12th standard Tamil-Slip Test Question Papers & Answer Keys - Unit 2|(2021)
இந்தக் கேள்வித்தாள் 12 ஆம் வகுப்பு, தமிழ்ப்பாடப்புத்தகத்தின் இயல் 2 உள்ள பிறகொருநாள் கோடை , நால்வகைப் பொருத்தங்கள் என்னும் பகுதியில் இருந்து தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு மதிப்பெண் கேள்வி ( ONE WORD QUESTION ) .அதிக மதிப்பெண்ணைப் பெறவும், போட்டித் தேர்வில் வெற்றி பெறவும் இந்த வினாத்தாள் உதவியாக இருக்கும்.
வாங்க கேள்வித்தாளை முழுவதும் பாருங்கள், படியுங்கள். தேர்வை எழுதி அதிக மதிப்பெண் எடுங்க...
©Tamilamuthu2020official.blogspot.com
திருத்தியமைக்கப்பட்ட பாடத்திட்டம் 2021 - 2022
மேனிலை இரண்டாமாண்டு.
தமிழமுது 2020 - பயிற்சிப் பாசறை, கன்னியாகுமரி மாவட்டம்.
SLIP TEST -4
வகுப்பு : 12 தமிழ் இயல் : 2
பிறகொருநாள் கோடை , நால்வகைப் பொருத்தங்கள்
நேரம் : 40 நிமிடங்கள் மதிப்பெண் : 25
ஒரு மதிப்பெண் தேர்வு ( ONE WORD TEST)
I.அனைத்திற்கும் விடையளி. 25 x 1 = 25
1. உலக மொழிகள் அனைத்திலும்___________ ச் சொற்களே மிகுதி என்பர்.
அ) பெயர்
ஆ) இடை
இ) வினை
ஈ) உரி
2. நீர்நிலைகளில் இருந்து ஒளிக்கதிர் நீரை எப்படி எடுத்தது
அ) குழாய் மூலம்
ஆ) நீரில் மூழ்கி
இ) உதடுகள் குவித்து
ஈ) கரங்களால் பருகி
3. பேசுபவர் முன்னிலையாரைத் தவிர்த்துத் தன்மைப் பன்மையில் பேசுவது ___________ ஆகும்
அ) உளப்படுத்தா தன்மைப் பன்மை
ஆ) உளப்பாட்டுத் தன்மைப் பன்மை
இ) பதிலிடு பெயர்கள்
ஈ) தன்மைப் பன்மைப் பெயர்கள்
4.சரியா ? தவறா ?
கருத்து 1 : பெயர்ச்சொற்களைத் திணை அடிப்படைரயில் உயர்திணைப் பெயர், அஃறிணைப்பெயர் என்று இருவகையாகப் பிரிப்பர், up
கருத்து: 2, உயர்தினைப் பெயர், கஅஃறிணைப்பெயர் என ப் பாகுபடுத்தும் முறை எல்லா மொழிகளிலும் ஒரே மாதிரியாக அமையும்,
அ) கருத்து 1, 2 சரி
ஆ) கருத்து 1 சரி கருத்து 2 தவறு
இ) கருத்து 1, 2 தவறு
ஈ) சுருத்து 1 தவறு கருத்து 2 சரி
5. அய்யப்ப மாதவன் வெளியிடாத கவிதை நூல்
அ) மழைக்கும் பிறகு கோடை
ஆ) நீர்வெளி
இ) வேறொருவன்
ஈ) நானென்பது
6.பெரும்பாலான தொடர்களில் எழுவாயை வைத்துக் கொண்டே வினைமுற்றின் _________ ஆகியவற்றைச் சொல்லிவிடலாம்.
