Loading ....

11th Standard- +1Tamil - Tamil -Study Material - NOTES OF LESSON - தமிழ் - 11 ஆம் வகுப்பு - பாடக் குறிப்பேடு - இயல் 1- மொழிமுதல், இறுதி எழுத்துகள்- மொழிப்பயிற்சி

                                                             


11th Standard- +1Tamil - Tamil -Study Material - NOTES OF LESSON - தமிழ் - 11 ஆம் வகுப்பு - பாடக் குறிப்பேடு - இயல் 1- மொழிமுதல், இறுதி எழுத்துகள்- மொழிப்பயிற்சி
                                                              

 
    


                                                                    இனிக்கும் இலக்கணம் 

மொழிமுதல், இறுதி எழுத்துகள்

மொழிப்பயிற்சி

NOTES OF LESSON ( பாடக் குறிப்பேடு ) 




 


வகுப்பு : XI                                                                                  குருசடி      எம். ஏ. ஜெலஸ்டின் 

பாடம்   : தமிழ்                                                                                முதுகலைத் தமிழாசிரியர்

நாள்       :                                                                                                  98434480985

பருவம்   : முதல் பருவம்


இயல்       : 1

அலகு : இனிக்கும் இலக்கணம்  , மொழிப்பயிற்சி

பாடத்தலைப்பு : இனிக்கும் இலக்கணம் 

மொழிமுதல், இறுதி எழுத்துகள்

மொழிப்பயிற்சி

i) சான்றோர் சித்திரம்

ii) தமிழாக்கம் தருக

ii) பிறமொழிச் சொற்களைத் தமிழாக்கம் செய்க

iv) நிகழ்ச்சி நிரலைப் படித்து செய்திக் கட்டுரையாக மாற்றி, நாளிதழில்

வெளியிட கடிதம் எழுதுதல் 

V) பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளித்தல் 

vi) எண்ணங்களை எழுத்தாக்குக

vii) சொற்களை ஒழுங்குப்படுத்தி இரண்டு சொற்றொடர் உருவாக்கு. 

viii) வேர்ச் சொற்களைத் தொடராக்கு

   ix) கலைச் சொல் அறிக 

x) அறிவை விரிவு செய்


பாடவேளை : 4

பக்க எண் : 17  முதல்  25   முடிய

கற்பித்தலின் நோக்கம்:

தமிழ் மொழியைச் சரியாகப் பேசவும் எழுதவும் தமிழ்மொழியின் முதல், இறுதி எழுத்துகளை அறிதல்.

சொற்கள் புணரும் போது ஏற்படும். புணர்ச்சி மாற்றங்களைத் தெரிந்து கொண்டு எழுத்துகளின் மாற்றங்களை அறிதல்.

உயிர்முதல், மெய்ம்முதல், உயிரீறு, மெய்யீறு , எழுத்து அடிப்படையில் வரும் புணர்ச்சி சொற்களின் அடிப்படையில் வரும் புணர்ச்சி மாற்றங்களைப் புரிய வைத்தல்.

குற்றியலுகர ஈறு அடையும் மாற்றங்கள் பற்றிய தெளிவுகள் கொடுத்தல்..

மொழிப்பயிற்சிகளைக் கொடுத்துச் சிறந்த முறையில் தமிழ் எழுதப் பயிற்சிக் கொடுத்தல்

கற்றல் விளைவுகள்

மொழிமுதல், இறுதி எழுத்துகள் எவை என்பதை அறிந்து பிறமொழிக் கலப்பின்றிப் பேசவும் எழுதவும் மாணவன் திறன் பெறல். 

மொழியில் ஏற்படும் சொற்புணர்ச்சி மாற்றங்களை உணர்ந்து சொற்களை இணைத்துச் சொற்றொடர் ஆக்கும் போது ஏற்படும் பிழைகளைத் தவிர்த்தல்.

தமிழ்மொழியின் சிறப்புகளை அறிந்து கொண்டு மொழிப்பயிற்சி வழியாகச்  சிறந்த முறையில் தமிழ் எழுதவும், தமிழாக்கம் செய்யவும், செய்திகளைக் கட்டுரை வடிவம் ஆக்கும் திறனையும் பெறுதல்

பத்திகளைப் படித்துக் கேள்விகளையும் அதற்குரிய விடைகளையும் உருவாக்கும் திறன் பெறுதல். 

படங்களைப் பார்த்துச் சிந்தித்து எழுத்துருவம் கொடுத்தல். 

