Loading ....

12 ஆம் வகுப்பு,தமிழ்,Slip Test 3இயல் 1,இலக்கணம் , மொழிப்பயிற்சி

 ©Tamilamuthu2020official.blogspot.com

                 திருத்தியமைக்கப்பட்ட பாடத்திட்டம்  2021 - 2022

மேனிலை இரண்டாமாண்டு. 

தமிழமுது 2020 -  பயிற்சிப் பாசறை, கன்னியாகுமரி மாவட்டம்.

 SLIP TEST -3

வகுப்பு : 12                                   தமிழ்                                             இயல் : 1

நேரம் : 40 நிமிடங்கள்                                                                  மதிப்பெண் : 30


இலக்கணம் , மொழிப்பயிற்சி

விடைகள்

I.பலவுள் தெரிக                     5 x 1 = 5 


1. இ) வெம்மை + கதிர் 

2. அ) உன்னையல்லால்        

3.ஆ) காட்டுவாத்து      -   அகிலன் 

4.இ) சீர்மோனை, அடிஎதுகை, இயைபு     

5. ஆ) 4 3 2 1   

       

II.அனைத்திற்கும் விடையளி 3 x 2 = 6


அ) வியர்வை வெள்ளம்   - உருவகம்                          

ஆ) இலாத   -  இடைக்குறை                                     

இ) உயர்ந்தோர் -  வினையாலணையும் பெயர்


7. உறுப்பிலக்கணம் தருக 2 x 2 = 4

அ) இருந்தாய்    -   இரு + த் ( ந் ) + த் + ஆய்                                                                          

                               இரு  -  பகுதி

                                    த்    -  சந்தி,  ‘த் ‘ , ‘ந்’ ஆனது விகாரம்

                                    த்    -  இறந்தகால இடைநிலை

                            ஆய்  -  முன்னிலை ஒருமை வினைமுற்று.

ஆ) வந்து              -  வா ( வ ) +  த் ( ந் )  + த் + உ

                          வா       -   பகுதி; ‘வா’,  ‘வ’ - எனக் குறுகியது விகாரம் 

                               த்       -  சந்தி,  ‘த் ‘ , ‘ந்’ ஆனது விகாரம்

                                த்      -  இறந்தகால இடைநிலை

                              உ      -  வினையெச்ச விகுதி.

8. புணர்ச்சி விதி தருக                                                                                                                 3 x 2 =  6

அ) ஆங்கவற்றுள்  = ஆங்கு அவற்றுள்

 விதி : ‘உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்’

                                    ஆங்க் + அவற்றுள்

  விதி : ‘உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே’ 

                                      ஆங்கவற்றுள்

ஆ) செந்தமிழே  = செம்மை   + தமிழ்

 விதி :  ‘ஈறுபோதல்’      > செம் +   தமிழ்

 விதி :  ‘முன் நின்ற மெய் திரிதல்’      >  செந்தமிழ்

   இ) வானமெல்லாம்   =  வானம் + எல்லாம் 

    விதி : ‘ உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே’    >  வானமெல்லாம்.

9. உவமைத் தொடர்களைச் சொற்றொடரில் அமைத்து எழுதுக          2 x 2 = 4

அ) எலியும் பூனையும் போல - எதிரியாக

          ரகுவும், ரவியும் எலியும் பூனையும் போலச் சண்டையிட்டுக் கொண்டனர்.

ஆ) அச்சாணி இல்லாத தேர்போல - சரியான வழிகாட்டி இல்லாத 

          நாட்டை வழிநடத்த சரியான தலைவன் இல்லாததால் நாட்டு மக்கள் அச்சாணி இல்லாத தேர்போல சரிவர இயங்காமல் தவிக்கின்றனர்.

10. இலக்கிய நயம் பாராட்டுக  -

ஏதேனும் நான்கு நயங்கள் மட்டும்   1 x 4 =  4                                                                                                         

முன்னுரை: 

        இப்பாடலைப் பாடியவர் கவியரசு கண்ணதாசன் ஆவார். இவர் புகழ்பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராகப் பதவி வகித்தவர். சாகித்திய அகாதமி விருது பெற்ற கவிஞர் கண்ணதாசன் அவர்கள் எழுதிய இப்பாடலில் காணப்படும் நயங்களை. காண்போம். 

மையக்கருத்து:

        சங்கமாக அமைந்து படைப்பாளர்களையும், படைப்புகளையும் பெருமைப்படுத்தியது தமிழன்னை, என்பதே இப்பாடலின் மையக் கருத்தாகும். 

