Loading ....

12th Tamil - Revision Exam (2021-2022) - Model Question Paper - Public Exam -திருப்புதல் தேர்வு -மாதிரி வினாத்தாள்

 12th Tamil - Revision Exam (2021-2022) - Model Question Paper 

திருத்திமைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி நடைபெற இருக்கின்ற அரசுத்  திருப்புதல்  பொதுத்தேர்வுக்கான  மாதிரி வினாத்தாள் இது. இந்த வினாத்தாளில் நீங்கள் பயிற்சி எடுத்துக் கொண்டீர்கள் என்றால் உங்களால் அதிக மதிப்பெண் பெற முடியும். வினாத்தாள் மட்டுமல்ல இந்த வினாக்களுக்கு உரிய விடைகளும் தரப்பட்டுள்ளன. எனவே, மாணவ - மாணவிகளே இந்த மாதிரி வினாத்தாள்  - 1 ஐ  நீங்கள் பதிவிறக்கம் செய்து பயிற்சிக்காக நீங்களே தேர்வை எழுதிப் பார்க்கலாம். எழுதிப் பார்த்தபிறகு விடைகான பகுதிக்கு  சென்று பதிவிறக்கம் செய்து நீங்கள் எழுதியிருக்கும் விடையும் சரிதானா என்பதை நீங்களே அறிந்து கொள்ளலாம். வாருங்கள் வினாத்தாளை பார்ப்போம்.



 
அரசுப்பொதுத்தேர்வில் எதிர்பார்க்கப்படும் வினா விடைகள்


திருத்தியமைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி



திருப்புதல் தேர்வு

மாதிரி வினாத்தாள்-1 (2021-2022)


நேரம்: 3:மணி   வகுப்பு-12     மதிப்பெண்:90


பொதுத்தமிழ்



பகுதி-1


அனைத்து வினாக்களுக்கும் விடை தருக                     14 x 1 = 14


1."மின்னேர் தனியாழி வெங்கதிரொன்று ஏனையது

தன்னேர் இலாத தமிழ்!" - இவ்வடிகளில் பயின்று வந்துள்ள தொடைநயம்

அ) அடிமோனை, அடிஎதுகை ஆ) சீர்மோனை, சீர்எதுகை

இ) அடிஎதுகை, சீர்மோனை ஈ) சீர்எதுகை, அடிமோனை

2.வையகமும் வானகமும் ஆற்றலரிது – எதற்கு?

அ) செய்யாமல் செய்த உதவி ஆ) பயன்தூக்கார் செய்த உதவி 

இ) தினைத்துணை நன்றி ஈ) காலத்தினால் செய்த நன்றி

3."உவா உற வந்து கூடும்

உடுபதி, இரவி ஒத்தார்" – யார் யார்?

அ) சடாயு, இராமன் ஆ) இராமன், சுக்ரீவன்

இ) இராமன், குகன் ஈ) இராமன், சவரி

4.பிழையான தொடரைக் கண்டறிக

அ) காளைகளைப் பூட்டி வயலை உழுதனர்.

ஆ) மலை மீது ஏறிக் கல்வெட்டுகளைக் கண்டறிந்தனர்.

இ) காளையில் பூத்த மல்லிகை மனம் வீசியது.

ஈ) நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கின. 

5.'உள்ளொன்று வைத்து புறம்பொன்று பேசுவார்' - இத்தொடர் உணர்த்தும் பண்பு

அ) நேர்மறைப்பண்பு ஆ) எதிர்மறைப்பண்பு

இ) முரண் பண்பு ஈ) இவை அனைத்தும்

6.'உரிமைத்தாகம்' என்னும் சிறுகதையின் ஆசிரியர்

அ) உத்தமச் சோழன் ஆ) புதமைப்பித்தன்

இ) ஜெயகாந்தன் ஈ) பூமணி

7.'குழிமாற்று' எந்தத் துறையோடு தொடர்புடைய சொல்?