சொற்களை ஒழுங்குப்படுத்தி இரண்டு சொற்றொடர்களை உருவாக்கும் திறன் அறிதல்.

வேர்ச்சொல்லை அறியவும், வினையெச்சம், வினைமுற்று பெயரச்சம், வினையாலணையும் பெயர் ஆகியவற்றை அறிந்து அச்சொற்களை உருவாக்கும்  திறனைப் பெறுதல்

கற்பித்தல் திறன்கள்

மாணவர்கள் பாடங்களைப் புரிந்து கொள்ள விரிவுரை திறன் மூலம் விளக்குதல்.

மொழிமுதல் மற்றும் இறுதி எழுத்துகளை அறிமுகப்படுத்துதல் திறன் மூலம் அறிய வைத்தல்.

இரண்டு சொற்களை இணைத்து எழுதி அவை புணரும் போது ஏற்படும் மாற்றங்களை எடுத்துக்காட்டு மூலம் விளக்குதல் திறன் மூலம் புரிய வைத்தல்.

உயிர்முதல், மெய்ம்முதல், உயிரீறு, மெய்யீறு என்பவை என்ன? என்று கேள்விக் கேட்டல் திறன் மூலம் புரிய வைத்தல்.

சொற்களின் அடிப்படையில் வரும் புணர்ச்சி மாற்றங்களையும், எழுத்து அடிப்படையில் வரும் புணர்ச்சி மாற்றங்களையும் விளக்கக் காட்சி மூலம் விளக்குதல் திறன் மூலம் அறிய வைத்தல்.

குற்றியலுகர ஈறுகள் அடையும் மாற்றங்களை மாணவர்களைக் குழுக்களாக அமைத்து மாணவர் அறிக்கைகள் திறன் மூலம் புரிய வைத்தல். மொழித்திறனை வளர்க்க தரப்பட்டுள்ள மொழியை ஆவோம், மொழியோடு விளையாடு, நிற்க அதற்கு தக என்னும் பகுதிகளில் அமைந்துள்ள பயிற்சிகளை வலுவூட்டுதல் திறன் மூலம் புரிய வைத்தல்

கற்பித்தலில் நுண்திறன்கள்

பல வகை தூண்டும் வினாக்கள் மூலம் மொழிப்பயிற்சியில் உள்ள வினைமுற்று, வினையெச்சம், பெயரெச்சம் ஆகியவற்றை புரிய வைத்தல்..

சரளமாக வினாக்களைக் கேட்டல் நுண்திறன் மூலம் குற்றியலுகர எழுத்துகள் பற்றிக் கேட்டல்

விரி சிந்தனையைத் துண்டும் வினாக்களைக் கேட்டல் நுண்திறன் மூலம் பத்திகளைப் படித்துக் கேள்விகளையும், விடைகளையும் உருவாக்கும் திறன் உருவாக்கல். 

தகவல் பரிமாற்றத்தை நிறைவு செய்தல் நுண் திறன் மூலம் மாணவர்கள் சொல்லும் வேர்ச்சொல் ,வினைச்சொல் ,  வினைமுற்று பற்றி புரிய வைத்தல்.

மேலும்,  திரும்ப கூற வேண்டியவற்றைத் திட்டமிடல், பாடம் முடித்தல் ஆகிய நுண்திறனகள் மூலம் கற்பித்திருக்கும் பாடப்பகுதியை மாணவர்களின் மனதில் புரிய வைத்தல். ஆயத்தப்படுத்தல்

ஒரு சில சொற்களைக் கூறி அந்தச் சொல்லில் முதலில் வரும் எழுத்து என்ன வகை எழுத்து என்று கேட்டல், 'அம்மா' இச்சொல்லின் முதல் எழுத்து என்ன? 'வந்தாள் - இச்சொல்லின் இறுதி எழுத்து என்ன? 'மணி + அடித்தது' இவ்விரு சொற்களில் நிலை மொழி எது? வருமொழி எது?  என்பன போன்ற உரையாடலை நடத்தி, வகுப்பறையில் கற்றல் சூழலை உருவாக்குதல்.

சில ஆங்கிலப் பழமொழிக்கு இணையான தமிழ்ப்பழமொழிகளைக் கூறுதல்.

‘வந்தான்’  இச்சொல்லின் வேர்ச்சொல் என்ன ? என்ற கேள்விக் கேட்டு, மாணவர்களிடமிருந்து சில சொற்களைக் கேட்டு அச்சொற்களின் வேர்ச்சொற்களைக் கூற வைத்து  மொழிப்பயிற்சியினைக் கற்கும் சூழலை உருவாக்குதல். இவ்வாறு செய்வதால் மாணவர்களின் கற்கும் ஆர்வம் அதிகமாகும்.


