Loading ....

11th Standard- +1Tamil - Tamil -Study Material - NOTES OF LESSON - தமிழ் - 11 ஆம் வகுப்பு - பாடக் குறிப்பேடு - இயல் 5 - உரைநடை- செய்யுள்- ஆனந்தரங்கர் நாட்குறிப்பு- சீறாப்புராணம்-

11th Standard- +1Tamil - Tamil -Study Material - NOTES OF LESSON - தமிழ் - 11 ஆம் வகுப்பு - பாடக் குறிப்பேடு - இயல் 5 - உரைநடை- செய்யுள்- ஆனந்தரங்கர் நாட்குறிப்பு- சீறாப்புராணம்






இயல்  : 5 

உரைநடை  - ஆனந்தரங்கர் நாட்குறிப்பு  

    செய்யுள்    -  சீறாப்புராணம் 

   NOTES OF LESSON ( பாடக் குறிப்பேடு ) 




 

வகுப்பு : XI                                                                                  குருசடி      எம். ஏ. ஜெலஸ்டின் 

பாடம்   : தமிழ்                                                                                முதுகலைத் தமிழாசிரியர்

நாள்       :                                                                                                  98434480985

பருவம்   : முதல் பருவம்

இயல்       : 5      -  நாளெல்லாம் வினை செய் 

அலகு : உரைநடை , செய்யுள் 

பாடத்தலைப்பு : உரைநடை 

ஆனந்தரங்கர் நாட்குறிப்பு  

செய்யுள் 

சீறாப்புராணம் 

பாடவேளை : 4

பக்க எண் : 117 முதல் 127 வரை

கற்பித்தலின் நோக்கம்

பன்மொழி புலமை உடைய ஆனந்தரங்கர் பற்றிய தகவல்களை அறிதல்.

புதுவை பற்றிய வரலாற்றுச் செய்திகளை ஆனந்தரங்கர் நாட்குறிப்பு மூலம் அறிய வைத்தல்.  

உலக நாட்குறிப்பின் தந்தை சாமுவேல்பெப்பிசு பற்றிய செய்தியைப் புரிய வைத்தல்.

நாட்குறிப்பு மூலம் வரலாற்றுச் செய்திகளில் உள்ள மக்களின் வாழ்வியல் நிகழ்வுகளைப் பற்றிய உண்மைகளை எடுத்துக் கூறுதல்.

நபிகள் நாயகத்தின் சீறாப் புராணம் - பற்றி அறிய வைத்தல்.

உமறுப்புலவர் பற்றிய செய்திகளைப் புரிய வைத்தல் . 

மதீனா நகரத்தின் சிறப்புகளை உமறுப்புலவர் எடுத்துரைக்கும் செய்திகளின் அடிப்படையில் அறிய வைத்தல்.

கற்பித்தல் திறன்கள்

ஆனந்தரங்கர் நாட்குறிப்பு மற்றும் சீறாப்புராணம் என்னும் பாடப்பகுதிகளை,

1.  விரிவுரை திறன்

2.  அறிமுகப்படுத்தல் திறன்

3.  எடுத்துக்காட்டுகள் மூலம் விளக்குதல் திறன் 

4.  கேள்விகள் கேட்டுப் புரியவைத்தல் திறன்

5.  கலந்துரையாடல் மூலம் பெறப்படும் அறிக்கைகள் பெறுதல் திறன்

6.  விளக்கக் காட்சித் திறன் 

7.  வலுவூட்டுதல் திறன்

8.  வினாடி வினா கேள்விகள் கேட்டு ஆயத்தப்படுத்துதல் திறன்

9.  சிக்கலற்ற மற்றும் சுருக்கமான பாட இலக்கை அடையும் திறன்.

10. வகுப்பில் விவாதம் செய்து பாடப்பொருளை விளக்குதல் திறன்

ஆகிய கற்பித்தல் திறன்களைப் பயன்படுத்திப் பாடப்பகுதிகளை மிகத்தெளிவாக கற்பிக்க வேண்டும்.

