ஜூலை 2025, 3 ஆவது வாரம் - பாடக்குறிப்பு
வகுப்பு : 11
பாடம் : தமிழ்
நாள் : ஜூலை 3 ஆவது வாரம்
பருவம் : முதல்பருவம்
இயல் : 2 ( மாமழைப் பேற்றுதும் )
அலகு : i ) விரிவானம்
ii ) இனிக்கும் இலக்கணம்
பாடத்தலைப்பு :
i ) விரிவானம்
யானை டாக்டர்
ஜெயமோகன்
ii ) இனிக்கும் இலக்கணம்
புணர்ச்சி விதிகள்
பாடவேளை : 4
பக்க எண் : 31 முதல் 43 வரை
கற்பித்தலின் நோக்கங்கள்
1. குறும்புதினம் வழியாக வெளிப்படும் கருத்துகளை அறிந்து அதன் பொருளை உணர்தல்.
2. சொற்கள் இணையும் போது ஏற்படும் மாற்றங்கள் பற்றி அறிய வைத்தல்.
3. டாக்டர் வி.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் தன்னலமற்ற சேவையை உணர வைத்தல்.
4. உயிரீற்றுப் புணர்ச்சி, குற்றியலுகரப் புணர்ச்சி, முற்றியலுகரப் புணர்ச்சி, இயல்பீறு, விதியீறு புணர்ச்சி, பூப்பெயர்ப் புணர்ச்சி, மெய்யீற்றுப் புணர்ச்சி, தனிக்குறில் முன் ஒற்றுப் புணர்ச்சி, மகர ஈறு புணர்ச்சி, பண்புப் பெயர்ப் புணர்ச்சி ஆகிய புணர்ச்சியின் வகைகளை அறிய வைத்தல்.
சிறப்பு நோக்கங்கள்
1. யானை மனிதனோடு எளிதாகப் பழகும் விலங்கு என்பதை விரிவானம் செய்தி மூலம் விளங்க வைத்தல்.
2. காட்டு விலங்கான யானையை நேசிக்கும் டாக்டர் வி.கிருஷ்ணமூர்த்தியின் மனித நேயப் பண்பினை அறிய வைத்தல்.
3. சுற்றுலா பயணிகள் மேற்கொள்ளும் ஒருசில தவறான செயல்பாடுகளால் காட்டு விலங்குகள் அடையும் துன்பங்களைப் புரியவைத்தல்.
4. யானையின் நினைவாற்றலை விரிவானப் பாடப்பகுதியின் மூலம் விளங்க வைத்தல்.
5.சொற்கள் இணையும் போது அவை அடையும் மாற்றங்களையும் அவற்றிற்கு இலக்கண் நூலார் வகுத்தள்ள விதிகளையும் அறிய வைத்தல்.
6. மெய்ம்மயக்கம் பற்றியும் அதன் வகைகளான உடனிலை மெய்ம்மயக்கம், வேற்றுநிலை மெய்ம் மயக்கம், ஈரொற்று மெய்ம்மயக்கம் ஆகியவற்றைப் பற்றியுள்ள இலக்கணவிதிகளை அறிய வைத்தல்.
எம்.ஏ.ஜெலஸ்டின் , முதுகலைத் தமிழாசிரியர், கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில் - 9843448095
கற்பித்தல் திறன்கள்
1.பாடப்பகுதிகளை அறிமுகப்படுத்தல்
2.விரிவுரை
3.எடுத்துக் காட்டு மூலம் விளக்குதல்
4. கேள்விகள் கேட்டல்
5. அறிக்கைகள் மூலம் விளக்குதல்
6. காட்சிப்படுத்துதல்
7.வலுவூட்டும் செயல்பாடுகள் மூலம் விளக்குதல்
8. சிக்கலற்ற மற்றும் சுருக்கமான பாட இலக்கை அடையும் திறன்
ஆகிய கற்பித்தல் திறன்கள் மூலம் பாடப்பகுதியான யானை டாக்டர், புணர்ச்சி விதிகள், மெய்ம்மயக்கம் ஆகியவற்றில் எந்தப் பாடப்பகுதியின் கருத்துருக்கு எந்தெந்தத் திறன்கள் பொருந்துகிறதோ அந்தந்தத் திறன்களைப் பயன்படுத்தி மாணவர்களுக்குக் கற்பித்தல் வேண்டும்.
