Loading ....

12th Standard- +2Tamil - Tamil -Study Material - NOTES OF LESSON -தமிழ் -12 ஆம் வகுப்பு-பாடக் குறிப்பேடு -இயல் 4-துணைப்பாடம்-இலக்கணம்

12th Standard- +2Tamil - Tamil -Study Material - NOTES OF LESSON -தமிழ் -12 ஆம் வகுப்பு-பாடக் குறிப்பேடு -இயல் 4-துணைப்பாடம்-இலக்கணம் 


இயல் - 4

துணைப்பாடம்  -  பாதுகாப்பாய் ஒரு பயணம்

இலக்கணம்     பா இயற்றப் பழகுவோம்                                                                  

NOTES OF LESSON ( பாடக் குறிப்பேடு )  



வகுப்பு XII                                          

பாடம் : தமிழ் 

நாள்

பருவம் : முதல் பருவம்

இயல் :

அலகு : துணைப்பாடம் , இலக்கணம் 

பாடத்தலைப்பு :     துணைப்பாடம்

                        பாதுகாப்பாய் ஒரு பயணம்

                        இலக்கணம் 

                      பா இயற்றப் பழகுவோம்          

பாடவேளை : 4

பக்க எண் : 91 முதல் 99 வரை

கற்பித்தலின் நோக்கம்

போக்குவரத்து விதிகளை அறிதல். 

இருசக்கர வாகனம் ஏற்படுத்தும் விபத்துகள் பற்றியும், வாகனங்களை இயக்க உரிமம் தேவை என்பதையும் புரிய வைத்தல்.

போக்குவரத்து விதிகளை முழுமையாக அறிவதுடன் மீறி செயல்படுபவர்க்கு விதிக்கப் படும் தண்டனைகளை அறிதல்.

.International Road congress - மாநாட்டில் எடுக்கப்பட்ட விதிமுறைகளை அறிதல்.

'வெண்பா எழுதும் இலக்கண விதிகளை அறிதல்.

வெண்பாவின் வகைகளை அறிதல்.

கற்பித்தல் திறன்கள்

பாதுகாப்பாய் ஒரு பயணம் மற்றும் பா இயற்றப் பழகுவோம் என்னும் பாடப் பகுதிகளை, 

1. விரிவுரைத்திறன் 

2. அறிமுகப்படுத்தல் திறன்

3. எடுத்துக்காட்டுகள் மூலம் விளக்குதல் திறன்

4.  கேள்விகள் கேட்டுப் புரிய வைத்தல் திறன் 

5. விளக்கக் காட்சித் திறன்

6. கலந்துரையாடல் மூலம் பெறப்படும் அறிக்கைகள் தரும் திறன் 

7. சிக்கலற்ற மற்றும் சுருக்கமான பாட இலக்கை அடையும் திறன் 

8. வினாடி வினாக்கள் கேட்டல் திறன் 

9. வலுவூட்டுதல் திறன் 

10.  வகுப்பில் விவாதம் செய்தல் திறன் 

ஆகிய திறன்கள் மூலம் பாடப்பகுதிகளை மிகத் தெளிவாகக்  கற்பிக்க வேண்டும்.

கற்பித்தல் நுண்திறன்

மாணவர்கள் கற்றலில் முழு அடைவு அடைய பாடப்பொருள்கள் அனைத்தும் முழுமையாகப் புரிந்து கொள்ள ,

1. தூண்டல் தொடங்குதல் நுண்திறன்

2.  பல்வகை தூண்டல் வினாக்கள் கேட்டல் நுண்திறன்

3.  சரளமான வினாக்களைக் கேட்டல் நுண்திறன்

4.  கேள்விகள் கேட்டல்நுண்திறன்

5.  விரிசிந்தனையைத் தூண்டும் வினாக்களைக் கேட்டல்'நுண்திறன்

6. பகுத்தறிவை ஊக்குவித்தல் நுண்திறன்

7. படைப்பாற்றலை வளர்த்தல் நுண்திறன்

8.  தகவல் பரிமாற்றதை நிறைவு செய்தல் நுண்திறன்

9. திரும்ப கூறவேண்டியவற்றைத் திட்டமிடல் நுண்திறன்

10. பாடம் முடித்தல்நுண்திறன்

ஆகிய நுண்திறன்கள் மூலம் பாடப்பகுதியின் அனைத்துச் செய்திகளையும் மாணவர்கள் அறியும் விதத்தில் கற்பித்தல் வேண்டும்.

ஆயத்தப்படுத்தல் 

போக்குவரத்து அடையாளங்கள் சிவற்றை வகுப்பறையில் காண்பித்து, அவ்வடையாளங்கள்  வெளிப்படுத்தும் செய்திகளைக் கேட்டல், சாலைப்பாதுகாப்புக் குறித்து மாணவர்களுடன்  கலந்துரையாடி கற்கும் சூழலை உருவாக்குதல்.

