Loading ....

12th Standard -Tamil -Study Material -EYAL 1 -UNIT TEST 1 - இயல் 1 - அலகுத் தேர்வு 1- QUESTIONS-ANSWERS

12th Standard -Tamil -Study Material -EYAL 1 -UNIT TEST 1 - இயல் 1 - அலகுத் தேர்வு 1- QUESTIONS-ANSWERS

              

12th Standard -Tamil -Study Material -EYAL 1 -UNIT TEST 1 - இயல் 1 - அலகுத் தேர்வு 1- QUESTIONS-ANSWERS




தமிழ்நாடு அரசு நடத்த இருக்கின்ற பனிரெண்டாம் வகுப்பிற்கான 12th standard- Tamil -Study Material -EYAL 1 -UNIT TEST 1 - இயல் 1 - அலகுத் தேர்வு 1- QUESTIONS-ANSWERS இயல் -1 - EYAL 1 -இன் - UNIT TEST 1 -அலகுத் தேர்வு 1- QUESTINS ANSWERS

இங்குத்  தொகுத்து  Study Material ஆக தரப்பட்டுள்ளன.  மாணவ,  மாணவிகளே நீங்கள் இந்த  ஒரு தொகுப்பினை Study Material ஐ  முழுவதுமாகப்  படிப்பதன் மூலமாக தமிழ்நாடு அரசு நடத்த இருக்கின்ற பனிரெண்டாம் வகுப்பிற்கான தேர்வில் 12th standard- PUBLIC exam - March 2023 நிச்சயமாக உங்களால் அதிக மதிப்பெண் பெற முடியும் . அதற்கு இயல் -1- EYAL 1 -இன் அலகுத் தேர்வு 1- QUESTINS ANSWERS இந்தப் பகுதி உங்களுக்கு உதவும் .

 

அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது QUESTINS ANSWERS இந்தக் கேள்வித்   தொகுப்பினைப்( Study Material )பதிவிறக்கம் செய்து நீங்கள் முழுவதுமாக படித்துப்  புரிந்து தேர்வு எழுதினால் போதுமானது.  இந்த ஒரு பகுதியை மட்டும் நீங்கள் படிப்பதன் மூலம் அதிக மதிப்பெண் பெற முடியும் .

தமிழ்நாடு அரசு நடத்த இருக்கின்ற 12 ஆம் வகுப்பிற்கான தேர்வில் 12th standard- PUBLIC exam -march 2023 நீங்கள் நிச்சயமாக அதிக மதிப்பெண் பெற இந்தப் பகுதி உங்களுக்கு உதவும் .

  தமிழ்த்தேர்வில் நீங்கள் அதிக மதிப்பெண்ணைப்  பெற்றுக் கொள்ள 12th standard- Tamil -Study Material -EYAL 1 -UNIT TEST 1 - இயல் 1 - அலகுத் தேர்வு 1- QUESTIONS-ANSWERS உதவும். நன்றாகப் படித்துச் சிறப்பாகத் தேர்வை எழுத உங்களுக்கு இந்த Study Material உதவும். வெற்றி பெற வாழ்த்துகின்றேன்.

Kurusady M.A. Jelestin 


                                              

 இயல் –  1                   வகுப்பு - 12                       தமிழ் 

அலகுத்தேர்வு  - 1 

நேரம் : 40 நிமிடங்கள்                மதிப்பெண்கள் : 30


பலவுள் தெரிக.                                              8 X 1 = 8 

1. மீண்டு மந்தப் பழமைநலம் புதுக்குதற்கு - கவிஞர் குறிப்பிடும் பழமைநலம் 

க) பாண்டியரின் சங்கத்தில் கொலுவிருந்தது 

உ) பொதிகையில் தோன்றியது

௩) வள்ளல்களைத் தந்தது.

