Loading ....

12 Standard Tamil - 2 MARK-BOOKBACK Questions & Answers(2021) Unit 1- 8

©Tamilamuthu2020official.blogspot.com




12 Standard Tamil -2 MARK-BOOKBACK Questions & Answers(2021) Unit 1- 8

 


திருத்தியமைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி நடைபெற இருக்கின்ற திருப்புதல் தேர்வுக்கான தயாரிப்புக்கு ஆயத்தம் செய்யும் விதத்தில் நமது பாடப்புத்தகத்தில் இடம் பெற்றிருக்கக் கூடிய எட்டு இயல்களில் இந்த ஆண்டு தேர்வுக்கு வருகின்ற பகுதியில் இருந்து மட்டும் புத்தக வினாக்கள் இங்கு தொகுக்கப்பட்டு தரப்பட்டுள்ளன. 

          அத்தனை கேள்விகளுக்கும் சுருக்கமாக விடைகளும் தரப்பட்டுள்ளன. நீங்கள் இந்த விடை பகுதியைப் படிப்பதன் மூலம் புத்தகத்தில் இருக்கின்ற 2 மதிப்பெண் கேள்விகள் அத்தனையுமே நீங்கள் கற்று விடலாம், நீங்கள் கற்ற இந்தக் கேள்விகளை எழுதிப் பார்த்து அதற்கான விடைகளைத் திருத்தம் செய்து கொள்ளுங்கள் இந்த கேள்விகளுக்கான விடை குறிப்புகளும் உங்களுக்குத் தரப்படுகின்றது. பாருங்கள் வினாக்களையும் விடைகளையும்...


       திருத்தியமைக்கப்பட்ட பாடத்திட்டம்  2021 - 2022


வகுப்பு - 12


தமிழமுது 2020 -  பயிற்சிப் பாசறை, கன்னியாகுமரி மாவட்டம்.


      பொதுத்தமிழ்

 

புத்தக வினாக்கள் 

இயல் 1- 8 



2 - மதிப்பெண் வினா விடைகள்


இயல் - 1

இலக்கணம்


1.முடிந்தால் தரலாம், முடித்தால் தரலாம் - இவ்விரு சொற்றொடர்கள்

உணர்த்தும் பொருளை அறிந்து தொடர் அமைக்கவும்.

முடிந்தால் தரலாம்:

  ஒரு பொருளைக் கொடுக்க முடிந்தால் கொடுக்கலாம்

என்ற பொருளைத் தருகின்றது.

முடித்தால் தரலாம்:

  தரப்பட்டுள்ள வேலையை முடித்துவிட்டேன் என்றால்

தரலாம் என்ற பொருளைத் தருகின்றது.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவைப்படும்

பொருட்களை முடிந்தால் தரலாம்.

ஆசிரியர் கூறியபடி செயல்திட்டப் பதிவேடுகளை முடித்தால் தரலாம்.

உரைநடை

2. நடை அழகியல் பற்றித் தொல்காப்பியம் கூறும் கருத்தைக் குறிப்பிடுக.

நடை அழகியல்

கவிதையின் இயங்காற்றல்தான் நடை எனப்படும்.

தொல்காப்பியமும் இதனையே கூறுகின்றது.

'நடைபெற்றியலும்', 'நடை நவின்றொழுகும்' என்னும்

சொற்றொடர்களைத் தொல்காப்பியம் கையாண்டுள்ளது. 

ஒவ்வொரு பாவும் இவ்வாறே அமைய வேண்டும்

என்று தொல்காப்பியம் கூறுகிறது.


3."படாஅம் ஈத்த கெடாஅ நல்லிசைக்

 கடாஅ யானைக் கலிமான் பேக"

இச்சங்கக் கவிதையின் அடிகளில் ஓசை நயமிக்க சொற்களையும் அவற்றிற்கான இலக்கணக் குறிப்புகளையும் எடுத்து எழுதுக.