கற்பித்தல் நுண்திறன்கள்
1.பல்வகை தூண்டும் வினாக்களைக் கேட்டல்
2. சரளமாக வினாக்களைக் கேட்டல்
3. விரிச்சிந்தனையைத் துண்டும் வினாக்களைக் கேட்டல்
4. தகவல் பரிமாற்றத்தை நிறைவு செய்தல்
5. பாடம் முடித்தல்
ஆகிய நுண்திறன்கள் மூலம் பாடப்பகுதியின் நுட்பமான பொருளை மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டும்.
பல்வகை தூண்டும் வினாக்கள் மூலம் இயற்கையை நாம் ஏன் பாதுகாக்க வேண்டும் ? இயற்கையைப் பாதுகாப்பதால் மனிதனுக்குக் கிடைக்கும் நன்மை என்ன? காட்டு விலங்கான யானையின் குணநலன்கள் என்னென்ன? சொற்கள் இணையும் போது ஏற்படும் மாற்றங்கள பற்றிக் கூறுங்கள் எனக் கேட்டுப் பாடப்பகுதியின் உட்பொருளை விளங்க வைத்தல்.
காட்டின் மூலவர் எனப்படும் யானைக்கு நாம் இளைக்கும் தீங்கு என்ன? யானையின் நினைவாற்றல் தன்மையைப் பற்றி என்ன நினைக்கின்றீர்கள் ? வாழை+ பழம்: வாழைப்பழம் என்று எப்படி மாறியது? என்பன போன்ற விரிச்சிந்தனையைத் துண்டும் கேள்விகளைக் கேட்டுப் பாடப்பகுதியின் கருத்துகளை மனதில் நிறுத்துதல்.
காட்டில் வாழும் விலங்குகளுக்கு நாம் செய்யும் தீமைகள் என்ன? விலங்குகளை ஏன் நேசிக்க மறக்கின்றோம்? சொற்கள் இணையும் போது அடையும் மாற்றங்களை அடையாளப்படுத்துங்கள் என்பன போன்ற சரளமான வினாக்களைக் கேட்டுப் பாடப்பகுதியைப் புரிய வைத்தல்.
மேலும் எந்தெந்த நுண்திறன்கள் எந்தெந்தப் பாடப்பகுதிக்குப் பொருந்துமோ அந்தந்த
நுண்திறன்களைப் பயன்படுத்தியும், திரும்ப கூறு வேண்டியவற்றைத் திட்டமிட்டுப் பாடத்தை முடித்தல் வேண்டும்
எம்.ஏ.ஜெலஸ்டின் , முதுகலைத் தமிழாசிரியர், கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில் - 9843448095
ஆயத்தப்படுத்தல்
1. யானையின் செயல்கள், யானையின் பண்புகள் பற்றி பல்வேறு சான்றுகள் மூலம் எடுத்துக் கூறுதல்.
2. சுற்றுலா செல்லும் இடங்களில் தூய்மை பேணாமல் செல்லும் சுற்றுலா பயணிகள் குறித்த பல்வேறு படங்கள் மற்றும் காணொலிகளைக் காட்சிப் படுத்துதல்.
3. புணர்ச்சியில் சொற்கள் அடையும் மாற்றங்கள் குறித்த தகவல்களை எடுத்துக் கூறுதல்.
அறிமுகம்
பாடப் பகுதியை மாணவர்கள் புரிந்த கொள்ள எந்தெந்தக் கற்பித்தல் திறன்கள் மற்றும் கற்பித்தல் நுண்திறன்கள் எந்தெந்தப் பாடப்பகுதிக்குப் பொருந்துகிறதோ அந்தந்தத்திறன்களின் அடிப்படையில் பாடத்தின் கருத்துகளை அறிமுகம் செய்து வைத்தல் வேண்டும். இச்செயல்பாடு மூலம் மாணவர்களிடம் கற்கும் ஆர்வம் அதிகமாகும்.
ஆர்வமூட்டல்
1. யாணையின் கூட்டு வாழ்க்கைப் பற்றிக் கேட்டல்.
2. யானையின் அறிவுகூர்மையும், நினைவுத் திறனையும் குறித்து மாணவர்களிடம்
கலந்துரையாடல் நடத்துதல்.
3. சுற்றுலா செல்லும் சுற்றுலா பயணிகள் சுற்றுலா இடங்களைப் பாழ்படுத்தம் செயல்பாடுகள் பற்றி கேட்டல்.
4. புணர்ச்சியில் சொற்கள் அடையும் மாற்றங்கள் பற்றிக் கேட்டல்
துணைக்கருவிகள்
1.பாடம் தொடர்பான காணொலிகள்
2. 'யானை' பற்றிய காணொலிகள்
3. யானை டாக்டர் கதை காணொலிகள்
4. புணர்ச்சி விதிகள் பாடம் PPT
பாடப்பொருள்கள்
யானை டாக்டர்
ஜெயமோகன்
* டாக்டர் வி. கிருஷ்ணமூர்த்தி வன்துறையின் மிருக டாக்டர் - டாக்டர் கே - யானைக்குறிய சிறப்பு மருத்துவர்.
