Loading ....

11 ஆம் வகுப்பு, தமிழ்,புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் பயிற்சி (1-10),one word questions,TRP, TET, TNPSC GROUP EXAM QUESTION

 புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்

வகுப்பு : 11                                       


 தமிழ்    


  75 - கேள்விகள்


பயிற்சி : 1 - 10 




                                       

                                                        

1.  புறப்பொருள் வெண்பாமாலையைப் பாடியவர் யார்?

  ஐயனாரிதனார்


2.  'உலக இலக்கியம்' என்ற நூலின் ஆசிரியர் யார்?

கா.அப்பாதுரையார் 

3  இராகம், தாளம், பண் இவற்றில் ஏழிசையில் இருந்து பிறப்பது எது?

  பண்


4.  நாடகம் என்ற சொல்லாட்சி தொல்காப்பியம் தவிர வேறு இரு நூற்களில் கூறப்பட்டுள்ளதாக நமது பாடப்பகுதி குறிப்பிடும்நூற்கள்யாவை?

பெரும்பாணாற்றுப்படை, சிலப்பதிகாரம்


5.  சங்க இலக்கியம் எவற்றை மையப்படுத்திய கருத்துகளின் தொகுப்பாகும்? 

அகம் புறம்


6.  வடவேங்கடம் தென்குமரி

   ஆயிடைத் தமிழ்கூறு நல்லு லகத்து" - என்று குறிப்பிடும்  ஆசிரியரின் பெயர் என்ன?

  பனம்பாரனார்


7.  உலக நாகரிகத்திற்கு வித்திட்ட தமிழர் வாழ்ந்த பகுதியாக ஹீராஸ் பாதிரியார் குறிப்பிடும் இடம் எது?

இலெமூரியா


8.  உயிர்க்குறில் எழுத்துகள் எத்தனை?

5


9.  செய்யுளிசை அளபெடை உயிரளபெடையின் வகையா? ஒற்றளபெடையின் வகையா?

உயிரளபெடை


10. உயிரளபெடையில் அளபெடுக்கும் எழுத்துகளை எழுதுக.

ஆ.,ஈ ,ஊ,ஏ,ஐ,ஓ,ஔ


11. ஒற்றளபெடை மொத்தம் 11, இதில் எத்தனை மெய்யெழுத்துகள் இடம் பெறும்?

10


12. எது எல்லாம் மூவகை இடம் ? இதில் ‘அவன்’ என்பது எந்த இடத்தைக்   குறிக்கும்.

தன்மை, முன்னிலை, படர்க்கை. அவன் –  படர்க்கை இடம்.


13. தொழிற்பெயர் எவற்றை எல்லாம் உணர்த்தாது?

எண், இடம், காலம், பால்


14. ‘ஆளில்' இச்சொல்லின் வினையடி `ஆள்' என்றால், இச்சொல்லின் தொழிற்பெயர் விகுதி என்ன?

அல்


15. பெயர்ச்சொல், வினைச்சொல், திசைச்சொல், இடைச்சொல், உரிச்சொல், திரிசொல் இவைகளில் எவையெல்லாம் இலக்கண வகை சொற்களுக்கு உரியன.

பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல்  


16.  பருவம்' என்னும் இப்பெயர்ச்சொல் எவ்வகைப் பெயர்ச் சொல்லாகும் ?

இடப்பெயர்


17.  முற்றுப்பெறா வினையின் செயல் எவ்வாறு அழைக்கப்படும்?

வினையெசசம்


18. வந்த மாணவன், வந்து நின்றான் - இதில் எது பெயரெச்சமாகும்?

  வந்த மாணவன்


19. தெரிநிலை வினை எதனை வெளிப்படையாக உணர்த்த வேண்டும்?

காலத்தை /காலம்


20. வந்தான் - இச்சொல் உணர்த்தும் காலம் எது?

இறந்தகாலம்


21. பெயர்ச்சொல் வினைச்சொல், இடைச் சொல் - இதில் தனித்து நடக்கும் ஆற்றல் இல்லாத சொல் எது?

இடைச்சொல்


22. நால்வகைச் சொற்களுள் செய்யுளுக்கு மட்டுமே உரிமை பெற்று வரும்.சொல் எது?

