ஜூலை 2025, 2 ஆவது வாரம் - பாடக்குறிப்பு
வகுப்பு : 12
பாடம் : தமிழ்
நாள் : ஜூலை 2 ஆவது வாரம்
பருவம் : முதல்பருவம்
இயல் : 2 ( பெய்யென பெய்யும் மழை )
அலகு : i ) கவிதைப் பேழை
பாடத்தலைப்பு :
i ) கவிதைப் பேழை
அ) பிறகொருநாள் கோடை
- அய்யப்ப மாதவன்
ஆ) நெடுநல்வாடை
- நக்கீரர்
பாடவேளை : 4
பக்க எண் : 26 முதல் 28 வரை
கற்பித்தல் நோக்கங்கள்
1. வேறுபட்ட காலக்கட்டங்களில் எழுதப்பட்ட பாடல் மற்றும் செய்யுள்களின் வாயிலாக வெளிப்படும் பருவகால வாழ்க்கை முறையைத் தற்காலத்தோடு இணைந்து அறிந்து வெளிப்படுத்தும் தன்மை பெறுதல்.
2. அய்யப்ப மாதவன் வெளிப்படுத்துகின்ற மழைக்கால நிகழ்வுகளை அறிதல்.
3. 'நெடுநல்வாடை ' பெயர்க் காரணம் அறிவதுடன் பாடல் பகுதியின் திணை, துறை அறிதல்
4. நக்கீரர் வெளிப்படுத்தும் குளிர்காலக் காட்சிகளை அறிதல்.
சிறப்பு நோக்கங்கள்
1. அய்யப்ப மாதவன் வெளிப்படுத்துகின்ற மழைக்கால நகரின் தன்மைகளை அறிய வைத்தல்.
2. மழை முடிந்த பிறகு நடைபெறும் செயல் பற்றி அறிய வைத்தல்.
3. மழைக்கால நிகழ்வுகளையும் மீண்டும் மழைக்கான ஏக்கம் பற்றியும் அறியவைத்தல்.
4. பருவகால மாற்றங்களால் உயிரினங்களின் இயல்பு வாழ்க்கை மாற்றம் பெறுவதைப் புரிய வைத்தல்.
5. முல்லை நில மக்கள், பறவைகள், விலங்குகள் மழையால் அடைந்த வருத்தங்களை உணர வைத்தல்.
6.கோவலர்கள் அடைந்த துயரங்களையும், அவர்களது செயல்பாடுகளையும் அறிய வைத்தல்
7. நெடுநல்வாடை' பாடப்பகுதியில் உள்ள இலக்கணக்குறிப்பு, உறுப்பிலக்கணம், புணர்ச்சி ஆகியவற்றை அறிய வைத்தல்.
எம்.ஏ.ஜெலஸ்டின் , முதுகலைத் தமிழாசிரியர், கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில் - 9843448095
கற்பித்தல் திறன்கள்
1.பாடப்பகுதிகளை அறிமுகப்படுத்தல்
2.விரிவுரை
3. எடுத்துக்காட்டு மூலம் விளக்குதல்
4 கேள்விகள் கேட்டல்
5. அறிக்கைகள் மூலம் விளக்குதல்
6. காட்சிப்படுத்துதல்
7. வலுவூட்டும் அசயல்பாடுகள் மூலம் விளக்குதல்
8 சிக்கலற்ற மற்றும் சுருக்கமான பாட இலக்கை அடையும் திறன்
ஆகிய கற்பித்தல் திறன்கள் மூலம் பாடப்பகுதியான பிறகொருநாள் கோடை,
நெடுநல்வாடை ஆகியவற்றில் எந்தெந்தப் பாடப்பகுதியின் கருத்துருக்களுக்கு எந்தெந்தத்
திறன்கள் பொருந்துகிறதோ அந்தந்தத் திறன்களைப் பயன்படுத்தி மாணவர்களுக்குக்
கற்பித்தல் வேண்டும்.
