12th standard Tamil- Study Material - Slip Test
Question Papers & Answer Keys -
Unit 3 - (2021) |
வகுப்பு12- இயல் 3 - தமிழ் -
திருத்தியமைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி நடைபெற இருக்கின்ற திருப்புதல் தேர்வுக்கான தயாரிப்புக்கு ஆயத்தம் செய்யும் விதத்தில் நமது பாடப்புத்தகத்தில் இடம் பெற்றிருக்கக் கூடிய 3 ஆவது இயலில் இந்த ஆண்டு தேர்வுக்கு வருகின்ற பகுதியில் இருந்து SLIP TEST - 1 ற்கான கேள்விகள் தரப்பட்டுள்ளன.
அத்தனை கேள்விகளுக்கும் விடைகளும் தரப்பட்டுள்ளன. நீங்கள் இந்த SLIP TEST - 1 பகுதியைப் படிப்பதன் மூலம் புத்தகத்தில் இருக்கின்ற கேள்விகள் அத்தனையுமே நீங்கள் கற்று விடலாம், நீங்கள் கற்ற இந்தக் கேள்விகளை எழுதிப் பார்த்து அதற்கான விடைகளைத் திருத்தம் செய்து கொள்ளுங்கள் இந்தக் கேள்விகளுக்கான விடை குறிப்புகளும் உங்களுக்குத் தரப்படுகின்றன. பாருங்கள் வினாக்களையும் விடைகளையும்...
திருத்தப்பட்ட பாடத்திட்டம் 2021 - 2022
மேனிலை இரண்டாமாண்டு.
தமிழமுது 2020 - பயிற்சிப் பாசறை, கன்னியாகுமரி மாவட்டம்.
SLIP TEST - 1
வகுப்பு : 12 தமிழ் இயல் : 3
தமிழர் குடும்ப முறை, விருந்தினர் இல்லம், கம்பராமாயணம் உரிமைத்தாகம், பொருள் மயக்கம்
நேரம் : 40 நிமிடங்கள் மதிப்பெண் : 30
I. பலவுள் தெரிக 6 X 1 = 6
1.பொருள் குழப்பமின்றி எழுதுவதற்குரிய காரணங்களுள் பொருந்துவதைத் தேர்க
அ) தேவையான இடங்களில் இடைவெளி விடாமல் எழுதுதல்.
ஆ) தேவையற்ற இடங்களில் இடைவெளி விட்டு விடுதல்.
இ) நிறுத்தக்குறிகளை உரிய இடத்தில் இட்டு எழுதுதல்.
ஈ) வல்லின மெய்கள் தேவையான இடங்களில் இடாமல் எழுதுதல்.
2.சங்க இலக்கியத்தில் இல்லாத சொற்கள் சங்க காலச் சமூகத்தில் நடைமுறையில் இருந்துள்ளன அவை_______
அ) அறவோர், துறவோர் ஆ) திருமணமும் குடும்பமும்
இ) மன்றங்களும் அவைகளும் ஈ) நிதியமும் சுங்கமும்
3.”உவா உற வந்து கூடும்
உடுபதி இரவி ஒத்தார்” யார்? யார்?
அ) சடாயு, இராமன் ஆ) இராமன், குகன்
இ) இராமன், சுக்ரீவன் ஈ) இராமன், சவரி
4.இவற்றை வாயிலுக்கே சென்று இன்முகத்துடன் வரவேற்பாயாக என்று ஜலாலுதீன் ரூமி குறிப்பிடுவது யாது?
அ) வக்கிரம் ஆ) அவமானம் இ) வஞ்சனை ஈ)இவை அனைத்தும்
5. பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்க
அ) உரிமைத்தாகம் - 1. பாரசீக கவிஞர்
ஆ) அஞ்ஞாடி - 2. பூமணி
இ) ஜலாலுத்தீன் ரூமி - 3. பக்தவச்சல பாரதி
ஈ) தமிழர் குடும்ப முறை - 4. சாகித்திய அகாதமி
அ) 2 4 3 1 ஆ) 3 4 1 2 இ) 2 4 1 3 ஈ) 2 3 4 1
6. “எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே” - என்னும் பாரதியின் பாடல் வெளிப்படுத்துவது
அ) தனிக்குடும்ப முறை ஆ) விரிந்த குடும்ப முறை
இ) தாய்வழிச் சமூக முறை ஈ) தந்தைவழிச் சமூகம் முறை
II. குறுவினா 3 X 2 = 6
7.காற்புள்ளி இடாமல் எழுதுவதனால் அதனால் ஏற்படும் பொருள் மயக்கத்திற்கு சான்று தருக
8. புக்கில் ,தன்மனை சிறுகுறிப்பு எழுதுக
9. எதிர்பாராத நிகழ்வுகளை ஜலாலுதீன் ரூமி எவ்வாறு உருவகப்படுத்துகிறார்
III. சிறுவினா 2 X 4 = 8
10. “வருபவர் எவராயினும்
நன்றி செலுத்து” - இடஞ்சுட்டி பொருள் விளக்குக.