ஓசை நயமிக்கச் சொற்கள்

படாஅம் ஈத்த, கெடாஅ , கடாஅ யானை, 

இலக்கணக்குறிப்புகள்

படாஅம் ஈத்த

கெடாஅநல்லிசை   இசைநிறையளபெடை(அ)செய்யுளிசையளபெடை

கடாஅ யானை

செய்யுள்

4. கவிஞர் சிற்பி எவற்றை வியந்து பாட தமிழின் துணை வேண்டும் என்கிறார்?

தமிழின் துணை வேண்டும்:

செந்நிறத்து வானம்போலத் தங்கள் கைகள் சிவந்திட

உழைக்கும் தொழிலாளர்களின் வியர்வை வெள்ளம்

அவர்களின் திரண்ட தோள்மீது முத்துமுத்தாய் வீற்றிருக்கும்.

இந்த அழகினை வியந்து பாடச் செந்தமிழின் துணை

வேண்டுமெனக் கவிஞர் சிற்பி கூறுகின்றார். 


5. விடியல், வனப்பு - இரு சொற்களையும் ஒருங்கிணைத்துத் தொடர் அமைக்க.

விடியலில் உதிக்கும் கதிரவனின் தோற்றம் இயற்கையின்

வனப்பை எடுத்துரைக்கும்.



இயல் - 2



இலக்கணம்


1. மொழியின் சொற்றொடர் அமைப்பை விளக்கிக் கொள்வதற்கும் பயன்படுத்துவதற்கும் உதவுவன எவை?

மொழியின் சொற்றொடர் அமைப்பை விளக்கிக்

கொள்வதற்கும் பயன்படுத்துவதற்கும்

உதவுவன, திணை, பால், எண், இடம் ஆகியனவாகும்.


2. உயர்திணைப் பன்மைப் பெயர்கள், பன்மை விகுதி பெற்று வருமாறு இரண்டு தொடர்களை எழுதுக. 

1. நீங்கள் வீட்டிற்கு வாருங்கள்.

2 .அவர்கள் ஆலயம் வந்தார்கள்.


செய்யுள்


3. 'நகரம் பட்டை தீட்டிய வெள்ளை வைரமாகிறது' – விளக்கம் தருக.

  நகரம் பட்டை தீட்டிய வெள்ளை வைரமாகிறது

மழைக்காலப் பகற்பொழுதில் சூரியனின் வெளிச்சம்

இல்லாமல் நகரமானது மழைமேகத்தால் இருள் சூழ்ந்து காணப்படும்.

மழை பெய்து ஓய்ந்த பின்பு, மழைக்கான சுவடுகள்

அழிந்த பின்பு சூரியன் திடீரென தன் முகத்தைக் காட்ட

மழை மேகத்தால் மறைந்திருந்த நகரம் பிரகாசமாய்க்

காட்சியளிக்கின்றதுஇன்னும் உறிஞ்சப்படாமல் இருக்கும் ஒரு சில

மழைத் துளிகளின் மீது விழுகின்ற

சூரியக் கதிர்களின் பிரதிபலிப்பால்

நகரமே வெள்ளை வைரமாகக் காட்சியளிக்கின்றது. 


இயல் - 3

இலக்கணம்


1. வேறொரு பொருள் அமையுமாறு சொற்களைச் சேர்த்துத் தொடரமைக்க.

மாணவர்கள் வரிசையில் நின்று அறிவியல் கண்காட்சியைக் கண்டனர்.

விடை: மாணவர்கள்வரிசையில் நின்று அறிவியல் கண்காட்சியைக் கண்டனர்.


2. கீழ்க்காணும் சொல்லுருபுகளைப் பிரித்தும் சேர்த்தும் இருவேறு தொடரமைக்க.

எ.கா

1. அவன் முன்வந்து கூறினான்.

  முன்

2. அவன்முன் வந்து கூறினான்.



1. கண்ணன்தானே படித்தான்.

  தானே

2. கண்ணன் தானே படித்தான்.


  1. சோமு கையில் கத்தி கொண்டு ஓடினான்.

  கொண்டு

    2. சோமு கத்திக்கொண்டு ஓடினான்.


