12th Standard- +2Tamil - Tamil -Study Material - NOTES OF LESSON - தமிழ் - 12 ஆம் வகுப்பு - பாடக் குறிப்பேடு - இயல் 2-பெருமழைக்காலம்-பிறகொருநாள் கோடை- நெடுநல் வாடை
இயல் - 2
உரைநடை : பெருமழைக்காலம்
செய்யுள் : பிறகொருநாள் கோடை - அய்யப்ப மாதவன்
நெடுநல் வாடை - நக்கீரர்
NOTES OF LESSON ( பாடக் குறிப்பேடு )
வகுப்பு : XII
பாடம் : தமிழ்
நாள் :
பருவம் : முதல் பருவம்
இயல் : 2
அலகு : உரை நடை , செய்யுள்
பாடத்தலைப்பு : உரைநடை
பெருமழைக்காலம் (உரையாடல்)
செய்யுள்
பிறகொரு நாள் கோடை
அய்யப்பமாதவன்
நெடுநல் வாடை
நக்கீரர்
பாடவேளை : 4
பக்க எண் : 24 முதல் 31 வரை
கற்பித்தலின் நோக்கம்
உலகப் புவி நாளை அறிவதுடன், இயற்கையைப் பேணுதலை மாணவன் அறிதல்.
பெருமழைக் காலங்களில் தற்காத்துக் கொள்ள கூடிய முன்னெச்சரிக்கை
நடவடிக்ககைகளை அறிதல்.
வெள்ளச்சமவெளிகளைப் பாதுகாப்பதன் அவசியத்தை அறிதல்.
கோடை மழை தரும் சுகத்தையும் அம்மழை ஏற்படுத்தும் தாக்கங்களையும் அறிதல்.
குளிர் காலத்தில் கோவலர்கள் அடையும் துயரம்: விலங்குகள், பறவைகள்
அடையும் துயரம் ஆகியவற்றை அறிதல்.
பண்டைய தமிழர் வாழ்வில் கார்காலம், குளிர்காலம் பற்றிய புரிதலை அறிதல்.
கற்றல் விளைவுகள்
பருவ மாற்றத்திற்கான காரணங்களை அறிந்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் விழிப்புனர்வைப் பெறுதல்
இயற்கை நிகழ்வினால் மனிதர் அடைகின்ற உள்ள நெகிழ்ச்சியை உணர்ந்து இயற்கையை விரும்பும் குணத்தைப் பெறுதல்.
பழந்தமிழர் திணை வாழ்வைச் சங்கப் புலவர்கள் கவிதையாக்கிய நயத்தை உணர்ந்து, மழை அல்லது இயற்கை பற்றிய சொந்த கவிதைகளை உருவாக்கும் திறன் பெறுதல்.. வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் மனித தன்மையோடு நடந்து கொள்ளும் பண்பைப் பெறுதல்.
வெள்ளச்சமவெளிகளையும், வெள்ளம் ஓடும் பாதைகளையும் பாதுகாக்க வேண்டும். என்ற விழிப்புணர்வையும் பெறுதல்.
பேரிடர் காலங்களில் குழுவாகச் செயல்பட வேண்டும் என்ற பண்பைப் பெறுதல்.
கற்பித்தல் திறன்கள்
மாணவர்கள் பாடங்களைப் புறிந்து கொள்ள விரிவுரை திறன் மூலம் பாடங்களை விளக்குதல்.
பருவ காலங்களை அறிமுகப்படுத்துதல் திறன் மூலம் அறிமுகப் படுத்துதல்.
பருவ காலங்களில் ஏற்படும் மாற்றங்கள் குறித்த கேள்விகளைக் கேட்டு, கேள்விகள் கேட்டு புரிய வைத்தல் திறன் மூலம் புரிய வைத்தல்.
உலகின் பல்வேறு நாடுகளில் ஏற்படுகின்ற பேரிடர் நிகழ்வுகளை எடுத்துக் கூறி, எடுத்துக்காட்டு மூலம் விளக்குதல் திறனைப் பயன்படுத்திக் கற்பித்தலை மேம்படுத்த வேண்டும்.
பல்வேறு நாடுகளில் நடந்த போரிடர் தொடர்பான விளக்கப் படங்களைக் காட்சிப் படுத்துதல் திறன் மூலம் மாணவர்களுக்கு வழங்குதல்.
சமீபகாலங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குத் தொடர்பான செய்திகளைச் சேகரித்து அறிக்கைகள் தரும் திறன் மூலம் பாடம் பகுதிகளாப் புரிய வைத்தல்.
