©Tamilamuthu2020official.blogspot.com
12th Standard- TAMIL - ONE WORD -BOOKBACK Questions & Answers (2021) Unit 1 - 8
திருத்தியமைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி நடைபெற இருக்கின்ற திருப்புதல் தேர்வுக்கான தயாரிப்புக்கு ஆயத்தம் செய்யும் விதத்தில் நமது பாடப்புத்தகத்தில் இடம் பெற்றிருக்கக் கூடிய எட்டு இயல்களில் இந்த ஆண்டு தேர்வுக்கு வருகின்ற பகுதியில் இருந்து மட்டும் ஒரு மதிப்பெண் ( ONE WORD ) புத்தக வினாக்கள் இங்கு தொகுக்கப்பட்டுத் தரப்பட்டுள்ளன.
நீங்கள் இந்த விடை பகுதியைப் படிப்பதன் மூலம் புத்தகத்தில் இருக்கின்ற 1 மதிப்பெண் கேள்விகள் ( ONE WORD ) அத்தனையுமே நீங்கள் கற்று விடலாம், நீங்கள் கற்ற இந்தக் கேள்விகளை எழுதிப் பார்த்து அதற்கான விடைகளைத் திருத்தம் செய்து கொள்ளுங்கள் இந்த கேள்விகளுக்கான விடை குறிப்புகளும் உங்களுக்குத் தரப்படுகின்றது. பாருங்கள் வினாக்களையும் விடைகளையும்...
திருத்தியமைக்கப்பட்ட பாடத்திட்டம் 2021 - 2022
வகுப்பு - 12
தமிழமுது 2020 - பயிற்சிப் பாசறை, கன்னியாகுமரி மாவட்டம்.
பொதுத்தமிழ்
புத்தக வினாக்கள்
இயல் 1- 8
1 - மதிப்பெண் வினா விடைகள்
இயல் - 1
இலக்கணம்
1.பிழையான தொடரைக் கண்டறிக (பக் : எண் : 17 ) PTA : 2, 6
அ) காளைகளைப் பூட்டி வயலை உழுதனர்.
ஆ) மலைமீது ஏறி கல்வெட்டுகளைக் கண்டறிந்தனர்.
இ) காளையில் பூத்த மல்லிகை மணம் வீசியது.
ஈ) நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின.
2. பேச்சுத் தமிழில் அமைந்த தொடரைத் தேர்க (பக் : எண் : 17 )
அ) அவருக்கு நல்லது கெட்டது நல்லா தெரியும்.
ஆ) புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது.
இ) வறட்சி எல்லா இடங்களையும் பாதித்துள்ளது.
ஈ) மயில்கள் போல் ஆடுகின்றனபோல் ஆடுகின்றன.
செய்யுள் , உரைநடை
3. இலக்கியத்தையும் மொழியையும் ஒருசேர பேசுகின்ற
இலக்கண நூல்(பக் : எண் : 18)
அ) யாப்பருங்கலக்காரிகை ஆ) தண்டியலங்காரம்
இ) தொல்காப்பியம் ஈ) நன்னூல்
4. ‘மீண்டுமந்தப் பழமைநலம் புதுக்கு தற்கு’ கவிஞர் குறிப்பிடும் பழமைநலம் (பக் : எண் : 18)
க) பாண்டியரின் சங்கத்தில் இருந்தது
உ) பொதிகையில் தோன்றியது
ங) வள்ளல்களை தந்தது
அ) க மட்டும் சரி ஆ) க , உ இரண்டும் சரி
இ) ங மட்டும் சரி ஈ) க ,ங இரண்டும் சரி
5. “மின்னேர் தனியாழி வெங்கதிரொன்று ஏனையது