கற்பித்தல் நுண்திறன்கள்
1.பல்வகை தூண்டும் வினாக்களைக் கேட்டல்
2. சரளமாக வினாக்களைக் கேட்டல்
3. விரிச்சிந்தனையைத் துண்டும் வினாக்களைக் கேட்டல்
4. தகவல் பரிமாற்றத்தை நிறைவு செய்தல்
5. பாடம் முடித்தல்
ஆகிய நுண்திறன்கள் மூலம் பாடப்பகுதியின் நுட்பமான பொருளை மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டும்.
பல்வகை வகை துண்டும் வினாக்களைக் கேட்பதன் மூலம் மழைக் காலத்தில் பூமியில் ஏற்படும் மாற்றங்கள் விலங்குகள் அடையும் துன்பங்கள் பற்றி கேட்டறிதல்.
விரிச்சிந்தனையைத் துண்டும் வினாக்கள் மூலம் மழைத்தொடங்கும் முன் பூமியில் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் மழை முடிந்து பின் சூரியன் வரும்போது பூமியில் நிலவும் சூழல் பற்றியும் கேட்டறிதல்.
சரளமான வினாக்களைக் கேட்பதன் மூலம் மழைக் காலத்தில் விலங்குகள் தங்கும்
இடம் எப்படி இருக்கும் என்பது பற்றி கேட்டறிதல்.
மேலும் எந்தெந்த நுண்திறன்கள் எந்தெந்தம் பாடப் பகுதிக்குப் பொருந்துமோ அந்தந்த
நுண்திறன்களைப் பயன்படுத்தியும், திரும்ப கூற வேண்டியவற்றைத் திட்டமிட்டுப் பாடத்தை முடித்தல் வேண்டும்.
ஆயத்தப்படுத்தல்
1. மழைக்கால நிகழ்வுகளைப் பல்வேறு எடுத்துக்காட்டுடன் விளக்குதல்.
2. மழைக்காலக் காட்சிகளைக் காட்சிப் படுத்தல்
3. மழை பெய்யும் காலங்களில் கோவலர் மற்றும் முல்லை நிலம், பறவைகள், விலங்கள் அடைந்த துன்பங்களை இன்றைய காலச்சூழவுடன் இணைத்து பல்வேறு தகவல்கள் கூறுவதன் மூலம் விளக்குதல்.
அறிமுகம்
பாடப் பகுதிகளை மாணவர்கள் புரிந்து கொள்ள எந்தெந்தக் கற்பித்தல் திறன்கள் மற்றும் கற்பித்தல் நுண்திறன்கள் எந்தெந்தப் பாடப்பகுதிக்குப் பொருந்துகிறதோ அந்தந்தத் திறன்களின் அடிப்படையில் பாடத்தின் கருத்துகளை அறிமுகம் செய்து வைத்தல் வேண்டும் இதன்மூலம் மாணவர்களிடம் கற்கும் ஆர்வம் அதிகமாகும்.
ஆர்வமூட்டல்
1. முல்லை நிலம் பற்றிக் கேட்டல்
2. மழை பெய்யும் போது நடைபெறும் இயற்கை மாற்றத்தைக் கேட்டல்
3. தொடர்ந்து மழை பெய்வதால் ஏற்படும் பாதிப்புப் பற்றி மாணவர்களுடன் கலந்துரையாடல் நடத்துதல்.
4. தொடர் மழை பெய்வதால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி விளக்கிக் கூறுதல்
5. மழை பெய்து ஓய்ந்தாலும் கோடையில் மனம் மழைக்காக ஏங்குவதைப் பற்றிக் கேட்டறிதல்.