அ)  க மட்டும் சரி 

ஆ) க உ இரண்டும் சரி

இ)  ௩ மட்டும் சரி

 ஈ)  க௩ இரண்டும் சரி

2. கருத்து 1 : இயல்பு வழக்கில், தொடரமைப்பு என்பது எழுவாய், பயனிலை என்று வருவதே மரபு

கருத்து 2 : தொடரமைப்பு, சங்கப்பாடல்கள் பலவற்றில் பிறழ்ந்து வருகிறது. 

அ) கருத்து 1 சரி                     ஆ) கருந்து1 தவறு 2 சரி

இ) இரண்டு கருத்துகளும் சரி

ஈ) கருத்து 1 சரி, 2 தவறு

3. பொருத்துக.

அ) தமிழ் அழகியல்       -  1. பரலி சு. நெல்லையப்பர்

ஆ) நிலவுப்பூ                      -  2.தி.சு.நடராசன்

இ) கிடை                                 -  3. சிற்பி பாலசுப்பிரமணியம்

ஈ) உய்யும் வழி                    -  4. கி. ராஜநாராயணன்

அ) 4 3 2 1     ஆ) 1 4 2 3              இ) 2 4 1 3        ஈ) 2 3 4 1  

4. "மின்னேர் தனியாழி வெங்கதிரொன்று ஏனையது தன்னேர் இலாத தமிழ்" - இவ்வடிகளில் பயின்று வந்துள்ள தொடைநயம்

அ) அடிமோனை, அடிஎதுகை 

ஆ) சீர்மோனை, சீர்எதுகை

இ) அடிஎதுகை, சீர்மோனை 

ஈ) சீர்எதுகை, அடிமோனை

5. "ஏங்கொலிநீர்' என்னும் தொடரின் சரியான பிரிப்பு

அ) ஏங் + கொலி + நீர்

ஆ) ஏவ்வொலி + நீர்

இ) ஏங்கு + ஒலிநீர்

ஈ) எங்கு + ஒலி + நீர்

6. பிழையான தொடரைக் கண்டறிக.

அ) காளைகளைப் பூட்டி, வயலை உழுதனர். 

ஆ)மலைமீது ஏறி, கல்வெட்டுகளைக் கண்டறிந்தனர்.

இ) காளையில் பூத்த மல்லிகை, மனம் வீசியது.

ஈ) நெற்பயிர்கள், மழைநீரில் மூழ்கின. 

7. பேச்சுத் தமிழில் அமைந்த தொடர்

அ) அவருக்கு நல்லது கெட்டது நல்லாத் தெரியும்.

ஆ)புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது. 

இ) வறட்சி, எல்லா இடங்களையும் பாதித்துள்ளது.

ஈ) மயில்கள், விறலியரைப்போல் ஆடுகின்றன.

8. 'தமிழின் விரிவை' உணர்த்தப் புலவர் கையாளும் தொடர்

அ) வலிமைமிக்கது  

ஆ) நிலத்தினும் பெரிது 

இ) வானினும் உயர்ந்தன்று 

ஈ) கடலினும் ஆழமானது

எவையேனும் நான்கனுக்கு 

விடை தருக.                                                         4X2=8

9. கவிஞர் சிற்பி எவற்றை வியந்துபாடத் தமிழின் துணைவேண்டும் என்கிறார்? 

10. நடை அழகியல் பற்றித் தொல்காப்பியம் கூறும் கருத்தைக் குறிப்பிடுக 

11. விடியல், வளப்பு - இருசொற்களையும் ஒருங்கிணைத்துத் தொடர் அமைக்க,

12. வெங்கதிருக்கும் தமிழுக்கும் உள்ள வேற்றுமை என்ன? 

13. தமிழை எழுதும்போது ஏற்படும் பிழை வகைகள் யாவை?

