11th standard - Reduced Syllabus - Tamil- Unit Test - Question Paper - Unit 1 - (2021) | வகுப்பு11- இயல் 1 - தமிழ் - அலகுத் தேர்வு - வினாத்தாள்
திருத்தியமைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி நடைபெற இருக்கின்ற தேர்வுக்கான தயாரிப்புக்கு ஆயத்தம் செய்யும் விதத்தில் நமது பாடப்புத்தகத்தில் இடம் பெற்றிருக்கக் கூடிய 1 ஆவது இயலில் இந்த ஆண்டு தேர்வுக்கு வருகின்ற பகுதியில் இருந்து UNIT TEST ற்கான கேள்விகள் தரப்பட்டுள்ளன.
நீங்கள் இந்த UNIT TEST பகுதியைப் படிப்பதன் மூலம் புத்தகத்தில் இருக்கின்ற கேள்விகள் அத்தனையுமே நீங்கள் கற்று விடலாம், நீங்கள் கற்ற இந்தக் கேள்விகளை எழுதிப் பார்த்து அதற்கான விடைகளைத் திருத்தம் செய்து கொள்ளுங்கள் .
திருத்தியமைக்கப்பட்ட பாடத்திட்டம் 2021 - 2022
மேனிலை முதலாமாண்டு
தமிழமுது 2020 - பயிற்சிப் பாசறை, கன்னியாகுமரி மாவட்டம்.
©Tamilamuthu2020official.blogspot.com
UNIT TEST
அலகுத் தேர்வு ( இயல் - 1 )
யுகத்தின் பாடல் - பேச்சுமொழியும் கவிதை மொழியும் -
மொழிமுதல், இறுதி எழுத்துகள் - மொழிப்பயிற்சி
வகுப்பு : 11 தமிழ் இயல் : 1
நேரம் : 60 நிமிடங்கள் மதிப்பெண் : 50
I. பலவுள் தெரிக. 10 x 1 = 10
1.வினையாலணையும் பெயரைத் தெரிவு செய்க
அ) கடந்து
ஆ) தோய்த்து
இ) உழுதவர்
ஈ) பல்லாண்டு
2. “கபாடபுரங்களைக் காவு கொண்ட பின்னும்” இதில் ‘காவு’ என்பதன் பொருள்
அ) பலி
ஆ) பழி
இ) அழித்து
ஈ) இவற்றில் எதுவுமில்லை
3. தவறான இணையைத் தேர்வுசெய்க
அ) மொழி + ஆளுமை = உயிர் + உயிர்
ஆ) தமிழ் + உணர்வு = மெய்+ உயிர்
இ) கடல் + அலை = உயிர் + மெய்
ஈ) மண் + வளம் = மெய் + மெய்
4. “கபாடபுரங்களைக் காவு கொண்ட பின்னும்
காலத்தால் சாகாத தொல்கனிமங்கள்” - அடி மோனையைத் தெரிவு செய்க
அ) கபாடபுரங்களை - காவு கொண்ட
ஆ)காலத்தால் -- கனிமங்கள்
இ) கபாடபுரங்களை - காலத்தால்
ஈ)காலத்தால் - சாகாத
5. பொருத்தமானவற்றைத் தேர்ந்தெடுக்க
அ) அ. முத்துலிங்கம் - பாடல்
ஆ) பவணந்தி முனிவர் - நன்னூல்
எம்.ஏ.ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர்,
கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில்- 4, 9843448095
இ) வில்வரத்தினம் -ஆறாம் திணை
ஈ) இந்திரன் - பேச்சு மொழியும் கவிதை மொழியும்
i) அ , ஆ
ii) அ , ஈ
iii) ஆ , ஈ
iv) அ , இ
6. ‘தமிழின் கவிதையியல்’ நூல் ஆசிரியர் யார்
அ) இந்திரன்
ஆ) கா. சிவதம்பி
இ) பாரதியார்
ஈ) பாரதிதாசன்
7. திருப்பாவையை ஆண்டாள் எவ்வாறு குறிப்பிடுகின்றார்.
அ) தமிழ்
ஆ) தமிழ்மணம்
இ) தமிழ்அமுதம்
ஈ) தமிழ்மாலை
8.’யுகம்’- இதற்கான சரியான தமிழ் சொல்
அ) ஆண்டு
ஆ) வருடம்
இ) நூற்றாண்டு
ஈ) உலகம்
9. குற்றியலுகர எழுத்துக்களில் மொழிக்கு முதலில் வராத எழுத்துகள்
அ) க,ச
ஆ) ப,த
இ) த,ப
ஈ) ட,ற
10. ‘Migration’ என்பதன் சரியான தமிழ்ச்சொல்
அ) இடப்பெயர்ச்சி
ஆ) நகருதல்
இ) புலம்பெயர்தல்
ஈ) கடந்து போதல்
II. எவையேனும் நான்கனுக்கு விடை தருக. 4 x 2 = 8
11. என் அம்மை, ஒற்றியெடுத்த
நெற்றிமண் அழகே!
வழிவழி நினதடி தொழுதவர்,
உழுதவர், விதைத்தவர்,
வியர்த்தவர்க்கெல்லாம்
நிறைமணி தந்தவளே! - இக்கவிதை அடியில் உள்ள
வினையாலணையும் பெயர்களை எழுதுக.