எம்.ஏ.ஜெலஸ்டின் , முதுகலைத் தமிழாசிரியர், கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில் - 9843448095
துணைக்கருவிகள்
1. பாடம் தொடர்பான காணொலிகள்
2.’இன்று’ குறும் படம்
3. பிறகொருநாள் கோடை பாடத்திற்கான PPT
4. முல்லை நிலத்தில் பெய்யும் மழை காணொலி
5.நெடுநல்வாடை பாடத்திற்கான PPT
பாடப்பொருள்
அ) பிறகொருநாள் கோடை - அய்யப்ப மாதவன்
*அய்யப்ப மாதவன் கவிதைகள் - சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டை இதழியல் துறை, திரைத்துறை -`இன்று', கவிதைக் குறும் படம் - மழைக்குப் பிறகும் மழை, நானென்பது வேறொருவன், நீர்வெளி கவிதை நூல்கள்.
* மழைக்காலத்தில் சூரியனின் திமீரப் பயணம் நகரம் பட்டை தீட்டிய வெள்ளை வைரமாகிறது-நீர்நிலைகளில் உள்ள நீரினைச் சூரியனின் ஒளிக்கதிர்கள் உதடுகள் குவித்து உறிதல்
* நீர்ச்சுவடுகள் அழிந்த மாயத்தில் வருத்தம் மரங்கள் மீதமிருக்கும் நீர்த்துளிகளை உதறுகின்றன.
வெயில் வந்ததால் பறவைகள் உற்சாகத்தில் குரல் எழுப்புகின்றன.
*மழையில் இருந்து விடுபடுகிறது அந்நகரம்
* வீட்டுச் சுவரில் வடிந்த நீரை இதயத்தினார் வழிய விடுகின்றேன் கை ஏற்தி வாங்கிய களிகள் நரம்புகளுக்குள் வீணை மீட்டிக் கொண்டிருக்கின்றது மீண்டும் மழைக்காக மேகங்கணம் பார்க்கின்றேன் கோடை வந்துவிட்டது.
எம்.ஏ.ஜெலஸ்டின் , முதுகலைத் தமிழாசிரியர், கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில் - 9843448095
நெடுநல்வாடை
- நக்கீரர்
*பாண்டிய நெடுஞ்செழியனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு மதுரை கண்டக்காயனார் மகன் நக்கீரர் இயற்றிய நூல் இது.பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றி -188 அடிகளை உடையது. ஆசிரியப்பா
* தலைவனைப் பிரிந்த தலைவிக்குத் துன்பமிகுதியால் நெடுவாடை போர்ப் பாசறையில் இருக்கும் தலைவனுக்கு வெற்றிபெறக் காரணமான ‘நல்வாடை’ எனவே' நெடுநல்வாடை' என்னும் பெயர் பெற்றது.
* வாகைத்திணை - வெற்றிபெற்ற அரசனும் அவனது வீரர்களும் வெற்றியின் அடையாளமாக வாகைப் பூவைச் சூடி வெற்றியைக் கொண்டாடுதல்
* கூதிர்ப்பாசறை - போர்மேற் சென்ற அரசன் குளிர்காலத்தில் தங்கும் படைவீடு
* மேகம் தான் தங்கியிருந்த மலையை வலப்பக்கமாகச் சூழ்ந்த உலகம் குளிரும்படி புதிய மழையை (புதுப்பெயல்) பொழிந்தது.
* தாழ்வான பகுதியில் பெருகிய வெள்ளம் (ஆர்கலி) வளைந்த கோலையுடைய ஆயர்களுக்கு வருத்தத்தைத் தந்தது.
* எருமை, பசு, ஆடு ஆகிய நிரைகளை மேடான பகுதியில் மேயவிட்டனர் - பழகிய நிலத்தை விட்டு இடம் மாறியதல் வருத்தம் அடைந்தனர் தலையில் சூடிய நீண்ட இதழ் கொண்ட காந்தள் மாலை கசங்கியது - பலருடன் சேர்ந்து கொள்ளி நெருப்பினால் கைகளுக்குச் சூடேற்றிய போதும் பற்கள் நடுங்கின.