தன்னேர் இலாத தமிழ்” - இவ்வடிகளில் பயின்று
வந்துள்ள தொடை நயம் (பக் : எண் : 18) PTA : 1
அ)அடிமோனை ,அடி எதுகை ஆ) சீர்மோனை, சீர் எதுகை
இ) அடி எதுகை , சீர் மோனை ஈ) சீர் எதுகை
6. கருத்து 1 : இயல்பு வழக்கில், தொடரமைப்பு என்பது எழுவாய்
பயனிலை என்று வருவதே மரபு
கருத்து 2 : தொடரமைப்பு, சங்கப் பாடல்கள் பலவற்றில்
பிறழ்ந்து வருகிறது (பக் : எண் : 18)
அ) கருத்து 1 சரி ஆ) கருத்து 2 சரி
இ) இரண்டு கருத்தும் சரி ஈ) கருத்து 1 சரி 2 தவறு
7. பொருத்துக : (பக் : எண் : 18)
அ) தமிழ் அழகியல் - 1.பரலி சு நெல்லையப்பர்
ஆ) நிலவுப்பூ - 2. தி சு நடராசன்
இ) கிடை - 3. சிற்பி பாலசுப்ரமணியம்
ஈ) உய்யும் வழி - 4. கி ராஜநாராயணன
அ) 4 3 2 1 ஆ) 1 4 2 3 இ) 2 4 1 3 ஈ) 2 3 4 1
இயல்2
இலக்கணம்
8. தமிழில் திணை பாகுபாடு_________ அடிப்படையில்
பகுக்கப்பட்டுள்ளது. (பக் : எண் : 41) PTA : 4
அ) பொருட் குறிப்பு ஆ) சொற்குறிப்பு
இ) தொடர் குறிப்பு ஈ) எழுத்து குறிப்பு
9. “உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே
அஃறிணை என்மனார் அவர் அல்ல பிறவே “இந் நூற்பா
இடம்பெற்றுள்ள இலக்கண நூல். (பக் : எண் : 41)
அ) நன்னூல் ஆ) அகத்தியம்
இ) தொல்காப்பியம் ஈ)இலக்கண விளக்கம்
10. யார்? எது? ஆகிய வினாச் சொற்கள் பயனிலையாய்
அமைந்து உணர்த்தும் திணைகள் முறையே (பக் : எண் : 41)
அ) அஃறிணை, உயர்திணை ஆ) உயர்திணை, அஃறிணை
இ) விரவுத்திணை ,அஃறிணை ஈ) விரவுத்திணை உயர்திணை
11.பொருத்தி விடை தேர்க (பக் : எண் : 41)
அ) அவன் அவள் அவர் 1. உளப்படுத்தாத தன்மைப் பன்மை
ஆ) நாங்கள் முயற்சி செய்வோம் 2. உளப்பாட்டுத் தன்மைப் பன்மை
இ) நாம் முயற்சி செய்வோம் 3. தன்மைப் பன்மைப் பெயர்கள்
ஈ) நாங்கள், நாம் 4. பதிலிடு பெயர்கள்
அ) 4 1 2 3 ஆ) 2 3 4 1 இ) 3 4 1 2 ஈ) 4 3 1 21
செய்யுள்
12. நரம்புக்குள் வீணை மீட்டி கொண்டிருக்கிறது என்று
அய்யப்பமாதவன் குறிப்பிடுவது. (பக் : எண் : 42)
அ) சூரிய ஒளிக்கதிர் ஆ) மழை மேகங்கள்
இ) மழைத்துளிகள் ஈ)நீர்நிலைகள்
இயல் - 3
இலக்கணம்
13. பொருள் குழப்பமின்றி எழுதுவதற்குரிய
காரணங்களுள் பொருந்துவதைத் தேர்க. (பக் : எண் : 67)
அ) தேவையான இடங்களில் இடைவெளி விடாமல் எழுதுதல்.
ஆ) தேவையற்ற இடங்களில் இடைவெளி விட்டு எழுதுதல்.
இ) நிறுத்தக் குறிகளை உரிய இடங்களில் இட்டு எழுதுதல்.
ஈ) வல்லின மெய்களைத் தேவையான இடங்களில் விடாமல் எழுதுதல்.