12. உயிர் முதல், மெய் முதல் எடுத்துக்காட்டுடன் விவரிக்க.
13. பேச்சுமொழி கவிதை,எழுத்துமொழி கவிதை குறித்து
இந்திரன் கூறுவது யாது?
14. இனம் மொழி குறித்த ரசூல் கம்சதேவ் பார்வையைக் குறிப்பிடுக.
எம்.ஏ.ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர்,
கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில்- 4, 9843448095
15. பேச்சு மொழி எழுத்து மொழியைக் காட்டிலும் உணர்ச்சி வெளிப்பாடு சக்திமிக்கது ஏன்?
III. எவையேனும் இரண்டனுக்கு விடை தருக. 2 x 4 = 8
16. சு. வில்வரத்தினம் பாடத்தான் வேண்டும் என எவற்றைக் குறிப்பிடுகிறார்?
17. மொழி முதல் இறுதி எழுத்துக்கள் யாவை? அவை ஒவ்வொன்றிற்கும்
எடுத்துக்காட்டு தருக.
18. கூற்று: குறியீட்டுக் கவிதை என்பது பொருளைப் பதிவு செய்வதன்று;
நினைவு கூரத்தக்க தருணங்களைப் பதிவு செய்வதாகும்.
கவிதை : கூண்டு திறந்தது
சிறகடிக்கவா?
இல்லை! சீட்டெடுக்க.
கூற்றில் ‘குறியீடு’ எனக் குறிப்பிடப்படுவது கவிதையின் எப்பொருளாக வந்துள்ளது?
IV. நெடுவினா 1 x 6 = 6
19. நீங்கள் மொழியை வெளிப்படுத்தும் நிலையில் பேச்சு மொழியும் எழுத்து மொழியும் எவ்வாறு உணர்கிறீர்கள் என்பதை விவரிக்க.
V. அடி மாறாமல் செய்யுள் வடிவில் எழுதுக. 1 x 4 = 4
13. “ஏடு தொடக்கி வைத்து” - எனத் தொடங்கும் யுகத்தின்பாடலை எழுதுக
IV . அனைத்திற்கும் விடை தருக. 3 x 4 = 12
11. தொடரில் உள்ள சொற்களை ஒழுங்குபடுத்தி இரண்டு சொற்றொடர்களாக்குக
அ) நிலவு வீசுவதால் தெற்கிலிருந்து மாலைத்தென்றல் மகிழ்விக்கும்
எனப்படுகிறது மனதை
ஆ) பள்ளிக்கூடம் எல்லாம் தருபவை ஒவ்வொரு கலைகள் குழந்தையையும்
போக வேண்டும் மகிழ்ச்சி
12. கீழ்க்காணும் வேர்ச்சொல்லை வினைமுற்று, பெயரெச்சம், வினையெச்சம், வினையாலணையும் பெயராக மாற்றித் தொடரை உருவாக்குக.
அ) பாடு
ஆ) பேசு
13. கலைச்சொல் தருக
அ) Aesthetics
ஆ) Art critic
இ) Symbolism
ஈ) Book Review
V . அனைத்திற்கும் விடையளி. 2 x 1 = 2
14.தமிழாக்கம் தருக.
அ) Work while you work and play while you play
15.பிறமொழிச் சொற்களைத் தமிழாக்கம் செய்க
அ) சரித்திரம்
ஆ) சம்பளம்
எம்.ஏ.ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர்,
கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில்- 4, 9843448095
11 ஆம் வகுப்பு ( இயல் - 1 ) UNIT TEST -
அலகுத் தேர்வு Question Paper Pdf download button below 👇👇
11 ஆம் வகுப்பு
Slip Test 1 : click here
Slip Test 2 : click here
Slip Test 3 : click here
12 ஆம் வகுப்பு
இயல் - 1 ( REDUCED SYLLABUS)
Slip Test 1 : click here
Slip Test 2 : click here
Slip Test 3 : click here
Slip Test 4 : click here
12 ஆம் வகுப்பு
இயல் - 2 ( REDUCED SYLLABUS)
Slip Test 1 : Click here
Slip Test 2 : Click here
Slip Test 3 : Click here
Slip Test 4 : CLICK HERE
மொழிப்பயிற்சி
தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக Part-1 : Click here
தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக Part-2 : click here
உவமைத் தொடர்களைச் சொற்றொடர்களில் அமைத்து எழுதுக : Click here
12 ஆம் வகுப்பு
இயல் 1 - 8 ( REDUCED SYLLABUS)
1 மதிப்பெண் வினா விடைகள் : Click here
2 மதிப்பெண் வினா விடைகள் : click here
4 மதிப்பெண் வினா விடைகள் : Click here
6 மதிப்பெண் வினா விடைகள் : Click here
12 ஆம் வகுப்பு
டிசம்பர் 2021 ( REDUCED SYLLABUS)
திருப்புதல் தேர்வு - DECEMBER
மாதிரி வினாத்தாள்-1 : click here
மாதிரி வினாத்தாள்-2 : Click here
பாநயம் பாரட்டல்
11 ஆம் வகுப்பு ( இயல் - 1 ) UNIT TEST -
அலகுத் தேர்வு Question Paper Pdf download
👇👇👇👇👇👇👇👇