Loading ....

11th standard - Reduced Syllabus - Tamil- Unit Test - Question Paper - Unit 2 - (2021) | வகுப்பு11- இயல் 2 - தமிழ் - அலகுத் தேர்வு - வினாத்தாள்


11th standard - Reduced Syllabus - Tamil- Unit Test - Question Paper  - Unit 2 - (2021) | வகுப்பு11- இயல் 2 - தமிழ் - அலகுத் தேர்வு - வினாத்தாள்

 11th standard - Reduced Syllabus - Tamil- Unit Test - Question Paper  - Unit 2 - (2021) | வகுப்பு11- இயல் 2 - தமிழ் - அலகுத் தேர்வு - வினாத்தாள் 



திருத்தியமைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி நடைபெற இருக்கின்ற தேர்வுக்கான தயாரிப்புக்கு ஆயத்தம் செய்யும் விதத்தில் நமது Tamil பாடப்புத்தகத்தில் இடம் பெற்றிருக்கக் கூடிய 2 ஆவது இயலில் இந்த ஆண்டு Tamil தேர்வுக்கு வருகின்ற பகுதியில் இருந்து UNIT TEST ற்கான Question Paper தரப்பட்டுள்ளன.

           நீங்கள் இந்த UNIT TEST பகுதியைப் படிப்பதன் மூலம் Tamil புத்தகத்தில் இருக்கின்ற Question அத்தனையுமே நீங்கள் கற்று விடலாம், நீங்கள் கற்ற இந்தக் கேள்விகளை எழுதிப் பார்த்து அதற்கான விடைகளைத் திருத்தம் செய்து கொள்ளுங்கள் .

திருத்தியமைக்கப்பட்ட பாடத்திட்டம்  2021 - 2022

மேனிலை முதலாமாண்டு

 

தமிழமுது 2020 -  பயிற்சிப் பாசறை, கன்னியாகுமரி மாவட்டம்.

                                                                                                                                                                  ©Tamilamuthu2020official.blogspot.com

UNIT TEST 

அலகுத் தேர்வு ( இயல் - 2 )


ஏதிலிக்குருவிகள், காவியம்,திருமலை முருகன் பள்ளு, 

யானை டாக்டர் , புணர்ச்சி விதிகள்


வகுப்பு : 11                                   தமிழ்                                             இயல் : 2


நேரம் : 60 நிமிடங்கள்                                                                  மதிப்பெண் : 50


I. பலவுள் தெரிக.                                                                                                              10 x 1 = 10

1.பொருத்தித் தேர்க  

அ) அடி அகரம் ஐ ஆதல்                      -  1. செங்கதிர் 

ஆ ) முன் நின்ற மெய் திரிதல்         -  2. பெருங்கொடை 

இ) ஆதிநீடல்                                                -  3. பைங்கூள்

ஈ) இனமிகல்                                                 -  4. காரிருள்

அ) 4 3 2 1                  

ஆ) 3 4 2 1                

இ) 3 1 4 2                   

ஈ) 1 2 3 4 


2. “வான் பொய்த்தது” - என்ற சொற்றொடர் உணர்த்தும் மறைமுக பொருள்

அ) வானம் இடிந்தது                            

ஆ) மழை பெய்யவில்லை 

இ) மின்னல் வெட்டியது                       

ஈ) வானம் என்பது பொய்யானது


3. கூற்றுகளைப் படித்துக் கீழ்க்காண்பவற்றுள் சரியானதை தேர்க. அ)நிலைமொழியின் ஈறு குற்றியலுகரமாகவும் வருமொழியின் முதல் உயிர் எழுத்தாகவும் அமையும் பொழுது ‘உயிர்வரின் உக்குறள் மெய்விட்டு ஓடும்’ என்னும் விதியைப் பெறும் 

ஆ) நிலைமொழியின் ஈற்றில் இ ஈ ஐ  வரும்போது வகர உடம்படுமெய் பெறும் 

இ) பண்புப்பெயர்ப் புணர்ச்சியில் ‘ஈறுபோதல்’ எனும் விதியே முதன்மையானதாக விளங்கும். 

ஈ) தன்னொற்றிரட்டல் என்னும் விதி பண்புப்பெயர்ப் புணர்ச்சிக்குப்  பொருந்தும்.

  1. அ ,ஆ, இ சரி ஈ தவறு                      

  2. 2 ) அ , இ , ஈ சரி , ஆ தவறு.


4. பொருத்தமான இலக்கிய வடிவம் எது ?  