14. வல்லினம் மிகும், மிகாத் தொடர்களின்
பொருளறிந்து பொருத்துக. (பக் : எண் : 67)
அ) பாலை பாடினான் - தேரை என்னும் உயிரினத்தைப் பார்த்தான்
ஆ) பாலைப் பாடினான் - தேரினைப் பார்த்தான்
இ) தேரை பார்த்தான் - பாலினைப் பாடினான்
ஈ) தேரைப் பார்த்தான் - பாலைத்திணை பாடினான்
அ) 4 1 3 2 ஆ) 2 3 1 4 இ) 4 3 1 2 ஈ) 2 4 1 3
செய்யுள், உரைநடை, துணைப்பாடம்
15. சங்க இலக்கியத்தில் இல்லாத சொற்கள், சங்ககாலச் சமூகத்தில் நடைமுறையில் இருந்துள்ளன அவை __________ (பக் : எண் : 68)
அ) அறவோர், துறவோர் ஆ) திருமணமும், குடும்பமும்
இ) மன்றங்களும், அவைகளும் ஈ) நிதியமும் ,சுங்கமும்
16. பொருத்தமான விடையை தேர்ந்தெடுக்க (பக் : எண் : 68)
அ) உரிமைத்தாகம் - 1. பாரசீக கவிஞர்
ஆ) அஞ்ஞாடி - 2. பூமணி
இ) ஜலாலுதீன் ரூமி - 3. பக்தவச்சல பாரதி
ஈ) தமிழர் குடும்ப முறை - 4.சாகித்திய அகாதெமி
அ) 2 4 3 1 ஆ) 3 4 1 2 இ) 2 4 1 3 ஈ) 2 3 4 1
17. இவற்றை வாயிலுக்குச் சென்று இன்முகத்துடன் வரவேற்பாயாக என்று ஜலாலுதீன் ரூமி குறிப்பிடுவது யாது? (பக் : எண் : 68)
அ) வக்கிரம் ஆ) அவமானம்
இ) வஞ்சனை ஈ) இவை அனைத்தும்
18. “உவா உறவந்து கூடும்
உடுபதி இரவி ஒத்தார்” யார் ?யார் ? (பக் : எண் : 68)
அ) சடாயு, இராமன் ஆ) இராமன், குகன்
இ) இராமன், சுக்ரீவன் ஈ) இராமன், சபரி
19.”எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே” - என்னும் பாரதியின் பாடல் வெளிப்படுத்துவது (பக் : எண் : 68)
அ) தனிக் குடும்ப முறை ஆ) விரிந்த குடும்ப முறை
இ) தாய்வழிச் சமூக முறை ஈ) தந்தைவழிச் சமூக முறை
வாழ்வியல் : திருக்குறள்
20. படத்துக்குப் பொருத்தமான திருக்குறளைக் கண்டுபிடித்து
எழுதுக. (பக் : எண் : 77)
அ) அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
ஆ) வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.
இ) சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும்
ஏமப் புணையைச் சுடும்.
