12th standard Tamil-Slip Test Question Papers & Answer Keys - Unit 2|(2021)
இந்தக் கேள்வித்தாள் 12 ஆம் வகுப்பு, தமிழ்ப்பாடப்புத்தகத்தின் இயல் 2 உள்ள பிறகொருநாள் கோடை , நால்வகைப் பொருத்தங்கள் என்னும் பகுதியில் இருந்து தயாரிக்கப்பட்டுள்ளது. அதிக மதிப்பெண்ணைப் பெறவும், போட்டித் தேர்வில் வெற்றி பெறவும் இந்த வினாத்தாள் உதவியாக இருக்கும்.
வாங்க கேள்வித்தாளை முழுவதும் பாருங்கள், படியுங்கள். தேர்வை எழுதி அதிக மதிப்பெண் எடுங்க...
திருத்தப்பட்ட பாடத்திட்டம் 2021 - 2022
மேனிலை இரண்டாமாண்டு.
தமிழமுது 2020 - பயிற்சிப் பாசறை, கன்னியாகுமரி மாவட்டம்.
SLIP TEST - 2
வகுப்பு : 12 தமிழ் இயல்: 2
பிறகொருநாள் கோடை ,
நால்வகைப் பொருத்தங்கள்
நேரம் : 25 நிமிடங்கள் மதிப்பெண் : 20
I.பலவுள் தெரிக 6 x 1 = 6
1. யார்? எது? ஆகிய வினாச் சொற்கள் பயனிலையாய் அமைந்து, உணர்த்தும் திணைகள் முறையே ______________
அ) அஃறினை, உயர்திணை
ஆ) உயர்திணை, அஃறிணை
இ) விரவுதிணை, அஃறிணை
ஈ) விரவுதிணை, உயர்திணை
2.”உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே
அஃறினை என்மனார் அவரல பிறவே” இந்நூற்பா இடம்பெற்ற இலக்கண நூல்
அ) நன்னூல்
ஆ)அகத்தியம்
இ) தொல்காப்பியம்
ஈ) இலக்கண விளக்கம்
3. தமிழில் திணைப்பாகுபாடு _____________ அடிப்படையில் பகுக்கப்பட்டுள்ளது
அ) பொருட்குறிப்பு
ஆ) சொற்குறிப்பு
இ) தொடர்க்குறிப்பு
ஈ) எழுத்துக்குறிப்பு
4. ‘பிறகொருநாள் கோடை’ - கூறும் பார்க்க தெவிட்டாத அழகு
அ) வெயில் காயும் நகரம்
ஆ) பளபளக்கும் மரக்கிளை
இ) மழையினூடே வெயில் வரும் வேளை
ஈ) மரக்கிளையில் சொட்டும் நீர் துளி
5. ‘பகலும் இரவும் சந்திக்கும் அந்தி அழகு’ - இத்தொடர் காட்டும் உண்மை
அ) இருவேறு பொருள்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையைக் காட்டுகிறது.
ஆ) இருவேறு பொருள்களுக்கு இடையே உள்ள வேற்றுமையைக் காட்டுகிறது.
இ) மொழிக்குள் இருக்கும் ஒரு வலிமைமிக்க ஆற்றலை வெளிப்படுத்துகிறது.
ஈ) மாறுபட்ட இரண்டு இணைகிற போது புலப்படும் புது அழகை வெளிப்படுத்துகிறது.
6. அய்யப்ப மாதவன் வெளியிட்ட கவிதை குறும்படம்
அ) ஓசை
ஆ) நேற்று
இ) காலை
ஈ) இன்று
II.குறுவினா 3 x 2 = 6
7. மழை ஓய்ந்ததைக் கவிஞர் அய்யப்ப மாதவன் விரும்பவில்லை என்பதை எவ்வரிகள் மூலம் உணர்த்துகிறார்?
8. தற்காலத்தில் அஃறிணை எழுவாய் மாற்றமடைந்துள்ளதை உணர்த்தும் இரு தொடர்களை எழுதுக
9. இடம் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
III.சிறுவினா
10.இரு திணைக்கும் பொதுவாக வரும் பெயர்களின் வினைமுடிவு இது திணை பெற்று வருவதற்குச் சான்று தருக.
11. பால் காட்டும் விகுதிகள் இன்றியும் உயர்திணைப் பெயர்ச்சொற்கள் தத்தம் பால் உணர்த்துவதற்கான சான்று தருக.
எம்.ஏ.ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர்,
கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில்- 4, 9843448095
Follow us on (click the below icons to follow)
Want our Latest Posts?
View Our Blogger(Click The Icon Below)
Tamilamuthu 2020 Official
எம்.ஏ.ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர்,
கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில்- 4, 9843448095
திருத்தப்பட்ட பாடத்திட்டம் 2021 - 2022
மேனிலை இரண்டாமாண்டு.
