Loading ....

11th Standard- +1Tamil - Tamil -Study Material - NOTES OF LESSON - தமிழ் - 11 ஆம் வகுப்பு - பாடக் குறிப்பேடு - இயல் 4- துணைப்பாடம்-இனிக்கும் இலக்கணம்



 


11th Standard- +1Tamil - Tamil -Study Material - NOTES OF LESSON - தமிழ் - 11 ஆம் வகுப்பு - பாடக் குறிப்பேடு - இயல் 4- துணைப்பாடம்-இனிக்கும் இலக்கணம்







இயல்  : 4 

துணைப்பாடம் - இதழாளர் பாரதி 

    இனிக்கும் இலக்கணம் - படைப்பாக்க உத்திகள்

   NOTES OF LESSON ( பாடக் குறிப்பேடு ) 




 

வகுப்பு : XI                                                                                  குருசடி      எம். ஏ. ஜெலஸ்டின் 

பாடம்   : தமிழ்                                                                                முதுகலைத் தமிழாசிரியர்

நாள்       :                                                                                                  98434480985

பருவம்   : முதல் பருவம்

இயல்       : 4      -  கேடில் விழுச் செல்வம்

அலகு : துணைப்பாடம் , இனிக்கும் இலக்கணம்

பாடத்தலைப்பு :               துணைப்பாடம் 

இதழாளர் பாரதி 

இனிக்கும் இலக்கணம்

படைப்பாக்க உத்திகள்

பாடவேளை : 4

பக்க எண் : 102 முதல் 110 வரை

கற்பித்தலின் நோக்கம்

பாரதியின் இதழியல் பணி பற்றி அறிதல். 

பாரதியார் நடத்திய இதழ்கள் பற்றி அறிதல். 

பாரதியாரின் புனைபெயர்களை அறிதல். 

கருத்துப்படம் கொண்ட பத்திரிகையைப் பாரதியார் நடத்த விரும்பியதை புரிய வைத்தல்.

கடிதம் மூலம் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளும் திறனைப் புரிய  வைத்தல்.

சனிக்கிழமை தோறும் வெளிவந்த இந்தியா இதழின் சிறப்பினை அறிதல். 

தமிழில் தலைப்பிடும் முறையைப்  பாரதி அறிமுகப்படுத்தியதைப்  புரிய வைத்தல்

உவமை, உருவகம், உள்ளுறை, இறைச்சி போன்ற படைப்பாக்க உத்திகளைப் புரிய  வைத்தல்.

கற்பித்தல் திறன்கள்

இதழாளர் பாரதி மற்றும் படைப்பாக்க உத்திகள் என்னும் பாடப் பகுதிகளை,

1) விரிவுரைத்திறன்

2) அறிமுகப்படுத்துதல் திறன் 

3) எடுத்துக்காட்டுகள் மூலம் விளக்குதல் திறன்

4) கேள்விகள் கேட்டுப் புரிய வைத்தல் திறன் 

5)  விளக்கக் காட்சித் திறன்

6) கலந்துரையாடல் மூலம் பெறப்படும் அறிக்கைகள் தரும் திறன் 

7) சிக்கலற்ற மற்றும் சுருக்கமான பாட இலக்கை அடையும் திறன் 

ஆகிய திறன்கள் மூலம் இதழ் என்றால் என்ன? இதழின் வடிவமைப்பு, ஆசிரியர்கள் எழுதும் கட்டுரைகள், இதழின் மாதிரி வடிவங்கள், இதழ்கள் ஆற்றும் பணி பற்றியும், மேலும்

உவமைகளைப் அறிதல், பயன்படுத்துதல், படைப்பாக்கத்தில் பயன்படுத்த வேண்டிய உத்திகள் பற்றி கேள்விகள் கேட்டல், கலந்துரையாடல் நடத்துதல் போன்ற திறன்கள் மூலம் பாடப்பகுதியைப் புரிய வைத்தல்.