கற்பித்தல் நுண்திறன்கள்

மாணவர்கள் கற்றலில் முழு அடைவு அடையவும், பாடப்பொருளில் கூறப்பட்டுள்ள செய்திகளையும் பாடப்பொருளின் பொருண்மை களையும் முழுமையாகப்  புரிந்து கொள்ளவும்

1.  பல்வகை தூண்டல் வினாக்கள் கேட்டல் நுண்திறன்  

2. சரளமான வினாக்கள் கேட்டல் நுண்திறன்  

3. பாடப்பொருள் சர்ந்த மறைமுக  வினாக்கள் கேட்டல் நுண்திறன்  

4. தூண்டல் தொடங்குதல் நுண்திறன்  

5. பாடம் தொடர்பான விரிசிந்தனையைப்பெற விரி சிந்தனையைத் தூண்டும் வினாக்களைக் கேட்டல் நுண்திறன்  

6. பகுத்தறிவை ஊக்குவித்தல் நுண்திறன்  

7. படைப்பாற்றலை வளர்த்தல் நுண்திறன்  

8. திரும்ப கூறவேண்டியவற்றைத் திட்டமிடல் நுண்திறன்  

9. தகவல் பரிமாற்றத்தை நிறைவு செய்தல் நுண்திறன்  

10. பாடப் பொருளை முடித்தல் நுண்திறன்  

ஆகிய நுண்திறன்கள் மூலம் பாடப்பகுதியின் அனைத்துச் செய்திகளையும் மாணவர்கள் புரியும் விதத்தில் கற்பித்தல் வேண்டும்

அறிமுகம்

நாட்குறிப்புகளைக் காண்பித்தல். உலக நாட்குறிப்பின் தந்தை, மற்றும் இந்திய நாட்குறிப்பின் தந்தை ஆகியோரின் படங்களை க் காட்டுதல், புதுச்சேரியின் வரலாற்றை அறிந்து கொள்ள அம்மாநில வளர்ச்சிப் பற்றிய காணொலியைக்காட்டுதல், புதுசேரியை ஆட்சிச் செய்த பிரெஞ்சு, டச்சு. போர்த்துகீசியர், ஆங்கிலேயார் பற்றிய செய்திகளையும், அன்றைய காலத்தில் வழக்கில் இருந்த நாணயங்கள் பற்றிய செய்திகளையும் எடுத்துக்கூறி பாடப்பகுதியை அறிமுகம் செய்தல்.

முகமது நபிகளின் வாழ்க்கை வரலாற்றுச் செய்திகள், மக்கா, மதீனா நகரின் சிறப்புகள், மதீனா நகருக்கு நபிகள்  செல்வதற்கான காரணங்கள், மதீனா நகரின் வளங்கள் ஆகியவற்றை எடுத்துக் கூறி மதீனம் புக்க படலம் என்னும் பாடப் பகுதியை அறிமுகம் செய்தல். 

ஆயத்தப்படுத்தல்

நாட்குறிப்பு எழுதும் பழக்கம் உண்டா? ஏன் நாட்குறிப்பு எழுத வேண்டும் ? நாட்குறிப்பு எழுதும் பழக்கம் எவ்வாறு ஏற்பட்டது ? நாட்குறிப்புகள் வரலாற்று பெட்டகங்களாக மாறிய செய்திகள் தெரியுமா? புதுச்சேரியின் வரலாற்றை அறிந்து கொள்ள ஆனந்த ரங்கரின் நாட்குறிப்பு உதவும் செய்திகளைக் கலந்துரையாடி கற்றலில் ஆர்வத்தை உருவாக்குதல்.

முகமது நபிகளின் வாழ்க்கை வரலாற்றுச் செய்திகளையும், உமறுப்புலவரைப் பற்றியும் எடுத்துக் கூறி பாடப் பகுதிகளைக் கற்கும் சூழவை உருவாக்குதல்.