அ) திணை, எண்
ஆ)திணை, பால், எண்
இ) பால், எண்
ஈ) திணை, பால்
7. தற்போது தமிழில் தாங்கள் என்பது __________ இடத்திலும் வரும்
அ) தன்மை
ஆ) முன்னிலை
இ) படர்க்கை
ஈ) எதுவுமில்லை
8. பசுமை வளாக இயக்கத்தைத் தோற்றுவித்தவர்
அ) வங்காரி மத்தாய்
ஆ) மனோரமா பிஸ்வாஸ்
இ) பெர்சிவல் பாதிரியார்
ஈ) ஆறுமுக நாவலர்
9. மொழியின் சொற்றொடர் அமைப்பை விளங்கிக் கொள்வதற்கும் பயன்படுத்துவதற்கும் உதவுவன
அ) திணை
ஆ) பால், எண்
இ) இடம்
ஈ) மேற்கண்டவை அனைத்தும்
10. ஒரு மொழியின் அடிப்படை அறிவு என்பது அந்த மொழியில் உள்ள எழுத்துகளையும் சொற்களையும் அவற்றின் பொருளையும் வாக்கிய அமைப்புகளையும் தெரிந்திருப்பதே. மேலே குறிப்பிட்ட நான்கையும் உள்ளடக்கியதே ஒரு மொழியின் இலக்கணம் - இக்கூற்று இடம்பெற்றுள்ள நூல்
அ) தமிழ் மொழியின் நடை அழகியல்
ஆ) தமிழ் நடைக் கையேடு
இ) தமிழ் மொழி வரலாறு
ஈ) தமிழ் மொழியில்
11.சரியானதை தன் தேர்க
அ) வேர்விட்டன - மரங்கள்
ஆ) அமைதியாயிருந்தது - நகரம்
இ) செங்குத்தாய் - வீட்டுச் சுவர்
ஈ) தெருவெங்கும் - நீர்ச்சுவடுகள்
12. பொருத்தித் தேர்க
அ) அஃறிணை பன்மை விகுதி கட்டாயமில்லை - 1.தங்கமணி
ஆ) பலர்பால்சொல் -2. பத்துத்தேங்காய்
இ) ஆண்பால் பெண்பால் பொதுப்பெயர் - 3. பேசுபவன், கேட்பவன்,
பேசப்படும்பொருள்
ஈ) தன்மை, முன்னிலை, படர்க்கை - 4. மாணவர் வந்தனர்
அ) 2 1 4 3
ஆ) 2 4 1 3
இ) 2 3 4 1
ஈ) 1 2 3 4
13. தமிழ் மொழியில் திணை, பால், எண் ஆகியவற்றை உணர்த்தும் சொற்கள்
அ) பெயர்ச்சொல், இடைச்செல்
ஆ) பெயர்ச்சொல், உரிச்சொல்
இ) பெயர்ச் சொல், திசைச் சொல்
ஈ) பெயர்ச்சொல், வினைச்சொல்
14. நரம்புக்குள் மீட்டுவது எது
அ) மத்தளம்
ஆ) துடி
இ) யாழ்
ஈ) வீணை
15. எதன் ஓரம் அழகு என்று நம் பாடப்பகுதி குறிப்பிடுகின்றது
அ) நதியும் கடலும் சேரும் ஓரம்
ஆ) மரமும் கிளையும் சேரும் ஓரம்
இ) கரையும் கடலும் சேரும் ஓரம்
ஈ) மலையும் மேகமும் சேரும் ஓரம்
16. தமிழில் உள்ள பெயர்கள் தன்மை முன்னிலை இடத்தைத் தவிர ___________ இடத்திலும் வரும்
அ) படர்க்கை.
ஆ) ஆண்பால்
இ) பலர்பால்
ஈ) இம்மூன்றிலும்
17.தமிழில் உயர்திணை ஆண்பால் பெண்பாலுக்குரிய பொதுப்பெயர்கள் எதைப் பொறுத்தே பால் அறியப்படும்.
அ) எழுவாய்
ஆ) வினைமுற்று
இ) செயப்படுபொருள்
ஈ) தொழிற்பெயர்
18. சரியானதைத் தேர்க
அ) பசுகள் பால் தந்தது
ஆ) காளை உழுதன.
இ) பசு பால் தந்தன
ஈ) பசு பால் தந்தது
19.தற்காலத் தமிழில் எதற்கென தனிவினைமுற்று இல்லை.
அ) அஃறிணைஒருமை
ஆ) அஃறிணை
இ) அஃறிணை பன்மை
ஈ) அஃறிணைமுன்னிலை.
20. சரியானதைத் தேர்க
அ) யார்? எது? -பால்வேறுபாடு .
ஆ) அவர் வந்தார் - பன்மைப் பொருளை உணர்த்துகிறது.
இ) தங்கமணி பாடினாள் - பெண்பால் விகுதி பெற்றுள்ளது
ஈ) ஆசிரியர் வந்தார் - பலர்பால் விகுதி உயர்வு கருதி வராது
21. ‘ஒருமை’ பொருளை உணர்த்தும் சொல்
அ) ஒவ்வொரு
ஆ) ஒரு
இ) ஒன்று
ஈ) இவற்றில் எழுவுமில்லை
22. ‘ஒவ்வொரு வீடுகளிலும் நூலகம் உள்ளது’ - இத் தொடரில் பிழையான சொல்
அ ) வீடுகளிலும்
ஆ) ஒவ்வொரு
இ) உள்ளது
ஈ) உலகம்
23.பெயர்ச்சொற்களில் எப்பாகுபாடு வெளிப்படாது
அ) இட
ஆ) எண்
இ) திணை
ஈ) இவற்றில் எதுவுமில்லை .