  1. அண்ணன் பாம்பைப் பிடித்து விட்டான்.

  விட்டான்

    2. அண்ணன் பாம்பைப் பிடித்து விட்டான்.


3. காற்புள்ளி இடாமல் எழுதுவதனால் ஏற்படும் பொருள் மயக்கத்திற்குச் சான்று தருக. 

சான்று

   1. அவள், அக்கா வீட்டிற்குச் சென்றாள்

   2. அவள் அக்கா வீட்டிற்குச் சென்றாள்

  இச்சான்றின் முதல் தொடரில் அந்தப்பெண் தன் அக்காள்

வீட்டிற்குச் சென்றாள் என்ற பொருளை உணர்த்துகிறது.

அத்தொடரில் உள்ள காற்புள்ளி.

  இச்சான்றின் இரண்டாவது தொடரில் உள்ள காற்புள்ளியால்

அந்தப் பெண்ணின் அக்காள் அவளது (தனது) வீட்டிற்குச் சென்றாள்

என்ற பொருள் வேறுபாட்டைத் தருவதை அறியலாம்.

4. சலசல, வந்து வந்து, கல கல, விம்மி விம்மி, இவற்றில் இரட்டைக்கிளவித் தொடர்களை எழுதி, அவற்றை எழுதும் முறையைக் கூறுக. 

இரட்டைக்கிளவித் தொடர்கள் - சல சல, கல கல

தொடரில் இரட்டைக்கிளவிச் சொற்களை எழுதும்போது சேர்த்து எழுத வேண்டும்.

சான்று

   1. அருவி விழும் ஓசை சலசலவெனக் கேட்டது (சரி)

     அருவி விழும் ஓசை சல சலவெனக் கேட்டது (தவறு)


   2. செல்வி கலகலவெனச் சிரித்தாள் (சரி)

     செல்வி கல கலவெனச் சிரித்தாள் (தவறு)

 

5. திருவளர்ச்செல்வன், திருவளர் செல்வன் இவற்றில் சரியான தொடர் எது? அதற்கான இலக்கண விதி யாது?

'திருவளர்செல்வன்' என்ற தொடரே சரியான தொடர்.

'வினைத்தொகையாக வரும் சொல்லுக்கிடையில்

வல்லினம் மிகுதல் கூடாது' என்ற இலக்கண விதியின் படி

'திருவளர்செல்வன்' என்ற வினைத்தொகையில் வல்லினம் மிகாது.


 உரைநடை


6.புக்கில், தன்மனை – சிறுகுறிப்பு எழுதுக.

புக்கில்:

புக்கில் என்பது தற்காலிகமாகத் தங்கும் இடத்தைக்

குறிக்கும். "துகள் அறுகேள்வி உயர்ந்தோர் புக்கில்" என்ற

புறநானூற்றுப் பாடலில் (222:6) வரும் 'புக்கில்' என்பது

தற்காலிகமாகத் தங்கும் இடத்தைக் குறிக்கின்றது. 

தன்மனை:

திருமணத்திற்குப் பின் கணவனும் மனைவியும்

பெற்றோரிடமிருந்து பிரிந்து தனியாக

வாழும் இடம் 'தன்மனை' என அழைக்கப்பட்டது.


7. சங்ககாலத்தில் தாய்வழிச் சமூகமுறையில் பெண்கள் பெற்றிருந்த உரிமைகள் யாவை?

சங்ககாலத்தில் தாய்வழிச் சமூகமுறையில் பெண்கள் பெற்றிருந்த உரிமைகள்

பெண்களே குலத்தொடர்ச்சிக்கு உரியவர்களாக இருந்தனர். 

தாய்வழிமுறையில் குடும்பத்தின் சொத்தும் வளங்களும் செல்வங்களும் பெண்களுக்குச் சென்று சேர்ந்தன. 



செய்யுள்


8. நிலையாமை குறித்து, சவரி உரைக்கும் கருத்து யாது?

நிலையாமை குறித்து, சவரி உரைக்கும் கருத்து

பொய்யான உலகப்பற்று அழிந்து போகக் கூடியதாகும்.