பழந்தமிழர் புதுமழை காலங்களில் ஏற்பட்ட குளிரைப் போக்க பயன்படுத்திய வழிமுறைகளை இன்றைய நடப்பியல் நிகழ்வோடு இணைத்து வலுவூட்டல் திறன் மூலம் புரிய வைத்தல்.
புதுக்கவிஞரான அய்யப்ப மாதவனின் 'இன்று’ என்ற குறும்படத்தைக்
காணொலியாகக் காண்பித்து அவரது இயற்கை ஆர்வத்தைச் சிக்கலற்ற மற்றும் சுருக்கமான பாட இலக்கை அடையும் திறனுக்காகப் பயன்படுத்திக் கற்பித்தலை மேம்படுத்த வேண்டும்.
கற்பித்தலில் நுண்திறன்கள்
பலவகை தூண்டும் வினாக்கள் நுண் திறன் மூலம் பேரிடம் என்றால் என்ன?
ஏன் பேரிடர் என்கிறோம் எனக் கேட்டு புரிய வைத்தல்
சரளமாக வினாக்களைக் கேட்டல் நுண்திறன் மூலம் இதற்கு முன்பு தமிழகத்தைப் பாதித்த புயல்களின் பெயர்களைக் கேட்டல்
விரி சிந்தனையைத் தூண்டும் வினாக்களைக் கேட்டல் நுண் திறன் மூலம் மழை பெய்து முடிந்த பிறகு ஒரு நகரம் எப்படிக் காட்சியளிக்கும், மழைத்துளி, மழையின் சுவடுகள் குறித்த புரியதலை ஏற்படுத்துதல் வேண்டும்.
தகவல் பரிமாற்றத்தை நிறைவு செய்தல் நுண்திறன் மூலம் வெள்ளப்பெருக்கு மற்றும் பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகளைப் புரிய வைத்தல்.
மேலும், திரும்ப கூற வேண்டியவற்றைத் திட்டமிடல், பாடம் முடித்தல் ஆகிய
நுண்திறன்கள் மூலம் கற்பித்திருக்கும் பாடப்பகுதியை மாணவர்கள் மனதில் புதிய வைத்தல்.
ஆயத்தப்படுத்துதல்
பெருமழைக் காலங்களில் ஏற்படும் பாதிப்புகள் குறித்துக் கேட்டல், புயவால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கலந்துரையாடல் நடத்திக் கற்றலில் ஆர்வத்தை ஏற்படுத்துதல். ஊர்களைச் சுற்றி இருக்கும் குளம், குட்டை, ஏரி, ஆறு ஆகியவைப் பற்றியும் வெள்ளாப் பெருக்குக் காலங்களில் அவற்றின் பயன்பற்றியும் கலந்துரையாடல் நடத்துதல்..
தொலைக்காட்சிகளில் பார்த்த வெள்ளப்பெருக்கு பேரிடர் காட்சிகளை நினைவிற்குக் கொண்டு வர கூறல். மழையில் நனைந்து விளையாடும் சிறுபருவ நிகழ்வுகளையும், பெருமழைக்காலத்தில் மக்களும் விலங்குகள், பறவைகள் அடையும் பெருந்துயரம், மற்றும் அன்றாட வாழ்க்கை பாதிப்புப் பற்றிக் கலந்துரையாடல் நடத்துதல்.இவ்வாறு கலந்துரையாடல் , மற்றும் ஆர்வம் ஊட்டுதலால் மாணவர்கள் கற்றலில் அதிக ஆர்வத்தோடு பங்கேற்பர் .
அறிமுகம்
ஓகி புயல் நிகழ்வுகளை நினைவு படுத்தி, அப்போதைய சூழலில் பொதுமக்கள் அடைந்த துயரங்களைக் கூறுதல்.
வர்தா புயல் ஏற்படுத்திய பாதிப்புகளை நினைவுபடுத்துதல். பெருமழைக் காலங்களில் வானிலை ஆய்வு மையம் வெளியிடும் அறிக்கைகளை ஒலிப்பதிவு செய்து அச்செய்தியை ஒலித்துக் காட்டுதல்.
கோடைக் கால மழையை விரும்பும் நகர மக்களின் வாழ்வியலையும் மழை பெய்து ஓய்ந்த பிறகு அதனை பற்றி அவர்கள் வெளிப்படுத்தும் ஏக்கத்தையும் அறிய வைத்தல்.
‘நெடுநல் வாடை’ என்ற காவியம் வாடை காலத்தில் கோவலர் அடைந்த துன்பங்களை வர்ணிக்கும் திறனை கதை போலக் கூறுதல்.