துணைக்கருவிகள் 

i) பாடம் தொடர்பான QR CODE காணொலி

ii) புச்சேரி வரலாறு சர்ந்த காணொலி 

iii) ஆனந்தரங்கர் நாட்குறிப்புப் பாடப் பொருளை விளக்கும் PPT 

iv) சீறாப்புராணப் பாடப் பொருளை விளக்கும PPT

v) மதினா நகரின் சிறப்பை விளக்கும் காணொலி 

கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

ஆசிரியர் செயல்பாடுகள் 

கற்பிக்க இருக்கும் பாடப்பகுதிகளான ஆனந்தரங்கர் நாட்குறிப்பு, சீறாப்புராணம் ஆகியப் பாடப்பகுதிகளை நன்றாக அறிந்து கொண்டு அதில் கூறப்பட்டுள்ள கருத்துகளைப் புரிந்துகொண்டு அதன்பிறகு கற்பிக்க இருக்கும் பாடப்பகுதிகளை மாணவர்கள் புரியும் வண்ணம் வாய்விட்டுத் தெளிவாக ஏற்ற குரல் நயத்துடன் பாடப்பகுதிகளைச் சரியான பொருள் விளக்கத்துடன் கற்பித்தல் வேண்டும்.

மாணவர்கள் அனைவரையும் தனித்தனியாக உரத்த குரலில் பாடப்பகுதியில் உள்ள பகுதிகளை வாசித்தக்க துண்டுதல் வேண்டும். மாணவர்கள் பாடப்பகுதியை  வாசிக்க தடுமாறினால் தடுமாறும்  மாணவர்களுக்கு வாசிப்புப் பயிற்சி வழங்குதல் வேண்டும். இதனால் வகுப்பில் இருக்கும். அனைத்து மாணவர்களும் வாசித்தல் திறனை  எளிதில் அடைவார்கள்.

பாடப்பகுதிகள் 

இயல் - 5.

உரைநடை

ஆனந்தரங்கர் நாட்குறிப்பு

தமிழ்ச் சமூகத்தைப் படம் பிடித்தல்

    ஆனந்தரங்கரின் நாட்குறிப்பு 18ஆம் நூற்றாண்டின் தமிழ்ச்சமூகத்தைப் படம் பிடித்துக் காட்டுவதாக அமைந்துள்ளது. பண்பாடு, சமயம், சாதி, நீதி, வணிகம், நம்பிக்கைள் முதலான பல்வேறு கூறுகள் அடங்கிய நிகழ்வுகளை ஆனந்தரங்கர் பதிவு செய்துள்ளார். 

நீதிவழங்குதல்

எட்டு மாற்றுக்குக் குறைவான வராக நாணயங்களை வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றம் என்று பிரெஞ்சு மன்னர் ஆணையில் பேரில் 1789 ஆண்டு மே இந்த அறிவிப்பு  வெளியிடப்பட்டது. பல்வேறு காரணங்களுக்காக மரணத்தண்டனை வழங்கல், காதறுத்தல், சாட்டையடி, கிடங்கில் போடுதல் முதலிய தண்டனைகள் இருந்தன. 

வணிகச் செய்திகள்:

பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கழகம் வணிகர் பலரைப் பங்குதாரராகக் கொண்ட கூட்டு நிறுவனம் ஆகும். தமது மூலதனத்திற்கு ஏற்ப ஒவ்வொராண்டும் எத்தனை கப்பல்களைக் கீழை நாடுகளுக்கு அனுப்புவது என்பேது முன்பே திட்டமிடப்பட்டது.

பீரங்கி  முழங்குதல்

புதுச்சேரிக்குக் கப்பல் ஐரோப்பாவில் இருந்து வந்தவுடன் பீரங்கி முழங்குதல் பழக்கமாகும். நாணயம் அச்சிடும் உரிமை  பெறுதல் . 1736 இல் பல்லக்கில் வருதல் 21 பீரங்கி குண்டுகள் முழங்கின.

வரலாற்றுச் செய்திகள்

தேவணம்பட்டணம், ஆம்பூர் போர், தஞ்சைக் கோட்டை. இராபர்ட் கிளைப்

படையெடுப்பு ஆங்கிலேயர் புதுச்சேரியை முற்றுகையிடல். 

தண்டணை

மரண தண்டனை, காதறுத்தல் , சட்டையடி ,கிடங்கில் போடுதல்.

செய்யுள்

சீறாப்புராணம்

உமறுப்புலவர்

செலவியற் காண்டம் செய்திகள். 

உமறுப்புலவர் பற்றிய செய்திகள்

தானம், ஒழுக்கம், தவம், ஈகை,, மானம் பூத்திருந்தன. வெற்றியும் ஊக்கமும் காய்த்திருந்தன. “தீன்” என்னும் செல்வம் பழுத்திருந்தது.

