Loading ....

OW-11th Tamil-unit 2-One word-Book Back-PTA Questions-Government Exam-March-September-July-2025-11th தமிழ்-ஒரு மதிப்பெண்- வினா விடைகள் --இயல் 2-

 11 T OW- இயல் 2 BB - GQP & AQP-25



இயல்  2

புத்தக வினாக்கள் 

இலக்கணத் தேர்ச்சி கொள் (புத்தகம் பக்கம் 442)

1.பொருத்தி விடை தேர்க. (மார்ச் 2025 )

அ) அடி அகரம் ஐ ஆதல் - 1.செங்கதிர்

ஆ) முன் நின்ற மெய்திரிதல் - 2. பெருங்கொடை,

இ) ஆதிநீடல்         - 3. பைங்கூழ்

ஈ) இனமிகல்         - 4.காரிருள்

அ) 4  3  2  1

ஆ) 3  4  2  1

இ) 3  1  4  2

ஈ) 1  2  4  3

விடை :  இ) 3  1  4  2

2. கூற்றுகளைப் படித்துக் கீழ்க்காண்பனவற்றுள் சரியானதைத் தேர்க.

அ) நிலைமொழியின் குற்றியலுகரமாகவும் வருமொழியின் முதல் உயிரெழுத்தாகவும் அமையும்போது உயிர்வரின் உக்குறள் மெய்விட்டு ஓடும்' என்னும் விதியைப் பெறும்.

ஆ) நிலைமொழியின் ஈற்றில் இஈஐ வரும்போது வகர உடம்படுமெய் பெறும்.

இ) பண்புப்பெயர்ப் புணர்ச்சியில் 'ஈறுபோதல்' என்னும் விதியே முதன்மையானதாக விளங்கும்.

ஈ) தன்னொற்றிரட்டல் என்னும் விதி பண்புப்பெயர்ப் புணர்ச்சிக்குப் பொருந்தும்.

1) அ ,ஆ ,இ சரி, ஈ தவறு

2) அ ,இ , ஈ சரி , ஆ தவறு

விடை : 2) அ ,இ , ஈ சரி , ஆ தவறு


இலக்கணத் தேர்ச்சி கொள்

அரசுப் பொதுத் தேர்வு மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம்  வினா - விடைகள்


1. கலை + அறிவு புணரும் புணர்ச்சி வகை ( செப் 2020 )

அ) குற்றியலுகரப் புணர்ச்சி

ஆ) உடம்படு மெய்ப் புணர்ச்சி

இ) முற்றியலுகரப் புணர்ச்சி

ஈ) பண்புப் பெயர்ப் புணர்ச்சி 

விடை : ஆ) உடம்படு மெய்ப் புணர்ச்சி

2. ஈரொற்று மெய்ம்மயக்கமாய் வரும் எழுத்துக்கள் ( செப் 2022 ) 

அ) ங், ஞ் , ழ்

ஆ) த் ,ப்  , ர்

இ) ய், ர், ழ்

ஈ) ய்  ர்  ங்

விடை : இ) ய்,ர்,ழ்

3. ஈறுபோதல், முன்னின்ற மெய்திரிதல், தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும், உடல் மேல் உயிர் வந்து ஒன்றுதல் ஆகிய வரிசையில் புணர்ந்த சொல் ( செப் 2022 ) 

அ) நல்லாடை

ஆ) மூதூர்

இ) பைந்தளிர்

ஈ) வெற்றிடம்

விடை : அ) நல்லாடை)

4. 'கல்லதர்" என்னும் சொல்லிற்குரிய புணர்ச்சி விதிகளைத் தேர்வு செய்க. ( மார்ச் 2020 )

அ) ஈறுபோதல், தன்னொற்றிரட்டல்    

ஆ) இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்

இ) உயிர்வரின் உக்குறள் மெய்விட்டு ஓடும்

ஈ) தனிக்குறில் முன் ஒற்று, உயிர்வரின் இரட்டும், உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே

விடை :ஈ) தனிக்குறில் முன் ஒற்று, உயிர்வரின் இரட்டும், உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே

5. 'தனிக்குறில் முன் ஒற்று உயிர் வரின் இரட்டும்' எனும் விதிக்குப் பொருந்தும் சொற்களைக் கண்டறிக.( மார்ச் 2019 )

அ) கல்லதர், வில்லொடிந்து

ஆ) சோற்றுப்பானை, வயிற்றுப்பசி

இ) மாசற்றார் , பேச்சுரிமை

ஈ) நெட்டிலை, வழியில்லை 

விடை : அ) கல்லதர், வில்லொடிந்து

6. 'பெருங்கொடை என்ற சொல்லின் புணர்ச்சி விதி  ( ஆகஸ்ட் 2022 )

அ) ஆதிநீடல்

ஆ) ஈறுபோதல், இனமிகல்

இ) அடி அகரம் ஐ ஆதல்

ஈ) முன்னின்ற மெய்திரிதல் 

விடை : ஆ) ஈறுபோதல், இனமிகல்

7. உடம்படுமெய்ப் புணர்ச்சி இடம்பெற்றுள்ள சொல் (அ.மாவி. 2019 )

அ) கோவில்

ஆ) பூக்கள்

இ) வண்டிச் சக்கரம்

ஈ) மரவேர்

விடை :  அ) கோவில்


இலக்கணத் தேர்ச்சி கொள் —- தேர்விற்கு எதிர்பார்க்கும் கூடுதல் வினாக்கள் 


1. கீழ்க்கண்ட தொடர்களில் குற்றியலுகரப் புணர்ச்சிக்கு எடுத்துக்காட்டு

அ) மணியழகு

ஆ) வரவறிந்து

இ) மாசற்றார்

ஈ) பச்சிலை

விடை :  இ) மாசற்றார்

2. முற்றியலுகரப் புணர்ச்சிவிதிக்கு எடுத்துக்காட்டு

அ) தீயணைப்பான்

ஆ) வெற்றிலை

இ) கதவில்லை

ஈ) பெருநகரம்

விடை : இ) கதவில்லை

7.'பள்ளி + தோழன்' என்பது, ____________ புணர்வதற்கு எடுத்துக்காட்டு.

அ) மெய்யோடு மெய்

ஆ) மெய்யோடு உயிர்

இ) உயிரோடு உயிர்

ஈ) உயிரோடு மெய்

விடை : ஈ) உயிரோடு மெய்


எம்.ஏ.ஜெலஸ்டின் , முதுகலைத் தமிழாசிரியர், கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில் - 9843448095

இயல்  2

புத்தக வினாக்கள் 

நம்மை அளப்போம் (புத்தகம் பக்கம்.44)

1. பொருத்தமான இலக்கிய வடிவத்தைத் தேர்க.

அ) ஒற்றை வைக்கோல் புரட்சி - மரபுக் கவிதை 

ஆ) மனோன்மணீயம் - சிறுகதை

இ) யானை டாக்டர் - குறும் புதினம்

ஈ) ஐங்குறுநூறு         -     புதுக்கவிதை

விடை : இ) யானை டாக்டர் -      குறும் புதினம்

2. மண்ணுக்கு வளம் சேர்ப்பன  ( மார்ச் 2023 , ஜூலை 2024 )

அ) மண்புழு

ஆ) ஊடுபயிர்

இ) இயற்கை உரங்கள்

ஈ) இவை மூன்றும்

விடை :  ஈ) இவை மூன்றும்

3. 'போது' என்ற சொல் உணர்த்தும் பொருள்  ______________

அ) போதும்

ஆ) காடு

இ)மொட்டு

ஈ) மேகம்

விடை : இ) மொட்டு

4. கருப்பட்டி, பனங்கற்கண்டு போன்றவை_______________ ( ஜூன் 2023 , மார்ச் 2024 ) 

அ) மதிப்புக்கூட்டுப்பொருள்கள்

ஆ) நேரடிப்பொருள்கள்

j) அ -மட்டும் சரி

ii) ஆ -மட்டும் சரி

iii) இரண்டும் சரி

iv) அ-தவறு, ஆசரி

விடை :   i) அ-மட்டும் சரி

5. பிழையான தொடரைக் கண்டறிக.