எவையேனும் இரண்டனுக்கு 

விடை தருக                                                          2X4=8                     

14. செம்பரிதி மலைமேட்டில் தலையைச் சாய்ப்பான்

       செந்திறத்துப் பூக்காடாம் வான மெல்லாம்" - இத்தொடர் வெளிப்படுத்தும் காட்சி நயத்தை விளக்குக. 

15. சங்கப் பாடங்களில் ஒலிக்கோலம் குறிப்பிடத்தக்க ஒரு பண்பாகும் - விளக்குக.

16. "ஏங்கொலிநீர் ஞாலத்து இருளகற்றும்" - இடம் சுட்டிப் பொருள் விளக்குக.

17. அடிமாறாமல் செய்யுள் வடிவில் எழுதுக. ஓங்கலிடை வந்து... எனத் தொடங்கும் தன்னேர் இலாத தமிழ்ப் பாடலை எழுதுக. 

பின்வரும் வினாக்களில் ஏதேனும் ஒன்றனுக்கு விரிவான விடை தருக.       1 × 6 = 6

18. தமிழின் சீரிளமைத் திறம் வியந்து கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் கூறுவனவற்றைத் தொகுத்து எழுதுக.

 19. கவிதையின் நடையைக் கட்டமைக்கும் அழகியல் கூறுகளை எடுத்துக்காட்டி விளக்குக.

20. பாரதியின் கடிதம் வாயிலாக நீங்கள் அறிந்துகொண்ட மொழிப்பற்று, சமூகப்பற்று ஆகியவற்றை விவரிக்க


குருசடி எம்.ஏ.ஜெலஸ்டின்

முதுகலைத் தமிழாசிரியர்,

கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில்-4, 9843448095


இயல் –  1                   வகுப்பு - 12                       தமிழ் 

அலகுத்தேர்வு  - 1 

நேரம் : 40 நிமிடங்கள்                மதிப்பெண்கள் : 30


விடைகள் 


பலவுள் தெரிக.                                              8 X 1 = 8 

1. ஈ)  க௩ இரண்டும் சரி

2.  ஆ) கருந்து1 தவறு 2 சரி

3.   ஈ) 2 3 4 1  

4.  இ) அடிஎதுகை, சீர்மோனை 

5. ஈ) எங்கு + ஒலி + நீர்

6. இ) காளையில் பூத்த மல்லிகை, மனம் வீசியது.

7.அ) அவருக்கு நல்லது கெட்டது நல்லாத் தெரியும்.

8. இ) வானினும் உயர்ந்தன்று


 எவையேனும் நான்கனுக்கு 

விடை தருக.                                                         4X2=8


9. செந்நிறத்து வானம்போலத் தங்கள் கைகள் சிவந்திட உழைக்கும் தொழிலாளர்களின் வியர்வை வெள்ளம் அவர்களின் திரண்ட தோள்மீது முத்துமுத்தாய் வீற்றிருக்கும். இந்த அழகினை வியந்து பாடச் செந்தமிழின் துணை வேண்டுமெனக் கவிஞர் சிற்பி கூறுகின்றார்.


10. கவிதையின் இயங்காற்றல்தான் நடை எனப்படும். தொல்காப்பியமும் இதனையே கூறுகின்றது. 'நடைபெற்றியலும்', 'நடை நவின்றொழுகும்' என்னும் சொற்றொடர்களைத் தொல்காப்பியம் கையாண்டுள்ளது. 

ஒவ்வொரு பாவும் இவ்வாறே அமைய வேண்டும் என்று தொல்காப்பியம் கூறுகிறது.


11.விடியலில் உதிக்கும் கதிரவனின் தோற்றம் இயற்கையின் வனப்பை எடுத்துரைக்கும்.


12.வெங்கதிரான  சூரியன்  உலகின்  புற இருளைப் போக்கும்.

 ஒப்புவமை இல்லாத தமிழ், மக்களின் அறியாமை என்னும்  இருளைப் போக்கும்.


