Loading ....

12th Standard- +2Tamil - Tamil -Study Material - FIRST MID TERM TEST - July 2023- MODEL QUESTION PAPER - ANSWER KEY - 12th தமிழ் - முதல் இடைத் தேர்வு - ஜூலை 2023-மாதிரி வினாத்தாள் - விடைக் குறிப்புடன்

12th Standard- +2Tamil - Tamil -Study Material -  FIRST MID TERM  TEST - July 2023- MODEL QUESTION PAPER - ANSWER KEY                                                       



                                        முதல் இடைத் தேர்வு                                       2023

 மாதிரி வினாத்தாள்- 2


நேரம்: 3.00  மணி   வகுப்பு-1 2                                       மதிப்பெண்: 90

                                       பொதுத்தமிழ்



பகுதி-1

அனைத்து வினாக்களுக்கும் விடை தருக                               14  X 1 = 14

1. இலக்கியத்தையும் மொழியையும் ஒருசேரப் பேசுகின்ற இலக்கண நூல் 

அ) யாப்பருங்கலக்காரிகை     

ஆ) தண்டியலங்காரம்         

இ) தொல்காப்பியம   

ஈ) நன்னூல்

2. "மீண்டுமந்தப் பழமைநலம் புதுக்குதற்கு" கவிஞர் குறிப்பிடும் பழமை நலம் 

அ) பாண்டியரின் சங்கத்தில் கொலுவிருந்தது                

ஆ) பொதிகையில் தோன்றியது 

இ) வள்ளல்களைத் தந்தது

i) அ மட்டும் சரி          

ii) அ, இ இரண்டும் தவறு           

iii) இ மட்டும் சரி                      

iv) அ, இ இரண்டும் சரி

3. "மின்னேர் தனியாழி வெங்கதிரொன்று ஏனையது

தன்னேர் இலாத தமிழ்!"- இவ்வடிகளில் பயின்று வந்துள்ள தொடைநயம் 

அ) அடிமோனை, அடிஎதுகை                

ஆ) சீர்மோனை, சீர்எதுகை 

இ) அடி எதுகை, சீரமோனை                    

ஈ) சீர்எதுகை. அடிமோனை

4. பிழையான தொடரைக் கண்டறிக

அ) காளைகளைப் பூட்டி வயலை உழுதனர் 

ஆ) மலைமீது ஏறிக் கல்வெட்டுகளைக் கண்டறிந்தனர் 

இ) காளையில் பூத்த மல்லிகை மனம் வீசியது. 

ஈ) நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின.

5. தமிழில் திணைப்பாகுபாடு       அடிப்படையில் பகுக்கப்பட்டுள்ளது

அ) பொருட்குறிப்பு       

ஆ) சொற்குறிப்பு      

இ) தொடர்க்குறிப்பு         

ஈ) எழுத்துக்குறிப்பு

6. யார்? எது? ஆகிய வினாச்சொற்கள் பயனிலையாய் அமைந்து, உணர்த்தும் திணைகள் முறையே

அ) அஃறிணை, உயர்திணை                  

ஆ) உயர்திணை, அஃறிணை

இ) விரவுத்திணை, அஃறிணை               

ஈ) விரவுத்திணை. உயர்திணை

7. பொருத்தித் தேர்க 

1. குரங்குகள் - 1) கன்றுகளைத் தவிர்த்தன

2. விலங்குகள் - 2) மரங்களிலிருந்து வீழ்ந்தன.

3. பறவைகள் - 3) குளிரில் நடுங்கின 

 4. பசுக்கள் - 4) மேய்ச்சலை மறந்தன   

அ)4 1 2 3                

ஆ)2 3 4 1                 

இ)3 4 2 1            

ஈ) 4 3 1 2 

8. நரம்புகளுக்குள் வீணை மீட்டிக்கொண்டிருக்கிறது என்று அய்யப்ப மாதவன் குறிப்பிடுவது. 