மதீனா ,ஒண்ணகரம்- மக்கள் பல்வேறு மொழி பேசினர். தேன் அருந்தியவர் மயங்குவது போலப் பலவாறான பொருள் வளத்தால் ஒளி பெற்றுத் திகழ்கிறது. மதீனா பொன்னகரம் - மதீனா செம்மை நகரம்-   மதீனா மாளிகை நகரம் - கொடை  நகரம் -மனை நகரம் - மாநகரம் என்ற பாடப்பகுதிகளை விளக்குதல்.

மாணவர் செயல்பாடுகள்.

பாடப்பகுதிகளை வாய்விட்டு உரத்த குரலில் வாசித்து வாசித்தல் திறனை மேம்படுத்தல் வேண்டும்.

நாட்குறிப்பு எழுவதால் ஏற்படும் நன்மைகளை அறிந்து உலக புகழ்பெற்ற நாட்காட்டிகள் பற்றிய செய்திகளை  அறிந்து கொள்ளுதல். 

குழுவாக அமர்ந்து நாட்காட்டிகள் வெளிப்படுத்தும் செய்திகளையும்,

மதீனா நகரின் சிறப்பை உமறுப்புலவர் வெளிப்படித்திருக்கும் திறனைக் குறித்தும். கலந்துரையாடய் நடத்தி, அதனைப் பற்றிய முழுவிபரங்களை அறிதல்.

வலுவூட்டும் செயல்பாடுகள்  

நாட்குறிப்புகளால் அறிந்து கொள்ளும் வரலாற்றுச் செய்திகளைப் பற்றியும், புதுச்சேரியின் சமுதாய வரலாற்றுச் செய்திகளையும், மதீனா நகர மக்கள் முகமது நபியிடம் கொண்டிருந்த அன்பைப் பற்றியும், மதீனா நகரின் வளம் பற்றியும் உள்ள பாடப்பகுதிகளை எடுத்துக்கூறிப் பாடப் பொருளை வலுவூட்டும் செயல்பாடுகள் மூலம் புரிய வைத்தல்.

குறைதீர் கற்றல் 

பாடப்பகுதியின் உட்பொருளைப் புரிந்துகொண்டு கற்றலில் முழு அடைவைப் பெற இயலாத குறைந்த திறன் கொண்ட மெல்ல கற்கும் மாணவர்களுக்கு நாட்குறிப்பால் ஆனந்தரங்கர் வெளிப்படுத்திய அன்றாட நிகழ்வுகள், அரசியல் நிகழ்வுகள், வணிகச் செய்திகள் ஆகியவற்றையும், மதீனா நகரம் ஏன் சிறப்பான நகரம் என்பதை மீண்டும் மீண்டும் விளக்கிக் கூறிப் பாடப் பகுதிகளைப் புரிய வைத்தல். 

கற்றல் விளைவுகள்

நாட்குறிப்பு இலக்கியத்தின் இன்றியமையாமையை உணர்ந்து நாட்குறிப்பு எழுதும் பழக்கத்தைப் பெறுதல். 

நாட்குறிப்புகள் மூலம் வரலாற்றுச் செய்திகளை அறிந்து வரலாற்று அறிவை அதிகமாகப் பெறுதல். 

சீறாப்புராணம் இலக்கியத்தைக் கற்பதல் சமய நல்லிணக்கத்தைப் போற்றிப் பின்பற்றும் பண்ப்பைப்  பெறுதல். 

மதிப்பீடு

எளிய சிந்தனை வினாக்கள்           LOT QUESTIONS

1.உலக நாட்குறிப்பின் தந்தையார்? 

2. சீறாப் புராணத்தின் ஆசிரியர் யார்?

நடுத்தர சிந்தனை வினாக்கள்      MOT QUESTIONS 

1. மதீனாவில் காய்த்திருந்தது எது? பழுத்திருந்தது எது?. 

2 புதுச்சேரியில் வழக்கில் இருந்த தண்டணைகள் யாரை?

உயர்தர சிந்தனை வினாக்கள் HOT QUESTIONS 

1. புதுச்சேரிக்குக் கப்பல் வந்த நிகழ்வை ஆனந்தரங்கர்  எவ்வகை உவமைகளோடு ஒப்பிடுகிறார். 