13.எழுத்துப்பிழை,  சொற்பிழை,  சொற்றொடர் பிழை,  பொதுவான பிழை   என்பன  தமிழை எழுதும்பொழுது ஏற்படும் பிழை வகைகளாகும்.. 


எவையேனும் இரண்டனுக்கு 

விடை தருக                                                          2X4=8  

14.தொடர் வெளிப்படுத்தும் காட்சி நயம்:

            மாலை நேரச் சூரியன், மலை முகட்டின் மீது தலையைச் சாய்க்கின்றான்.

           சூரியனின் செம்மஞ்சள் நிறம், வானம் முழுவதும் பூக்காடு போலப் பரவிப் படர்ந்துள்ளது.

            இயற்கை ஓவியன் புனைந்த அழகிய செந்நிறத்துப் பூக்காடாக வானம் தோன்றுவதற்கு மாலை நேரத்துச் சூரியன் காரணமாக அமைந்துள்ளான் என்பதனை இத்தொடர் அழகாக வெளிப்படுத்துகிறது.

          அந்தி வானத்தின் சிவந்த நிறமும், அன்றாடம் உழைத்து வாழும் உழைப்பாளிகளின் கை வண்ணமும் ஒன்றே என்பதை கவிஞர் சிற்பியின் இவ்வரிகள் நயமாகக் காட்சிப்படுத்துகின்றன


15. ஒலிக்கோலம்:

இசையோடும் இசைக்கருவியோடும் தான் மொழி சார்ந்த கவிதை பிறக்கும்

ஓசையும் பொருளும் இணைந்து கலைவடிவம் கொள்வதை ஒலிக்கோலம் (ஒலிப்பின்னல்) என்பர்

வண்மை உணர்ச்சியை வெளிப்படுத்த சங்கப்பாடலில் வல்லின மெய்யொலிகள் மிகுதியாக இடம் பெற்றுள்ளன.

சான்று: கடந்தடு தானை…… (புறம்:110)

இனிய இசைக்காக நெடில் ஒலிகள் அதிகமாக இடம்பெறும்

சான்று: படாஅம் ஈத்த…. (புறம்:145)

சில ஒலிகளும் சில சொற்களும் திரும்ப திரும்பவரும் தன்மையும் உண்டு.

சான்று: புணரின் புணராது…..(நற்:16)

சொல்விளையாட்டுகளும் சங்கப்பாடல்களில் இடம்பெறுவது உண்டு.

சான்று: நுந்தை தந்தைக்கு இவன் தந்தை தந்தை….(புறம்:290)

இவையே சங்கப்பாடல்களில் ஒலிக்கோலம் கொண்டிருந்த குறிப்பிடத்தக்க பண்புகளாகும்.


16. இடம்:


இப்பாடல் வரி தண்டியலங்காரம் என்னும் அணி இலக்கண நூலின் பொருளணியியலில் இடம் பெற்றுள்ள உரை மேற்கோள் பாடலாகும். இதன் ஆசிரியர் தண்டி ஆவார்.

பொருள்:


ஒலிக்கின்ற கடலால் சூழப்பட்ட இவ்வுலகத்தின் இருளை அகற்றுவன இரண்டு ஒன்று சூரியன், மற்றொன்று தனக்கு நிகர் இல்லாத தமிழ்மொழி என்பதே இத்தொடரின் பொருளாகும். 


விளக்கம்:  

எப்போதும் ஒலியெழுப்பிக் கொண்டிருக்கும் கடல் சூழ்ந்த இந்த உலகின் இருளை அகற்றும் கதிரவன் மக்களால் போற்றப்பட்டு, உயர்ந்த மலைகளுக்கு இடையே தோன்றி, சான்றோரால் தொழப்படுகின்ற ஒன்றாகும். தமிழோ, மலையில் தோன்றினாலும் மக்களின் அறியாமை இருளை அகற்றும் சிறப்புடையது


17. ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழ விளங்கி      ஏங்கொலிநீர் ஞாலத்(து) இருளகற்றும் - ஆங்கவற்றுள் மின்னேர் தனியாழி வெங்கதிரொன்(று)  ஏனையது 

தன்னேர்  இலாத தமிழ்!