* குளிரால் விலங்குகள் மேய்ச்சலை மறந்தன குரங்குகள் நடுங்கின - பறவைகள் நிலத்தில் வீழ்ந்தன - பாலுண்ண வந்த பசுக்களைக் கன்றுகள் தவிர்த்தன- மலையே குளிரச் செய்வது போல மழை பெய்தது அந்த நள்ளிரவில்
*இலக்கணக் குறிப்பு
வளைஇ - சொல்லிசை அளபெடை
பொய்யா - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
புதுப்பெயல் - பண்புத் தொகை
கொடுங்கோல்
உறுப்பிலக்கணம்
கலங்கி - கலங்கு + இ
கலங்கு - பகுதி, இ- வினையெச்ச விருதி
புணர்ச்சி விதி
இனநிரை = இனம் + நிரை
“மவ்வீறு ஒற்றழிந்து உயிரீறு ஒப்பவும்'
புதுப்பெயல் = புதுமை+ பெயல்
1.ஈறுபோதல் > புது +பெயல்
2. இயல்பினும் விதியிலும் நின்ற உயிர்முன் கசதப மிகும்
கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்
ஆசிரியர் செயல்பாடுகள்
1. ஆசிரியர் பாடப்பகுதியின் அனைத்து உட்பொருளையும் புரிந்து கொண்டு, மாணவர்களுக்குப் புரியும் விதத்தில் கற்பித்தல் திறன்கள், கற்பித்தல் நுண்திறன்கள் ஆகியவற்றைப் பயன்படுத்திப் பாடப்பகுதியின் அனைத்து கருத்துருக்களையும் மாணவர்கள் புரியும் விதத்தில் விளக்கிக் கற்பித்தல் வேண்டும்.
2. கற்பிக்க இருக்கும் பாடப்பகுதிகளை மாணவர்களிடம் வாசிக்க கூறுதல்
3. மாணவர்களுக்குப் பாடப்பகுதியில் ஏதேனும் ஐயங்கள் ஏற்பட்டால் அவர்களது ஐயங்கள் முழுமையாகத் தீரும் அளவிற்குக் கற்பிக்க வேண்டும். பாடப்பகுதியில் இருந்த சிறுசிறு கேள்விகள் கேட்டல். பாடம் நிறைவுற்றதும் வகுப்புத் தேர்வு நடத்துதல்.
வலுவூட்டும் செயல்பாடுகள்
1.'பிறகொரு நாள் கோடை பாடப்பகுதியில் கூறப்பட்டுள்ள மழையின் சிறப்பினைப் பொருத்தமான நிகழ்வுகள் மற்றும் திறன்கள் மூலம் கற்பித்தல்.
2.நெடுநல்வாடை' பாடப்பகுதியில் கூறப்பட்டுள்ள முல்லை நில மக்கள் ,மழையின் தன்மை விலங்குகள் ,பறவைகள் அடைந்த துயரம் ஆகியவற்றைப் பொருத்தமான சான்றுகள் மற்றும் நிகழ்வுகள் மூலம் விளக்குதல்.
3. ‘நெடுநல்வாடை’ பாடப்பகுதியின் இலக்கணப்பகுதிகளில் கவனம் செலுத்தி கரும்பலகை உதவியுடன் கற்பித்தல்
குறைதீர் கற்பித்தல்
பாடப்பகுதியின் உட்பொருளைப் புரிந்து கொள்ளும் திறன் குறைந்த மெல்ல கற்கும் மாணவர்களுக்குப் பாடப்பகுதியின் நோக்கம் புரியும் விதத்தில் முல்லை நிலத்தின் தன்மை.
மழை பெய்வதால் ஏற்படும் உள்ள உணர்வுகள், மழைக்காக மீண்டும் மீண்டும் மனம் ஏங்குவது, விலங்குகள் பறவைகள் அடையும் துயரங்கள் ஆகிய பாடக் கருத்துகளை மீண்டும் மீண்டும் துணைக்கருவிகள் மற்றும் மீள்பார்வை மூலம் புரிய வைத்தல்.