கற்பித்தலில் நுண்திறன்கள்

இதழாளர் பாரதி மற்றும் படைப்பாக உத்திகள் என்னும் பாடப்பகுதியின் அனைத்துப் பகுதிகளும் மாணவர்கள் மனதில் ஆழமாகப் பதிய 

1. பலவகை தூண்டல் வினாக்களைக் கேட்டல்

2. சரளமான வினாக்களைக் கேட்டல் 

3. கேள்விகள் கேட்டல்

4. தகவல் பரிமாற்றத்தை நிறைவு செய்தல்

5. திரும்ப கூறவேண்டியவற்றைத் திட்டமிடல் 

6. பாடம் முடித்தல் 

ஆகிய நுண்திறன்கள் மூலம்  பாடப்பகுதியில் செல்லப்பட்ட அனைத்துச் செய்திகளையும். மாணவுர்கள் அறியும் விதத்தில் கற்பித்தல்.

ஆயத்தப்படுத்தல்

இதழ்கள், பத்திரிகைகள், செய்தித்தாள்கள் மற்றும் அச்சு ஊடகங்கள் மக்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களையும் ,இதழ்கள் மூலம் விடுதலைப் போராட்டக் காலங்களில்  ஏற்பட்ட விழிப்புணர்வுகளையும் எடுத்துக்கூறுதல். மேலும் மிகச் சிறந்த கவிஞர்கள் படைத்துள்ள கவிதைகளில் பொதிந்திருக்கும் படைப்பாக்க உத்திகள் குறித்து எடுத்துக் கூறி வகுப்பறையில் கற்றல் சூழலை உருவாக்குதல் வேண்டும். 

அறிமுகம்

இதழ்கள் ஆற்றும் சமூகப்பணி, இதழ்கள் சமுகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்கள், இன்று தமிழகத்தில் தலைசிறந்து விளங்கும் இதழ்கள், பத்திரிகைகள், இவற்றை எடுத்துக் கூறுதல்


பாரதியார் ஒரு சிறந்த இதழாசிரியராகச் செயல்பட்டார், என்பதற்குச் சான்றான சுதேசமித்ரன் சக்ரவர்த்தி, இந்தியா, பால பாரதி, விஜயா, சூரியோதயம், கர்மயோகி போன்ற இதழ்களைப் பற்றியும், அவரது புனையெயர்கள் பற்றிம் எடுத்துக்கூறுதல். 

சங்க காலப் பாடல்கள் முதல் கொண்டு நவீன உலகில் இயற்றப்படும் புதுக்கவிதைகள் வரை படைப்பாக்க உத்திகளோடு உருவாக்கப்படுகின்றன. அவற்றில் முக்கியமாக உவமை, உருவகம், உள்ளுறை, இறைச்சி, கருத்துப்படங்கள் ஆகியவைப் பயன்படுத்தப்படுகின்றன என்பதை எடுத்துக் கூறுதல். 

துணைக்கருவிகள்:

i ) பாடம் தொடர்பான QR code காணொலி 

ii)  பாரதியார் மற்றும் அவர் வெளியிட்ட பத்திரிகை படங்கள் 

iii) இலக்கணப் பகுதியை விளக்கும் PPT  

iv) மாணவர்கள் உருவாக்கிய கவிதை ALBUM

கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள் 

ஆசிரியர் செயல்பாடு

கற்பிக்க  இருக்கும் பாடப்படுதிகளான இதழாளர் பாரதி, படைப்பாக்க உத்திகள் ஆகியப் பாடப்பகுதிகளை நன்றாக அறிந்து கொண்டு. அதில் கூறப்பட்டுள்ள கருத்துகளைப் புரிந்து கொண்டு அதன்பிறகு கற்பிக்க  இருக்கும் பாடப் பகுதிகளை மாணவர்கள் புரியும் வண்ணம் வாய்விட்டுத் தெளிவாக. ஏற்ற குரல் நயத்துடன் பாடப்பகுதிகளை சரியான பொருள் விளக்கத்துடன் கற்பித்தல் வேண்டும். 

