Loading ....

12th Tamil - Study Material - பாநயம் பாராட்டல் - இலக்கிய நயம் பாராட்டல் - 12 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 2 - வெட்டி யடிக்குது மின்னல் - பாரதியார்

 

12th Tamil - Study Material  - பாநயம் பாராட்டல் - இலக்கிய நயம் பாராட்டல் - 12 ஆம் வகுப்பு - தமிழ்




12 ஆம் வகுப்பு


இயல் 2

பாநயம் பாராட்டல்


                          வெட்டி யடிக்குது மின்னல்  - கடல் 

                                      வீரத் திரைகொண்டு விண்ணை யிடிக்குது;

                          கொட்டி யிடிக்குது மேகம்  - கூ 

                                      கூவென்று விண்ணைக்  குடையுது காற்று 

                          சட்டச்சட சட்டச்சட டட்டா  - என்று

                                      தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம் 

                          எட்டுத்திசையும் இடிய  -  மழை 

                                      எங்ஙனம் வந்ததடா தம்பி வீரா!

                                                           

                                                                   -பாரதியார் 

முன்னுரை;

           இப்பாடலைப் பாடியவர் தேசியக்கவி என்று அழைக்கப்பட்ட மகாகவி பாரதியார் ஆவார்.இளமையிலே கவி பாடியதால் பாரதி என்றும்  அழைக்கப்பட்டவர். சாதிகள் இல்லையடி பாப்பா' என்ற பாடல் வரிமூலம் எல்லோராலும் அறியப்படும் மகாகவி பாரதியார் அவர்கள் எழுதிய இப்பாடலில் காணப்படும் நயங்களைக் காண்போம்.


யைக்கருத்து :

        பெருங்காற்று, பலத்த இடியோசை, இசைது்தாளத்திற்கு ஏற்ப மண்ணை வந்து அடைகின்ற மழையினைச் சிறப்பித்துக் கூறுவதே இப்பாடலின் கருவாகும்

.

சொல்நயம் :

          பாரதியார் இப்பாடலில் பயன்படுத்தியிருக்கும். சொற்களின் ஒலியும் பொருளும் ஒரு பெரும்புயலையே நம் கண்முன் காட்டுவனவாக உள்ளன. புதிய ஒலியின்பத்தை உடைய சொற்களைப் பாரதியார் இந்தப் பாடலில் பயன்படுத்தியுள்ளார்,

        சான்று:

               கூகூ வென்று;  சட்டச்சட சட்டச்சடட்டா


பொருள்நயம் :

           மழை பெய்வதற்கு முன்னால் வானில் நிகழும் நிகழ்வுகளை எல்லாம் நம் மணக்கண்முன் கொண்டுவந்து காட்சிப்படுத்துகிறார் பாரதியார். மின்னல், கடலின் ஆர்ப்பரிப்பு, விண்ணைக் குடையும் காற்று, மழை விழும் ஓசை என தான் கூற விரும்பிய மழையின் சிறப்பை ஏற்ற சொற்களைப் பயன்படுத்தி தான் கூறவந்த கருத்தைச் சிறப்பாக இப்பாடலில் வெளிப் படுத்தியுள்ளார்.

           


தொடைநயம்:

         பாடலில், மோனை, எதுகை, இயைபு, முரண், அளபெடை ஆகியவற்றைக் கொண்டு தொடுப்பது தொடையாகும்.


மோனைநயம்:

         பாடலில் சீர்களிலோ, அடிகளிலோ முதலெழுத்து ஒன்றிவரத் தொடுப்பது மோனையாகும்.

சீர்மோனை:

           இப்பாடலில் சீர்மோனை பயின்றுவந்துள்ளது.


                வெட்டியடிக்குது - வீரத் - விண்ணை 

                கொட்டி - கூவென்று  - குடையுது - காற்று

                ட்டச்சட- ட்டச்சட 

                எட்டுத்திசையும் -ங்ஙனம்




எதுகைநயம் :

             பாடலின் அடிதோறும் அல்லது சீர்தோறும் முதலெழுத்து அளவொத்து நிற்க இரண்டாவது எழுத்து ஒன்றி வருவது எதுகை  எனப்படும்.  இப்பாடலில் சீர்எதுகை மற்றும் அடிஎதுகை பயின்றுவந்துள்ளது.