24. ‘ அவர்கள்' என்னும் சொல் பன்மைப் பொருளை உணர்த்தும்_____________
அ) பதிலிடு வினைச் சொல்
ஆ) பதிலிடு பெயர்ச்சொல்
இ) பெயர்சொல்
ஈ) வினைச்சொல்
25.எது இன்றியும் உயர்திணைப் பெயர்சொற்கள் தத்தம் பால் உணர்த்தும்
அ) பால் காட்டும் பெயர்
ஆ) பால் காட்டும் வினை
இ) பால்காட்டும்சொல்
ஈ) பால்காட்டும் விகுதி
எம்.ஏ.ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர்,
கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில்- 4, 9843448095
Follow us on (click the below icons to follow)
Want our Latest Posts?
View Our Blogger(Click The Icon Below)
©Tamilamuthu2020official.blogspot.com
இயல் - 1 ( REDUCED SYLLABUS)
Slip Test 1 : click here
Slip Test 2 : click here
Slip Test 3 : click here
Slip Test 4 : click here
இயல் - 2 ( REDUCED SYLLABUS)
Slip Test 1 : Click here
Slip Test 2 : Click here
Slip Test 3 : Click here
மொழிப்பயிற்சி
தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக Part-1 : Click here
தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக Part-2 : click here
உவமைத் தொடர்களைச் சொற்றொடர்களில் அமைத்து எழுதுக : Click here
இயல் 1 - 8 ( REDUCED SYLLABUS)
1 மதிப்பெண் வினா விடைகள் : Click here
2 மதிப்பெண் வினா விடைகள் : click here
4 மதிப்பெண் வினா விடைகள் : Click here
டிசம்பர் 2021 ( REDUCED SYLLABUS)
திருப்புதல் தேர்வு
மாதிரி வினாத்தாள்-1 : click here
SLIP TEST 4 - வினாத்தாள் மற்றும் விடைத்தாள் Pdf DOWNLOAD BELOW 👇👇
திருத்தியமைக்கப்பட்ட பாடத்திட்டம் 2021 - 2022
மேனிலை இரண்டாமாண்டு.
தமிழமுது 2020 - பயிற்சிப் பாசறை, கன்னியாகுமரி மாவட்டம்.
SLIP TEST - 4
வகுப்பு : 12 தமிழ் இயல் : 2
நேரம் : 40 நிமிடங்கள் மதிப்பெண் : 25
ஒரு மதிப்பெண் தேர்வு ( ONE WORD TEST)
விடைகள்
1.அ) பெயர்
2.இ) உதடுகள் குவித்து
3. அ) உளப்படுத்தா தன்மைப் பன்மை
4.ஆ) கருத்து 1 சரி கருத்து 2 தவறு
5.அ) மழைக்கும் பிறகு கோடை
6.ஈ) திணை, பால்
7.ஆ) முன்னிலை
8.அ) வங்காரி மத்தாய்
9. ஈ) மேற்கண்டவை அனைத்தும்
10. ஆ) தமிழ் நடைக் கையேடு
11.இ) செங்குத்தாய் - வீட்டுச் சுவர்
12.ஆ) 2 4 1 3
13.ஈ) பெயர்ச்சொல், வினைச்சொல்
14.ஈ) வீணை
15.இ) கரையும் கடலும் சேரும் ஓரம்
16.அ) படர்க்கை
17. ஆ) வினைமுற்று
18.ஈ) பசு பால் தந்தது
19.இ) அஃறிணை பன்மை
20.இ) தங்கமணி பாடினாள் - பெண்பால் விகுதி பெற்றுள்ளது.
21.அ) ஒவ்வொரு
22.அ ) வீடுகளிலும்
23. அ) இட
24. ஆ) பதிலிடு பெயர்ச்சொல்
25. ஈ) பால்காட்டும் விகுதி
எம்.ஏ.ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர்,
கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில்- 4, 9843448095
Follow us on (click the below icons to follow)
Want our Latest Posts?
View Our Blogger(Click The Icon Below)
©Tamilamuthu2020official.blogspot.com
இயல் - 2
SLIP TEST 4 - வினாத்தாள் மற்றும் விடைத்தாள் Pdf DOWNLOAD👇👇👇
Photo by Joanna Kosinska on Unsplash