மாணவர்கள் அனைவரையும் தனித்தனியாக உரத்தகுரவில் பாடப்பகுதியில் உள்ள பகுதிகளை வாசிக்க துண்டுதல் வேண்டும். மாணவர்கள்  பாடப்பகுதியை வாசிக்க தடுமாறினால் தடுமாறும் மாணவர்களுக்கு வாசிப்புப் பயிற்சி வழங்குதல் வேண்டும். இதனால் வகுப்பில் இருக்கும் அனைத்து மாணவர்களும் வாசித்தல் திறனை எளிதில் அடைவார்கள்.

பாடப்பகுதிகள் 

இயல் : 4

துணைப்பாடம்  - இதழாளர் பாரதி

பாரதியின் பன்முகங்கள்

பாரதி கவிஞர் மட்டுமல்லர், சிறந்த பேச்சாளர், பாடகர், கட்டுரையாளர், கதையாசிரியர். மொழி பெயர்ப்பாளர், அரசியல் அறிஞர், ஆன்மிகவாதி, சிறந்த இதழாளர்.

இதழாசிரியர் பணி

சுதேசமித்திரன், சக்ரவர்த்தினி இந்தியா, பாலபாரதி, அல்லது யங் இந்தியா, விஜயா, சூர்யோதயம், கர்மயோகி,

படைப்புகள் வெளியிட்ட இதழ்கள்

சர்வஜன மித்திரன், ஞானபாநு, காமன் வீல், கலைமகள், தேசபக்தன், கதாரத்னாகரம் போன்ற இதழ்களில் படைப்புகளை வெளியிட்டார்.

கருத்துப்படம் 

கருத்துப்படம் , கேலிச்சித்திரம் வெளியிட்டார். 'சித்திராவளி” என்ற பெயரில் கருத்துப் படம் மட்டுமே கொண்ட இதழ் ஒன்றையும் நடத்த விரும்பினார். 

இதழியல் அறம் உடையவர்.   

இதழ்களில் தன் பெயரை வெளியிடாமல் இளசை சுப்பிரமணியன், சாவித்திரி, சி.சு.பாரதி, வேதாந்தி, உத்தமத்தேசாபிமானி, ஷெல்லிதாசன்,  காளிதாசன் ,செல்லம்மா, கிருஷ்ணன் எனப் பல புனைபெயர்களிலேயே எழுதியுள்ளர். 

பாரதியே முன்னோடி 

தமிழ் இதழ்களில் தமிழ் ஆண்டு, திங்கள், நாள் ஆகியற்றைக்  குறித்தார். தமிழில் தலைப்பிடும்  முன்னோடி இவர் ;  தலைப்பிடலை ‘மகுடமில்’ என்றார். 

சிவப்பு வண்ணத்தில் இந்தியா இதழ் 

சிவப்பு வண்ணம் புரட்சியையும், விடுதலையையும் குறிக்கும் என்பதால் இந்தியா இதழின்  வண்ணம் சிவப்பாக இருந்தது.

இலக்கணம் 

படைப்பாக உத்திகள்

உவமை ;  வினை -   பயன - , வடிவம் - உரு   என்ற நான்கின் அடிப்படையில் தோன்றும்.

சங்கப்புலவர்கள் பெயர்கள்: 

செம்புலப் பெயர்நீரார் செம்புலம்

தேய்புரிபழங்கயிற்றினார்.  - பழங்கயிறு

அணிலாடு முன்றிலார் - அணில் 

குப்பைக் கோழியார் - குப்பை

கவிஞர் தான் கூடிக் கருதிய பொருளை வெளிப்படையாகக் கூறாமல், கருப்பொருள்கள் மூலம் உவமைப்படுத்துவது  'உள்ளுறை உவமம்:' உரிப்பொருளோடு நேரிடைத் தொடர்பில்லாத குறிப்புப் பொருளே இறைச்சி ஆகும்.  எ .கா . யானையின் அன்புக்காட்சியைப் பார்த்து தலைவியின் துன்பத்தைத் தீர்ப்பான். 