அ) சூரிய ஒளிக்கதிர்       

ஆ) மழை மேகங்கள்       

இ) இழைத்துளிகள்       

ஈ) நீர்நிலைகள் 

9. வெள்ளச் சமவெளிகள் அழியக் காரணம் 

அ) பருவநிலை மாற்றம்                  

ஆ) மணல் அள்ளுதல்     

இ) பாறைகள் இல்லாமை

ஈ) நிலத்தடிநீர் உறிஞ்சப்படுதல்    

10. உலக நாடுகள் மாற்று ஆற்றலை நோக்கிச் சென்றால் மட்டுமே புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த முடியும் - இத்தொடர் உணர்த்துவது. 

அ) கார்பன் அற்ற ஆற்றல் பயன்பாடே தேவையாகிறது

ஆ) பசுமைக்குடில் வாயுக்கள் அதிகமாகிறது

இ) காலநிலை மாறுபடுகிறது

ஈ) புவியின் இயக்கம் வேறுபடுகிறது

11. சங்க இலக்கியத்தில் இல்லாத சொற்கள் சங்க காலச் சமூகத்தில் நடைமுறையில் இருந்துள்ளன     அவை

அ) அறவோர், துறவோர்

ஆ) திருமணமும், குடும்பமும்

இ) மன்றங்களும் அவைகளும்

ஈ) நிதியமும் சுங்கமும்

12. இவற்றை வாயிலுக்கே சென்று இன்முகத்துடன் வரவேற்பாயாக என்று ஜலாலுத்தீன் ரூமி குறிப்பிடுவது 

அ) வக்கிரம்

ஆ) அவமானம்

இ) வஞ்சனை

ஈ) இவை அனைத்தும்

13. "உவாஉற வந்து கூடும்

உடுபதி, இரவி ஒத்தார்" – யார் யார்?

அ) சடாயு, இராமன்

ஆ) இராமன், குகன்

இ) இராமன், சுக்ரீவன்

ஈ) இராமன், சவரி

14. “ வெள்ளம் ‘ என்று பொருள் தரும் சொல் 

அ) புதுப்பெயல்

 ஆ) ஏறுடை

இ) ஆர்கலி

ஈ) வலனேர்பு

பகுதி - 2

 பிரிவு – 1

எவையேனும் மூன்றனுக்கு   விடை தருக  3  x  2 =                                                                                                   

15. கவிஞர் சிற்பி எவற்றை வியந்து பாட தமிழின் துணை வேண்டும் என்கிறார்?

16.நிலையாமை குறித்து சவரி உரைக்கும் கருத்து யாது?

17. சங்ககாலத்தில் தாய்வழிச் சமூகமுறையில் பெண்கள் பெற்றிருந்த உரிமைகள் யாவை?

18. விலங்குகளும் பறவைகளும் எவ்வாறு நடுங்கியதாக நக்கீரர் கூறுகிறார்?

 பிரிவு – 2

எவையேனும் இரண்டனுக்கு விடை தருக   2 × 2 = 4                                                                                         

19. நடை அழகியல் பற்றித் தொல்காப்பியம் கூறும் கருத்தைக் குறிப்பிடுக. 

20. எதிர்பாராத விருந்தினராக ஜலாலுத்தீன் ரூமி குறிப்பிடுவது யாரை? 

21. புக்கில் தன்மனை - சிறு குறிப்பு வரைக.

பிரிவு - 3

எவையேனும் ஏழனுக்கு   மட்டும் விடை தருக   7  X  2  =  14                                                                           

22. சொல்லைப் பிரித்தும் சேர்த்தும் தொடரமைக்க

 அ) தங்கை                  ஆ) அறிவில்லாதவன்

23. உயர்திணப் பன்மைப் பெயர்கள், பன்மை விகுதி பெற்றுவரும் இரண்டு தொடர்களை எழுதுக. 24. பகுபத உறுப்பிலக்கணம் தருக. 

அ) சாய்ப்பான் ஆ) கலங்கி

25. புணர்ச்சி விதி தருக. 

அ) வானமெல்லாம் ஆ) புதுப்பெயல்

26.’ பலகை ‘ -  இச்செல்லைப் பிரித்தும் சேர்த்தும் தொடரமைக்க

27. மயங்கொலிச் சொற்களை ஒரே தொடரில் அமைத்து எழுதுக.