2: மதீனா நகரின் சிறப்பில் மதினா நகரம் ஒண்ணகரம் என அழைக்கப்பட காரணம் யாது ? 

தொடர்பணி

1. மாணவர்களின் வாரத்திய நிகழ்வுகளை நாட்குறிப்பில் பதிவு செய்ய கூறுதல்.

2. ஆனந்தரங்கர் நாட்குறிப்பு விவரிக்கும். நிகழ்வுகளைக் காலக்கோட்டில் அமைக்க. 

3.  மாணவர்கள் வாழும் நகரத்தின் வரலாற்றுச் சிறப்புகளைத் திரட்டிப் படக் கட்டுரை உருவாக்கக் கூறுதல்.


எம் . ஏ.  ஜெலஸ்டின்,  முதுகலைத் தமிழாசிரியர்,    

கார்மல் மேனிலைப் பள்ளி,     நாகர்கோவில்- 4,           9843448095

தமிழ் |11 ஆம் வகுப்பு|பாடக் குறிப்பேடு|இயல் 5| உரைநடை|செய்யுள்| ஆனந்தரங்கர் நாட்குறிப்பு| சீறாப்புராணம்|NOTES OF LESSON |CLICK HERE 

தமிழ் |12 ஆம் வகுப்பு|பாடக் குறிப்பேடு |இயல் 4|துணைப்பாடம்|இலக்கணம் | NOTES OF LESSON | CLICK HERE

தமிழ் |11 ஆம் வகுப்பு |பாடக் குறிப்பேடு |இயல் 4| துணைப்பாடம்|இனிக்கும் இலக்கணம்  DOWNLOAD HERE

இயல் 4| பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்| |Power Point Presentation |PPT| DOWNLOAD HERE

முதல் இடைத்தேர்வு 2023 - மாதிரி வினாத்தாள் 2 -👇👇👇👇👇DOWNLOAD HERE

12 ஆம் வகுப்பு | தமிழ் | இயல் 2 | செயல் திட்டம் | மாணவர் செயல்பாடு | வெள்ளப் பெருக்கின் தாக்கங்கள்| திரட்டு வைப்பேடு | STUDENTS ACTIVITITY |  PROJECT | ALBUM | DOWNLOAD HERE

12th TAMIL | இயல் 2| பெருமழைக்காலம் | பிறகொருநாள் கோடை | நெடுநல் வாடை | பாடக்குறிப்பேடு | NOTES OF LESSON | DOWNLOAD HERE 

11 ஆம் வகுப்பு |பாடக் குறிப்பேடு |இயல் 1- மொழிமுதல், இறுதி எழுத்துகள்| மொழிப்பயிற்சி-DOWNLOAD HERE


இயல் 1,2,3 | இலக்கணம் |மொழிப்பயிற்சி | 2 மதிப்பெண் வினா விடைகள் | DOWNLOAD HERE

முதல் இடைத்தேர்வு 2023 - மாதிரி வினாத்தாள் 1 -👇👇👇👇👇DOWNLOAD HERE

 

12th தமிழ் | மாதத் தேர்வு  | இயல் 1 | அலகுத் தேர்வு - 2023| மாதிரி வினாத்தாள் - 1 | DOWNLOAD HERE

12th தமிழ் | மாதத் தேர்வு  | இயல் 1 | அலகுத் தேர்வு - 2023| மாதிரி வினாத்தாள் - 2 | DOWNLOAD HERE

12th தமிழ் | மாதத் தேர்வு  | இயல் 1 | அலகுத் தேர்வு - 2023| மாதிரி வினாத்தாள் - 3 | DOWNLOAD HERE









 12th Standard TAMIL QUESTION 2023 |12TH TAMIL  PUBLIC STUDY MATERIAL (2023) |TWO MARK STUDY MATERIAL



12th Standard TAMIL QUESTION PAPER 2023 |12TH TAMIL PUBLIC EXAM STUDY MATERIAL 2023 |MODEL QUESTION PAPER -1(2023)

12th Standard TAMIL QUESTION PAPER 2023 |12TH TAMIL PUBLIC EXAM STUDY MATERIAL 2023 |MODEL QUESTION PAPER - 5 (2023)|WITH ANSWER KEY








Post a Comment

Previous Post Next Post