ஒரு சில வெண்பா பாடல்களைக் கூறி அந்த வெண்பா பாடல்களில் இருக்கும் வெண்பாவிற்கான இலக்கணங்களை கூறி, பாடப் பகுதியைக் கற்கும் சூழலை உருவாக்குதல். 

அறிமுகம்

போக்குவரத்து விதிமுறைகளை விளக்கும் காணொலிகள், விபத்து நடந்த பகுதிகளை உள்ளடக்கிய காணொலிகள் ஆகியவற்றை மாணவர்களைப் பார்க்க வைத்து. சாலை விதிகளின் முக்கியத்துவத்தை உணர வைத்துப் பாடப்பகுதியை அறிமுகம் செய்தல்.

திருக்குறள் பாடலில் ஒன்றை எடுத்துக் கூறி அதில் அமைந்திருக்கும். வெண்பாவிற்கான அத்தனை இலக்கணங்களையும் மாணவர்களுக்குப் புரிய வைத்து வெண்பா பற்றிய புரிதலைத் தெளிவுபடுத்திப் பாடப்பகுதியை அறிமுகம் செய்தல்.

துணைக் கருவிகள்

i) பாடம் தொர்பான QR CODE காணொலி

ii) விபத்துகள் குறித்த காணொலி 

iii) சாலை போக்குவரத்து அடையாளங்கள் குறித்த காணொலி

iv) சாலை விதிமுறைகளை விளக்கும் PPT 

v) பா இயற்ற பழகலாம் பாடப் பகுதிகளை விளக்கும் PPT

கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

ஆசிரியர் செயல்பாடுகள்

கற்பிக்க இருக்கும் பாடப்பகுதிகளான பாதுகாப்பாய் ஒரு பயணம், பா இயற்றப்

பழகலாம் ஆகிய பாடப்பகுதிகளை நன்றாகப் புரிந்து கொண்டு அதில் கூறப்பட்டுள்ள செய்திகளை நன்கு அறிந்து கொண்டு, அதன் பிறகே கற்க  இருக்கும் பாடப் பகுதிகளை மாணவர் புரியும் வண்ணம் வாய்விட்டுத் தெளிவாக ஏற்ற குரல் நயத்துடன்  துணைப்பாடத்தை வாசித்துப் புரிய வைத்தல் வேண்டும்.

இலக்கணப் பகுதியைச் சரியான பொருள் விளக்கத்துடன் கற்பித்தல் வேண்டும்.

மாணவர்கள் அனைவரையும் தனித்தனியாக உரத்த குரலில் பாடப் பகிதியில் உள்ள  பகுதியை வாசிக்க கூறவேண்டும் .  தடுமாறினால் தடுமாறும் மாணவர்களுக்கு வாசிப்புப் பயிற்சி வழங்குதல் வேண்டும். இதனால் வகுப்பில் இருக்கும் அனைத்து மாணவர்களும் வாசித்தல் திறனை எளிதல் அடைவார்கள்.

பாடப்பகுதிகள் 

இயல் - 4

துணைப்பாடம் - பாதுகாப்பாய் ஒரு பயணம்

சாலையில் பாதுகாப்பாகப் பயணம் செய்வதற்குப்  பல விதிமுறைகள் உள்ளன. இதனை அறிந்து கொண்டால் விபத்துகளைத் தவிர்க்கலாம்.  மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல். 

பள்ளிப் பருவத்திலேயே சாலைப் பாதுகாப்புக் குறித்த விழிப்புணர்வை நாம் ஏற்படுத்த வேண்டும். 

 உயிரின் மதிப்பைப் புரிய வைத்தல்

சாலையில் விளையாடுவது, கவனிக்காமல் திடீரென்று சாலையைக் கடப்பது, சாலையின் நடுவே செல்வது, சாலையை அடைத்துக் கொண்டு செல்வது, முன்பு செல்லும் வாகனத்தைப் பிடித்துக் கொண்டு மீதிவண்டியில் செல்வது, பேருந்தில் படிக்கட்டில் தொங்கிக கொண்டு பயணம் செய்வது. விபத்தில் உயிரையும், உடலையும் இழப்பது குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் பெரிய இழப்பாகும். 