அ) ஏதிலிக்குருவிகள்                         -  மரபுக்கவிதை 

ஆ) திருமலை முருகன் பள்ளு        -  சிறுகதை 

இ) யானை டாக்டர்                                  -  குறும்புதினம் 

ஈ) ஐங்குறுநூறு                                           -  புதுக்கவிதை

11th standard - Reduced Syllabus - Tamil- Unit Test - Question Paper  - Unit 2 - (2021) | வகுப்பு11- இயல் 2 - தமிழ் - அலகுத் தேர்வு - வினாத்தாள்


5.’அகிற்புகை’ -  இலக்கணக்குறிப்புத் தருக 

அ) உம்மைத்தொகை                                

ஆ) எண்ணும்மை ஆறாம் 

இ) ஆறாம் வேற்றுமைத்தொகை        

ஈ) இரண்டாம் வேற்றுமைத்தொகை


எம்.ஏ.ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர், 

கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில்- 4,  9843448095


6. “ Root Nodes “ - என்பதன் சரியான தமிழ்ச்சொல் 

அ) வேர் முடிச்சுகள்                                       

ஆ) வேர்நீட்சிகள் 

இ) ஆணிவேர்                                                     

ஈ) வேர் தடிமன்


7. கீழ்க்கண்டவற்றில் வேற்றுநிலை மெய்மயக்கச் சொல்லைத் தேர்க 

அ) வாழ்ந்து                                                        

ஆ) போற்றப்படும் 

இ) அச்சுக்கலை                                                 

ஈ) பெருவிருப்பம்


8.’சாகரம்’ -  இச்சொல்லுக்கு ஏற்ற தமிழ்ச்சொல்

அ) கானம்                                                            

ஆ) வானம் 

இ) கடல்                                                                 

ஈ) உடல்

 

9.உலக சிட்டுக் குருவிகள் நாள் 

அ) மார்ச் 20                                                      

ஆ) ஏப்ரல்  20             

இ) மே 20                                                               


ஈ) பிப்ரவரி  20

10. பொருத்தித் தேர்க 

அ) சீதாபோகம்                            -  1. மாடு வகை 

ஆ) கருமறையான்                     -  2. உழவு கருவி 

இ) வள்ளைக்கை                         -  3. மேற்பார்வையாளர் 

ஈ) கங்காணி                                   - 4. நெல்வகை

அ) 4 1 2 3                              ஆ) 3 2 1 4                இ) 1 2 3 4          ஈ) 2 1 3 4 

II. எவையேனும் நான்கனுக்கு விடை தருக.                                               4 x 2 = 8 

11.வழியில்லை , வெற்றிலை  - புணர்ச்சி விதி தருக 

12.ஏதிலியாய்க்குருவிகள் எங்கோ போயின  - தொடரின் பொருள் யாது  

13. ய், வ், ஞ், ட், ற், ந் - மெய்களுக்கான வேற்றுநிலை, உடனிலை மெய்ம்மயக்கங்களுக்கு எடுத்துக்காட்டுகள் தருக

14.காற்றின் தீராத பக்கங்களில் எது எதனை எழுதிச் சென்றது?


எம்.ஏ.ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர், 

கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில்- 4,  9843448095


15.வளரும் காவில் முகில் தொகை ஏறும் - பொன்  

      மாடம் எங்கும் அகிற்புகை நாறும்  - அடிக்கோடிட்ட தொடர் குறிப்பிடுவது என்ன?

III. எவையேனும்  இரண்டனுக்கு  விடை தருக.    2 x 4  = 8           16.தமிழ் நெடுங்கணக்கு வரிசையின் இனவெழுத்துகளின்

பங்கைக் குறிப்பிடுக.

17. காற்றில் ஆடும் புல் வீடுகளுக்கு அழகிய பெரியவன் தரும் ஒப்பீடு யாது? ஏன்? 

18. “சலச வாவியில் செங்கயல் பாயும்”  - இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக

11th standard - Reduced Syllabus - Tamil- Unit Test - Question Paper  - Unit 2 - (2021) | வகுப்பு11- இயல் 2 - தமிழ் - அலகுத் தேர்வு - வினாத்தாள்


IV.  எதேனும்  ஒன்றனுக்கு  விடை தருக                            1 X 6 = 6

19. யானைடாக்டர் கதை வாயிலாக இயற்கை, உயிரின பாதுகாப்பு ஆகியவை குறித்து நீவிர் அறிந்தவற்றைத் தொகுத்து எழுதுக

20. திருமலை முருகன் பள்ளு கூறும் வடகரை, தென்கரை நாட்டுப்  பாடல்கள் வழி இயற்கை வளங்களை விவரிக்க.

V. அடி மாறாமல் செய்யுள் வடிவில் எழுதுக.                1 x 4  = 4

 21 . ‘சிறகிலிருந்து’ - எனத் தொடங்கும் காவியம் பாடல்

11th standard - Reduced Syllabus - Tamil- Unit Test - Question Paper  - Unit 2 - (2021) | வகுப்பு11- இயல் 2 - தமிழ் - அலகுத் தேர்வு - வினாத்தாள்


 IV . அனைத்திற்கும் விடை தருக. 