11. குகனோடு ஐவராகி, வீடணனோடு எழுவரான நிகழ்வுகளைச் சுட்டி காட்டுக
IV. நெடுவினா 1 X 6 = 6
12. ‘குடும்பம் என்னும் சிறிய அமைப்பில் இருந்தே மனித சமூகம் என்னும் பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறது எவ்வாறு? விளக்குக.
V. அடி மாறாமல் செய்யுள் வடிவில் எழுதுக. 1 X 4 = 4
13.”குகனோடு ஐவர்.....” எனத் தொடங்கும் கம்பராமாயணப் பாடல்
எம்.ஏ.ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர்,
கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில்- 4, 9843448095
இயல் - 1 ( REDUCED SYLLABUS)
Slip Test 1 : click here
Slip Test 2 : click here
Slip Test 3 : click here
Slip Test 4 : click here
இயல் - 2 ( REDUCED SYLLABUS)
Slip Test 1 : Click here
Slip Test 2 : Click here
Slip Test 3 : Click here
Slip Test 4 : CLICK HERE
திருத்தப்பட்ட பாடத்திட்டம் 2021 - 2022
மேனிலை இரண்டாமாண்டு.
தமிழமுது 2020 - பயிற்சிப் பாசறை, கன்னியாகுமரி மாவட்டம்.
SLIP TEST - 1
வகுப்பு : 12 தமிழ் இயல் : 3
தமிழர் குடும்ப முறை, விருந்தினர் இல்லம், கம்பராமாயணம், உரிமைத்தாகம், பொருள் மயக்கம்
நேரம் : 40 நிமிடங்கள் மதிப்பெண் : 30
விடைகள்
I பலவுள் தெரிக 6 X 1 = 6
1.இ) நிறுத்தக்குறிகளை உரிய இடத்தில் இட்டு எழுதுதல்.
2.ஆ) திருமணமும் குடும்பமும்
3.இ) இராமன், சுக்ரீவன்
4.ஈ)இவை அனைத்தும்
5.இ) 2 4 1 3
6. ஈ) தந்தைவழிச் சமூகம் முறை
II. குறுவினா 3 X 2 = 6
7.காற்புள்ளி இடாமல் எழுதுவதனால் அதனால் ஏற்படும் பொருள் மயக்கத்திற்கு சான்று:
சான்று
1. அவள், அக்கா வீட்டிற்குச் சென்றாள்
2. அவள் அக்கா வீட்டிற்குச் சென்றாள்
இச்சான்றின் முதல் தொடரில் அந்தப்பெண் தன் அக்காள்
வீட்டிற்குச் சென்றாள் என்ற பொருளை உணர்த்துகிறது.
அத்தொடரில் உள்ள காற்புள்ளி.
இச்சான்றின் இரண்டாவது தொடரில் உள்ள காற்புள்ளியால்
அந்தப் பெண்ணின் அக்காள் அவளது (தனது) வீட்டிற்குச் சென்றாள்
என்ற பொருள் வேறுபாட்டைத் தருவதை அறியலாம்.
8 .புக்கில்:
புக்கில் என்பது தற்காலிகமாகத் தங்கும் இடத்தைக்
குறிக்கும். "துகள் அறுகேள்வி உயர்ந்தோர் புக்கில்" என்ற
புறநானூற்றுப் பாடலில் (222:6) வரும் 'புக்கில்' என்பது
தற்காலிகமாகத் தங்கும் இடத்தைக் குறிக்கின்றது.
தன்மனை:
திருமணத்திற்குப் பின் கணவனும் மனைவியும்
பெற்றோரிடமிருந்து பிரிந்து தனியாக
வாழும் இடம் 'தன்மனை' என அழைக்கப்பட்டது.
9.ஜலாலுத்தீன் ரூமி உருவகப்படுத்துபவை
மனித வாழ்க்கையில் நடக்கின்ற எதிர்பாராத நிகழ்வுகளான,
ஓர் ஆனந்தம்
சற்று மனச்சோர்வு
சிறிது அற்பத்தனம்
நொடிப்பொழுதேயான விழிப்புணர்வு
ஆகியவற்றை எல்லாம் நமது இல்லத்திற்கு
வரும் எதிர்பாராத விருந்தாளிகளாக உருவகப்படுத்தியிருக்கின்றார்.
