11T 1 MID-MQP 3 - 2025 முதல் இடைத் தேர்வு
மாதிரி வினாத் தாள் - 3 வகுப்பு-1 1
நேரம்: 1 . 30 மணி பொதுத்தமிழ் மதிப்பெண் : 50
I. அனைத்து வினாக்களுக்கும் விடை தருக 8 x 1 = 8
1. துன்பப்படுபவர் _____________ ( மே 2022, மார்ச் 2024 )
அ) தீக்காயம்பட்டவர்
ஆ) தீயினால் சுட்டவர்
இ) பொருளைக் காக்காதவர்
ஈ) நாவைக் காவாதவரகாவாதவர்
2.. 'போது' என்ற சொல் உணர்த்தும் பொருள்
அ) போதும்
ஆ) காடு
இ) மொட்டு
ஈ) மேகம்
3. தமிழின் முதல் பாவடிவ நாடக நூல் (ஆகஸ்ட் 2022, மார்ச் 2023)
அ) இரக்சிய வழி
ஆ) மனோன்மணீயம்
இ) நூல்தொகை விளக்கம்
ஈ) திருவிதாங்கூர் அரசர் வரலாறு
4. கவிதையினை இயன்றவரை பேசுவதுபோல் எழுதுவதுதான் உத்தமம் என்றும் அதுவே மானுடத்துக்கு எழுத்தாளர்கள் செய்யும் கடமை என்றும் கூறியவர் (மார்ச் 2020 )
அ) மகாகவி பாரதியார்
ஆ) இராசேந்திரன்
இ) எர்னஸ்ட் காசிரர்
ஈ) வால்ட் விட்மன்
5. பிழையான தொடரைக் கண்டறிக
அ) பதநீரிலிருந்து பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்றவற்றைத் தயாரிக்கின்றனர்.
ஆ) காயா, கொன்றை, பிடவம் ஆகிய மலர்கள் முல்லை நிலத்தில் பூக்கக்கூடியன.
இ) குறைந்த எட்டுத்தொகை அடிகளை ஐங்குறுநூறு நூல்களுள் உடையது.
ஈ) யானைகளால் வெகு தொலைவில் உள்ள நீரினை வாசனை மூலம் அறிய முடியும்
6.மண்ணுக்கு வளம் சேர்ப்பன ( மார்ச் 2023,ஜூன் 2024 )
அ) மண்புழு
ஆ) ஊடுபயிர்
இ) இயற்கை உரங்கள்
ஈ) இவை மூன்றும்
7. தவறான இணையைத் தேர்வு செய்க ( மார்ச் 2025 )
அ) மல்லி + இலை - உயிர் + மெய்
ஆ)கலை + அழகு - உயிர் + உயிர்
இ) பல் + பொடி - மெய் + மெய்
ஈ) மெய் + அறிவு - மெய் உயிர்
8.’யானை டாக்டர்’ சிறுகதை இடம் பெற்ற நூல்
அ) கொற்றவை
ஆ) அறம்
இ) மத்தகம்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
குருசடி எம்.ஏ. ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர், கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில்- 4, 9843448095
II. எவையேனும் நான்கு வினாக்களுக்கு விடை தருக 4 x 2 = 8
9. மனோன்மணீயம் நூல் பற்றி சிறுகுறிப்புத் தருக.
10. சீர்தூக்கி ஆராய வேண்டய ஆற்றல்கள் யாவை ? ( செப் 2020 , மார்ச் 2023 )
11. “உழுவோர்க்கெல்லாம் விழுமிய வேந்து நீ” - தொடரின் பொருள் யாது?
12. பேச்சு மொழி எழுத்து மொழியைக்காட்டினும் அதிக உணர்ச்சி வெளிப்பாட்டுச் சக்தி மிக்கது ஏன்? ( மார்ச் 2024 )
13. ஐந்து வேளாண்மை மந்திரங்கள் யாவை ?
(மார்ச் 2019 மார்ச் 2024 , செப் 2020 )
III. எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடை தருக 3 x 4 = 12
14. குறித்த காலத்திற்கு முன்பாக ஊர் திரும்பிய தலைவன் கூறுவனவற்றை ஐங்குறுநூறு கொண்டு விளக்குக.
15. சொற்பொருள் பின்வரும் நிலை அணியை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
( ஜூன் 2019,2023, மார்ச் 2024 )
16.. வேதிக்கலப்பில்லாத பூச்சிக்கொல்லி நடைமுறைக்குச் சாத்தியமா? நும் கருத்தை எழுதுக.
( மார்ச் 2020, மார்ச் 2023 )
17.நேரடி மொழி என்பதை நும் பாட வழி நின்று எழுதுக. ( மே 2022 )
IV. எவையேனும் ஐந்து வினாக்களுக்கு விடை தருக 5 x 2 = 10
18.மயங்கொலிச் சொற்களை ஒரே தொடரில் அமைத்து எழுதுக.
குரை, குறை ( செப் 2021 , ஜூலை 2024 )
19. பேச்சு வழக்கை எழுத்து வழக்காக மாற்றுக,
அ) தேர்வெழுத வேகமாப் போங்க நேரங்கழிச்சி போனாப் பதட்டமாயிரும்.
( ஜூன் 2019, மே 2022, ஆகஸ்ட் 2022 )
ஆ) முயற்சி செஞ்சா அதுக்கேத்த பலன் வராமப் போவாது,
( ஜூன் 2019, செப் 2021, மே 2022, ஆகஸ்ட் 2022
20. தொடரில் உள்ள சொற்களை ஒழுங்குபடுத்தி இரண்டு சொற்றொடர்களாக்குக
நிலவு வீசுவதால் தெற்கிலிருந்து மாலை தென்றல் மகிழ்விக்கும் எனப்படுகிறது மனதை.
( மார்ச் 2020,மார்ச் 2025 )
21. ஏதேனும் ஒன்றனுக்கு மட்டும் உறுப்பிலக்கணம் தருக
அ) முளைத்த ( மார்ச் 2024 ) ஆ) விடுத்தனை
22.ஏதேனும் ஒன்றனுக்கு மட்டும் புணர்ச்சி விதி தருக
அ) அருவினை ஆ) பூங்கொடி
23. உயிரீறு ,மெய்யீறு பற்றி எடுத்துக்காட்டுடன் எழுதுக. ( மார்ச் 2020,2023)
24. கலைச்சொல் தருக
அ) Harvesting ஆ ) Art Critic
V. ஏதேனும் ஒரு வினாவிற்கு மட்டும் விடை தருக. 1 x 6 = 6
25. ஒவ்வொரு புல்லையும்' கவிதையில் வெளிப்படும் சமத்துவச் சிந்தனைகளைப் புலப்படுத்துக.
26. ‘யானை டாக்டர்’ கதை வாயிலாக இயற்கை, உயிரினப் பாதுகாப்பு ஆகியவை குறித்து நீவர் அறிந்தவற்றைத் தொகுத்து எழுதுக. ( மே 2022 )
VI. அடிபிறழாமல் எழுதுக. 4 + 2 = 6
27.. "ஏடு தொடக்கி ...எனத் தொடங்கும் தண்டியலங்காரம் பாடல்
28. "விடற்கு" என முடியும் திருக்குறள் பாடல்.
குருசடி எம்.ஏ. ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர், கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில்- 4, 9843448095
Click Here to download the document.