21. கடலின் பெரியது (பக் : எண் : 77)
அ) உற்ற காலத்தில் செய்த உதவி
ஆ) பயன் ஆராயாமல் ஒருவர் செய்த உதவி
இ) தினையளவு செய்த உதவி
22. பின்வரும் நாலடியார் பாடலின் பொருளுக்குப் பொருத்தமான திருக்குறளைக் கண்டறிக. (பக் : எண் : 77)
நல்லார் நயவர் இருப்பநயம் இலாக்
கல்லார்க் கொன்றாகிய காரணம் - தொல்லை
வினைப்பயன் அல்லது வேல்நெடுங் கண்ணாய்
நினைப்ப வருவதொன் றில்
அ) இருவேறு உலகத்து இயற்கை; திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு
ஆ) நல்லவை எல்லாம் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு
இ) ஊழில் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான்முந் துறும்
23. வையகமும் வானகமும் ஆற்றல் அரிது - எதற்கு? (பக் : எண் : 78)
அ) செய்யாமல் செய்த உதவி
ஆ) பயன்தூக்கார் செய்த உதவி
இ) தினைத்துணை நன்றி
ஈ) காலத்தினால் செய்த நன்றி
24. பொருத்துக (பக் : எண் : 78)
அ) வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் - 1. சேர்ந்தாரைக் கொல்லி
ஆ) பயன்தூக்கார் செய்த உதவி - 2. ஞாலத்தின் மாணப் பெரிது
இ) சினம் - 3. தெய்வத்துள் வைக்கப்படும்
ஈ) காலத்தினால் செய்த நன்றி - 4. நன்மை கடலின் பெரிது
அ) 4 3 2 1 ஆ) 3 4 1 2 இ) 1 2 3 4 ஈ) 2 3 4 1
இயல் 4
இலக்கணம்
25. வெண்பாவிற்கு ஏற்ப அடுத்த சீர் என்னவாக அமைக்கலாம் பொருத்தமான சீரினைக் கொண்டு
கோடிட்ட இடங்களை நிரப்புக.(பக் : எண் : 100)
அ) அன்பே_________( ஆர்வமாய் / தகளியாய்)
ஆ) வான்மழை________( தூறலில் / பொழிந்திடின் )
இ) கண்ணிரண்டும்_________ (இலாதார் / இல்லார்)
ஈ) வெண்ணிலவு____________( காய்கிறது / ஒளிர்கிறது)
உ) வெய்யோன்____________ (காய்ந்திட / ஒளிர்ந்திட)
26. மூன்றாவது சீர் அமைத்து எழுதுக (பக் : எண் : 100)
அ) கல்வி கரையில________
ஆ) கல்லாரே ஆயினும்____________
இ) நல்லவை செய்யின் ____________
ஈ) அவமதிப்பும் ஆன்ற______________
உ) உண்ணாது நோற்பார்______________
27. பொருத்துக (பக் : எண் : 100)
அ) மாச்சீர் - 1. கருவிளம், கூவிளம்
ஆ) காய்ச்சீர் - 2. நாள் மலர்
இ) விளச்சீர் - 3. தேமாங்காய் புளிமாங்காய்
ஈ) ஓரசைச்சீர் - 4. தேமா புளிமா
அ) 1 2 4 3 ஆ) 4 3 1 2 இ) 2 3 1 4 ஈ) 3 4 2 1
செய்யுள், உரைநடை
28. சுரதா நடத்திய கவிதை இதழ் (பக் : எண் : 101)
அ) இலக்கியம் ஆ) காவியம்
இ) ஊர்வலம் ஈ) விண்மீன்
29. “விண்வேறு; விண்வெளியில் இயங்குகின்ற
வெண்மதியும் செங்கதிரும் முகிலும் வேறு” - இத்தொடர் தரும்
முழுமையான பொருள் (பக் : எண் : 101)
அ) விண்ணும் வெண்மதியும் வேறு வேறு
ஆ) விண்வெளியும் செங்கதிரும் வேறு வேறு
இ) வெண்மதியும் முகிலும் வேறு வேறு
ஈ) விண், விண்வெளியில் உள்ள வெண்மதி, செங்கதிர் ,முகில் அனைத்தும் வேறு வேறு
30. சுவடியோடு பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க (பக் : எண் : 101)
அ) வசம்பு ஆ) மணத்தக்காளியிலைச்சாறு
இ) கடுக்காய் ஈ) மாவிலைக்கரி
31. ‘குழிமாற்று’ எந்தத் துறையோடு தொடர்புடைய சொல் (பக் : எண் : 101)
அ) இலக்கியம் ஆ) கணிதம்
இ) புவியியல் ஈ) வேளாண்மை
இயல் 5
செய்யுள்
32. ‘உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்’ இத்தொடர் உணர்த்தும் பண்பு (பக் : எண் : 125)
அ) நேர்மறைப் பண்பு ஆ) எதிர்மறைப் பண்பு
இ) முரண் பண்பு ஈ) இவை அனைத்தும்
இயல் 6
செய்யுள்
33. ஏழ் ஆண்டு இயற்றி ஓர் ஈராறு ஆண்டில் சூழல்கழல் மன்னற்குக் காட்டல் தொடர்களில் வெளிப்படும் செய்திகள். (பக் : எண் : 152)
1. மாதவி 7 ஆண்டுகள் வரை நாட்டியம் பயின்றாள்.