  22.கீழ்காணும் பாடலைப் படித்து மையக்கருத்து எழுதி, ஏதேனும் மூன்று நயங்களை விளக்குக.                                   1 x 4 = 4                                                                                       

                   மீன்கள்கோடி கோடிசூழ வெண்ணிலாவே!  ஒரு 

                   வெள்ளியோடம்போல வரும் வெண்ணிலாவே! 

                   வளர்ந்துவளர்ந்து வந்த வெண்ணிலாவே! மீண்டும் 

                  வாடி வாடிப் போவதேனோ ? வெண்ணிலாவே !

        

                   கூகை ஆந்தைபோல நீயும் வெண்ணிலாவே! பகல்

                   கூட்டினில் உறங்குவாயோ ? வெண்ணிலாவே ! 

                   பந்தடிப்போம் உன்னையென்று வெண்ணிலாவே! நீயும் 

                   பாரில் வர  அஞ்சினையோ  வெண்ணிலாவே ! 

                                                                                       - கவிமணி

23. தமிழாக்கம் தருக                                                                2 x 1  =  2

அ ) In nature,  light creates colour. In the picture ,colour creates the light.

ஆ) Roads were made for Journeys not destinations

24. பகுபத உறுப்பிலக்கணம் தருக                                    1 x 2 = 2

        அ ) ஈன்ற

25. கலைச்சொல் தருக                                                             2 x 1 = 2

        அ) Harvesting                                                   ஆ) Farmyard Manure

26. மயங்கொலிச் சொற்களை ஒரே தொடரில் அமைத்து எழுதுக         2 x 1 = 2

அ) கனை, கணை                                               ஆ) கலை, களை,கழை

27. புணர்ச்சி விதி தருக                                                                1 x 2 = 2 

         அ) செங்கயல்  


எம்.ஏ.ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர், (tamilamuthu 2020)

கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில்- 4,  9843448095




11th standard - Reduced Syllabus - Tamil- Unit Test - Question Paper  - Unit 2 - (2021) | வகுப்பு11- இயல் 2 - தமிழ் - அலகுத் தேர்வு - வினாத்தாள்

 

 11 ஆம் வகுப்பு ( இயல் - 2 ) UNIT TEST -

அலகுத் தேர்வு Question Paper Pdf download button below 👇👇



11 ஆம் வகுப்பு

Slip Test 1 : click here

Slip Test 2 : click here

Slip Test 3 : click here


11 ஆம் வகுப்பு

Unit Test - இயல் - 1 : Click Here





12 ஆம் வகுப்பு

இயல் - 1 ( REDUCED SYLLABUS)


Slip Test 1 : click here


Slip Test 2 : click here


Slip Test 3 : click here


Slip Test 4 : click here


12 ஆம் வகுப்பு

இயல் - 2 ( REDUCED SYLLABUS)


Slip Test 1 : Click here


Slip Test 2 : Click here


Slip Test 3 : Click here


Slip Test 4 : CLICK HERE


மொழிப்பயிற்சி


தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக Part-1 : Click here


தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக Part-2 : click here


உவமைத் தொடர்களைச் சொற்றொடர்களில் அமைத்து எழுதுக : Click here


12 ஆம் வகுப்பு

இயல்  1 - 8 ( REDUCED SYLLABUS)

 

 1 மதிப்பெண் வினா விடைகள்  : Click here

2 மதிப்பெண் வினா விடைகள்  : click here

4 மதிப்பெண் வினா விடைகள்  : Click here

மதிப்பெண் வினா விடைகள்  : Click here


12 ஆம் வகுப்பு

டிசம்பர் 2021 ( REDUCED SYLLABUS)

திருப்புதல் தேர்வு - DECEMBER

மாதிரி வினாத்தாள்-1 : click here


மாதிரி வினாத்தாள்-2 : Click here


பாநயம் பாரட்டல்

12 ஆம் வகுப்பு

இயல்  - 1 :   முச்சங்கங்  கூட்டி  :  கண்ணதாசன்     -   Click Here 
இயல் - 2 :   வெட்டி  யடிக்குது              :   பாரதியார்                     -  Click Here


11 ஆம் வகுப்பு ( இயல் - 2 ) UNIT TEST -

அலகுத் தேர்வு ​Question Paper Pdf download

👇👇👇👇👇👇👇👇





 


 



Image by jplenio from Pixabay Image by Pepper Mint from Pixabay
Icons made by Stickers from www.flaticon.com
Icons made by Stickers from www.flaticon.com
Icons made by Stickers from www.flaticon.com

Post a Comment

Previous Post Next Post