எம்.ஏ.ஜெலஸ்டின் , முதுகலைத் தமிழாசிரியர், கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில் - 9843448095
மாணவர் செயல்பாடுகள்
1. பாடப்பகுதியை வாய்விட்டு வாசித்துப் பழகுதல்.
2. வகுப்பறையில் ஆசிரியர் குறிப்பிடும் பாடப் பகுதியை வாய் விட்டு வாசித்தல்.
3. பாடம் தொடர்பான செய்திகளைச் சேகரித்தும் பாடத்தின் கருத்துகளைப் புரிந்து கொள்ளுதல்.
4. மழை ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்த தகவல்களை அறிந்து கொள்ளுதல்.
5.மழையால் பருவகாலங்களில் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அன்றாட வாழ்வில் நிகழும் மாற்றங்களைத் தெரிந்து கொள்ளுதல்.
6. பாடப்பகுதியில் ஐயம் இருந்தால் கேட்டுத் தெளிவடைதல்.
7 .பாடம் தொடர்பான கலந்துரையாடல் மற்றும் குழுச் செயல்பாட்டில் முழுமையாகப் பங்கேற்றல்.
8.பாடம் தொடர்பான காணொலிகளைக் கவனம் சிதறாமல் பார்த்துப் பாடப் பகுதியைப் புரிந்து கொள்ளுதல்.
கற்றல் விளைவுகள்
1.மழையால் மனம் அடையும் மகிழ்வை அறிந்ததன் மூலம் மழை பெய்ய துணை புரியும்
மரங்களை நட வேண்டும் என்ற அறிவினைப் பெறுதல்.
2. கோடையின் தாக்கத்தை அறிவதன் மூலம் மழை நன்கு பொழிய இயற்கையைப் பேணும் பண்பினைப் பெறுதல்.
3.கார்கால மழை தரும் வாழ்வின் இடையூறுகளை அறிவதன் மூலம் கார்காலத்தில் வாழவேண்டிய வாழ்வியல் சூழலை உணரல்.
மதிப்பீடு
எளிய சிந்தனை வினாக்கள் LOT QUESTIONS
1.பிறகொருநாள் கோடை' கவிதையின் ஆசிரியர் யார் ?
2. ‘நெடுநல்வாடை’ - மொத்தப் பாடல் அடிகள் எத்தனை?
3. வளைஇ-இலக்கணக்குறிப்புத் தருக.
நடுத்தரச் சிந்தனை வினாக்கள் MOT QUESTIONS
1. நக்கீரர் சிறுகுறிப்புத் தருக
2.நெடுநல்வாடை' பெயர்க்காரணம் தருக.
3. நகரம் பட்டை தீட்டிய வெள்ளை வைரமாகக் காரணம் என்ன?
உயர்தரச் சிந்தனை வினாக்கள் HOT QUESTIONS
1. ‘ஆர்கலி’ என்பதன் பொருள் என்ன?
2. ‘புதுப்பெயல்' என்பதில் பெயல் என்றால் என்ன?
3. மழை முடிந்து சூரியன் வரும் காட்சியைப் ‘பிறகொருநாள் கோடை’ பாடலின் கருத்துவழி
விவரி.
4.நெடுநல்வாடை' ஏன் வாகைத் திணையைக் குறிக்கின்றது என்பதை தகுந்த காரணத்துடன் நிறுவுக.
5. கோவலர் அடைந்த துயரம் பற்றி எழுதுக.
தொடர்பணி
1) மழை தொடர்பான கவிதைகளை வாசித்தல்.
2) தற்கால வாழ்க்கை முறையில் மழை, குளிர்காலத்தின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவது குறித்துக் கட்டுரை எழுதுதல்.
எம்.ஏ.ஜெலஸ்டின் , முதுகலைத் தமிழாசிரியர், கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில் - 9843448095
Click Here to download the document.
வகுப்பு : 12
ஜூலை 1 ஆவது வாரம் - பாடக்குறிப்பு Click Here