சீர்எதுகை:

          சட்டச்சட - சட்டச்சட


 அடிஎதுகை:


         வெட்யடிக்குது 

        கொட்டி

        சட்டச்சட

        எட்டுத்திசையும் 



சந்தநயம் :

        இப்பாடலை ஏற்ற இசைக்கருவியுடன் இசைத்துப் பாடினால் பாடுவோர்க்கும், கேட்போருக்கும் மிகுந்த இன்பம் தரும் விதத்தில் தாள நயத்துடன் பாரதியார் இப்பாடலைப் பாடியுள்ளார் இப்பாடல் சிந்துப்பா வகையைச் சார்ந்ததாகும்.


குருசடி எம்.ஏ.ஜெலஸ்டின், கார்மல் மேல்நிலைப் பள்ளி , நாகர்கோவில் - 4,  9843448095


சுவைநயம்:

       இப்பாடலில் இயற்கையைக் குறைவில்லாமல் காத்து வரும் மழையானது நிலத்தில் விழுவதற்கு முன்னால் வானில் தோன்றும் நிகழ்வுகளைப் பெருமிதத்துடன்  பாரதியார் கூறியுள்ளதால் இப்பாடலில் பெருமிதச் சுவை பயின்றுவந்துள்ளது. 


முடிவுரை:

  ‘காலம் கவிஞனைக் கொன்றது; ஆனால் அவன் கவிதை காலத்தை வென்றது,' 

என்ற கூற்றிற்கு எற்ப  கவிஞர் பாரதியார்  இக்கவிதையில்  கவிதைக்குரிய நயங்களை எல்லாம் அமைத்து கவிநயங்களால் தமிழன்னைக்குப் பெருமை சேர்த்துள்ளார்.




 



மாணாக்கரே ! 

கேள்வியைக் கவனித்து எத்தனை  நயங்கள் கேட்கப்பட்டிருக்கின்றதோ அத்தனை நயங்கள் மட்டும் 

எழுதினால் போதுமானதாகும்.



பா நயம்பாராட்டல் விடைக்குறிப்பு Pdf

download button below 👇👇👇👇👇



குருசடி எம்.ஏ.ஜெலஸ்டின்

கார்மல் மேல்நிலைப் பள்ளி , 

நாகர்கோவில் - 4, 

 9843448095


இயல் - 1 ( REDUCED SYLLABUS)


Slip Test 1 : click here


Slip Test 2 : click here


Slip Test 3 : click here


Slip Test 4 : click here


இயல் - 2 ( REDUCED SYLLABUS)


Slip Test 1 : Click here


Slip Test 2 : Click here


Slip Test 3 : Click here


Slip Test 4 : CLICK HERE


மொழிப்பயிற்சி


தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக Part-1 : Click here


தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக Part-2 : click here


உவமைத் தொடர்களைச் சொற்றொடர்களில் அமைத்து எழுதுக : Click here


இயல்  1 - 8 ( REDUCED SYLLABUS)

 

 1 மதிப்பெண் வினா விடைகள்  : Click here

2 மதிப்பெண் வினா விடைகள்  : click here

4 மதிப்பெண் வினா விடைகள்  : Click here


டிசம்பர் 2021 ( REDUCED SYLLABUS)


திருப்புதல் தேர்வு

மாதிரி வினாத்தாள்-1 : click here


மாதிரி வினாத்தாள்-2 : Click here


பாநயம் பாரட்டல்


இயல்  - 1 :   முச்சங்கங்  கூட்டி    -   Click Here 



பா நயம்பாராட்டல் விடைக்குறிப்பு Pdf DOWNLOAD👇👇👇






Icons made by stickerfolio from www.flaticon.com
Icons made by stickerfolio from www.flaticon.com
Icons made by Stickers from www.flaticon.com
Icons made by Stickers from www.flaticon.com
Image by Josiane Boute from Pixabay Image by Ty Swartz from Pixabay

Post a Comment

Previous Post Next Post