2. ஈராறு வயதில் அரங்கேற்றம் செய்ய விரும்பினாள்.
அ) 1 சரி 2 தவறு ஆ) 1 தவறு 2 சரி
இ) 1 தவறு 2 தவறு ஈ) 1 சரி 2 சரி
எம்.ஏ.ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர்,
கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில்- 4, 9843448095
34. பொருத்துக (பக் : எண் : 152)
அ) ஆமந்திரிகை - 1. பட்டத்து யானை
ஆ) அரசு உவா - 2. மூங்கில்
இ) கழஞ்சு - 3. இடக்கை வாத்தியம்
ஈ) கழை - 4. எடை அளவு
அ) 3 1 4 2 ஆ) 4 2 1 3 இ ) 1 2 3 4 ஈ) 4 3 2 1
எம்.ஏ.ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர்,
கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில்- 4, 9843448095
வாழ்வியல் : திருக்குறள்
35. படத்திற்குப் பொருத்தமான திருக்குறளைக் கண்டுபிடிக்க
அ) எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின் (பக் : எண் : 160)
ஆ) உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து
இ) வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற
36. கவிதைக்குப் பொருந்தும் திருக்குறளைக் கண்டறிக. (பக் : எண் : 160)
மனமோ மாட்டுவண்டி
பாதையொழுங்கில் போக நினைக்கும் மாடு
இப்படி இருந்தால் எப்படி நகரும்
வாழ்க்கை சக்கரம்
ஊர் போகும் பாதையில்
சக்கரம் உருண்டால்
அதுவே அறிவு ; அதுவே தெளிவு
அ) எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு
அவ்வ துறைவ தறிவு
ஆ) சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு
இ) அறிவற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்
37. பின்வரும் நாலடியார் பாடலின் பொருளுக்குப் பொருத்தமான
திருக்குறளைக் கண்டறிக (பக் : எண் : 160)
சீரியார் கேண்மை சிறந்த சிறப்பிற்றாய்
மாரிபோல் மாண்ட பயத்ததாம் - மாரி
வறந்தக்கால் போலுமே வாலருவி நாட!
சிறந்தக்கால் சீரியார் நட்பு
அ) பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும்
கெழுதகைமை கேடு தரும்
ஆ) எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய்
இ) நல்லினத்தி னூங்குந் துணையில்லை; தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉம் இல்
38. ‘அல்லல் படுப்தூம் இல்’ எவரோடு பழகினால்? (பக் : எண் : 161)
அ) வாள்போல் பகைவர் ஆ) மெய்ப்பொருள் காண்பவர்
இ) எண்ணியாங்கு எய்துபவர் ஈ) தீயினத்தார்
39. திண்ணியர் என்பதன் பொருள் (பக் : எண் : 161)
அ) அறிவுடையவர் ஆ) மன உறுதி உடையவர்
இ) தீக்காய்வார் ஈ) அறிவினார்
40. ஆராய்ந்து சொல்கிறவர் (பக் : எண் : 161)
அ) அரசர் ஆ) சொல்லியபடி செய்பவர்
இ) தூதுவர் ஈ) உறவினர்
41. பொருத்துக (பக் : எண் : 161)
அ) பாம்போடு உடன் உரைந்தற்று - 1. தீக்காய்வார்
ஆ) செத்தார் - 2. சீர் அழிக்கும் சூது
இ) வறுமை தருவது - 3. கள் உண்பவர்
ஈ) இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகுவார் - 4. உடம்பாடு இலாதவர்
அ) 1 2 3 4 ஆ) 2 3 4 1 இ) 4 1 2 3 ஈ) 4 3 2 1
42. நடுங்கும்படியான துன்பம் இல்லாதவர் (பக் : எண் : 161)
அ) வரப்போவதை முன்னே அறிந்து காத்துக் கொள்ளக் கூடியவர்
ஆ) மனத்திட்பம் உடையவர்
இ) அரசரைச் சார்ந்து வாழ்கின்றவர்
ஈ) சூதாடும் இடத்தில் காலம் கழிப்பவர்.