* டாக்டர் கே. உருவாக்கிய விதிமுறையே இந்திய வனவியல் துறையின் கையேடு.
* முதுமலை குறும்பர் - ஜீப்பில் ஏறிக் காட்டுகள் செல்லுதல்- துப்பாக்கியுடன் இரு வனக் காவலர்கள் -இரு குறும்பர் - மூங்கிலை அகற்றிச் செல்லுதல் -
* 70 வயது டாக்டர் கே. மிகச் கச்சிதமான உடல் கொண்டவர் -யானையின் நொடி -மெல்லிய உறுமல்கள் பன்னிரண்டு யானைகள் -மேலும் ஆறு ஆனை யானைகள் - 4 குட்டி யானைகள்.
* டாக்டர் கே. கருவிகளைப் பொருத்திக் கொண்டார்-யானையின் எடைக்கேற்ற மயக்க மருந்தினைச் செலுத்த தயாரானார் - மனிதனின் கீழ்மைகள் நாள்தோலும் வளர்வதாலே யானையின் மரணங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன - சுற்றுலாவிற்கு வருபவர்கள் குடித்து விட்டுக் காட்டு மரத்தில் வீசி எறியும் மதுக்கும்பிகள் மிகவும் ஆபத்தானவை - யானைகளுக்கு மிகுந்த துன்பத்தை தரும்- யானையின் அடிக்கால் மணல் மூட்டை- குப்பியின் பாகம் பாதங்களுக்குள் புகுத்து விடும்- நடக்க நடக்க உள்ளே செல்லும்- காயம் சீழ்வைத்து - காலை மிகவும் சேதப்படுத்தும்.
* உயிர் போகும் வலி என்றாலும் யானை அலறாது ,துடிக்காது, கண் மட்டும் சுருங்கும் - உடம்பு அங்கம் அதிரும் - யானையின் சம்மதம் இருந்தால் மயக்க மருந்தே வேண்டாம் - பெரிய பிடி யானை பிளிறியது- பிடி யானையின் காதுகள் அசைந்தன.
* யானை தலையைக் குலுக்கினால் “தாக்குவேன் " என்று பொருள் -யானை மத்தகத்தை நன்றாகத் தாழ்த்தியது எல்லா யானைகளும் மூங்கில் கூட்டத்திற்குள் சென்றன.
* பாதிக்கப்பட்ட யானைக்கு மருத்துவம் பார்த்தார் டாக்டர். கே. - யானையின் காதில் அடையாளனாக சிக்னலர் கம்மல் -குட்டியானை - மஞ்சணத்தி மரத்தடியில் நின்று எங்களைப் பார்த்தது.
* ஒண்ணரை வருடத்திற்கு முன் மஞ்சணத்தி மரத்தடியில் நின்ற குட்டியானை இப்போது குப்பி, குத்தி மருத்துவரைத் தேடிவந்ததை நினைத்து- யானையின் நினைவாற்றலை எண்ணி வியந்து போயினோம்- டாக்டர் கே. அதற்கும் மருத்துவம் பார்த்து னுப்பி வைத்தார்.
எம்.ஏ.ஜெலஸ்டின் , முதுகலைத் தமிழாசிரியர், கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில் - 9843448095
புணர்ச்சி விதிகள்
அ) உடம்படுமெய்ப் புணர்ச்சி
இஈஐ வழி யவ்வும் ஏனை உயிர்வழி வவ்வும்
ஏமுன் இவ்விருமையும் உயிர்வரின் உடம்படு மெய்யென்றாகும்
மணியழகு, தீயணைப்பான், கலையறிவு, மாவிலை
ஆ) குற்றியலுகரப் புணர்ச்சி
‘உயிர்வரின் உக்குறள் மெய் விட்டோடும்’ மாசற்றார்= மாசு + அற்றார்
‘நெடிலோடு உயிர்த்தொடர்க் குற்றுகரங்களுள்
ட ற ஒற்று இரட்டும் வேற்றுமை மிகவே’ வீட்டுத் தோட்டம் = வீடு + தோட்டம்
இ) முற்றியலுகரப் புணர்ச்சி
‘முற்றும் அற்று ஒரோ வழி’ வரவறிந்தான் = வரவு + அறிந்தான்
ஈ) இயல்வீறு, விதியீறு புணர்ச்சி
‘இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன்
கசதப மிகும்; விதவாதன மன்னே’ பள்ளித்தோழன் = பள்ளி+தோழன்
நிலத்தலைவர் = நிலம்+தலைவர் > நில+தலைவர்
உ) பூப்பெயர்ப் புணர்ச்சி
‘பூப்பெயர்முன் இனமென்மையும் தோன்றும்’ பூங்கொடி -பூ+கொடி
ஊ) மெய்யீற்றுப் புணர்ச்சி
‘உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே’ வாயொலி = வாய் +ஒலி
எ) தனிக்குறில் முன் ஒற்று - புணர்ச்சி
‘தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும்’ கல்லதர் = கல் + அதர் > கல்ல்+அதர்
ஏ)மகர ஈற்றுப் புணர்ச்சி
‘மவ்விறு ஒற்றழிந்த உயிரீறு ஒப்பவும்
வன்மைக்கு இனமாத் திரிபவும் ஆகும்’ காலங்கடந்தவன் = காலம் + கடந்தவன்.