III. சிறுவினா 2 X 4 = 8
10. இடம்:
இப்பாடல் வரிகள் ஜலாலுத்தீன் ரூமி அவர்கள் எழுதிய கவிதையின் ஆங்கில மொழிப்பெயர்ப்பில் இருந்து சில பாடல்களை என்.சத்தியமூர்த்தி என்பவர். 'தாகங்கொண்டமீனொன்று' என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள கவிதைத்தொகுப்பில் உள்ளது. அத்தொகுப்பில் உள்ள 'விருந்தினர் இல்லம்' என்னும் பகுதியில் இவ்வரி இடம் பெற்றுள்ளது.
பொருள்:
இவ்வுலகில் வாழ்கின்ற நாம், தினமும் சந்திக்கின்ற எதிர்பாராத இன்பம், துன்பம், அவமானம். வக்கிரம், வஞ்சனை எதுவானாலும் அதற்காக நன்றி செலுத்த வேண்டும்.
விளக்கம்:
மனித வாழ்க்கை விருந்தினர் இல்லம் போன்றது. நம் வீட்டிற்கு வரும் விருந்தினர்கள் எல்லோரும் ஒரே மனநிலையில் வருவதில்லை. ஒரே மாதிரியான செய்திகளையும் கொண்டு வருவதில்லை. அதுபோன்றே நம் வாழ்க்கையில் சந்திக்கும் அனுபவங்களான ஆனந்தம், மனச்சோர்வு, அற்பத்தனம், விழிப்புணர்வு, வக்கிரம், அவமானம், வஞ்சனை, துக்கம் என்பவை பல வாழ்வியல் வடிவங்களில் வரும். அவை நமக்குப் புதிய உவகையையும், புதிய வழிகாட்டுதல்களையும் தருவதால் 'வருபவர் எவராயினும் நன்றி செலுத்த வேண்டும்' என்று கவிஞர் கூறுகிறார்.
11.குகனோடு ஐவராகி, வீடணனோடு எழுவரான நிகழ்வுகள்:
கங்கையைக் கடந்து செல்ல படகு கொண்டு வந்த குகனது அளவற்ற அன்பை உணர்ந்த இராமன் அவனைத் தன் இனிய நண்பனாக ஏற்றுக் கொண்டான்.
குகனிடம் நீ கூறும் வேலைகளைச் செய்யும் உன் பணியாளனாய் இருக்கின்றேன் என்று கூறும் குகனிடம், உன்னையும் என் சகோதரனாக ஏற்றுக் கொண்டேன். "இனி, நாம் ஓர் ஐவர்கள் உளர் ஆனோம்" என்றான்.
இராமன் மீது கொண்ட அளவற்ற அன்பால் இலங்கை சென்று இராவணனிடம் போர் புரிந்து திரும்பிய சுக்ரீவனைப் பார்த்து இராமன், "இனி நீ வேறு, நான் வேறு அல்ல" என்று கூறினான்.
'நீ என் உயிர் நண்பன்' என்று கூறி நான்கு பேராக இருந்த நாங்கள் குகனுடன் சேர்ந்து ஐந்து பேரானோம். உன்னையும் என் சகோதரனாக ஏற்றுக் கொண்டேன். 'இனி ஆறுபேர் ஆனோம்' என்றான்.
சீதையைக் கவர்;ந்து வந்த செயல் தவறு என்று கூறியதற்காக இராவணன் வீடணனைக் கடிந்து கொண்டான்.
அதனால், வீடணன் இலங்கையை விட்டு வெளியேறி இராமனிடம் அடைக்கலம் வேண்டினான்.
அடைக்கலம் கொடுத்த இராமன் அவனுக்கு இலங்கை அரசை ஆளும் உரிமையைக் கொடுத்து, அவனையும் தன் சகோதரனாக ஏற்றுக்கொண்டு, 'நின்னொடும் ஏழுவர் ஆனோம்' என்றான்.
IV. நெடுவினா 1 X 6 = 6
12 .
குடும்பம்:
தலைவன் தலைவி இணைந்து குழந்தைகளுடனோ, குழந்தைகள் இல்லாமலோ இணைந்து வாழ்ந்து வரும் அமைப்பே குடும்பமாகும்.
மனித சமூக அமைப்பை ஒப்பிடும்போது குடும்பம் என்பது மிகவும் சிறிய அமைப்பாகும்.
இந்தச் சிறிய அமைப்பில் இருந்துதான் மனித சமூகம் என்ற பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறது.
இவ்வமைப்பிற்கு அதன் இயங்குநிலைக் கருத்தாக்கத்தின் மூலமே 'குடும்பம்' என்ற பெயர் வந்தது.
மனிதன் ஒரு சமூக உயிரி:
மனிதன் ஓர் உயிரியல் விலங்கு மட்டுமல்ல அவன் ஒரு சமுதாய விலங்காவான்.