துணைக்கருவிகள்
1. பாடம் தொடர்பான QR CODE காணொலிகள்
2. வெள்ளப் பெருக்கை உணர்த்தும் காணொலி
3. பெருமழைக் காலம் உரைநடை பாடத்திற்கான PPT
4. வெள்ளப் பெருக்குச் செய்திகள் அடங்கிய படத்தொகுப்பு
5. அய்யப்ப மாதவனின் ‘ இன்று’ கவிதைக் குறும்படக் காணொலி
6. ‘நெடுநல் வாடை’ மனப்பாடப்பாடல் காணொலி
கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்
ஆசிரியர் செயல்பாடு
கற்பிக்க இருக்கும் பாடப்பகுதியான பெருமழைக்காலம், பிறகொருநாள் கோடை, நெடுநல்வாடை ஆகிய பாடப்பகுதிகளை நன்றாக அறிந்து கொண்டு அதன்பிறகு கற்பிக்க இருக்கும் பாடப் பகுதிகளை மாணவர்கள் புரியும் விதத்தில் வாய்விட்டுத் தெளிவாக வாசித்தல் வேண்டும்.
பாடப்பகுதிகளை மாணவர்கள் வாசிக்க தூண்ட வேண்டும். உரத்த குரலில் மாணவனைப் பாடப் பகுதியை வாசிக்க வைத்தல் வேண்டும். பாடப் பகுதியை மாணவன் வாசிக்க தடுமாறினால், தடுமாறும் மாணவர்களுக்கு வாசிப்புப் பயிற்சி வழங்குதல் வேண்டும். இதனால் வகுப்பில் இருக்கும் அனைத்து மாணவர்களுக்கும் வாசிக்கும் திறன் எளிதில் கிடைக்கும்.
மனப்பாடப் பகுதியை இசையோடு பாடி மாணவர்களுக்குப் புரிய வைத்தல்
வேண்டும்.
பாடப்பகுதிகள்
உரைநடை - பெருமழைக்காலம் (உரையாடல் )
உரையாடல் மூலம் பாடக்கருத்தை எளிதில் புரிய வைக்க வகுப்பில் இருக்கும். மாணவர்களைப் பாடப் பகுதியில் இருக்கும் கதாபாத்திரங்கள் படி உரிய பிரிவுகளைக் கொடுத்து, உரையாடல் நடத்துவதற்கு ஏற்ற சூழலை வகுப்பறையில் உருவாக்கி பாடப்பகுதியை உரையாடல் வழி வெளிக்கொணரல் வேண்டும். இதன்மூலம் மாணவர்களின் கவனிக்கும் திறன் அதிகமாகும்.
நெறியாளர்- அகத்தியன்
பங்கேற்பாளர்கள் : ஆல்வின், முத்தக்குமரன், ஆயிசா, கவின் மலர்
இப்பெயர்களையே மாணவர்களுக்குச் சூட்டி உரையாடலை உரத்த குரலில் வாசிக்க வைத்த பிறகு விளக்குதல் வேண்டும்.
தமிழ்நாடு, ஜம்மு காஷ்மீர், உத்தரகாண்ட், கேரளா ,பீகார் மாநிலங்கள் மழையால் அடையும் பாதிப்புகளை விளக்குதல்.
சில புள்ளி விபரங்கள் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் ஏற்பட்டுள்ள பேரழிவுகளை விளக்குதல். வறட்சிகளைக் கூறுதல்.
'லே' பகுதியில் பெய்த மழை அளவைப் புரிய வைத்தல்..
புயலுக்குப் பெயர்சூட்டும் நாடுகளின் பெயர்களை அறிய வைத்தல்.
புவி வெப்பமடைய காரணம் என்ன? அதற்கான காரணிகள் யாவை என்பதை தகுந்த விளக்கத்துடன் எடுத்துக் கூறுதல்.
'டேவிட் கிங்' கூறிய கருத்தை இன்று சிந்திக்கும் நிலையைப் புரிய வைத்தல்.
புவி வெப்பமயமாதல், தட்ப வெப்ப நிலை மாறுதல்,பசுமைக் குடில் வாயுக்கள், மாற்று ஆற்றல்கள், கார்பன் அற்ற ஆற்றல்கள் பற்றிய புரிதலைத் தகுந்த எடுத்துக்காட்டுடன் விளக்குதல்.