 தலை, தளை, தழை

28.பொருத்தமான வேற்றுமை உருபைச் சேர்த்து தொடராக்குக.

  குமரன் வீடு பார்த்தான் - 

29. வல்லின மெய்களை இட்டும் நீக்கியும் எழுதுக. 

அ) ஆசிரியருக்கு கீழ்படிதல் என்னும் குணம். உண்மையானவற்றை தெரிந்துக் கொண்டு,

அறியாமையினை அகற்றி பல நல்லனவற்றை கற்று கொடுக்கும்.

30. தமிழ்க் கலைச்சொற்களை எழுதுக. 

அ) Tips ஆ) Mini Meals 

பகுதி- 3

பிரிவு - 1

எவையேனும் இரண்டனுக்கு விடைதருக        2  x  4 = 8                                                                                    

31. குகனோடு ஐவராகி, வீடணனோடு எழுவரான நிகழ்வுகளைச் சுட்டிக் காட்டுக. 

32. 'செம்பரிதி மலைமேட்டில் தலையைச் சாய்ப்பான்

செந்நிறத்துப் பூக்காடாம் வான மெல்லாம்' - தொடர் வெளிப்படுத்தும் காட்சி நயத்தை 

33.சினத்தால் வரும் கேட்டினை எழுதுக. 

34. வாடைக் காலத்தில் கோவலர்கள் எவ்வாறு பாதுகாப்பைத் தேடினர்?

பிரிவு-2

எவையேனும்  இரண்டனுக்கு  மட்டும் விடைதருக   2  x  4  =  8                                                                 

35. சங்கப் பாடல்களில் ஒலிக்கோலம் குறிப்பிடத்தக்க பண்பாகும் விளக்குக.

36. பண்டைய விரிந்த குடும்பத்தின் தொடர்ச்சியே இன்றைய கூட்டுக் குடும்பம் - விளக்கம் தருக

37. மழைவெள்ளப் பாதிப்பிலிருந்து காத்துக்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை குறிப்பிடுக.

38. மாற்று ஆற்றல் யாவை ? ஏன் மாற்று ஆற்றல் தேவை ? .

பகுதி- 3

எவையேனும் மூன்றனுக்கு விடையளிக்கவும்.     3  ×  4  =  12                                                

39. அ) நிரல்நிறை அணியை விளக்குக.    அல்லது     ஆ) உவமையணியைச் சான்றுடன் நிறுவுக.

40. இலக்கிய நயம் பாராட்டுக.  மையக்கருத்துடன் ஏற்புடைய மூன்று நயங்களை எழுதுக. 

வெட்டி யடிக்குது மின்னல் -கடல் 

       வீரத் திரை கொண்டு விண்ணை யிடிக்குது; 

கொட்டி யிடிக்குது மேகம்- கூ

        கூவென்று விண்ணைக் குடையுது காற்று

சட்டச்சட சட்டச்சட டட்டா - என்று 

        தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம் 

எட்டுத்திசையும் இடிய - மழை 

       எங்ஙனம் வந்ததடா தம்பி வீரா! 

                                        - பாரதியார்

41. பழமொழியை வாழ்க்கை நிகழ்வில் அமைத்து எழுதுக 

அ ) யானைக்கும் அடி சறுக்கும்            அல்லது             ஆ ) எறும்பு ஊரக் கல்லும் தேயும் 

42 அ) வாகைத் திணையைச் சான்றுடன் விளக்குக. 

43. தமிழாக்கம் தருக. 

1. Learning is a treasure that will follow its owner everywhere

2. A new Language is a new life.

3. If you want people to understand you speak their language.. 

4. Knowledge of languages is the doorway to wisdom..

பகுதி -  4

அனைத்து வினாக்களுக்கும் விடை தருக.    3  ×  6  =  18                                                                                 

44 .அ) நெடுநல்வாடையில் நக்கீரர் காட்டும் மழைக்கால வருணனையைச் சொல்லில் வடிக்க

  ( அல்லது )

ஆ) செய்ந்நன்றியறிதலே அறம் என்பதை வாயுறை வாழ்த்தின் துணைகொண்டு நிறுவுக. 