அ) பதநீரிலிருந்து பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்றவற்றைத் தயாரிக்கின்றனர்.

ஆ) காயா, கொன்றை, பிடவம் ஆகிய மலர்கள் முல்லை நிலத்தில் பூக்கக்கூடியன.

இ) குறைந்த எட்டுத்தொகை அடிகளை ஐங்குறுநூறு நூல்களுள் உடையது.

ஈ) யானைகளால் வெகு தொலைவில் உள்ள நீரினை வாசனை மூலம் அறிய முடியும்.

விடை :  இ) குறைந்த எட்டுத்தொகை அடிகளை ஐங்குறுநூறு நூல்களுள் உடையது


இயல் 2

அரசுப் பொதுத் தேர்வு மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம்  வினா - விடைகள்


1.  ஒற்றை வைக்கோல் புரட்சி என்னும் நூலை எழுதியவர் யார்? 

( மார்ச் 2025 )

அ) நம்மாழ்வார்

ஆ) சொக்கலிங்கம்

இ) கம்பர்

ஈ) மாசானபு ஃபுகோகா

விடை :  ஈ) மாசானபுஃபுகோகா

2. தமிழின் முதல் பாவடிவ நாடகநூல்      

(ஆகஸ்ட் 2022, மார்ச் 2023,ஜூலை 2024)

அ) இரகசிய வழி    

ஆ) மனோன்மணீயம்                                  

இ) நூல்தொகை விளக்கம்

ஈ) திருவிதாங்கூர் அரசர் வரலாறு

விடை :  ஆ) மனோன்மணீயம்)

3."யாரே உனைப்போல் அனுதினம் உழைப்போர்" - இது எவர் மொழி?   (மார்ச் 2019 ,ஜூன் 2023)

அ) வாய்க்கால்

ஆ) நாங்கூழ்

இ) நடராசன்

ஈ) புல்

விடை : இ) நடராசன்

4.பேராசிரியர் சுந்தரனார் பிறந்த ஊர்     (மார்ச் 2020)

அ) பேரணாம்பட்டு

ஆ) ஆலப்புழை

இ) தென்காசி

ஈ) புதுச்சேரி

விடை : ஆ) ஆலப்புழை

 5.மனோன்மணியத்தில் உள்ள கிளைக்கதை (மார்ச் 2024)

அ) சிவகாமியின் சரிதம்

ஆ) சிவகாமியின் சபதம்

இ) பாஞ்சாலி சபதம்

ஈ) இரகசிய வழி

விடை : அ) சிவகாமியின் சரிதம்

6.யானைகளை எவ்வாறு அழைப்பர்? ( செப் 2021 )

அ) காட்டின் மூலவர்

ஆ) காட்டின் அரசன்

இ) காட்டின் அதிகாரி      

ஈ) காட்டின் பெரியவர்

விடை :  அ) காட்டின் மூலவர்

7.யானை டாக்டர் எனும் குறும்புதினத்தை எழுதியவர் யார்?

( மே 2022 ) 

அ) ஜெயமோகன்

ஆ) அழகிய பெரியவன்

இ) வி. கிருஷ்ணமூர்த்தி

ஈ) எஸ்.ராமகிருஷ்ணன்

விடை :  அ) ஜெயமோகன் 

8. ஈரொற்று மெய்ம்மயக்கம் இடம் பெற்றுள்ள சொல் ( மார்ச் 2019 )

அ) கப்பல்

ஆ) மகிழ்ச்சி

இ) பட்டம்

ஈ) மார்கழி

விடை : ஆ) மகிழ்ச்சி

9.ஈரொற்று மெய்ம்மயக்கமாய் வரும் எழுத்துகள் (செப்2021)