அ) இலக்கியம் ஆ) கணிதம்

இ) புவியியல் ஈ) வேளாண்மை

8. இலக்கியத்தையும் மொழியையும் ஒரு சேரப் பேசும் இலக்கணநூல்

அ) யாப்பருங்கலக்காரிகை ஆ) தண்டியலங்காரம்

இ) தொல்காப்பியம் ஈ) நன்நூல்

9. 'பலர் துஞ்சவும் தாம் துஞ்சான்' - விழித்திருந்தவரும் அவரைப் பாடியவரும்- 

அ) சோழன் நெடுங்கிள்ளியை, பாணர் 

ஆ) சோழன் நலங்கிள்ளியை, கோவூர் கிழார்

இ) கணைக்கால் இரும்பொறையை, கபிலர்

ஈ) கரிகாலனை,, உருத்திரங்கண்ணனார்

10. ' Metro Train’ -என்பதன் தமிழாக்கம்

அ) மகா தொடர்வண்டி ஆ) மெகா தொடர்வண்டி

இ) மாநகரத் தொடர்வண்டி ஈ) பெருநகரத் தொடர்வண்டி

11.தமிழில் திணைபாகுபாடு ………….. அடிப்படையில் பகுக்கப்பட்டுள்ளது

அ) பொருட்குறிப்பு ஆ) சொற்குறிப்பு

இ) தொடர்க்குறிப்பு ஈ) எழுத்துக்குறிப்பு

12.'உன்னலிர்' – என்பதன் இலக்கணக்குறிப்பு

அ) வினையாலணையும் பெயர் ஆ) ஏவல் பன்மை வினைமுற்று

இ) முன்னிலைப் பன்மை வினைமுற்று ஈ) வினையெச்சம்

13.'தாழ்கடல்' – என்பதன் இலக்கணக்குறிப்பு

அ) வேற்றுமைத்தொகை ஆ) வினைத்தொகை

இ) பண்புத்தொகை               ஈ) உவமைத்தொகை

14.பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்க

அ) உரிமைத்தாகம் - 1. பாரசீசக் கவிஞர்

ஆ) அஞ்ஞாடி - 2. பு+மணி

இ) ஜலாலுத்தீன் ரூமி - 3. பக்தவச்சல பாரதி

ஈ) தமிழர் குடும்ப முறை - 4. சுhதித்திய அகாதெமி

அ) 2,3,4,1           ஆ) 3,4,1,2

இ) 2,4,1,3 ஈ) 2,3,4,1


பகுதி - 2

 

 பிரிவு – 1


இரண்டு அல்லது மூன்று வரிகளில் விடைதருக               3 x 2 = 6


எவையேனும் மூன்றனுக்கு விடைதருக


15.கவிஞர் சிற்பி எவற்றை வியந்து பாட தமிழின் துணை 

    வேண்டும் என்கிறார்?

16.கலிவிழா, ஒலிவிழா – விளக்கம் தருக.

17.வறுமையும் சிறுமையும் தருவது எது?

18.இறைமகனாரின் இன்னலைக் கண்டு மக்கள் எவ்விதம் புலம்பினர்?

 

பிரிவு – 2


எவையேனும் இரண்டனுக்கு விடைதருக                        2 x 2 = 4

19."புக்கில், தன்மனை" – சிறுகுறிப்பு எழுதுக

20.'பருவத்தே பயிர் செய்' – நேர மேலாண்மையோடு பொருத்தி எழுதுக

21.அக்காலத்துக் கல்வி முறையில் 'மனனப் பயிற்சிக்கு' உதவிய நூல்கள் எவை?


பிரிவு – 3


எவையேனும் ஏழனுக்கு விடைதருக                                             7 x 2  = 14    

22. வல்லின மெய்யை இட்டும் நீக்கியும் எழுதுக

         நம் வாழ்க்கையின் தரம் நமது கவனத்தின் தரத்தை பொறுத்திருக்கிறது.புத்தகம் படிக்கும் பொழுது கூர்ந்தக் கவனம் அறிவை பெறுவதற்கும் அடிப்படை தேவையாகும். 