45. அ) குடும்பம் என்னும் சிறிய அமைப்பிலிருந்து மனித சமூகம் கட்டமைக்கப்படுகிறது விளக்குக. ( அல்லது )

ஆ ) ‘நெகிழி தவிர்த்து நிலத்தை நிமிர்த்து என்னும் தலைப்பில் சுற்றுச்சூழல் ஆர்வலர் பசுமை தாசனாருடன்  நீங்கள் நடத்திய  கற்பனை கலந்துரையாடல் கருத்துக்களைத் தொகுத்து எழுதுக.. 

46. ஆ) உரிமைத்தாகம் கதையில் சகோதரர்கள் ஒன்றிணையாமல் இருந்திருந்தால் கதையை தொடர்ந்து எழுதி முடிக்க ( அல்லது ) 

ஆ) பாரதியின் கடிதம் வாயிலாக நீங்கள் அறிந்துகொண்ட மொழிப்பற்று. சமூகப்பற்று ஆகியவற்றை விவரிக்க

பகுதி - V 

அடிபிறழாமல் செய்யுள் வடிவில் விடை தருக.        4 + 2 = 6                                                                        

47. அ) 'துன்பு உளதுஎனின்' எனத் தொடங்கும் கம்பராமாயணப் பாடலை அடிபிறழாமல் எழுதுக. 

      ஆ) 'சுடும்' என முடியும் குறளை அடிபிறழாமல் எழுதுக.





எம் . ஏ.  ஜெலஸ்டின்,  முதுகலைத் தமிழாசிரியர்,     கார்மல் மேனிலைப் பள்ளி,     நாகர்கோவில்- 4,           9843448095


முதல் இடைத்தேர்வு 2023 - மாதிரி வினாத்தாள் 2 -👇👇👇👇👇DOWNLOAD HERE


12 ஆம் வகுப்பு | தமிழ் | இயல் 2 | செயல் திட்டம் | மாணவர் செயல்பாடு | வெள்ளப் பெருக்கின் தாக்கங்கள்| திரட்டு வைப்பேடு | STUDENTS ACTIVITITY |  PROJECT | ALBUM | DOWNLOAD HERE

12th TAMIL | இயல் 2| பெருமழைக்காலம் | பிறகொருநாள் கோடை | நெடுநல் வாடை | பாடக்குறிப்பேடு | NOTES OF LESSON | DOWNLOAD HERE 


11 ஆம் வகுப்பு |பாடக் குறிப்பேடு |இயல் 1- மொழிமுதல், இறுதி எழுத்துகள்| மொழிப்பயிற்சி-DOWNLOAD HERE


இயல் 1,2,3 | இலக்கணம் |மொழிப்பயிற்சி | 2 மதிப்பெண் வினா விடைகள் | DOWNLOAD HERE

முதல் இடைத்தேர்வு 2023 - மாதிரி வினாத்தாள் 1 -👇👇👇👇👇DOWNLOAD HERE

 

12th தமிழ் | மாதத் தேர்வு  | இயல் 1 | அலகுத் தேர்வு - 2023| மாதிரி வினாத்தாள் - 1 | DOWNLOAD HERE

12th தமிழ் | மாதத் தேர்வு  | இயல் 1 | அலகுத் தேர்வு - 2023| மாதிரி வினாத்தாள் - 2 | DOWNLOAD HERE

12th தமிழ் | மாதத் தேர்வு  | இயல் 1 | அலகுத் தேர்வு - 2023| மாதிரி வினாத்தாள் - 3 | DOWNLOAD HERE









 12th Standard TAMIL QUESTION 2023 |12TH TAMIL  PUBLIC STUDY MATERIAL (2023) |TWO MARK STUDY MATERIAL



12th Standard TAMIL QUESTION PAPER 2023 |12TH TAMIL PUBLIC EXAM STUDY MATERIAL 2023 |MODEL QUESTION PAPER -1(2023)

12th Standard TAMIL QUESTION PAPER 2023 |12TH TAMIL PUBLIC EXAM STUDY MATERIAL 2023 |MODEL QUESTION PAPER - 5 (2023)|WITH ANSWER KEY










Post a Comment

Previous Post Next Post