அ) க், ச், ய்

ஆ) ய், ர், ழ்

இ) த், ப், ர்

ஈ) ங், ஞ், ழ்

விடை :  ஆ) ய், ர், ழ்

10.உடனிலை மெய்ம்மயக்கத்திற்கு மட்டுமே உரிய மெய்யெழுத்துகள்

அ) க், ச், ண், ந்

ஆ) த், ப், ட், ற்

இ) க், ச், த், ப்

ஈ) க், த், ட், ந்

விடை : இ) க், ச், த், ப்

எம்.ஏ.ஜெலஸ்டின் , முதுகலைத் தமிழாசிரியர், கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில் - 9843448095


இயல் - 2  இயற்கை வேளாண்மை —- தேர்விற்கு எதிர்பார்க்கும் கூடுதல் வினாக்கள் 


1. பூமியில் நீர்மட்டம் குறையாமல் சேமித்து வைக்கும் இயல்புடையது

அ) தென்னைமரம்

ஆ) ஆலமரம்

இ) பனைமரம்

ஈ) வேப்ப மரம்

விடை : இ) பனைமரம்

2. கீழ்க்கண்டவற்றில் இயற்கை உரம் எது?

அ) யூரியா

ஆ) பொட்டாசியம்

இ) சாணம்

ஈ) சல்பேட்

விடை : இ) சாணம்

8. ‘உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்' என்று முழங்கியவர்

அ) பாரதியார்

ஆ) ஔவையார்

இ) பாரதிதாசன்

ஈ) வாணிதாசன்

விடை : அ) பாரதியார்

9. ஏழைகளின் கற்பக விருட்சம் என ____________  மரம் போற்றப்படுகிறது.

அ) பனைமரம்

ஆ) வாழைமரம்

இ) முருங்கை மரம்

ஈ) தென்னை மரம்

விடை : அ) பனைமரம்

10. இயற்கை வேளாண்மையால் புகழ் பெற்றவர்

அ) நமச்சிவாயம்

ஆ) நம்மாழ்வார்

இ) பெரியாழ்வார்

ஈ) அகத்தியன்

விடை : ஆ) நம்மாழ்வார்

11. கீழ்க்கண்டவற்றுள் மதிப்புக் கூட்டுப்பொருள்

அ) பனங்கொட்டை

ஆ) பனை ஒலை

இ) பதநீர்

ஈ) பனங்கற்கண்டு

விடை : ஈ) பனங்கற்கண்டு

12. சிறந்த காற்றுத் தடுப்பான் ______________ ஆகும் 

அ) பனைமரம்

ஆ) மண்

இ) ஆலமரம்

ஈ) மலை

விடை :  அ) பனைமரம்

3. 'கருப்பட்டி' என்பது ________________

அ) கரும்புச்சாறில் தயாரிப்பது

ஆ) தென்னை சாறில் தயாரிப்பது

இ) பதநீரில் தயாரிப்பது

ஈ) நுங்கில் தயாரிப்பது

விடை : இ) பதநீரில் தயாரிப்பது


இயல் - 2  ஐங்குறுநூறு  —-  தேர்விற்கு எதிர்பார்க்கும் கூடுதல் வினாக்கள் 


1.'முல்லைத்திணை' பாடுவதில் வல்லவர்

அ) ஓரம்போகியார்

ஆ) பேயனார்

இ) அம்மூவனார்

ஈ) கபிலர்

விடை : ஆ) பேயனார்

2.ஐங்குறுநூறு  பிரித்து எழுதும்போது எவ்வாறு வரும்

 அ) ஐங் + குறுநூறு

ஆ) ஐந்து + குறுநூறு

இ) ஐந்து+ குறுமை+  நூறு 

ஈ) ஐங்குறுமை + நூறு

விடை : இ) ஐந்து+ குறுமை+  நூறு  

 3.ஓதலாந்தையார் பாடிய  திணை 

அ) பாலை

ஆ) முல்லை

இ) மருதம்

ஈ) நெய்தல்

விடை : அ) பாலை 

4. பேயனர்  இயற்றிய பாடல்களில் நமக்குக் கிடைத்துள்ள பாடல்கள் எத்தனை ?

