Loading ....

12th standard Tamil-Slip Test Question Papers & Answer Keys - Unit 2 - (2021) | வகுப்பு12- இயல் 2 - தமிழ் - பிறகொருநாள் கோடை-நால்வகைப் பொருத்தங்கள்

 


12th standard Tamil-Slip Test Question Papers & Answer Keys - Unit 2|(2021)


இந்தக் கேள்வித்தாள் 12 ஆம் வகுப்பு, தமிழ்ப்பாடப்புத்தகத்தின் இயல் 2 உள்ள பிறகொருநாள் கோடை , நால்வகைப் பொருத்தங்கள் என்னும் பகுதியில் இருந்து தயாரிக்கப்பட்டுள்ளது. அதிக மதிப்பெண்ணைப் பெறவும், போட்டித் தேர்வில் வெற்றி பெறவும் இந்த வினாத்தாள் உதவியாக இருக்கும். 


வாங்க கேள்வித்தாளை முழுவதும் பாருங்கள், படியுங்கள். தேர்வை எழுதி அதிக மதிப்பெண் எடுங்க...

திருத்தப்பட்ட பாடத்திட்டம்  2021 - 2022

மேனிலை இரண்டாமாண்டு.

 

தமிழமுது 2020 -  பயிற்சிப் பாசறை, கன்னியாகுமரி மாவட்டம்.


 SLIP TEST - 3

வகுப்பு : 12                                   தமிழ்                                             இயல் : 2

பிறகொருநாள் கோடை , நால்வகைப் பொருத்தங்கள்


நேரம் : 25 நிமிடங்கள்                                                                  மதிப்பெண் : 20


இலக்கணம் , மொழிப்பயிற்சி

I.பலவுள் தெரிக                                                                                                                5 x 1 = 5                                                                               

1.”அழிந்த மாயத்தில் வருத்தம் கொள்கிறது 

    தலையசைத்து உதறுகிறது”   - இப்பாடல் வரிகளில் இடம்பெற்றுள்ள 

உயிர்த்தொடர் குற்றியலுகரம் எது? 

அ) அழிந்த   

ஆ)   கொள்கிறது         

இ)    தலையசைத்து           

ஈ) இவற்றில் எதுவுமில்லை

 

2. மா.இராசமாணிக்கனாருடன்  தொடர்புடையது

அ) பத்துப்பாட்டு ஆராய்ச்சி                                                    

ஆ) பத்துப்பாட்டு  ஆய்வு   

இ) பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் ஒப்பீடு                     

ஈ) எட்டுத்தொகை ஆராய்ச்சி


3. தவறான இணையைக் கண்டறிக 

அ) கருப்பு மலர்கள்                                                        -  நா. காமராசன்

ஆ) இயற்கைக்கு திரும்பும் பாதை                            -  நம்மாழ்வார்

இ)  சுற்றுச்சூழல் கல்வி                                                 -  ப. ரவி

ஈ) வானம் வசப்படும்                                                       -  பிரபஞ்சன்


4.’எட்டுத்திசையும் இடிய -  மழை

                 எங்ஙனம் வந்ததடா தம்பி வீரா’      - இப்பாடலடிகளில் அமைந்துள்ள நயங்கள் 

அ) எதுகை, இயைபு                                                               

ஆ) அடிமோனை, சீர்மோனை 

இ) சீர்மோனை                                                                          

ஈ) இவற்றில் எதுவுமில்லை

 

5. பொருத்தித் தேர்க 

அ) Platform                                         -  1. இருப்புப் பாதை

ஆ) Level Crossing                             -  2. நடைமேடை 

இ) Metro Train                                    -  3. இருப்புப்பாதையைக் கடக்குமிடம் 

ஈ)  Train Track                                     -  4. மாநகரத் தொடர்வண்டி

அ) 2  3  4 1                     

ஆ) 2 3 1 4                                   

இ) 2 1 3 4                                      

ஈ) 2 4 3 1 


II.அனைத்திற்கும் விடையளி

6. மயங்கொலி சொற்களை ஒரே தொடரில்   அமைத்து எழுதுக           3 x  2 =  6                                                                                                                                                    

அ) கலை , களை , கழை                             

ஆ) அலை , அளை , அழை                                         

இ) விலை , விளை , விழை


7. ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்                               4 x 1  = 4

அ) Democracy                 

ஆ) Regions             

இ) Soil erosion                 

ஈ) Fuel 


8. எண்ணங்களை எழுத்தாக்குக:                                                                        1  x 5 =  5 




எம்.ஏ.ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர்

கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில்- 49843448095


Follow us on (click the below icons to follow)


Want our Latest Posts?