23.மயங்கொலிச் சொற்களை ஒரே தொடரில் அமைத்து எழுதுக

 கலை, களை, கழை

24. தொடரிலுள்ள பிழைகளை நீக்கி எழுதுக

 அ) அப்பசி அடமழையில் ஊருனி நிறைந்தது

 ஆ) மானம் பார்த்த பூமியில் பயிறு வகைகள் பயிரிடப்படுகின்றன.

25.ஏதேனும் ஒன்றனுக்கு மட்டும் பகுபத உறுப்பிலக்கணம் தருக

அ) பழித்தனர் ஆ) வந்து

26.கலைச் சொற்களுக்கேற்ற தமிழ்ச்சொல் எழுதுக

அ)அ) Stapler 

ஆ) Jurisdiction 

27.பேச்சு வழக்கை எழுத்து வழக்காக மாற்றுக

அ) புள்ளைக்கு உடம்பு சரியில்லை மூணு நாளா சிரமப்படுது.

ஆ) 'வூட்டாண்ட வெளையாண்ட கொயந்தையை அப்பா எங்க இஸ்துகிணு போனாரு.

28.ஏதேனும் ஒன்றனுக்குப் புணர்ச்சி விதி தருக

அ) வெங்கதிர் ஆ) முன்னுடை

29.சொல்லைப் பிரித்தும் சேர்த்தும் தொடரமைக்க

அ) தாமரை

30.ஒரு விகற்பம், பல விகற்பம் என்றால் என்ன?

 

பகுதி – 3


பிரிவு-1


ஐந்து அல்லது ஆறு வரிகளில் விடை தருக 2 x 4 = 8


எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடைதருக


31.'ஏங்கொலிநீர் ஞாலத்து இருளகற்றும்' - இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.

32.நாட்டிய அரங்கின் அமைப்பை இளங்கோவடிகள் காட்சிப்படுத்தும் பாங்கு குறித்து உங்கள் கருத்தை எழுதுக.

33.இராமலிங்க அடிகள் கந்தவேளிடம் எத்தகையோர் உறவு வேண்டுமெனக் கேட்கிறார்?

34."யானை புக்க புலம்போலத் தானும் உண்ணான் உலகமும் கெடுமே"- உவமையையும் பொருளையும் பொருத்தி விளக்குக.


பிரிவு-2


எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடைதருக                             2 x 4 = 8

35.சங்கப் பாடல்களில் ஒலிக்கோலம் குறிப்பிடத்தக்க ஒரு பண்பாகும் - விளக்குக.

36.பண்டைய விரிந்த குடும்பத்தின் தொடர்ச்சியே இன்றைய கூட்டுக் குடும்பம் - விளக்கம் எழுதுக.

37.வேளாண் மேலாண்மை குறித்து நீவிர் பரிந்துரைப்பனவற்றை எழுதுக

38.மணலில் எழுதியது முதல் தற்காலம் வரை எழுதும் முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைத் தொகுத்துரைக்க.


பிரிவு-3


எவையேனும் மூன்றனுக்கு மட்டும் விடைதருக                 3 x 4 = 12

39.'எறும்பு ஊரக் கல்லும் தேயும்' – என்னும் பழமொழியினை நும் வாழ்க்கை நிகழ்வில் அமைத்து எழுதுக.

40.சொற்பொருள் பின்வருநிலையனியை விவரி

(அல்லது)

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது - இக்குறட்பாவில் பயின்று வரும் அணியை விளக்குக

41.தமிழாக்கம் தருக

அ) A New language is a new life.

ஆ) Knowledge of language is the doorway to wisdom.

இ) The limits of my language one the limits of my world.

ஈ)  Learning is a treasure that will follow its owner everywhere.

42.பா நயம் பாராட்டுக: மையக்கருத்தை எழுதி ஏதேனும் மூன்று நயங்களை எழுதுக

 பூமிச் சருகாம் பாலையை 

   முத்துபூத்த கடல்களாக்குவேன்

 புயலைக் கூறுபடுத்தியே – கோடிப்

   புதிய தென்றலாக்குவேன்

 இரவின் விண்மீன் காசினை – செலுத்தி

   இரவலரோடு பேசுவேன்!

