12 /இயல் - இளந்தமிழே 12- 3/1 SLSM/25
மெல்ல கற்கும் மாணவர்களுக்கான விடைக் குறிப்பு
பலவுள் தெரிக
1. "மீண்டுமந்தப் பழமைநலம் புதுக்குதற்கு" கவிஞர் குறிப்பிடும் பழமைநலம் என்பது ( ஜூன் 2023 )
1) பாண்டியரின் சங்கத்தில் கொலுவிருந்தது
2) பொதிகையில் தோன்றியது
3) வள்ளல்களைத் தந்தது.
அ) 1 மட்டும் சரி ஆ) 1,2 இரண்டும் சரி இ) 3 மட்டும் சரி ஈ) 1, 3 இரண்டும் சரி
விடை : ஈ) 1, 3 இரண்டும் சரி
2. 'செம்பரிதி"... எனத் தொடங்கும் பாடல் இடம்பெற்றுள்ள கவிதைத் தொகுப்பு
அ) ஒளிப்பறவை ஆ) நிலவுப்பூ இ) சர்ப்பயாகம் ஈ) சூரியநிழல்
விடை : ஆ) நிலவுப்பூ
குறுவினா
1. கவிஞர் சிற்பி எவற்றை வியந்து பாட, தமிழின் துணை வேண்டும் என்கிறார்?
(மார்ச்-2020,ஆகஸ்ட் 2022 ,ஜூன் 2023 , ஜூலை 2024)
* செந்நிறத்து வானம் போலத் கைகள் சிவந்திட உழைக்கும் தொழிலாளர்களின் வியர்வை வெள்ளம்.
* தொழிலாளர்களின் தோள்மீது முத்துமுத்தாய் வீற்றிருக்கும் வியர்வை வெள்ளம்.
சிறுவினா
1. செம்பரிதி மலைமேட்டில் தலையைச் சாய்ப்பான் செந்நிறத்துப் பூக்காடாம் வான மெல்லாம்" தொடர் வெளிப்படுத்தும் காட்சி நயத்தை விளக்குக.
* மாலை நேரச் சூரியன், மலையில் தலையைச் சாய்க்கின்றான்.
* சூரியனின் நிறம், வானம் முழுவதும் பூக்காடு போலப் பரவிப் படர்ந்துள்ளது.
* இயற்கை ஓவியன் புனைந்த அழகிய செந்நிறத்துப் பூக்காடாக வானம் தோன்றுகிறது.
* இதற்கு மாலை நேரத்துச் சூரியன் காரணமாக அமைந்துள்ளான் என்பதனை இத்தொடர் அழகாக வெளிப்படுத்துகிறது.
2. பின்வரும் இருபாக்களின் கருத்துக்களிலுள்ள வேற்றுமையை எடுத்துக்காட்டுக.
பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையி னானே - நன்னூல்
மீண்டு மந்தப் பழமைநலம் புதுக்கு தற்கு மெய்சிலிர்க்கத் தமிழ்க்குயிலே கூவி வா வா! - சிற்பி பாலசுப்பிரமணியம்
நன்னூல்
* ஒரு மொழியில் பல்வேறு காலங்களில் தோன்றிய இலக்கியங்களில் உள்ள பழைய சொல்வழக்குகள் கழிதலும், புதிய சொல்வழக்குகள் தோன்றுதல் இயற்கை என்கின்றது இப்பாடலடி.
சிற்பி பாலசுப்பிரமணியம்
*புதுமையை ஏற்றதனால் தமிழ்நாட்டின் பண்டைய பழக்கவழக்கங்கள். பயன்பாடுகள் எல்லாம் மாறிவிட்டன. இதனால் பழமைநலம் அழிந்துவிட்டது. பழமை தளிர்க்க தமிழ்க்குயிலே நீ மீண்டும் கூவி வர வேண்டும் என்கின்றது இப்பாடலடி.
நெடுவினா
1. தமிழின் சீரிளமைத் திறம் வியந்து கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் கூறுவனவற்றைத் தொகுத்து எழுதுக. ( செப் 2021 , மே 2022, ஜூலை 2024,மார்ச் 2025)
தமிழே ஏற்ற துணை!
மாலையில் மறையும் கதிரவனால் வானம் சிவந்தது போல, உழைக்கும் தொழிலாளர்களின் கைகள் சிவந்து, தோள்களில் வியர்வை முத்துமுத்தாய் தோன்றுகிறது. இதனை வியந்துபாட தமிழே ஏற்ற துணையாகும்.
உள்ளத்து உணர்வுகளைப் பாட தமிழே துணை!
உள்ளத்தில் தோன்றும் உணர்வுகளைக் கவிதையாக உருவாக்குவதற்கு முத்தமிழே துணை புரிகிறது.
வள்ளல்களை ஈன்று தந்த தாய்!
பாண்டியர் அமைத்த தமிழ்ச்சங்கத்தில் வீற்றிருந்தது தமிழ்மொழி. பாரி போன்ற வள்ளல்களைத் தந்தவள்.
மீண்டுமந்த பழமை நலம்:
மொழியைப் போற்றும் புலவர்களும், வள்ளல்களும் கூடித் தமிழை வளர்க்கும் பழமை நலம் மீண்டும் வரத் தமிழ்க்குயிலே கூவிடுக.
சிங்கம் போலச் சீறி வா!
கூண்டை உடைத்துக் கொண்டு சீறிப்பாயும் சிங்கம் போலத் தமிழுக்கு ஏற்பட்ட தடைகளையெல்லாம் தகர்க்க, பொதியமலையில் தோன்றிய தென்தமிழே சீறி வா! என்கிறார் கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம்.
எம்.ஏ.ஜெலஸ்டின் , முதுகலைத் தமிழாசிரியர், கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில் - 9843448095
Click Here to download the document.
இயல் - 1
தன்னேர் இலாத தமிழ் - Click Here