பின்வரும் வினாக்களில் ஏதேனும் ஒன்றனுக்கு விரிவான விடை தருக.       1 × 6 = 6

18. முன்னுரை: 

        தமிழ் மொழி நம் அடையாளம்: பண்பாட்டின் நீட்சி; தோன்றிய காலம் தொட்டு மக்களால் பேசப்பட்டு, எழுதப்பட்டு, உயிர்ப்போடும் இளமையோடும் இருப்பது. அத்தகைய சிறந்த தமிழின் திறத்தை வியந்து கவிஞர் சிற்பி பாடுவதை காண்போம். 

இயற்கையைப் பாட வருக: 

        தமிழை மாலை நேரத்தில் சிவந்த கதிர்களைச் சுருக்கி கதிரவன் பின் சென்று மறைவான்.  கதிரவனின் ஒளி பட்டு செந்நிப்ற பூக்காடாகக்  காட்சியளிக்கும். 

அக்காட்சியைப் பாட தமிழே வா! 

தொழிலாளர்களைப் பாட வருக தமிழே :

       தினமும் உழைக்கும் தொழிலாளர்கள் கைகளும் மாலை நேர வானம் போல சிவந்திருக்கும். தொழிலாளர்களின் திரண்ட தோள்களில் முத்து முத்தாய் வியர்வை பூத்திருக்கும். இக்காட்சிகளைப் பாட தமிழே நீ வா! 

தமிழின் பழமை நலம்: 

       பொங்கிவரும் கவிதைக்கு உணவாக விளங்குவது முத்தமிழ் ஆகும். பாண்டியனின் ஆட்சிப் பகுதியான மதுரையில் சங்கம் அமைத்து அரசாட்சி செய்த சிறப்புடையது. பாரி போன்ற வள்ளல்களைத் தமிழ்நாட்டிற்குத் தந்த பெருமை உடையது. 

சிங்கம் போல சீறி வா : 

       பழமைநலம் மீண்டும் பிறக்க மேனிசிலிர்க்க தமிழ் குயிலே மீண்டும் கூவி வா! குளிர்ச்சியான பொதிகை மலையில் தோன்றிய தென்னாட்டு தமிழே உன்னை புதுப்பிக்க புறப்பட்டு வா!. தமிழரின் அடிமைத்தனமும் அறியாமையும் அகன்றிடவும், அவர்கள் சிறைப்பட்டிருக்கும் 


கூண்டினை உடைத்திட சிங்கம் போல சீற்றத்தோடு வா !

முடிவுரை: 

      காலத்திற்கு ஏற்றவாறு தம்மை புதுப்பித்துக்கொண்டும்  இன்றளவும்  சிறப்புற்றுத் திகழ்கின்ற தமிழின் திறத்தைக் கவிஞர் சிற்பி வியந்து பாடுகிறார்.


19. முன்னுரை:

        கவிதையின் நடையை கட்டமைக்கும் அழகியல் கூறுகளில் மிக முக்கிய பங்கு வகிப்பவை ஒலிக்கோலம், சொற்களின் புலம், தொடரியல் போக்கு இவை கவிதையின் நடையைக் கட்டமைக்கின்றன. இதைப் பற்றிக்  காண்போம்.

ஒலிகோலம்:

         இசையோடும் இசைக்கருவியோடும் தான் மொழிசார்ந்த கவிதை பிறக்கும். ஓசையும் பொருளும் இணைந்து கலைவடிவம் கொள்வதை ஒலிக்கோலம்

 (ஒலிப் பின்னல்) என்பார். 

வன்மைஉணர்ச்சியை வெளிப்படுத்த சங்கப்பாடலில் வல்லின மெய் ஒலிகள்

மிகுதியாக இடம் பெற்றுள்ளன. 