உரிச்சொல்


23. தமிழ்மொழியில் வினைச் சொல்போல திணை, பால், எண், இடம் என்ற நான்கினையும் உணர்த்தும்  இன்னும் ஒரு சொல்வகை யாது?

பெயர்ச் சொல்


24. திணையின் பொருளைக் கூறுக.

  ஒழுக்கம் (அ) இனம்


25. காகம், மேஜை, முருகன் குமரன், மணி, யானை இவற்றில்  எவையெல்லாம்  அஃறிணை சொற்கள்?

காகம், மேஜை, மண்,யானை


26. உயர்திணைக்குரிய பால் பகுப்புகள் எத்தனை?

  3


27. கல் மரம், அது, மலை, அவை -. இவற்றில் அஃறிணைக்குரிய பலவின் பால்  சொல்லினைக் கூறுக

அவை


28. ஆண்பால், பெண்பால், ஒன்றன்பால் இதில் ஒருமைக்குரிய பாலினை  எழுதவும்.

ஆண்பால், பெண் பால், ஒன்றன்பால்.


29. இலக்கண அடிப்படையில் இடத்தின் வகைகளை எழுதுக.

தன்மை, முன்னிலை, படர்க்கை.


30 .பகுபதத்தின் வகையை எழுதுக

பெயர்ப் பகுபதம், வினைப்பகுதம்


31 .பகுதி ஒரு _________பதம்.

  பகாப்


32. சாரியை இடத்தில் 'த் ' வந்தால் அது எவ்வாறு அழைக்கப்படும்.

சாரியை


33. யாப்பிலக்கணத்தின் இரு வகையை எழுதுக.

  உறுப்பியல், செய்யுளியல்


34. திருக்குறளில் மூவசைச் சீர்களில் எந்தச் சீர் வராது?

கனிச்சீர்


35. எட்டாம் வேற்றுமையின் வேறு பெயர் என்ன?

விளிவேற்றுமை

36. நிலைமொழி ஈற்றில் மெய், வருமொழி முதலில் உயிர் இவை  இரண்டும்  இணையும் புணர்ச்சிக்குப்   பெயர் என்ன?

மெய்யீற்றுப்புணர்ச்சி


37. அசைப் பிரிப்பில் எந்த எழுத்தைக் கணக்கிடுவதில்லை? 

ஒற்றெழுத்தை / மெய்யெழுத்தை

38. எதிர்கால இடைநிலையைக் குறிக்கும் எழுத்துகள்  எவை?

  ப்,வ்


39. பூப்பெயர் புணர்ச்சிக்குச் சான்று ஒன்று தருக.

பூ+கொடி : பூக்கொடி, பூங்கொடி 


40. 'கா' இந்த எழுத்து உணர்த்தும் அசை யாது?

  நேரசை


41. இயல்பு + இல்லை, இதில் எந்தச் சொல்லில் குற்றியலுகர எழுத்து வந்துள்ளது? அது நிலைமொழியா?  வருமொழியா?

இயல்பு என்ற சொல்லில் குற்றியலுகர எழுத்து வந்துள்ளது. அது நிலைமொழி.


42. யாப்பிலக்கண அடிப்படையில் எழுத்துகளின் வகைகளை எழுதுக

  குறில், நெடில்,ஒற்று


43. பிரித்தால் பொருள்தராத சொற்கள் எவ்வாறு அழைக்கப்படும்?

பகாப்பதம்.


44..விகுதிக்கு வழங்கும் வேறுஒரு பெயர் என்ன?

  இறுதிநிலை.


45. பண்பு உருபுகளை எழுதுக.

ஆன, ஆகிய


46. தமிழகம் - இச்சொல்லின் நிலைமொழி என்ன?

  தமிழ்


47. செய்யுளின் உறுப்புகளின் வரிசையில் இறுதி வரும் உறுப்பு யாது?

தொடை.


48.’பொருளல்ல’-இச்சொல்லின் அசை மற்றும் வாய்பாடு எழுதுக.

 பொருளல்ல - நிரை நேர் நேர் - புளிமாங்காய்


49. விடும்-இச்சீர் பெறும் வாய்பாடு என்ன?

மலர்


50. வாய் + ஒலி = 'வாயொலி’ என்று வர பயன்படுத்தப்படும் புணர்ச்சி  விதியை  எழுதுக

உடல்மேல் உயிர்வந்து ஒன்றவது இயல்பே


51. மலர்ப்பாதம் - இச்சொல்லில் உவமேயம் எது? 