ஐ) பண்பு பெயர்ப் புணர்ச்சி
‘ஈறுபோதல் இடை உகரம் இய்யாதல்
ஆதிநீடல் அடிஅகரம் ஐ ஆதல்
தன்னொற்று இரட்டல் முன்நின்ற மெய் திரிதல்
இனம் மிகல் இனையவும் பண்பிற்கு இயல்பே’
i)பெருவழி- பெருமை + வழி
ii) பெரியன் - பெருமை+அன்> பெரு+ அன் > பெரி+ அன் > பெரி+ய்+அன் > பெரியன் iii)மூதுர்-முதுமை+ஊர் > முது+ஊர்> மூது+ஊர்> மூத்+ஊர் > மூதூர்
iv) பைந்தமிழ் - பசுமை+ தமிழ்> பசு + தமிழ்> பைசு + தமிழ் >பை +தமிழ்> பைந்தமிழ்
v) நெட்டிலை - நெடுமை + இலை > நெடு+இலை> நெட்டு+இலை >நெட்ட்+இலை> நெட்டிலை
vi) செந்தமிழ் - செம்மை+தமிழ்>செம்+தமிழ்> செந்தமிழ்
vii) கருங்கடல் - கருமை+கடல்> கரு+ கடல்> கரு (ங்) கடல்
viii) பைந்தளிர் - பசுமை+ தளிர் > பசு+தளிர்> பைசு+தளிர் > பை+தளிர் > பைந்தளிர்.
மெய்ம் மயக்கம்
உடனிலை மெய்ம்மயக்கம் - அச்சம்,எச்சம்;
வேற்றுநிலை மெய்ம்மயக்கம் - தேர்தல், உயர்வு;
ஈரொற்று மெய்ம்மயக்கம் - பட்டம் , அம்மா
எம்.ஏ.ஜெலஸ்டின் , முதுகலைத் தமிழாசிரியர், கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில் - 9843448095
கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்
ஆசிரியர் செயல்பாடுகள்
ஆசிரியர் பாடப்பகுதியின் அனைத்து உட்பொருளையும் புரிந்து கொண்டு, மாணவர்களுக்குப் புரியும் விதத்தில் கற்பித்தல் திறன்கள், கற்பித்தல் நுண்திறன்கள் ஆகியவற்றைப் பயன்படுத்திப் பாடப்பகுதியின் அனைத்துக் கருத்துருக்களையும் மாணவர்கள் புரியும் வாதத்தில் விளக்கிக் கற்பித்தல்.
மாணவர்களுக்குப் பாடப்பகுதியில் ஏதேனும் ஐயங்கள் ஏற்பட்டால் அவர்களது ஐயங்கள் முழுமையாகத் தீரும் அளவிற்குக் கற்பித்தல் வேண்டும்.
பாடப்பகுதியில் இருந்து சிறு சிறு கேள்விகள் கேட்டல் வேண்டும். பாடம் நிறைவுற்றதும் வகுப்புத் தேர்வு நடத்துதல்.
வலுவூட்டும் செயல்பாடுகள்
1.யானை டாக்டர் சிறுகதையில் கூறப்பட்டுள்ள யானையின் நினைவாற்றல் மற்றும் சுற்றுலா செல்பவர்களின் கவனச்சிதறல்கள், அவர்கள் இயற்கைக்கு எதிராகச் செயல்படும் தன்மை பற்றி விளக்குதல்.