உலகத்தின் மீது பற்றுக் கொள்வது வீணாகும். 

என் மண்ணுலகப் பிறவி ஒழிந்தது. 

ஏனெனில் நிலையாமை என்பது உலக வாழ்வு நிலை இல்லாதது

என்பதைக் குறிப்பதாகும். 

9. எதிர்பாராத நிகழ்வுகளை ஜலாலுத்தீன் ரூமி எவ்வாறு உருவகப்படுத்துகிறார்?

ஜலாலுத்தீன் ரூமி உருவகப்படுத்துபவை

மனித வாழ்க்கையில் நடக்கின்ற எதிர்பாராத நிகழ்வுகளான, 

ஓர் ஆனந்தம் 

சற்று மனச்சோர்வு 

சிறிது அற்பத்தனம் 

நொடிப்பொழுதேயான விழிப்புணர்வு 

ஆகியவற்றை எல்லாம் நமது இல்லத்திற்கு

வரும் எதிர்பாராத விருந்தாளிகளாக உருவகப்படுத்தியிருக்கின்றார். 


10. "துன்பு உளது எனின் அன்றோ சுகம் உளது"? என்ற இராமனின் கூற்று பின்வரும் இரு பழமொழிகளில் எதற்குப் பொருந்தும்?

   அ. நிழலின் அருமை வெயிலில் தெரியும்.

   ஆ. சிறு துரும்பும் பல்குத்த உதவும். 

'துன்பு உளது எனின் அன்றோ சுகம் உளது'? என்ற

இராமனின் கூற்று, "நிழலின் அருமை வெயிலில் தெரியும்" என்னும்

பழமொழிக்குப் பொருந்தும். 


திருக்குறள்


11. முயல்வாருள் எல்லாம் தலை என வள்ளுவர் யாரைச் சுட்டுகிறார்?

முயல்வாருள் எல்லாம் தலை

அறத்தின் வழியாக இல்லறவாழ்க்கை வாழ்பவர்கள்

முயற்சி செய்து புகழடைய விரும்பும் எல்லாரை விடவும்

தலையானவர் என வள்ளுவர் கூறுகிறார்.




12.ஞாலத்தின் பெரியது எது?

ஞாலத்தின் பெரியது

ஒருவர் நமக்கு உரிய காலத்தில் செய்த உதவியானது

அளவில் சிறியதாக இருந்தாலும், அவ்வுதவி இந்த உலகைவிடப் பெரியதாகும்.

 

13.மறக்கக் கூடாதது, மறக்கக் கூடியது எவற்றை?

மறக்கக் கூடாதது

ஒருவர் நமக்குச் செய்த நன்மையை ஒருநாளும் மறக்கக்கூடாது.

மறக்கக் கூடியது

ஒருவர் நமக்குச் செய்த தீமையை அப்பொழுதே மறந்துவிட வேண்டும். 


14. செல்வம் இருப்பதற்கான வழியாக வள்ளுவம் உரைப்பன எவை?

செல்வம் இருப்பதற்கான வழி

செல்வம் ஒருவரிடம் குறையாமல் இருக்க வேண்டுமென்றால்,

அவர் பிறருடைய கைப்பொருளைத் துளியளவும்

விரும்பாமல் இருத்தல் வேண்டும். 


15. சினத்தை ஏன் காக்க வேண்டும்?

சினத்தைக் காக்க

ஒருவன் தன்னைக் காத்துக் கொள்ள விரும்பினால் அவன்,

சினத்தைக் காக்க வேண்டும். 

ஏனெனில், சினமானது தன்னைக் கொண்டவனையே அழித்துவிடும்.


இயல் - 4


இலக்கணம்


1.வெண்பாவிற்குரிய தளைகள் யாவை?

வெண்பாவிற்குரிய தளைகள்

இயற்சீர் வெண்டளை

வெண்சீர் வெண்டளை


2. ஒரு விகற்பம், பல விகற்பம் என்றால் என்ன?