ஐக்கிய நாடுகள் இணைந்து உருவாக்கிய பணித்திட்டம், UNFCCC பற்றிய செய்திகள், உலக நாடுகளின் கூட்டுமுயற்சி. மற்றும் உலக நாடுகள் வெளியேற்றும் ‘பசுமைக்குடில் வாயுகள்’ பற்றிப் புள்ளி விபரங்களைக் கூறுதல்.
இன்றைய சூழல் தொடர்ந்தால் 50 ஆண்டுகளில் கடல்நீர் மட்டம் உயரும் என்பதை அறிய வைத்தல். நீர்ப்பஞ்சம், வெள்ளப்பெருக்கு, வெள்ளச்சமவெளிகள், வெள்ளச் சமவெளியைப் பாதிக்கும் மனிதர்களின் செயல்பாடுகள், அதிகமாக மணல் அள்ளுதல், ஆற்றங்கரைப் படிவுகள் ஆகியவை பற்றி விளக்குதல்
‘தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் செயல்பாடுகள், இணைந்து செயல்படுவது போன்ற செய்திகளை விளக்கிக் கூறுதல். பேரிடரைத் தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளை அறிய வைத்தல்.
செய்யுள்
பிறகொரு நாள் கோடை - அய்யப்ப மாதவன்
கவிஞர் அய்யப்ப மாதவன் பற்றிய குறிப்புகளையும் அவரது தனித் திறமைகள் அவர் படைத்துள்ள கவிதை நூற்களையும் கூறுதல்.
மழையின் தீடீர் பயணம் ,நகரம் வைரமாவது ,சூரியன் நீர் நிலையில் இருந்து நீரை உறிஞ்சுவது, மழைத்துளி வீட்டின் சுவரில் ஓடும் தன்மை, மரங்கள் தலையை அசைத்து மழைத்துளியை உதறுவது: பறவைகளின் உற்சாகம் : மழைக்கனவை மறக்கும் நகரம்; கையில் ஏந்திய மழைத்துளி நரம்புகளின் வழியே இதயத்தைத் தொட்டது; மழைக்காக ஏங்குவது போன்ற செய்திகளை மிகத் தெளிவாக விளக்கிக் கூறுதல் வேண்டும்.
செய்யுள்
நெடுநல் வாடை - நக்கீரர்
நக்கீரர் பற்றிய செய்திகளையும்; அவர் நெடுநல் வாடை காவியத்தை இயற்றிய சூழல் பாடலின் வாகைத்திணை, கூதிர்பாசறை துறை, போர்ப்பாசறை, ஏன் இது நெடுநல் வாடை என்றானது என்ற சொல் விளக்கம் ஆகியவற்றைக் கூறுதல் வேண்டும்.
புதுமழை பெய்ததால் கோவலர்கள் அடைந்த துன்பங்கள், சிரமங்கள், இயல்பு வாழ்க்கைப் பாதிப்பு, அவர்களது உடல் குளிரால் நடுங்கியது. காந்தள் மாலை கசங்கியது. நெருப்பை ஏற்றி சூடேற்றியது, விலங்குகள் பறவைகள் வருத்தம் பற்றி எடுத்துக் கூறுதல் வேண்டும்.பாடப்பகுதியில் இருக்கும் இலக்கணக் குறிப்பு,
பகுபத உறுப்பிலக்கணம், புணர்ச்சி விதி ஆகிய பகுதிகளைக் கரும்பலகையில் எழுதி விளக்குதல்.
மாணவர் செயல்பாடுகள்
பாடப் பகுதியை வாய்விட்டு வாசித்து வாசித்தல் திறனை மேம்படுத்தல் வேண்டும். புவி வெப்ப மடைவதால் ஏற்படும் சூழல்களை அறிந்த பின் அது குறித்த செய்திகளைத்
தங்களுக்குள் உரையாடல் நடத்தி புவி வெப்பமடையாமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளை அறிதல்,
ஊரில் நீர் ஓடும் பகுதிகள் குறித்த வரைப்படத்தை உருவாக்க முயற்சி மேற்கொள்ளல். ஊரின் அமைப்பை அறிந்து கொண்டு வெள்ளச்சமவெளிகளைப் பாதுகாக்க முயற்சி மேற்கொள்ளுதல்.
மழை தரும் பயன்களையும் பருவ மழையின் முக்கியத்துவம் குறித்த அறிக்கையும் தயார் செய்தல்.