               சான்று: கடந்தடு  தானே..... (புறம் :110) 

 இனிய இசைக்காக நெடில் ஒலிகள் அதிகமாக இடம்பெறும். 

              சான்று: படாஅம் ஈத்த ..... (புறம் :145) 

சில ஒலிகளும் சில சொற்களும் திரும்பத் திரும்ப வரும் தன்மையும் உண்டு. 

              சான்று: புணரின் புணராது..... (நற் : 16) 

சொல் விளையாட்டுகளும் சங்கப் பாடல்களில் இடம் பெறுவதுண்டு. 

              சான்று: நுந்தை தந்தைக்கு இவன் தந்தை தந்தை...... ( புறம் : 290 ) 

இவையே சங்கப்பாடல்களில் ஒலிக்கோலம் கொண்டிருந்த குறிப்பிடத்தக்க பண்பாகும்

சொற்களின் புலம்: 

     சொற்களில் தான் உணர்வும் பொருளும் பொதிந்து கிடைக்கின்றன. ஒரு பண்பாட்டின் அடையாளமாக இருக்கிறது. 

இதில் கலை, பண்பாடு, வரலாறு, அரசியல்,  ஆகியவை பொதிந்து கிடக்கின்றன. 

சங்க இலக்கியத்தில் ஒரு பொருள் குறித்து வரும் பல சொல்,  பல பொருள்  குறித்த ஒரு சொல் இடம்பெற்றுள்ளது. சொற்கள் பல துறைகளுக்கும், பல சூழல்களும், பல புனைவுகள்  உரியதாய் வருவதும் உணர்வும் தெளிவும் கொண்டதாய் வருவதுமாகச் செழிப்பான தளத்தில் சொற்கள் இருந்தன. 

       சங்கப்பாடல்களில் சொல்வளம் என்பது தனிச் சொற்களாகவும்  ஒன்றுக்கு மேற்பட்ட சொற்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து நெகிழாமலும்  முயங்கிக் கிடப்பதைக் காணலாம்.  

       சொற்புலத்தில் தொகைநிலைத் தொடரும், தொகாநிலைத் தொடரும் வரும். இவைகள் கவிதைகளைக் கட்டமைப்பதில் அவற்றின் நடையழகியலைக் கூட்டுவதிலும்  செறிவாக்கபட்ட  ஒரு சொல்போலவே நடக்கும். 

தொடரியல் போக்கு: 

        பாடலின் தளத்தை முழுமையடைய செய்வது தொடரியல் போக்காகும். சொல்பவனுடைய மொழித்திறனை, கேட்பவன் அல்லது வாசிப்பவன் முழுமையாகப் பெற வேண்டும். 

        சொல்லப்படும் உணர்வுகளுக்கும் செய்திகளுக்கும் ஏற்பத் தொடர்கள் 

                   1.நேர் நடந்தும் 

                   2.ஏறி இறங்கியும் 

                   3.திரும்பியும் சுழன்றும் இயங்கும். 

சங்கப் பாடல்கள் பலவற்றில் மறுதலைத்தொடர் அமைந்திருப்பதும் உண்டு. சான்று:    

    இடுக வொன்றோ......... (புறம் : 239). 

முடிவுரை :

       இவையே கவிதையின் நடையைக் கட்டமைக்கும் அழகியல் கூறுகள் ஆகும்.

இதனை அறிந்து நாம் சங்க இலக்கியங்களை அணுகவேண்டும்.


20.  முன்னுரை:

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல இனிதான மொழி எதுவுமில்லை என்று கூறிய பாரதி, சு.நெல்லையப்பருக்கு எழுதிய கடிதத்திலும் அதனை உறுதிப்படுத்துகின்றார்

மொழிப்பற்று:

        நெல்லையப்பரிடம் அவர் கூறும்போது, 'நீ பிறமொழிகளை அறிந்திருந்தாலும் தமிழை வளர்ப்பதைக் கடமையாகக் கொள்ளவேண்டும்' என்று கூறுகின்றார். 