ஒரு விகற்பம் என்றால் வெண்பாவின் எல்லா அடிகளும்

ஒரே எதுகை பெற்று வருவது ஆகும். 

பல விகற்பம் என்றால் வெண்பாவின் அடிகளில்

வேறு வேறு எதுகை பெற்று வருவது ஆகும். 

செய்யுள்

3.வசனம், கவிதை வேறுபாடு தருக

வசனம்

சொற்களைச் சேர்க்கும் போது எதுகை, போன்றவை

அமையாமல் அடியளவை அறிந்திடாமல் அமைக்கின்ற

இலக்கிய வடிவம் தான் வசனம் ஆகும்.

கவிதை

சொற்களைச் சேர்க்கும் போது யாப்பு முறைப்படி

எதுகை மோனை போன்ற தொடை நயங்களைச் சேர்த்து

குறளடி, சிந்தடி, அளவடி, நெடிலடி, கழிநெடிலடி போன்ற அடியளவை

றிந்து வார்த்தைகளை அமைப்பதே கவிதையாகும்.

உரைநடை

4.அக்காலத்துக் கல்விமுறையில் மனனப் பயிற்சிக்கு உதவிய நூல்கள் எவை?

மனனப் பயிற்சிக்கு உதவிய நூல்கள்

நிகண்டு, நன்னூல், காரிகை, தண்டியலங்காரம், நீதி நூல்கள்,

கணிதத்தில் கீழ்வாயிலக்கம், மேல்வாயிலக்கம், குழிமாற்று

முதலிய பலவகை வாய்பாடுகள், ஆத்திசூடி, கொன்றைவேந்தன்

போன்றவை அக்காலத்துக் கல்விமுறையில்

மனனப் பயிற்சிக்கு உதவிய நூல்களாகும்.



இயல் - 5
செய்யுள்

1.கலிவிழா, ஒலிவிழா – விளக்கம் தருக

 கலிவிழா - திருமயிலையில் நடைபெறும் எழுச்சி மிக்க விழா

 ஒலி விழா - திருமயிலையில் நடைபெறும் ஆரவார விழா


2.'தருமமிகு சென்னையில் கந்த கோட்டத்துள்வளர் தலமோங்கு கந்தவேளே' – தொடருக்குப் பதவுரை எழுதுக.

அறச்செயல்கள் செய்கின்றவர்கள் நிறைந்திருக்கும் சென்னைப் பகுதியில்

கந்தகோட்டத்தில் அமைந்திருக்கின்ற திருக்கோவிலில் எழுந்தருளியிருக்கும்

கந்தவேளே!


இயல் - 6


செய்யுள்

1.ஒருமுக எழினி, பொருமுக எழினி – குறிப்பு வரைக

ஒருமுக எழினி

மேடையின் ஒரு புறத்திலிருந்து மறுபுறத்திற்குச் செல்லுமாறு

அமைக்கப்படுவது ஒருமுக எழினி.

பொருமுக எழினி

மேடையின் இருபுறத்திலிருந்தும் நடுவில் ஒன்றோடு ஒன்று

பொருந்துமாறு அமைக்கப்படுவது பொருமுக எழினி.

திருக்குறள்

2. மனத்தை அதன்போக்கில் செல்லவிடக்கூடாது என்று வள்ளுவம் கூறுவது ஏன்?

மனத்தை அதன்போக்கில் செல்லவிடக்கூடாது

மனத்தை அது செல்லுகின்ற வழியிலெல்லாம் செல்லவிட்டால்

தீமையில் அகப்பட்டு அல்லல்பட நேரிடும். 

எனவேதான், மனத்தை அது போகும் போக்கில் செல்லவிடாமல்

தீமையிலிருந்து விலக்கி நல்ல வழியில் செலுத்துவதே

அறிவாகும் என்கிறது வள்ளுவம்.



3.உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து - இக்குறட்பாவின் உவமையைப் பொருளோடு பொருத்துக.

உவமை:

உருண்டு வரும் பெரிய தேரினைச் செலுத்துவது மிகச் சிறிய அச்சாணி.