43. எளியது, அரியது என்பன (பக் : எண் : 161)
அ) தீயினத்தின் துணை - நல்லினத்தின் துணை
ஆ) சொல்வது - சொல்லியபடி செய்வது
இ) சிறுமை பல செய்வது - பகைவர் தொடர்பு
ஈ) மெய்ப்பொருள் காண்பது - உருவுகண்டு எள்ளாதது
இயல் 7
உரைநடை, செய்யுள்
44. பலர் துஞ்சவும் தாம் துஞ்சான் - விழித்திருந்தவரும் அவரைப்
பாடியவரும் (பக் : எண் : 183)
அ) சோழன் நெடுங்கிள்ளியை, பாணர்
ஆ) சோழன் நலங்கிள்ளியை, கோவூர்கிழார்
இ) கணைக்கால் இரும்பொறையை, கபிலர்
ஈ) கரிகாலனை, உருத்திரங்கண்ணனார்
45. யானை புக்க புலம் போல - இவ்வுமைக்குப்
பொருத்தமான தொடர் (பக் : எண் : 183)
அ) தனக்குப் பயன்படும், பிறருக்குப் பயன்படாது
ஆ) தனக்கும் பயன்படாது, பிறருக்கும் பயன்படாது
இ) பிறருக்குப் பயன்படும், தனக்குப் பயன்படாது
ஈ) தனக்கும் பயன்படும், பிறருக்கும் பயன்படும்
எம்.ஏ.ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர்,
கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில்- 4, 9843448095
இயல் - 1
Slip Test 1 : click here
Slip Test 2 : click here
Slip Test 3 : click here
Slip Test 4 : click here
மொழிப்பயிற்சி
தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக Part-1 : Click here
தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக Part-2 : click here
உவமைத் தொடர்களைச் சொற்றொடர்களில் அமைத்து எழுதுக : Click here
இயல் 1- 8
2 மதிப்பெண் வினா விடைகள் : click here
12 ஆம் வகுப்பு தமிழ்ப்பாடம் சார்ந்த Study materials தேவைப்பட்டால் எது தொடர்பான Study materials வேண்டும் என்பதை Comment Box இல் பதிவிடுங்கள்.
இந்தப் பகுதியில் மேலும் ஏதேனும் விளக்கங்களும் தெளிவுகள் வேண்டுமென்றாலும், மொழிப்பயிற்சி சார்ந்த ஏதேனும் சந்தேகங்களுக்கு விளக்கங்கள் வேண்டுமென்றாலும், வேறு மொழிப்பயிற்சி கேள்விகள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றாலும், நீங்கள் மறக்காமல் Comment Box இல் பதிவிடுங்கள்.
புத்தக வினாக்கள்
1 MARK
ONE WORD ற்கான Question Pdf வடிவில்
FREE DOWNLOAD செய்ய CLICK THE BUTTON BELLOW👇👇👇👇👇
ONE WORD ற்கான ANSWER KEY Pdf Download Below 👇👇👇👇👇
Follow us on (click the below icons to follow)
Want our Latest Posts?
View Our Blogger(Click The Icon Below)
Tamilamuthu 2020 Official
புத்தக வினாக்கள்
1 MARK
ONE WORD ற்கான ANSWER KEY Pdf வடிவில்
FREE DOWNLOAD செய்ய CLICK THE BUTTON BELLOW👇👇👇👇👇
Photo by Steven Gonzales on Unsplash