View Our Blogger(Click The Icon Below)

Tamilamuthu 2020 Official

Icons from Flaticon      Contact No : 9843448095

                                                                         ©Tamilamuthu2020official.blogspot.com

எம்.ஏ.ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர்

கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில்- 49843448095


     



இயல் - 1 ( REDUCED SYLLABUS)


Slip Test 1 : click here


Slip Test 2 : click here


Slip Test 3 : click here


Slip Test 4 : click here


இயல் - 2 ( REDUCED SYLLABUS)


Slip Test 1 : Click here

Slip Test 2 : Click here


மொழிப்பயிற்சி


தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக Part-1 : Click here


தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக Part-2 : click here


உவமைத் தொடர்களைச் சொற்றொடர்களில் அமைத்து எழுதுக : Click here


இயல்  1 - 8 ( REDUCED SYLLABUS)

 

 1 மதிப்பெண் வினா விடைகள்  : Click here

2 மதிப்பெண் வினா விடைகள்  : click here

4 மதிப்பெண் வினா விடைகள்  : Click here


டிசம்பர் 2021,( REDUCED SYLLABUS)


திருப்புதல் தேர்வு

மாதிரி வினாத்தாள்-1 : click here                      




SLIP TEST 3 - வினாத்தாள் மற்றும் விடைத்தாள் Pdf DOWNLOAD BELOW 👇👇


திருத்தப்பட்ட பாடத்திட்டம்  2021 - 2022

மேனிலை இரண்டாமாண்டு.

 

தமிழமுது 2020 -  பயிற்சிப் பாசறை, கன்னியாகுமரி மாவட்டம்.


 SLIP TEST - 3

பிறகொருநாள் கோடை , நால்வகைப் பொருத்தங்கள்


வகுப்பு : 12                                   தமிழ்                                             இயல் : 2

நேரம் : 25  நிமிடங்கள்                                                                  மதிப்பெண் : 20


இலக்கணம் , மொழிப்பயிற்சி


விடைகள்

I.பலவுள் தெரிக                                                                                                                5 x 1 = 5

1. ஆ)   கொள்கிறது     

2. அ) பத்துப்பாட்டு ஆராய்ச்சி       

3. ஆ) இயற்கைக்கு திரும்பும் பாதை          -  நம்மாழ்வார்

4. இ) சீர்மோனை      

5. அ) 2  3  4 1

II.அனைத்திற்கும் விடையளி

6. மயங்கொலி சொற்களை ஒரே தொடரில்   அமைத்து எழுதுக           3 x  2 =  6

அ) கலை , களை , கழை 

கலை -  நுட்பம், ஆடை, கல்வி, கலைமான் 

கலை   -நீக்கு, அழகு 

கழை   - மூங்கில் 

கழை காட்டில் தீப்பிடித்ததால் களைசெடிகளுடன்  சேர்ந்து கலைமான்களும்  தீக்கிரையாகின.


ஆ) அலை , அளை , அழை   

அலை  - அலைதல்;  கடலில், நீர் நிலைகளில் உண்டாவது 

அளை -  புற்று, தயிர், பிசை 

அழை  - கூப்பிடு 

        கடல்லையில்  குளிக்கச் சென்று வருவதாகக் கூறிய குமரன் அளையில் இருந்த அரவம் தீண்ட எத்தனை முறை அழைத்தும் பேச்சுமூச்சின்றிக் கிடந்தான்.


இ) விலை , விளை , விழை

              கார் பருவத்தில் நன்றாக விளைந்ததால் தானியங்களின் விலை குறையாமல் இருக்க ஏற்றுமதி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்ள அரசு அறிவித்தது.


7. ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்                               4 x 1  = 4

அ) Generation              -  தலைமுறை              

ஆ) Region                     -  பகுதி       

இ) Soil Erosion             -  மண்ணரிப்பு             

ஈ) Fuel                            -  எரிபொருள் 


8. எண்ணங்களை எழுத்தாக்குக:                                                                        1  x 5 =  5 

                பூமி இன்று அழுகின்றது 

                பச்சை பட்டாடை உடுத்திய என்னை 

                வெம்மை  காட்டில் வீசியது ஏனோ.....?  


               பருவம் தவறாமல் மழையைத் தந்தேன் 

               வளமாய் வாழ நிலம் தந்தேன் 

               சுயநலத்திற்காக வளமான 

               காட்டை அழித்து என்னைக் 

               கட்டாந்தரை யாக்கியது ஏனோ......?  

 

              வெப்பமிகுதியால் என்மேனி சூடாகிறது 

              குளிர்விக்க நீ 

              ஒரு மரமாவது நடுவாயா.......?   

              அனலாய் கொதிக்கிறது என் உடல் 

              கொஞ்சமாவது என்னைக் காப்பாயா.....?  



              நஞ்சாகும் நெகிழியைத் தவிர்த்துவிடு 

              என் மேனியின் சூட்டைக் குறைத்துவிடு 

              வளமான என்னைக் காத்துவிடு 

              வரும் தலைமுறையும் வாழ வழி விடு.....!






இயல் - 2

SLIP TEST 3 - வினாத்தாள் மற்றும் விடைத்தாள் Pdf DOWNLOAD👇👇👇



   

  


Post a Comment

Previous Post Next Post