பொருள்:

அதுபோல உருவத்தில் சிறியவராயினும் மிகப்பெரிய

செயல்களைச் செய்து முடிக்கும் ஆற்றலை உடையவர்களாக இருப்பர்.

எனவே ஒருவரின் தோற்றத்தைக் கண்டு இகழ்தல் கூடாது. 

இவ்வாறு அச்சாணி என்னும் உவமை

உருவில் சிறியவரின் வலிமையோடு பொருத்தப்பட்டுள்ளது.

 

4.மன உறுதியின் தேவை பற்றித் திருக்குறள் யாது கூறுகிறது?

ஒருவன் ஒரு செயலை நன்முறையில் செய்து முடிப்பதற்குத்

துணையாக அமைவது மன உறுதியே.

எனவேதான், வள்ளுவர் நல்ல சிறப்பான செயல்பாட்டிற்கு

மனஉறுதியே வேண்டும். மற்றவைகள் எல்லாம் வலிமைகள் ஆகாது என்கிறார். 


5. நஞ்சுண்பவர் என வள்ளுவர் யாரை இடித்துரைக்கிறார்?

கள் உண்பவர்கள் நஞ்சுண்பவர் என வள்ளுவர் இடித்துரைக்கிறார். 


6. அரசரோடு நட்புப் பாராட்டினாலும் செய்யத்தகாதன யாவை?

அரசரோடு நட்புப் பாராட்டினாலும் தகுதி அல்லாதவற்றைச் செய்தல் கூடாது. 


7. பகைவராலும் அழிக்க முடியாத அரண் எது?

பகைவராலும் அழிக்க முடியாத அரண் அறிவு ஆகும். 


8. அஞ்சத் தகுந்தன, அஞ்சத் தகாதன என வள்ளுவம் குறிப்பிடுவது யாது?

உறவுடையவர் போல் நடித்து உட்பகை கொண்டவரின்

தொடர்புக்கு அஞ்ச வேண்டும்

வாளைப்போல் வெளிப்படையாகத் துன்பம் செய்யும்

பகைவருக்கு அஞ்ச வேண்டியதில்லை. 


9. வறுமையும் சிறுமையும் தருவது எது?

ஒருவருக்குத் துன்பம் பலவற்றையும் உண்டாக்கி அவருடைய

புகழைக் கெடுத்துச் சிறுமையும் வறுமையும் தருவது சூது ஆகும்.


10. நீங்கள் படித்ததில் பிடித்த குறளை எழுதி, காரணத்தைக் குறிப்பிடவும்.

பிடித்த குறள்: 

"சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்

 சொல்லிய வண்ணம் செயல்"

காரணம்:

எந்தச் செயலையும் இவ்வாறு செய்து முடிக்கலாம் என்று

சொல்லுதல் எல்லோருக்கும் எளியது சொல்லியபடி செய்து முடித்தல் அரியது. 

அதாவது சொல்லும், செயலும் ஓரே மாதிரியாக இருக்க

வேண்டும் என்பதை வலியுறுத்துவதால் இக்குறள் பிடிக்கும்.


11. உலகத்தில் சிறந்த துணையாகவும், பகையாகவும் வள்ளுவர் எவற்றைக் குறிப்பிடுகிறார்?

நல்ல இனத்தைவிடச் சிறந்த துணை உலகத்தில் இல்லை.

தீய இனத்தைவிட பெரிய துன்பம் தரும் பகையும் இல்லை.


12. இலக்கணக்குறிப்பு தருக.

ஒரீஇ - சொல்லிசையளபெடை

படுப்பதூஉம் - செய்யுளிசையளபெடை

சொல்லுதல்  - தொழிற்பெயர். 


13. கீழ்நீர்க் குளித்தானைத் தீத்துரீஇ யற்று – பொருள் கூறுக

நீரில் மூழ்கிய ஒருவனைத் தீப்பந்தம் கொண்டு தேடுவது

என்பது இத்தொடரின் பொருளாகும்.


14.பெருந்தேர் - புணர்ச்சி விதி கூறுக.