ஒழுங்கீனச் செயல்களைத் தடுத்தல்

இருசக்கர வாகனத்தில் இரண்டு பேருக்கு மேல் சொல்வது, தலைக்கவசம் அணியாமல் செல்வது, கைப்பேசியில் பேசிக் கொண்டே செல்வது, போட்டி, பந்தயம் என்று பொது வெளியில் உச்ச வேகத்தில் ஓட்டுவது, காதணி கேட்பிகள் மாட்டிக் கொண்டும், மது  குடித்து விட்டு ஓட்டுவது போன்ற ஒழுங்கின  செயல்களில் ஈடுபடக்கூடாது. 

அவசரம் என்ற நோயைத் தடுத்தல்

அவசரத்தால் வாகன ஓட்டுநரின் கவனக்குறைவு, போதிய பயிற்சியின்மை, தட்பவெப்பநிலை, இயந்திர கோளாறு, மிகுதியான  ஆட்கள் சரக்குகளை ஏற்றிச் சொல்வது, . தொடர்வண்டி இருப்புப் பாதைகளைக் கவனிக்காமல் கடப்பது. குறியீடுகளைப் பயன்படுத்தல்

உத்தரவுக் குறியீடுகள், எச்சரிக்கை குறியீடுகள்,  தகவல் குறியீடுகள் இவற்றைக் கண்டுணர்ந்துபின்பற்ற வேண்டும்.  

இலக்கணம்

பா இயற்றப் பழகலாம்.

வன்பா என்றழைக்கப் படுவது வெண்பா' 

வெண்பாவின் தளை இயற்சீர்வெண்டளை, வெண்சீர் வெண்டளை

வெண்பாவின் தளை 

மா முன்  நிரை 

விளம் முன்  நேர்  

காய் முன் நேர்

வெண்பாவின் ஈற்றுச்சீர் நாள், மலர், காசு, பிறப்பு இவற்றில் ஒன்றைக் கொண்டு  முடியும். 

ஈரசை சீர்கள்: தேமா, புளிமா, கருவிளம், கூவிளம் .வெண்பாவின் இலக்கணம், நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா ஆகியவற்றை விளக்கமாக எடுத்துக் கூறுதல் வேண்டும். 

மாணவர் செயல்பாடுகள்.

பாடப்பகுதிகளை வாய்விட்டு உரத்த குரயில் வாசித்து வாசித்தல் திறனை மேம்படுத்தல் வேண்டும்.

சாலை விதிகளை அறிந்து கொள்வதால், தமிழ்நாடு சாலை விபத்தில்லா மாநிலமாக மாற மாணவர்கள் தங்கள் சாலை  பயணத்தில் சாலை விதிகளைப் பின்பற்றுவதுடன்  வாழ்க்கையில் அதனைப் பின்பற்றி தான்' வாமும் சமூகத்திற்கும் உரிய விழிப்புணர்வு கொடுத்தல் வேண்டும்.

வெண்பா எழுதும் இலக்கண விதிகளை அறிந்து கொண்டதால் சுயமாக வெண்பா கவிதை எழுத ஆர்வம்  பெற்று கவிதை எழுதுதல்.

வலுவூட்டும் செயல்பாடுகள்

போக்குவரத்து அடையாளங்களையும். போக்குவரத்து விதிமுறைகளையும், போக்குவரத்து விபத்தால் ஏற்படும் பாதிப்புகளையும், வெண்பாவின் பொது இலக்கணத்தையும் மாணவர்கள் நன்றாகப் புரிந்து கொள்ள பாடப்பகுதிகளை எடுத்துக்கூறிப் பாடப் பொருளை வலுவூட்டும் செயல்பாடுகள் மூலம் புரிய வைத்தல்.

குறைதீர் கற்பித்தல்

பாடப்பகுதியின் உட்பொருளைப் புரிந்து கொண்டு கற்றலல் முழு அடைவைப் பெற இயலாத  குறைந்த திறன்  கொண்ட மெல்ல கற்கும் மாணவர்களுக்குப் போக்குவரத்து அடையாளம், விதிமுறை, விபத்தால் ஏற்படும் பாதிப்புகள் ஆகியவற்றையும், வெண்பா சார்ந்த அனைத்து இலக்கணங்களையும் மீண்டும் மீண்டும் விளக்கிக் கூறிப் பாடப் பகுதிகளைப் புரிய வைத்தல்.

கற்றல் விளைவுகள்

போக்குவரத்து விதிமுறைகளை அறிந்ததால் அதனைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிம் எடுத்துக் கூறும் திறன் பெறுதல்.

போக்குவரத்து விதிமுறைகளை முழுமையாக அறிந்ததால் விதிமுறைகளைத் தங்கள்  வாழ்விலும் பின்பற்றுதல்.  ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனங்களை  இயக்குவது தவறு என்பதை அறிந்ததால் ஓட்டுநர் உரிமம் பெற்ற பிறகே வாகனம் இயக்க  வேண்டும் என்ற அறிவினைப் பெறுவர்.