2. சொற்கள் இணையும் போது ஏற்படும் மாற்றங்களைத் தகுந்த எடுத்துக்காட்டுடன் விளக்குதல்
குறைதீர் கற்பித்தல்
பாடப்பகுதியின் உட்பொருளைப் புரிந்து கொள்ளும் திறன் குறைந்த மெல்ல கற்கும் மாணவர்களுக்குப் பாடப்பகுதியின் நோக்கம் புரியும் விதத்தில் யானை டாக்டர் சிறுகதையின் உட்பொருள், யானையின் நினைவாற்றல் மற்றும் சொற்கள் ஙபுணரும் போது அடையும் மாற்றங்கள் பற்றியும் மீண்டும் மீண்டும் பல்வேறு கற்பித்தல் திறன்களைப் பயன்படுத்தியும், துணைக்கருவிகள் மற்றும் மீள்பார்வை மூலம் புரிய வைத்தல் வேண்டும்.
மாணவர் செயல்பாடுகள்
1. பாடப்படுதியை வாய்வாட்டு வாசித்தல்.
2. வகுப்பறையில் ஆசிரியர் குறிப்பிடும் பாடப்பகுதியை வாய்விட்டு வாசித்தல்.
3. பாடம் தொடர்பான செய்திகளைச் சேகரித்துப் பாடத்தின் கருத்துகளைப் புரிந்துகொள்ளுதல்.
4. யானையின் குணநலன்களைக் குறித்த செய்திகளைப் பெரியோர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுதல்.
5. சுற்றுலா தலங்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை பல்வேறு நிகழ்வுகள் மூலம் தெரிந்து கொள்ளுதல்.
6. பாடப்பகுதியில்ஏற்படும் ஐயத்தைக் கேட்டுத் தெளிவடைதல்.
7. பாடம் தொடர்பான கலந்துரையாடல் மற்றும் குழுச் செயல்பாட்டில் முழுமையாகப் பங்கேற்றல்.
8. பாடம் தொடர்பான காணொலிகளைக் கவனம் சிதறாமல் பார்த்துப் பாடப்பகுதியைப் புரிந்து கொள்ளுதல்.
கற்றல் விளைவுகள்.
1.காட்டு விலங்கான யானையின் குணநலன்களை அறிந்ததன் மூலம் விலங்குகளிடம் அன்புடனும் உயிர்இரக்கத்துடன் வாழப் பழகுதல்.
2. சுற்றலா செல்லும் நேரங்களில் அதன் தூய்மையை பேணி பாதுகாத்தல் பற்றி அறிவதன் மூலம் சுற்றலா இடங்களைப் பாதுகாக்கும் திறனைப் பெறுதல்.
3. சொற்கள் சேரும்போது ஏற்படும் மாற்றங்களக் குறித்து புணர்ச்சி விதி மூலம் அறிந்ததன் மூலம் சொற்களை மற்றும் வாக்கியங்களை - எழுதம் போது புணர்ச்சி விதிக்கு உட்பட்ட சொற்களை அறிந்து அதனைப் பயன்படுத்தும் திறனைப் பெறுதல்
எம்.ஏ.ஜெலஸ்டின் , முதுகலைத் தமிழாசிரியர், கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில் - 9843448095
மதிப்பீடு
எளிய சிந்தனை வினாக்கள் LOT QUESTIONS
1. யானை டாக்டர் சிறுகதையின் ஆசிரியர் யார்?
2.உடனிலை மெய்ம்மயக்கத்திற்குச் சான்று தருக
நடுத்தரச் சிந்தனை வினாக்கள் MOT QUESTIONS
1.கல்லதர் - பிரித்துப் புணர்ச்சி விதி தருக.
2. முற்றியலுகரப் புணர்ச்சிக்குரிய விதியை எழுதுக.
3.டாக்டர் கே. மேற்கொண்டிருந்த பணி குறித்து எழுதுக.
உயர்தரச் சிந்தனை வினாக்கள் HOT QUESTIONS
1. இயற்கையைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை யானை டாக்டர் கதை வழியாகநிறுவுக.
2. சுற்றுலா தலங்கள் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம் என்பதை கதையின் மூலம் விளக்குக.
3. ‘பசுந்தளிர்' - பிரித்துப் புணர்ச்சி விதி தருக.
தொடர்பணி
1. அண்மையில் படித்த சிறுகதை ஒன்றைக்கூற சொல்லுதல்
2. சொந்தமாகச் சிறுகதைப் படைத்தல்.
எம்.ஏ.ஜெலஸ்டின் , முதுகலைத் தமிழாசிரியர், கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில் - 9843448095
Click Here to download the document.
ஜூலை 2025, 1 ஆவது வாரம் - பாடக்குறிப்பு Click Here