பெருமை + தேர்

விதி 1: 'ஈறுபோதல்' என்ற விதிப்படி 'மை' விகுதி கெட்டு பெரு + தேர் என்றானது.

விதி 2: 'இனமிகல்' என்னும் விதிப்படி 'ந்' தோன்றி பெருந்தேர் என்றானது. 


இயல் - 7


செய்யுள்

1. அறிவுடை வேந்தனின் நெறி குறித்து பிசிராந்தையார் கூறுவன யாவை?

"அறிவுடை வேந்தன் நெறி அறிந்து கொளினே

 கோடி யாத்து, நாடு பெரிது நந்தும்"

அறிவுடை அரசன், வரி திரட்டும் முறை அறிந்து

மக்களிடமிருந்து வரி திரட்டினால் நாடு, கோடிக்கணக்கில்

செல்வத்தைப் பெற்றுச் செழிப்படையும்.

 

2.செவியறிவுறூஉ துறையை விளக்குக.

செவியறிவுறூஉ துறை:

அரசன் செய்ய வேண்டிய கடமைகளை முறைதவறாமல்

செய்யுமாறு அவன் கேட்க அறிவுறுத்தல்,

செவியறிவுறூஉ என்னும் துறையாகும். 


சான்று:

"காய்நெல் அறுத்துக் கவளம் கொளினே" என்றுத் தொடங்கும் பாடல்.

இயல் - 8

செய்யுள்

1.இறைமகனாரின் இன்னலைக் கண்டு மக்கள் எவ்விதம் புலம்பினர்?

இறைமகனாரின் இன்னலைக் கண்டு மக்கள் புலம்பியது 

இறைமகனுக்கு இழைக்கப்பட்ட இன்னல்களைக் கண்டு மனம்

பொறுக்காத மக்கள், "இத்தனை கொடுமைகளுக்குப் பிறகும்

இவ்வுலகம் பிளந்து வெடிக்கவில்லையே! வானம் இடிந்து

விழவில்லையே! கடல்நீர் வற்றிப்போகவில்லையே! இந்த உலகம்

இன்னும் அழியாமல் தாமதிப்பதும் ஏனோ" என வருந்திப் புலம்பினர். 



இயல் - 1

Slip Test 1 : click here


Slip Test 2 : click here


Slip Test 3 : click here


Slip Test 4 : click here


மொழிப்பயிற்சி


தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக Part-1 : Click here


தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக Part-2 : click here


உவமைத் தொடர்களைச் சொற்றொடர்களில் அமைத்து எழுதுக : Click here



12 ஆம் வகுப்பு தமிழ்ப்பாடம் சார்ந்த Study materials தேவைப்பட்டால் எது தொடர்பான Study materials வேண்டும் என்பதை Comment Box இல் பதிவிடுங்கள்.

இந்தப் பகுதியில் மேலும் ஏதேனும் விளக்கங்களும் தெளிவுகள் வேண்டுமென்றாலும், மொழிப்பயிற்சி சார்ந்த ஏதேனும் சந்தேகங்களுக்கு விளக்கங்கள் வேண்டுமென்றாலும், வேறு மொழிப்பயிற்சி கேள்விகள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றாலும், நீங்கள் மறக்காமல்   Comment Box இல் பதிவிடுங்கள்.



 Follow us on (click the below icons to follow)


Want our Latest Posts?

View Our Blogger(Click The Icon Below)

Tamilamuthu 2020 Official

Icons from Flaticon      Contact No : 9843448095  ©Tamilamuthu2020official.blogspot.com

இயல் :1-8


புத்தக வினாக்கள் 2  MARK-  ற்கான QUESTION  ANSWER KEY ,Pdf  வடிவில் 

FREE  DOWNLOAD செய்ய CLICK THE BUTTON BELLOW👇👇👇👇👇


 


You have to wait 30 seconds to get the download Button.

Download Timer
Image by Dariusz Sankowski from Pixabay Photo by Jesse Bowser on Unsplash

Post a Comment

Previous Post Next Post