மாணவர் செயல்பாடுகள்

பாடப்பகுதிகளை வாய்விட்டு உரத்த குரலில் வாசித்து வாசித்தல் திறனை மேம்படுத்தல் வேண்டும். இதழ்கள், பத்திரிகைகளின் செயல்பாடுகள் அறிந்து மாணவர்கள் சொந்தமான நடையில் கவிதை, கட்டுரைகள் எழுத கற்றுக் கொள்ளுதல். சொந்தமாகக் கேலிச்சித்திரங்களை வரையவும், அவற்றின் மூலம் செய்திகளைப் பதிய வைக்கும் திறனைப் பெறுதல்

புதிதாகக் கவிதைகள் எழுதும்போது அவற்றில் உவமை, உருவகம், உள்ளுறை, இறைச்சி ஆகியவற்றை பயன்படுத்த தெரிதல்.

வலுவூட்டும் செயல்பாடுகள் 

இதழ் மூலமாக மக்களுக்கு விழிப்புணர்வையும்  விடுதலை உணர்வையும் பாரதியார் ஊட்டிய செய்தியையும் பாரதியார் ஒரு சிறந்த இதழாசிரியராக  விளங்கிய செய்திகளையும் புதிய கவிதைகளைப் படைக்கும் போது நம் முன்னோர்கள் பயன்படித்திய  படைப்பாக்க உத்திகளையும் அவற்றைப் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அற்றைப் பயன்படுத்தியதால் கவிதையில் ஏற்படும் அழகுணர்வையும்   எடுத்துக்கூறி பாடப் பொருள்களை வலுவூட்டும் செயல்பாடுகள் மூலம் புதிய வைத்தல். 

குறைதீர் கற்பித்தல்

பாடப்பகுதியின் உட்பொருளைப் புரிந்து கொள்ளும் திறன் குறைந்த மெல்ல கற்கும் மாணவர்களுக்குப் படைப்பிலக்க உத்திகளில் உள்ள உள்ளுறை, இறைச்சி ஆகியவைப் பற்றியும், பாரதியார் இதழில்  தலைப்பிடல் பற்றிக் குறிப்பிடுவதையும், அவர் பயன்படுத்திய  புனைபெயர்களையும் மீண்டும் மீண்டும் விளக்கிக் கூறுதல் வேண்டும். 

கற்றல் விளைவுகள்:

இதழ்கள் மூலம் விழிப்புணர்வு எற்படுத்த முடியும் என்பதை அறிந்து சமூக மாற்றத்திற்கான  கருத்துகளை மாணவர்கள் எழுதி அதனை 'கை பிரதியாக்கி மாணவர்கள் வாசித்தல்  

இதழ்களில் கருத்துப்படங்கள் ஏற்படுத்தும் தாக்கங்களை அறிவதுடன் கருத்துப்படங்கள் மூலம் செய்திகளை வெளிப்படுத்தும் திறன் பெறுதல்.

படைப்பாக்க உத்திகளைப் புரிந்துகொண்டு கவிதைகளைச் சுவைக்கவும், படிக்கவும் அறிவதோடு படைப்பாக்க உத்திகளைப் பயன்படுத்திக் கவிதைகளைப் படைக்கும் திறன் பெறுதல்.

மதிப்பீடு

எளிய சிந்தனை வினாக்கள்         LOT QUESTIONS 

1) இந்தியா இதழின் ஆசிரியர் யார்?

 2) படைப்பாக உத்திகள் யாவை?

நடுத்தர சிந்தனை வினாக்கள்      MOT QUESTIONS 

1) பாரதியார் நடத்திய இதழ்கள் யாவை?

2) 'உள்ளுறை உவமம்" என்றால்  என்ன? 