வலுவூட்டும் செயல்பாடுகள்
பூமியைப் பாதுகாக்க, இயற்கை வளங்களைப் பாதுகாத்து பூமி வெப்பமடைவதைக் குறைக்கும் . முறைகளைப் புரிந்து கொண்டால் மட்டுமே பேரழிவுகளைத் தவிர்க்க முடியும் என்பதை மாணவர்கள் புரியும் விதத்தில் உலக அளவில் வறட்சியால் பெரும் மழையால், வெள்ளப் பெருக்கால் பேரிடர்களால், செயற்கை விபத்துகளால் ஏற்படும் அழிவுகளைத் தகுந்த ஒளிப்படங்கள், காணொலிகள் மற்றும் செய்தித்தொகுப்புகள் மூலம் எடுத்துக்கூறி பாடப்பொருளை மாணவர்கள் மனதில் பதிய வைத்தல்.
குறைதீர் கற்பித்தல்
பாடப்பகுதியின் உட்பொருளைப் புரிந்து கொள்ளும் திறன் குறைந்த ,மெல்ல கற்கும் மாணவர்களுக்கு, புவிவெப்பமடைதல், பசுமைக் குடில் வாயுக்கள், பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் செயல்பாடுகள். வெள்ளச்சமவெளியின் பயன்கள், மழையின் இன்பம், வாடையால் கோவலர்கள் அடைந்த துன்பம் போன்ற பகுதிகளை மீண்டும் மீண்டும் . தகுந்த சான்றுகளுடன் புரிய வைத்தல். அதுசார்ந்த காணொலிகளை மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டுதல் வேண்டும்.
மதிப்பீடு
எளிய சிந்தனை வினாக்கள் (LOT QUESTIONS )
1. உங்கள் ஊரில் பெருமழையைத்தாங்கும் பகுதிகள் யாவை?
2. நெடுநல் வாடை நூலின் ஆசிரியர் யார்?
நடுத்தர சிந்தனை வினாக்கள் (MOT QUESTIONS)
1.பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் பணிகள் யாவை?
2. நகரம் பட்டை தீட்டிய வெள்ளை வைரமாகிறது' விளக்குக.
உயர்சிந்தனை வினாக்கள் (HOT QUESTION)
1.பசுமைக்குடில் வாயுக்கள் என்றால் என்ன?
2. கார்பன் அற்ற ஆற்றலை விளக்குக.
3. மழைக்கால கனவுகளாக அய்யப்ப மாதவன் கூறுவன யாவை?
4. கோவலர்களின் பழைய வாழ்க்கை முறை ஏன் மாற்றம் அடைந்தது? அவர்களின் வருத்தம் என்ன என்பதை விளக்குக.
தொடர்பணி:
1) வெள்ளப் பேரழிவு குறித்த நாளிதழ்ச் செய்திகளைத் தொகுக்க.
2) மழைத் தொடர்பான கவிதைகளைத் தொகுத்து இதழ் ஒன்று உருவாக்குதல்
3) மழை குறித்து வகுப்பறையில் கலந்துரையாடல் நடத்துதல்.
குருசடி எம். ஏ. ஜெலஸ்டின்
கார்மல் மேனிலைப் பள்ளி
முதுகலைத் தமிழாசிரியர்
நாகர்கோவில்
98434480985
12th TAMIL | இயல் 2| பெருமழைக்காலம் | பிறகொருநாள் கோடை | நெடுநல் வாடை | பாடக்குறிப்பேடு | NOTES OF LESSON | DOWNLOAD HERE
11 ஆம் வகுப்பு |பாடக் குறிப்பேடு |இயல் 1- மொழிமுதல், இறுதி எழுத்துகள்| மொழிப்பயிற்சி-DOWNLOAD HERE
இயல் 1,2,3 | இலக்கணம் |மொழிப்பயிற்சி | 2 மதிப்பெண் வினா விடைகள் | DOWNLOAD HERE
முதல் இடைத்தேர்வு 2023 - மாதிரி வினாத்தாள் 1 -👇👇👇👇👇DOWNLOAD HERE
12th தமிழ் | மாதத் தேர்வு | இயல் 1 | அலகுத் தேர்வு - 2023| மாதிரி வினாத்தாள் - 1 | DOWNLOAD HERE
12th தமிழ் | மாதத் தேர்வு | இயல் 1 | அலகுத் தேர்வு - 2023| மாதிரி வினாத்தாள் - 2 | DOWNLOAD HERE
12th தமிழ் | மாதத் தேர்வு | இயல் 1 | அலகுத் தேர்வு - 2023| மாதிரி வினாத்தாள் - 3 | DOWNLOAD HERE
12th Standard TAMIL QUESTION 2023 |12TH TAMIL PUBLIC STUDY MATERIAL (2023) |TWO MARK STUDY MATERIAL