அறிமுகம்

சில சொற்களைக் கூறுக? உயிரெழுத்து, மெய்யெழுத்து, உயிர்மெய்யெழுத்து, ஆகியவற்றைக் கூறி நினைவு படுத்துதல் வேண்டும். சில சொற்களைக் கூறி அவை இரண்டு சொற்களின் இணைப்பு என்பதை உறுதிப்படுத்திக் கீழ்வகுப்பில் கற்ற சேர்த்தெழுதுக, பிரித்தெழுதுக பயிற்சிகளை மனதில் கொண்டு வர கூறுதல். இவற்றையே புணர்ச்சி என்ற இலக்கணமாகக் கற்க இருக்கிறோம் என்று அறிமுகம் செய்தல்.

சில சொற்களை மாற்றி மாற்றி கரும்பலகையில் எழுதி அதனை ஒழுங்குபடுத்த  கூறுதல் வேண்டும்.


துணைக் கருவிகள்:

1. பாடம் தொடர்பான QR CODE காணொலிகள் .

2. ஒரு சில காட்சிப் படங்கள்.

3. வேர்ச் சொற்கள் எழுதிய அட்டை.

4. தமிழ் எழுத்துகளும் அவற்றின் வகைகளும் குறித்த அட்டை.

5. கலைச்சொல் மற்றும் அறிவை விரிவு செய் குறித்த PPT.

கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள் 

ஆசிரியர் செயல்பாடு

         கற்பிக்க இருக்கும் பாடப் பகுதியான இனிக்கும் இலக்கணப் பகுதியான மொழிமுதல், இந்தி எழுத்துகள் என்ற இலக்கணப் பகுதியையும், மொழிப்பயிற்சியில் கற்பிக்க இருக்கும் பகுதிகளையும் நன்றாக அறிந்து கொண்டு, அதன் பிறகு கற்பிக்க இருக்கும் பாடப்பகுதிகளை மாணவர்கள் புரியும் விதத்தில் வாய்விட்டுத் தெளிவாக வாசித்தல் வேண்டும்.

          பாடப்பகுதிகளை மாணவர்கள் வாசிக்க தூண்ட வேண்டும். உரத்த குரலில் மாணவன் பாடப் பகுதியை வாசித்தல் வேண்டும் .மாணவர்களை வாசிக்க வைத்தல் வேண்டும். பாடப் பகுதியை மாணவன் வாசிக்க தடுமாறினால் தடுமாறும் மாணவர்களுக்கு வாசிப்புப் பயிற்சி வழங்குதல் வேண்டும். இதனால் வகுப்பில் இருக்கும் அனைத்து மாணவர்களுக்கும் வாசிக்கும் திறன் எளிதில் கிடைக்கும்.

பாடப்பகுதிகள்

மொழிமுதல், இறுதி எழுத்துகள்

மொழிமுதல் எழுத்துகள் 22 என்பதையும் அவை ஏன் மொழி முதல் எழுத்துகள் என்பதையும் விளக்குதல்.

உயிர்-12; மெய் 10 என்பதை அறிய தகுந்த எடுத்துக்காட்டுகளைக் கரும்பலகையில் எழுதி புரிய வைத்தல்.  “ங்” எப்படி மொழி முதல் எழுத்தாகும். என்பதை தகுந்த சான்றுகளுடன் விளக்குதல்.

மொழி இறுதி எழுத்துகள் 24 ; அவை உயிர் - 12; மெய்- 11  மொழிஇறுதி குற்றியலுகரம்-1 என்பதை விளக்குதல்.

உயிரீறு மெய்யீறு என்பதை பற்றிய விளக்கம் கொடுத்தல்.

புணர்ச்சியில் நிலைமொழி, வருமொழி பற்றிய சரியான புரிதலைக் கொடுத்தல்.

மணி + மாலை எவ்வாறு உயிரீறு ஆகும் என்பதையும், பொன் + வண்டு இதில் நிலைமொழி எழுத்து எவ்வாறு மெய்யீறு ஆகும் என்பதையும் கரும்பலகையில் எழுதி விளக்குதல்.. உயிர்முதல், மெய்ம்முதல்

வாழை + இலை வருமொழியின் முதலெழுத்து ஏன் உயிர்முதல் என்பதையும், 

தமிழ் + நிலம் - வருமொழியின் முதலெழுத்து ஏன் மெய்ம்முதல் என்பதையும் புரிய வைத்தல் எழுத்துகளின் அடிப்படையில் ஏற்படும் புணர்ச்சிகளான,

உயிர் + உயிர் : மெய்+உயிர்: உயிர்+மெய்; மெய் + மெய் என்பதை விளக்குதல்..