          புதிய புதிய செய்திகளும் புதிய புதிய உண்மைகளும், புதிய புதிய இன்பமும் தமிழ்மொழியில் ஏற்றம் பெற வேண்டும். 

           தமிழ்நாட்டில் வீதிகள் தோறும் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் பெருக வேண்டும். அந்தப் பள்ளிகளில் எல்லாம் புதிய புதிய கலைகள் பயிற்சி அளிக்கப் பெற்று வளர வேண்டும். 

          தாய் மொழியிலே கற்பதால் தமிழ் உணர்வு அதிகமாகும், தாய்நாட்டின் மீது பற்று ஏற்படும். 

பிறநாட்டு மொழிகள் எல்லாம் அடைந்துள்ள வளர்ச்சியைப் பார்த்த பின்பாவது நாம் நம் தாய்மொழியாம் தமிழ்மொழியின் மீது பற்றுக் கொள்ள முயலவேண்டும். 

        புதிய புதிய சிந்தனைகள் தமிழ்மொழியில் தோன்றல் வேண்டும் என்கிறார்.

சமூகப்பற்று

         சமூகத்தின் அவலமாக இருக்கின்ற ஆண் பெண் வேறுபாடு முற்றிலுமாக அழிய வேண்டும். 

ஆண் உயர்ந்தவன் பெண் அடிமை என்ற நிலை சமூக அவலமாகும்.

"ஆணும் பெண்ணும் ஒருயிரின் இரண்டு தலைகள், அவற்றில் ஒன்றிலொன்று தாழ்வில்லை", என்கிறார். 

            பெண்ணைத் தாழ்த்தினால் சமூகமே சாபக்கேட்டிற்குள்ளாகும் என்பதை உணர்த்த பெண்ணைத் தாழ்த்தினவன், தன் கண்ணைக் குத்தியவனுக்குச் சமம் என்று ஆவேசத்துடன் கூறுகின்றார். 

             பெண்ணை வீட்டுக்குள்ளே அடைத்தவன் தன் கண்ணை இழந்த குருடன் போலப் பரிதவிப்பான் என்றும் கூறி ஆணும் பெண்ணும் சமம் என்ற சமூக நீதியை வலியுறுத்துகின்றார். 

               சமூகம் வளர்ச்சி அடையத் தொழில் பெருக வேண்டும், வியாபாரம் சிறக்க வேண்டும் தொழிற்சாலைகள் வளர வேண்டும் என்கிறார்.

               சமூக மாற்றம் காண சங்கீதம், சிற்பம், இயந்திரம், பூமி, வானம், இயற்கை சார்ந்த நூல்கள் ஆயிரம் ஆயிரமாகத் தாய்மொழியில் உருவாகிட வேண்டும். 

முடிவுரை :

          நம் தமிழ்ச்சமூகம் மாற்றம் பெற அனைவரும் எண்ணிட வேண்டும் . அதற்குரிய சக்தியை அனைவரும் பெற்றிடவும் வேண்டுமென்று பாரதியார் சு.நெல்லையப்பருக்கு எழுதிய கடிதம் மூலம் தன் உள்ளக் கருத்தை

வெளிப்படுத்துகின்றார்.


குருசடி எம்.ஏ.ஜெலஸ்டின்

முதுகலைத் தமிழாசிரியர்,

கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில்-4, 9843448095



12th Standard -Tamil -Study Material -
PDF DOWNLOAD CLICK  HERE

12 ஆம் வகுப்பு

இயல் - 1


Slip Test 1 : click here


Slip Test 2 : click here


Slip Test 3 : click here


Slip Test 4 : click here




Image by Ervin Gjata from Pixabay 








Post a Comment

Previous Post Next Post