உயர்தர சிந்தனை வினாக்கள்      HOT QUESTIONS

i) பாரதியாரின் இதழியல் பணிகளைத் தொகுத்து எழுதுக. 

ii) உவமையை அடிப்படையாகக் கொண்ட சங்கப்புலவர் சிலரின் பெயர்களைக் கூறுக

தொடர்பணி

1) பாரதி பணிபுரிந்த இதழ்களின் அட்டைப் படங்களையும் கருத்துப்படங்களையும் இணையத்தில் சேகரித்தும் படத் தொகுப்பு தயாரித்தல். 

2) பூவை விட்டு இறங்காதே

இறக்கை முறிந்த வண்ணத்துப் பூச்சியே 

உனக்காக எறும்புகள்.. 

3) மனிதர்க்கு உணவாவதை எண்ணி 

கண்ணீர்  விட்டனவோ மீனகள் 

கடல் நீரில் உப்பு                     -   உத்திகளை  விளக்குக


தமிழ் |11 ஆம் வகுப்பு |பாடக் குறிப்பேடு |இயல் 4| துணைப்பாடம்|இனிக்கும் இலக்கணம்

DOWNLOAD HERE 

எம் . ஏ.  ஜெலஸ்டின்,  முதுகலைத் தமிழாசிரியர்,    

கார்மல் மேனிலைப் பள்ளி,     நாகர்கோவில்- 4,           9843448095


இயல் 4| பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்| |Power Point Presentation |PPT| DOWNLOAD HERE


முதல் இடைத்தேர்வு 2023 - மாதிரி வினாத்தாள் 2 -👇👇👇👇👇DOWNLOAD HERE


12 ஆம் வகுப்பு | தமிழ் | இயல் 2 | செயல் திட்டம் | மாணவர் செயல்பாடு | வெள்ளப் பெருக்கின் தாக்கங்கள்| திரட்டு வைப்பேடு | STUDENTS ACTIVITITY |  PROJECT | ALBUM | DOWNLOAD HERE

12th TAMIL | இயல் 2| பெருமழைக்காலம் | பிறகொருநாள் கோடை | நெடுநல் வாடை | பாடக்குறிப்பேடு | NOTES OF LESSON | DOWNLOAD HERE 


11 ஆம் வகுப்பு |பாடக் குறிப்பேடு |இயல் 1- மொழிமுதல், இறுதி எழுத்துகள்| மொழிப்பயிற்சி-DOWNLOAD HERE


இயல் 1,2,3 | இலக்கணம் |மொழிப்பயிற்சி | 2 மதிப்பெண் வினா விடைகள் | DOWNLOAD HERE

முதல் இடைத்தேர்வு 2023 - மாதிரி வினாத்தாள் 1 -👇👇👇👇👇DOWNLOAD HERE

 

12th தமிழ் | மாதத் தேர்வு  | இயல் 1 | அலகுத் தேர்வு - 2023| மாதிரி வினாத்தாள் - 1 | DOWNLOAD HERE

12th தமிழ் | மாதத் தேர்வு  | இயல் 1 | அலகுத் தேர்வு - 2023| மாதிரி வினாத்தாள் - 2 | DOWNLOAD HERE

12th தமிழ் | மாதத் தேர்வு  | இயல் 1 | அலகுத் தேர்வு - 2023| மாதிரி வினாத்தாள் - 3 | DOWNLOAD HERE









 12th Standard TAMIL QUESTION 2023 |12TH TAMIL  PUBLIC STUDY MATERIAL (2023) |TWO MARK STUDY MATERIAL



12th Standard TAMIL QUESTION PAPER 2023 |12TH TAMIL PUBLIC EXAM STUDY MATERIAL 2023 |MODEL QUESTION PAPER -1(2023)

12th Standard TAMIL QUESTION PAPER 2023 |12TH TAMIL PUBLIC EXAM STUDY MATERIAL 2023 |MODEL QUESTION PAPER - 5 (2023)|WITH ANSWER KEY









Post a Comment

Previous Post Next Post