சொற்களின் அடிப்படையில் ஏற்படும் புணர்ச்சிகளான,

பெயர் + பெயர் : பெயர் + வினை: வினை +வினை: வினை+ பெயர் என்பதைத் தகுந்த 

எடுத்துக்காட்டுகளுடன் மாணவர் மனதில் பதிய வைத்தல் வேண்டும். 

குற்றியலுகர எழுத்துகள் எவ்வாறு புணரும் என்பதையும், குற்றியலுகர நிலைமொழி குறித்தும் விளக்கிக் கூறுதல்.

மொழிப்பயிற்சி 

சான்றோர் சித்திரம் தரும் செய்திகளையும் அந்தச் செய்தியைப் படித்துப் பொருளுணர்ந்து, விடை எழுத்தும் முறையைக் கற்றுக் கொடுத்தல். 

தமிழ் மொழிக்கு ஏற்ற ஆங்கிலப் பழமொழிகளை அறிய வைப்பதோடு, ஏற்ற முறையில்

மொழிப்பெயர்க்கும் பயிற்சியினைக் கொடுத்தல். 

தமிழில் வழங்கும் பிறமொழிச் சொற்களைக் கண்டறியும் திறனைக் கற்றுக் கொடுத்து ஏற்ற தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்த பயிற்சிக் கொடுத்தல்.

நிகழ்ச்சி நிரலைப் படித்து அதனை எவ்வாறு கட்டுரை ஆக்குவது என்பதையும் அக்கட்டுரையின் பொருளை உணர்ந்து நாளிதழில் வெளியிட கடிதமாக எழுதும்  பயிற்சியினைக்கொடுத்தல். 

தரப்படுகின்ற பத்தியினைப் படித்துக் கேட்கப்பட்டிருக்கும் வினாக்களுக்கான விடைகளைச் சிந்தித்து எழுதும் பயிற்சியைக் கொடுத்தல்.

கொடுக்கப்பட்டுள்ள படத்தினைப் பார்த்து மனதில் தோன்றும் எண்ணங்களை வார்த்தைகளாகும் நுட்பத்தைக் கற்றுக் கொடுத்தல். 

ஒழங்கற்ற முறையில் இருக்கும் சொற்களை அறிந்து இரண்டு வாக்கியங்களை அமைக்கும் திறனைக் கற்றுக் கொடுத்தல். 

ஒரு சில வேர்ச்சொற்களைக் கூறி அதில் இருந்து எப்படி வினைமுற்று, பெயரச்சம், வினையெச்சம், வினையாலணையும் பெயர் ஆகியவற்றை உருவாக்குதல் என்ற முறையைக் கற்றுக் கொடுத்தல்.

கலைச் சொற்களை அறிந்து கொள்ள முறையான பயிற்சிக் கொடுத்தல்.

மாணவர் செயல்பாடுகள்:

பாடப்பகுதிகளை வாய்விட்டு உரத்த குரலில் வாசித்து வாசித்தல் திறனை மேம்படுத்துதல் வேண்டும்.

சொற்களில் வரும் மொழிமுதல், இறுதி எழுத்துகளை அறிந்து அவை ஏன் மொழி  முதல், இறுதி எழுத்துகள் என்பதை அறிந்து சொற்கள், சொற்றொடர்கள் அமைக்கும் போது தவறில்லாமல் எழுத அறிந்து கொள்ளும் வகையில் பயிற்சி வழங்குதல்.

நிகழ்ச்சிகளைப் பற்றி தனித்தனிக் குமுக்களாக விவாதித்து அதனைப் பத்திரிகைகளில் வெளியிடும் செய்திகளாக உருவாக்க பயிற்சி வழங்குதல்.

மாணவர்களைக் குழுக்களாகப் பிரித்து ஒவ்வொரு குழவிற்கும் ஒரே படத்தினைக் கொடுத்து அக்குழுவில் கலந்துரையாடலை  நடத்த கூறி குழுவின் எண்ணங்களைக் எழுத்துகளாக்கித் தர கூறுதல்.