மனிதர்கள் தங்கள் வாழ்வில் பெரும்பகுதியைக் குடும்பத்தில்தான் செலவிடுகின்றனர்.
குடும்பமே மக்களின் உயிரியல், உளவியல், வாழ்வியல் சார்ந்த அனைத்துத் தேவைகளையும் நிறைவு செய்கிறது.
குடும்பத்தில் வாழ்வோர் உயிரியல் பிணைப்புகளை மட்டும் கொண்டவர்களாக இல்லாமல் சமுதாயப் பிணைப்புகளையும் கொண்டவர்களாக இருப்பதே மனித சமூகக் கட்டமைப்பிற்கான அடித்தளமாக இருக்கிறது.
குடும்பம் சமூகத்திற்கான களம்:
குடும்பம் தனிமனிதருக்காகவும் சமுதாயத்திற்காகவும் பெரும் பங்காற்றுகிறது.
மனித சமூகத்தின் அடிப்படைகளான அன்பு செலுத்துதல், பொருளாதாரப் பகிர்வு, பொழுதுபோக்கு, பாதுகாப்பு, சமயச் செயல்கள், கல்வி பெறுதல் ஆகியவை குடும்பத்திலே கற்பிக்கப்படுகின்றன.
சமூகத்தின் பண்பாட்டைக் குழந்தைப்பருவத்திலே குடும்பம் கற்றுக் கொடுக்கின்றது.
சமுதாயத்தின் நெறிமுறைகள் அன்றாட வாழ்வில் பின்பற்றபட வேண்டியப பழக்கவழகங்கள் பொருளாதாரச் செயல்களாகச் செய்யும் முறைகள் சமுதாய சமய வாழ்வில் ஆற்றவேண்டிய கடமைகள் போன்ற எண்ணற்ற வகைகளில் குடும்பம் குழந்தைகளுக்குப் பயிற்சியளிப்பதால் மனித சமூகம் சிறப்பாகக் கட்டமைக்கப்படுகின்றது.
பண்பாட்டு மயமாக்கல் நிகழ்ச்சியில் குடும்ப உறுப்பினர்கள் ஒரு மாதிரிக் குழுவாகக் செயல்படுகின்றனர்.
குடும்பம் என்பது தனது உறுப்பினர்கள் அனைவருக்கும் பயிற்சிகளை வழங்கி அமைதியும் ஒழுங்கும கொண்ட ஒரு சிறந்த சமூதாயம் அமைய அடிப்படையாக விளங்குகின்றது.
குடும்பம் என்னும் சிறிய அமைப்பில் இருந்துதான் 'மனித சமூகம்' என்னும் பரந்த அமைப்பு உருவாக்கப்படுகிறது.
குடும்பம் என்னும் சிறிய அமைப்பு ஒழுங்காகக் கட்டமைக்கப்பட்டாமல் 'மனித சமூகம்' என்ற பரந்த அமைப்பு சிறப்பாகக் கட்டமைக்கப்படும்.
V. அடி மாறாமல் செய்யுள் வடிவில் எழுதுக. 1 X 4 = 4
13. குகனோடும் ஐவர் ஆனேம்
முன்பு; பின் குன்று சூழ்வான்
மக னொடும் அறுவர் ஆனேம்;
எம்முழை அன்பின் வந்த
அகன் அமர் காதல் ஐய!
நின்னொடும் எழுவர் ஆனேம்;
புகல் அருங் கானம் தந்து,
புதல்வரால் பொலிந்தான் நுந்தை.
குருசடி எம்.ஏ.ஜெலஸ்டின்,
முதுகலைத் தமிழாசிரியர்,
கார்மல் மேனிலைப் பள்ளி,
நாகர்கோவில்- 4,
9843448095.
மொழிப்பயிற்சி
தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக Part-1 : Click here
தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக Part-2 : click here
உவமைத் தொடர்களைச் சொற்றொடர்களில் அமைத்து எழுதுக : Click here
இயல் 1 - 8 ( REDUCED SYLLABUS)
1 மதிப்பெண் வினா விடைகள் : Click here
2 மதிப்பெண் வினா விடைகள் : click here
4 மதிப்பெண் வினா விடைகள் : Click here
டிசம்பர் 2021 ( REDUCED SYLLABUS)
திருப்புதல் தேர்வு
மாதிரி வினாத்தாள்-1 : click here
மாதிரி வினாத்தாள்-2 : Click here
பாநயம் பாரட்டல்
இயல் -3
SLIP TEST - 1 ற்கான ANSWER KEY ,Pdf வடிவில்
FREE DOWNLOAD செய்ய CLICK THE BUTTON BELLOW👇👇👇👇👇