 அ) 107

ஆ) 106

இ) 104

ஈ) 152

 5. ஐங்குறுநூற்று பாடல்களின்  அடி எல்லை

அ) 3 முதல் 8வரை

ஆ) 3 முதல் 9 வரை

இ) 3 முதல் 6 வரை

ஈ) 3 முதல் 12வரை

6.’ஆடுகம்’ என்பதன் இலக்கணக்குறிப்பு

 அ) முன்னிலை பன்மை வினைமுற்று

ஆ)முன்னிலை  ஒருமை வினைமுற்று  

இ) வினைமுற்று

ஈ) தன்மை  பன்மை வினைமுற்ற

 7.பொருந்தாததைத்  தேர்க்க

அ)   காயா 

ஆ) செம்முல்லை 

இ) மல்லிகை

ஈ) முல்லை


இயல் - 2  மனோன்மணீயம்   -     தேர்விற்கு எதிர்பார்க்கும் கூடுதல் வினாக்கள் 


1. மனோன்மணீயத்திற்கு மூல நூலாக அமைந்தது

அ) இரகசியவழி

ஆ) செல்லும்வழி

இ) பெரியவழி

ஈ) மூடியவழி

விடை : அ) இரகசியவழி

2. தமிழக அரசின் தமிழ்த்தாய் வாழ்த்து இடம் பெற்றுள்ள நூல்

அ) சிலப்பதிகாரம்

ஆ) மனோன்மணீயம்

இ) மணிமேகலை

ஈ) பாண்டியன் பரிசு

விடை : ஆ) மனோன்மணீயம்

3. ‘ஒழுக்கமும் பொறையும் உனைப்போல் யார்க்கு?’ என்று நடராசன்எதனை குறிப்பிடுகிறார் 

அ) வாய்க்கால்

ஆ) நாங்கூழ்ப்புழு

இ) புல்

ஈ) மேகம் 

விடை : ஆ) நாங்கூழ்ப்புழு


இயல் - 2  யானை டாக்டர்  —  தேர்விற்கு எதிர்பார்க்கும் கூடுதல் வினாக்கள் 


1. யானைக்கு வாசனையை அறிய உதவுவது

அ) துதிக்கையின் நுனி

ஆ) செவிகள்

இ) கண்கள்

ஈ) கால் நகங்கள்

விடை : அ) துதிக்கையின் நுனி

2.'மத்தகம்' என்பது

அ) யானையின் கால்கள்

ஆ) யானையின் நெற்றி

இ) யானையின் முதுகு

ஈ) யானையின் பல்

விடை :  ஆ) யானையின் நெற்றி

3. 'தாக்குவேன்' என்பதை யானை இவ்வாறு வெளிப்படுத்தும்?

அ) துதிக்கையை ஆட்டும்

ஆ) தலையைக் குலுக்கும்

இ) முன்னங்கால் ஒன்றைத் தூக்கி மடக்கும்

ஈ) முறைத்துப் பார்க்கும்

விடை : ஆ) தலையைக் குலுக்கும்

4. 'யானை டாக்டர்' என்னும் குறும்புதினம்  _________________  என்னும் சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

அ) அரம்      

ஆ) மறம்

இ) வீரம்

ஈ) அறம்

விடை : ஈ) அறம்

5. ‘யானை டாக்டர்’ என்று அழைக்கப்பட்டவர்

அ) டாக்டர் ஜெயமோகன்

ஆ) டாக்டர் வேணுமேனன்

இ) டாக்டர் வி.கிருஷ்ணமூர்த்தி

ஈ) டாக்டர் கி. கிருஷ்ணமூர்த்தி

விடை : இ) டாக்டர் வி. கிருஷ்ணமூர்த்தி


எம்.ஏ.ஜெலஸ்டின் , முதுகலைத் தமிழாசிரியர், கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில் - 9843448095



Click Here  to download the document.

இயல் 1 
ஒரு மதிப்பெண் வினா விடைகள்   Click Here



Post a Comment

Previous Post Next Post