தமிழமுது 2020 - பயிற்சிப் பாசறை, கன்னியாகுமரி மாவட்டம்.
SLIP TEST - 2
பிறகொருநாள் கோடை , நால்வகைப் பொருத்தங்கள்
வகுப்பு : 12 தமிழ் இயல் : 2
நேரம் : 25 நிமிடங்கள் மதிப்பெண் : 20
விடைகள்
I.பலவுள் தெரிக 6 x 1 = 6
1.ஆ) உயர்திணை, அஃறிணை
2. இ) தொல்காப்பியம்
3. அ) பொருட்குறிப்பு
4. இ) மழையினூடே வெயில் வரும் வேளை
5. ஈ) மாறுபட்ட இரண்டு இணைகிற போது புலப்படும் புது அழகை வெளிப்படுத்துகிறது.
6. ஈ) இன்று
II.குறுவினா 3 x 2 = 6
7. * மழை கனவில் இருந்து விடுபட்டாலும் நான் எங்கள் வீட்டுச் சுவரில்
செங்குத்தாக இறங்கிய மழையை இன்னும் என் இதயத்தினுள்
வழிய விட்டுக் கொண்டிருக்கிறேன்.
நான் கையை ஏந்தி வாங்கிய மழைத்துளிகள் என் நரம்புக்குள் வீணை
மீட்டுக் கொண்டிருக்கிறது.
இதிலிருந்து வெளிவர என் மனம் விரும்பவில்லை என்று கூறும் வரிகள் மூலம் உணர்த்துகிறார்.
எம்.ஏ.ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர்,
கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில்- 4, 9843448095
8 .தற்காலத்தில் அஃறிணை எழுவாய் மாற்றமடைந்துள்ளதை உணர்த்தும்
இரு தொடர்கள் :
1 ) காளை மாடு வயலில் உழுத்து. 2) ஆண்குரங்கு மரத்தில் குதித்தது
9.இடம் மூன்று வகைப்படும்
அவை : தன்மை,முன்னிலை, படர்க்கை
III.சிறுவினா 2 x 4 = 8
10.
1. குழந்தை சிரித்தான்.
குழந்தை சிரித்தது.
2. கதிரவன் உதித்தான்.
கதிரவன் உதித்தது.
11. பால் காட்டும் விகுதிகள் இன்றியும் உயர்திணைப் பெயர்ச்சொற்கள்
தத்தம் பால் உணர்த்துவதற்கான சான்று
ஆண் - ஆண்பால்
பெண் - பெண்பால்
அப்பா - பெயர்ச்சொல் - ஆண்பால்
அம்மா - பெயர்ச்சொல் - பெண்பால்
தம்பி - பெயர்ச்சொல் - ஆண்பால்
தங்கை - பெயர்ச்சொல் - பெண்பால்
தந்தை - பெயர்ச்சொல் - ஆண்பால்
தாய் - பெயர்ச்சொல் - பெண்பால்
எம்.ஏ.ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர்,
கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில்- 4, 9843448095
SLIP TEST -2 - வினாத்தாள் மற்றும் விடைத்தாள் Pdf DOWNLOAD BELOW 👇👇
Follow us on (click the below icons to follow)
Want our Latest Posts?
View Our Blogger(Click The Icon Below)
Tamilamuthu 2020 Official
இயல் - 1 ( REDUCED SYLLABUS)
Slip Test 1 : click here
Slip Test 2 : click here
Slip Test 3 : click here
Slip Test 4 : click here
இயல் - 2 ( REDUCED SYLLABUS)
Slip Test 1 : Click here
மொழிப்பயிற்சி
தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக Part-1 : Click here
தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக Part-2 : click here
உவமைத் தொடர்களைச் சொற்றொடர்களில் அமைத்து எழுதுக : Click here
இயல் 1 - 8 ( REDUCED SYLLABUS)
1 மதிப்பெண் வினா விடைகள் : Click here
2 மதிப்பெண் வினா விடைகள் : click here
4 மதிப்பெண் வினா விடைகள் : Click here
டிசம்பர் 2021,( REDUCED SYLLABUS)
திருப்புதல் தேர்வு -மாதிரி வினாத்தாள்-1 : click here
12 ஆம் வகுப்பு, தமிழ்ப்பாடம் சார்ந்த Study materials தேவைப்பட்டால் எது தொடர்பான Study materials வேண்டும் என்பதை Comment Box இல் பதிவிடுங்கள்.
இயல் - 2
SLIP TEST -2 - வினாத்தாள் மற்றும் விடைத்தாள் Pdf DOWNLOAD👇👇👇
Photo by Rachel Coyne on Unsplash