பாதம்


52. வியங்கோள் வினைமுற்றின் விகுதிகளை எழுதுக.

க,இய, இயர்


53. ‘உறுபசி’ என்பதன் இலக்கணக்குறிப்புத்தருக.

உரிச்சொற்றொடர்


54. உம்மைத்தொகையில் ‘உம்’ என்னும் இடைச்சொல் எவ்விடங்களில்  எல்லாம் மறைந்து நின்று பொருள் தரும்.

இடையிலும் இறுதியிலும்.


55. எப்பகுபதச் சொற்கள் வழக்கில் மிகுதியாக உள்ளன

  வினைப் பகுபதம் / வினை .


56. பிரித்தால் பொருள் தராத சொற்கள் என்ன பதச்சொற்கள்

பகாப்பதச் சொற்கள்


57. சந்தி என்பதற்கு __________ என்று பெயர் .

புணர்ச்சி


58. சீர் எத்தனை வகைப்படும்?

4


59. மூவசைச் சீர் காய்ச்சீர் நான்கு, கனிச்சீர் நான்கு இதில் திருக்குறளில் வராத மூவசைச்சீர் எது?

கனிச்சீர்


60. செய்யுள் எழுதுவதற்குரிய இலக்கணத்தைக் குறிப்பது_______ ஆகும்..

யாப்பிலக்கணம் 


61. இயல்பில்லை - இயல்பு +  இல்லை -  இச்சொற்கள் எந்தப் புணர்ச்சியின்   அடிப்படையில் புணரும்

குற்றியலுகரப் புணர்ச்சி


62.. காலம் கரந்த பெயரெச்சத்தை எவ்வாறு அழைப்பர்?

  வினைத்தொகை.

 

63. முதல் வேற்றுமையை இவ்வாறும் அழைப்பர்?

எழுவாய் வேற்றுமை


64. பகுபத உறுப்பில் காலம் காட்டும் உறுப்பு யாது?

இடைநிலை


65. இரண்டு உயிர் எழுத்துகளை இணைக்க வரும் உடம்படுமெய்கள் யாவை?

ய்,வ்


66. பகுபத உறுப்பில் தனி உறுப்பு பெறாத உறுப்பு எது?

விகாரம்


67. வியங்கோள் வினைமுற்று எப்பொருள்களில் வரும்?

வாழ்த்துதல், வைதல், விதித்தல், வேண்டல்


68. குறில் - நெடில்-ஒற்று, உயிர் - மெய்- உயிர்மெய், வல்லினம் - மெல்லினம் இடையினம் இவற்றுள்  யாப்பிலக்கண அடிப்படையில் மூன்று வகைப்படும் எழுத்துகள் எவை?

குறில்- நெடில் -ஒற்று


69. 'அரசனில்லை' இச்சொல்லில் இடம் பெற்றுள்ள வருமொழியைக் குறிப்பிடுக

இல்லை

 

70. குடில், கால், க, குடி, கா இவற்றில் எவையெல்லாம் நேரசை.

  கால்,க, கா


71. மாச்சீருக்கு உரிய அசையினை எழுதுக

நேர்நேர், நிரை நேர்.


72. வல்லின மெய்யெழுத்துகளில் எந்த எழுத்துகள் எல்லாம் மிகுந்து வராது?

ட்,ற்


73. எண்ணுப்பெயர்களில் எவற்றிற்குப் பின் வல்லினம் மிகும்?

எட்டு,பத்து


74. கான்+நடை எனப் பிரித்தால் கிடைக்கும் பொருள் என்ன?

காட்டுக்கு நடத்தல்


75. பிண்ணாக்கு = பிள் + நாக்கு இதில் பிள்' என்பதன் பொருள் என்ன?

பிளவுபட்ட


வினா விடைக்கான pdf download செய்ய கீழ்க்காணும் இணைப்பினைப் பயன்படுத்தவும் 👇👇👇👇


எம்.ஏ.ஜெலஸ்டின்
முதுகலைத் தமிழாசிரியர்
கார்மல் மேனிலைப் பள்ளி
நாகர்கோவில்
9843448095

















Photo by Timothy Dykes on Unsplash

Post a Comment

Previous Post Next Post