 இரவெரிக்கும் பரிதியை – ஏழை

   விறகெரிக்க வீசுவேன்

                               - நா.காமராசன்.

43.பின்வரும் தலைப்புகளில் ஏதேனும் ஒன்றில் எட்டு வரிகளில் கவிதை புனைக

நட்பு (அல்லது) இயற்கை


பகுதி –  4


  பின்வரும் வினாக்களுக்கு இரு பக்கங்களுக்கு மிகாமல் விடை தருக     3 x 6 = 18

44.அ) பண்பின் படிமமாகப் படைக்கப்பட்ட இராமன், பிற உயிர்களுடன் கொண்டிருந்த உறவு நிலையைப் பாடப்பகுதி வழி நிறுவுக

                                       (அல்லது)

ஆ) செய்ந்நன்றியறிதலே அறம் என்பதை வாயுறை வாழ்த்தின் துணைகொண்டு நிறுவுக.


45.அ) பண்டையக் காலக் கல்விமுறையில் ஆசிரியர் மாணவர்களிடையே நிகழ்ந்த கற்றல், கற்பித்தல் முறைகளைத் தொகுத்து எழுதுக

                                           (அல்லது)

ஆ) கவிதையின் நடையைக் கட்டமைக்கும் அழகியல் கூறுகளை எடுத்துக்காட்டி விளக்குக.

46.அ) பாரதியின் கடிதம் வாயிலாக நீங்கள் அறிந்து கொண்ட மொழிப்பற்று, சமூகப்பற்று ஆகியவற்றை விவரிக்க.

                                         (அல்லது)

ஆ) 'கிராமங்கள் தங்கள் முகவரியை இழந்து வருகின்றன' - இது குறித்து உங்கள் கருத்தை விவரிக்க.


பகுதி- 5


அடிமாறாமல் செய்யுள் வடிவில் எழுதுக               4 + 2 = 6

47.அ) “பாததற் குழுமி...எனத் தொடங்கும் இரட்சணிய யாத்திரிகப் பாடலை எழுதுக 

ஆ) 'மகற்கு' என முடியும் திருக்குறளை எழுதுக.

எம்.ஏ.ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர்

கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில்- 49843448095
இயல் - 1

Slip Test 1 : click here


Slip Test 2 : click here


Slip Test 3 : click here


Slip Test 4 : click here


மொழிப்பயிற்சி


தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக Part-1 : Click here


தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக Part-2 : click here


உவமைத் தொடர்களைச் சொற்றொடர்களில் அமைத்து எழுதுக : Click here


இயல்  1- 8 

2 மதிப்பெண் வினா விடைகள்  : click here



12 ஆம் வகுப்பு தமிழ்ப்பாடம் சார்ந்த Study materials தேவைப்பட்டால் எது தொடர்பான Study materials வேண்டும் என்பதை Comment Box இல் பதிவிடுங்கள்.

இந்தப் பகுதியில் மேலும் ஏதேனும் விளக்கங்களும் தெளிவுகள் வேண்டுமென்றாலும், மொழிப்பயிற்சி சார்ந்த ஏதேனும் சந்தேகங்களுக்கு விளக்கங்கள் வேண்டுமென்றாலும், வேறு மொழிப்பயிற்சி கேள்விகள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றாலும், நீங்கள் மறக்காமல்   Comment Box இல் பதிவிடுங்கள்.



 Follow us on (click the below icons to follow)


Want our Latest Posts?

View Our Blogger(Click The Icon Below)

Tamilamuthu 2020 Official

Icons from Flaticon      Contact No : 9843448095  ©Tamilamuthu2020official.blogspot.com




Revision Exam (2021-2022) - Model Question Paper  Pdf  


FREE  DOWNLOAD செய்ய CLICK THE BUTTON BELLOW👇👇👇👇👇



You have to wait 30 seconds to get the download Button.

Download Timer
I






Revision Exam (2021-2022) - Model Question Paper ANSWER KEY  Pdf


FREE  DOWNLOAD செய்ய CLICK THE BUTTON BELLOW👇👇👇👇👇







 

4 Comments

Previous Post Next Post