + அன் + அன் ( பக் : 9
தா - பகுதி
த் - ச ந்தி , ‘ த்’ , ‘ந்’ ஆனது விகாரம்,
த் - இறந்தகால இடைநிலை
அன் - சாரியை
அன் - ஆண்பால் வினைமுற்று விகுதி
இலக்கணம்
புணர்ச்சி
1.அருங்கானம் = அருமை + கானம் ( புத்தகம் பக் : 56)
விதி 1) : ஈறுபோதல் - அரு + கானம்
விதி 2) : இனமிகல் - அருங்கானம்
2. செல்லிடத்து = செல் + இடத்து ( புத்தகம் பக் : 78)
விதி 1) : தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும் > செல் + ல் + இடத்து
விதி 2) : உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே > செல்லிடத்து
3. தனியாழி - தனி + ஆழி ( புத்தகம் பக் : 9)
விதி 1 : இ ஈ ஐ வழி யவ்வும் < தனி + ய் + ஆழி
விதி 2 : உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே < தனியாழி
4. செம்பரிதி - செம்மை + பரிதி ( புத்தகம் பக் : 3)
விதி 1 : ஈறுபோதல் < செம் + பரிதி - செம்பரிதி
5. வானமெல்லாம் = வானம் + எல்லாம் ( புத்தகம் பக் : 3 )
விதி 1 : உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே < வானமெல்லாம்
6. உன்னையல்லால் = உன்னை + அல்லால் ( புத்தகம் பக் : 3 )
விதி 1 : இ ஈ ஐ வழி யவ்வும் < உன்னை + ய் + அல்லால்
விதி 2 : உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே <உன்னையல்லால்
7. செந்தமிழே = செம்மை + தமிழே ( புத்தகம் பக் : 3 )
விதி 1 : ஈறுபோதல் < செம் + தமிழே
விதி 2 : முன்னின்ற மெய் திரிதல் - செந்தமிழே
8. வெங்கதிர் = வெம்மை + கதிர் ( புத்தகம் பக் : 9 )
விதி 1 : ஈறு போதல் < வெம் + கதிர்
விதி 2 : முன்னின்ற மெய் திரிதல் - வெங்கதிர்
9. ஆங்கவற்றுள் = ஆங்கு + அவற்றுள் ( புத்தகம் பக் : 9 )
விதி 1 : உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும் < ஆங்க் + அவற்றுள்
விதி 2 : உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே - ஆங்கவற்றுள்
குருசடி எம்.ஏ.ஜெலஸ்டின்
முதுகலைத் தமிழாசிரியர்,கார்மல் மேனிலைப் பள்ளி ,நாகர்கோவில்-4,9843448095
இயல் 1,2,3 | இலக்கணம் |மொழிப்பயிற்சி | 2 மதிப்பெண் வினா விடைகள் | DOWNLOAD HERE
முதல் இடைத்தேர்வு 2023 - மாதிரி வினாத்தாள் 1 -👇👇👇👇👇DOWNLOAD HERE
12th தமிழ் | மாதத் தேர்வு | இயல் 1 | அலகுத் தேர்வு - 2023| மாதிரி வினாத்தாள் - 1 | DOWNLOAD HERE
12th தமிழ் | மாதத் தேர்வு | இயல் 1 | அலகுத் தேர்வு - 2023| மாதிரி வினாத்தாள் - 2 | DOWNLOAD HERE
12th தமிழ் | மாதத் தேர்வு | இயல் 1 | அலகுத் தேர்வு - 2023| மாதிரி வினாத்தாள் - 3 | DOWNLOAD HERE
12th Standard TAMIL QUESTION 2023 |12TH TAMIL PUBLIC STUDY MATERIAL (2023) |TWO MARK STUDY MATERIAL