சொல் நயம்:

        இப்பாடலில்  முச்சங்கம், சொற்சங்கம் ,  முதுபுலவர்,பெருமாட்டி போன்ற சொற்கள் நயமுடன் அமைக்கப்பட்டு இப்பாடல்  சொல்நயம் உடையதாக விளங்குகின்றது.

பொருள் நயம்:

            இப்பாடலில், ‘முச்சங்கங் கூட்டி’ ‘முதுபுலவர் தமைக் கூட்டி’ ‘அளப்பரிய பொருள் கூட்டி’ ‘அற்புதங்கள் எல்லாம் அமைந்த பெருமாட்டி’ என்று தமிழின் பெருமையை, அம்மொழி பெற்றிருந்த சிறப்புகளை உணர்த்த சிறப்பான சொற்களைப் பயன்படுத்தி, தான் கூறவந்த பொருளைச் சிறப்புடன் கூறுவதால் சிறந்த பொருள் நயம் உடையதாக இப்பாடல் அமைந்துள்ளது.

தொடை நயம் :

          பாடலில் மோனை எதுகை இயைபு முரண் அளபெடை ஆகியவற்றைக் கொண்டு கொடுப்பதாகும்

மோனை நயம்:

           சீர்களிலோ, அடிகளிலோ முதலெழுத்து ஒன்றி வரத் தொடுப்பது மோனையாகும். 

இப்பாடலில் சீர்மோனை பயின்று வந்துள்ளது.  

          முச்சங்கம்          -    முதுப்புலவர் 

         ச்சங்கம்           -     ளப்பரிய 

         சொற்சங்கம்    -     சுவை மிகுந்த 

         ற்புதங்கள்    -     அமைத்த

எதுகை நயம்:

          பாடலின் அடிதோறும் அல்லது சீர்தோறும்   முதலெழுத்து அளவொத்து  நிற்க இரண்டாவது எழுத்து ஒன்றி வருவது எதுகை எனப்படும். 

இப்பாடலில் அடி எதுகை பயின்று வந்துள்ளது. 

           முச்சங்கம்             

          அச்சங்கம் 


          சொற்சங்கம் 

          அற்புதம்

இயைபு நயம்:

           பாடலின்  சீர்களிலோ அடிகளிலோ இறுதி எழுத்தோ, அசையோ சொற்களோ ஒன்று போல வருவது இயைபு  ஆகும். 

          இப்பாடலின் அடிகளின் இறுதியில் ‘கூட்டி’ என்ற சொல்லும் இறுதி அடியில் ‘பெருமாட்டி’ என்ற சொல்லும் வந்து ஒரே ஓசையுடன் முடிவதால் இப்பாடலில் இயைபுநயம்  பயின்று வந்துள்ளது

சந்த நயம்: 

             இப்பாடலை ஏற்ற இசைக்கருவிகளுடன் இசைத்து பாடினால், பாடுவோர்க்கும் கேட்பவர்களுக்கும் மிகுந்த கவி இன்பத்தைத் தரும் விதத்தில் எதுகை, மோனை, இயைபு சொற்களை அமைத்து அளவடி சீர்கள்  அமைத்து சுவைபடப்  பாட தகுந்த முறையில் கவிஞர் இப்பாடலை இயற்றியுள்ளார்.

சுவை நயம்:

           தமிழ் மொழியின் சிறப்பைப்  இப்பாடல் கூறுவதுடன் அது வளர்ந்த பெருமையையும் இப்பாடல் சுட்டுவதால் இப்பாடலில்   பெருமித சுவை அமைந்துள்ளது.

முடிவுரை:

            காலம் கவிஞனைக் கொன்றது; ஆனால், அவன் கவிதை காலத்தை வென்றது என்ற கூற்றிற்கு ஏற்ப கவிஞர் கண்ணதாசன் இக்கவிதையில் கவிதைக்குரிய நயங்களை எல்லாம் அமைத்து கவி நயங்களால் தமிழன்னைக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

மாணாக்கரே!

கேள்வியைக் கவனித்து எத்தனை நயங்கள் கேட்கப்பட்டு இருக்கின்றதோ அத்தனை நயங்கள் மட்டும் எழுதினால் போதும்.

11. தமிழாக்கம் தருக                                                                                                    1 x 1 = 1

அ) The  limits  of  my  language  are  the  limits  of  my  world

என் மொழியின் எல்லை என் உலகத்தின் எல்லை.



Follow us on (click the below icons to follow)


Want our Latest Posts?

View Our Blogger(Click The Icon Below)

Tamilamuthu 2020 Official




Keep Supporting Tamilamuthu 2020

Icons from Flaticon    Contact No : 9843448095

©Tamilamuthu2020official.


Slip Test 1 : click here


Slip Test 2 : click here


Slip Test 4 : click here



You have to wait 30 seconds.

Download Timer

Post a Comment