‘ வெண்பா’ எழுதும்  இலக்கணமுறையை  மாணவர்கள் அறிந்ததால் மாணவர்கள்  சொந்தமாகக்  கவிதை எழுதும் திறன் பெறுவர். 

மதிப்பீடு

எளிய சிந்தனை வினாக்கள்   LOT QUESTIONS

1.  சாலையில் விபத்தில்லாமல் இருக்க நாம் எதை பின்பற்ற வேண்டும்? 

2. 'வன்பா' என்பது எப்பாவகை?

நடுத்தர சிந்தனை வினாக்கள்     MOT QUESTIONS

1. குறியீடுகளின் வகைகள் எத்தனை ? அவை யாவை?

2. வெண்பாவின் தளைகள் யாவை?  

உயர்தர சிந்தனை வினாக்கள்     HOT QUESTIONS

1.  விபத்தில்லா தமிழ்நாடு அமைய நீ செய்ய வேண்டியவை யாவை?

2. வெண்பாவின் பொது இயக்கணத்தை எழுதுக.

தொடர்பணி

1.  சாலைப் பாதுகாப்பினை வலியுறுத்தும் முழங்கத் தொடர்கள் அடங்கிய பதாகைகள் சிலவற்றை உருவாக்கி  வகுப்பறையில் காட்சிப் படுத்துதல்.

2.  ‘இயற்கை' என்னும் தலைப்பில் வெண்பா எழுதுதல்.


தமிழ் |12 ஆம் வகுப்பு|பாடக் குறிப்பேடு |இயல் 4|துணைப்பாடம்|இலக்கணம் DOWNLOAD HERE

எம் . ஏ.  ஜெலஸ்டின்,  முதுகலைத் தமிழாசிரியர்,    

கார்மல் மேனிலைப் பள்ளி,     நாகர்கோவில்- 4,           9843448095

தமிழ் |11 ஆம் வகுப்பு |பாடக் குறிப்பேடு |இயல் 4| துணைப்பாடம்|இனிக்கும் இலக்கணம்  DOWNLOAD HERE

இயல் 4| பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்| |Power Point Presentation |PPT| DOWNLOAD HERE

முதல் இடைத்தேர்வு 2023 - மாதிரி வினாத்தாள் 2 -👇👇👇👇👇DOWNLOAD HERE

12 ஆம் வகுப்பு | தமிழ் | இயல் 2 | செயல் திட்டம் | மாணவர் செயல்பாடு | வெள்ளப் பெருக்கின் தாக்கங்கள்| திரட்டு வைப்பேடு | STUDENTS ACTIVITITY |  PROJECT | ALBUM | DOWNLOAD HERE

12th TAMIL | இயல் 2| பெருமழைக்காலம் | பிறகொருநாள் கோடை | நெடுநல் வாடை | பாடக்குறிப்பேடு | NOTES OF LESSON | DOWNLOAD HERE 

11 ஆம் வகுப்பு |பாடக் குறிப்பேடு |இயல் 1- மொழிமுதல், இறுதி எழுத்துகள்| மொழிப்பயிற்சி-DOWNLOAD HERE

இயல் 1,2,3 | இலக்கணம் |மொழிப்பயிற்சி | 2 மதிப்பெண் வினா விடைகள் | DOWNLOAD HERE

முதல் இடைத்தேர்வு 2023 - மாதிரி வினாத்தாள் 1 -👇👇👇👇👇DOWNLOAD HERE

 

12th தமிழ் | மாதத் தேர்வு  | இயல் 1 | அலகுத் தேர்வு - 2023| மாதிரி வினாத்தாள் - 1 | DOWNLOAD HERE

12th தமிழ் | மாதத் தேர்வு  | இயல் 1 | அலகுத் தேர்வு - 2023| மாதிரி வினாத்தாள் - 2 | DOWNLOAD HERE

12th தமிழ் | மாதத் தேர்வு  | இயல் 1 | அலகுத் தேர்வு - 2023| மாதிரி வினாத்தாள் - 3 | DOWNLOAD HERE









 12th Standard TAMIL QUESTION 2023 |12TH TAMIL  PUBLIC STUDY MATERIAL (2023) |TWO MARK STUDY MATERIAL



12th Standard TAMIL QUESTION PAPER 2023 |12TH TAMIL PUBLIC EXAM STUDY MATERIAL 2023 |MODEL QUESTION PAPER -1(2023)

12th Standard TAMIL QUESTION PAPER 2023 |12TH TAMIL PUBLIC EXAM STUDY MATERIAL 2023 |MODEL QUESTION PAPER - 5 (2023)|WITH ANSWER KEY








Post a Comment

Previous Post Next Post