வலுவூட்டல்  செயல்பாடுகள்

இலக்கணப் பகுதிகளைச் சரியாகப் புரிந்தால் மட்டுமே  மாணவர்கள் எழுத்துப் பிழைகளைத் தவிர்ப்பார்கள் என்பதை உணர்ந்து, பொதுவாக மாணவர்கள் எழுதும்போது ஏற்படும் எழுத்துப் பிழைகளையும், சொற்கள் இணையும் போது ஏற்படும் மாற்றங்கள் பற்றிய விளக்கங்களையும், தவறுகள் செய்து கொண்டிருந்தால்,  அத்தவறினை எவ்வாறு சரி செய்ய வேண்டும் என்பதையும் தகுந்த சான்றுகள் மூலம் எடுத்துக் கூறி பாடப் பொருளை மாணவர் மனதில் பதிய வைத்தல். குறைதீர் கற்பித்தல்

பாடப்பகுதிகளைப் புரிந்து கொள்ளும் திறன் குறைந்த மெல்ல கற்கும் 

மாணவர்களுக்குத்   தமிழ் எழுதும் போதும், பேசும்போதும் ஏற்படும் பிழைகள்  குறித்த 

தெளிவான விளக்கங்களைத் தகுந்த சான்றுகளுடன் புரியவைத்தல்.

மதிப்பீடு 

எளிய சிந்தனை வினாக்கள் (LOT QUESTION)

1) உயிரெழுத்துகள் எத்தனை? அவையாவை? 

2) நிலைமொழி என்றால் என்ன? அவன் +வந்தான் இதில் நிலைமொழி எது?

நடுத்தர சிந்தனை வினாக்கள் (MoT QUESTION)

1) குற்றியலுகர வகைகளை எழுதுக? 

2) மெய்ம்முதல் என்றால் என்ன விளக்குக.

உயர் சிந்தனை வினாக்கள் (HOT QUESTION ) 

1) தமிழ் + நிலம் - இதில் வருமொழியில் இடம் பெறுவது உயிர்முதலா ? மெய்ம்முதலா என்பதை விளக்குக.விளக்குக.

2) ஓடு, பாடு - இவ்வேர்ச்சொற்களுக்கு உரிய வினைமுற்று. பெயரெச்சம், வினையெச்சம், வினையாலணையும் பெயர்  ஆகியவற்றைத் தருக. 

தொடர்பணி:

1) வகுப்பறையில் உள்ள மாணவர்களின் பெயர்கள் சிலவற்றை எழுதி அப்பெயர்களின் முதல், இறுதி எழுத்துகளைத் தனித் தனியே எழுதி மாணவர்கள் பயின்றள்ள இலக்கணப் பகுதியோடு ஒப்பிட்டு ஆய்வு செய்ய கூறுதல்.


குருசடி      எம். ஏ. ஜெலஸ்டின்

முதுகலைத் தமிழாசிரியர்

98434480985


11 ஆம் வகுப்பு |பாடக் குறிப்பேடு |இயல் 1- மொழிமுதல், இறுதி எழுத்துகள்| மொழிப்பயிற்சி- DOWNLOAD HERE

இயல் 1,2,3 | இலக்கணம் |மொழிப்பயிற்சி | 2 மதிப்பெண் வினா விடைகள் | DOWNLOAD HERE

முதல் இடைத்தேர்வு 2023 - மாதிரி வினாத்தாள் 1 -👇👇👇👇👇DOWNLOAD HERE

 

12th தமிழ் | மாதத் தேர்வு  | இயல் 1 | அலகுத் தேர்வு - 2023| மாதிரி வினாத்தாள் - 1 | DOWNLOAD HERE

12th தமிழ் | மாதத் தேர்வு  | இயல் 1 | அலகுத் தேர்வு - 2023| மாதிரி வினாத்தாள் - 2 | DOWNLOAD HERE

12th தமிழ் | மாதத் தேர்வு  | இயல் 1 | அலகுத் தேர்வு - 2023| மாதிரி வினாத்தாள் - 3 | DOWNLOAD HERE









 12th Standard TAMIL QUESTION 2023 |12TH TAMIL  PUBLIC STUDY MATERIAL (2023) |TWO MARK STUDY MATERIAL



12th Standard TAMIL QUESTION PAPER 2023 |12TH TAMIL PUBLIC EXAM STUDY MATERIAL 2023 |MODEL QUESTION PAPER -1(2023)

12th Standard TAMIL QUESTION PAPER 2023 |12TH TAMIL PUBLIC EXAM STUDY MATERIAL 2023 |MODEL QUESTION PAPER - 5 (2023)|WITH ANSWER KEY













Post a Comment

Previous Post Next Post